சிரேயா சரன்

இந்திய திரைப்பட நடிகை
(சிரியா சரண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிரேயா சரன் (ஆங்கலம்: Shreya Saran) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.

சிரேயா சரன்

2019-இல் சிரியா சரன்
இயற் பெயர் சிரேயா சரன்
பிறப்பு செப்டம்பர் 11, 1981 (1981-09-11) (அகவை 43)[1]
தேராதூன்,இந்தியா இந்தியா
வேறு பெயர் சிரேயா, சிரியா, சிரேயா சரன், சிரேயா
தொழில் நடிகர், வடிவழகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர்
நடிப்புக் காலம் 2001 - இன்றுவரை
துணைவர் ஆன்ட்ரி கொஸ்சீவ் [2]
இணையத்தளம் http://www.shriyasaran.com

மார்ச்சு 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.[3] இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.[4]

இளமை

தொகு

சிரேயா சரண் பட்நாகர் ஒரு காயசுதா குடும்பத்தில்[5] 11 செப்டம்பர் 1982 அன்று[6][7] உத்தரப்பிரதேசம் அரித்துவாரில்,[6] (இப்போது உத்தராகண்டம்) பிறந்தார். இவரது பெற்றோர் புசுபேந்திர சரண் பட்நாகர் மற்றும் நீரஜா சரண் பட்நாகர். இவரது தந்தை பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மேலும் இவரது தாயார் தில்லி பொதுப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக இருந்தார்.[7] சரண் தனது தாயார் ஆசிரியராகப் பணிபுரிந்த இரண்டு பள்ளிகளிலும் படித்தார்.[8] இவருக்கு மும்பையில் வசிக்கும் அபிரூப் என்ற மூத்த சகோதரர் இருக்கிறார்.[9] சரணின் தாய்மொழி இந்தி.[10]

அரித்துவாரில் உள்ள சிறிய நகரமான பாரத மிகு மின் நிறுவன குடியிருப்பில் இவரது குடும்பம் வசித்து வந்தது.[11] பின்னர் தில்லியில் உள்ள சீமாட்டி சிறீ இராம் கல்லூரியில்[7] படித்து இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[7][9]

சரண் ஒரு சிறந்த நடனக் கலைஞர். இவர் முதலில் தனது தாயால் கதக் மற்றும் ராஜஸ்தானி நாட்டுப்புற நடனத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் ஷோவனா நாராயணனால் கதக் பாணியில் பயிற்சி பெற்றார்.[12] கல்லூரியில் பல நடனக் குழுக்களில் பங்கேற்றார். இவர்கள் தங்கள் நடன நடைமுறைகளில் சமூக பிரச்சினைகளை இணைத்துக்கொண்டனர்.[8]

படங்கள்

தொகு
ஆண்டு பெயர் பாத்திரம் மொழி குறிப்புகள்
2001 இஷ்டம் நேஹா தெலுங்கு
2002 சந்தோசம் பானு தெலுங்கு
2002 சென்னகேசவ ரெட்டி பிரீத்தி தெலுங்கு
2002 நுவ்வே நுவ்வே அஞ்சலி தெலுங்கு
2003 தூஜே மேரி கசம் கிரிஜா இந்தி
2003 நீக்கு நேனு, நாக்கு நுவ்வு சீதா லட்சுமி தெலுங்கு
2003 தாகூர் தேவகி தெலுங்கு
2003 எலா செப்பனு பிரியா தெலுங்கு
2003 எனக்கு 20 உனக்கு 18 ரெஷ்மா தமிழ்
2003 நீ மனசு நாக்கு தெலுசு ரேஷ்மா தெலுங்கு
2004 நேனுன்னானு அனு தெலுங்கு
2004 தோட தும் பத்லோ தோடா ஹும் ராணி இந்தி
2004 அர்ஜுன் ரூப்பா தெலுங்கு
2004 சுக்ரியா: டில் டெத் டூ அஸ் அபார்ட் சனம் இந்தி
2005 பாலு ஏபிசிடீயீயெஃப்ஜி அனு தெலுங்கு
2005 நா அல்லுடு மேகனா தெலுங்கு
2005 சதாமி சேவலோ கந்தி தெலுங்கு
2005 சொக்காடு சிரேயா தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2005 சுபாஷ் சந்திர போஸ் சுவராஜ்யம் தெலுங்கு
2005 மோகுடு ஓ பெள்ளம் தோங்குடு சத்யபாமா தெலுங்கு
2005 மழை சைலஜா தமிழ்
2005 சத்ரபதி நீலு தெலுங்கு சிறந்த தெலுங்குத் திரைப்பட நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
2005 பகீரதா சுவேதா தெலுங்கு
2005 பொம்மலாட்டா சுவாதி தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2006 பாபுல் இந்தி தலைப்பு பாடல் சிறப்புத் தோற்றம்
2006 தேவதாசு சிரேயா தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2006 கேம் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2006 பாஸ், ஐ லவ் யூ சஞ்சனா தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2006 திருவிளையாடல் ஆரம்பம் பிரியா தமிழ்
2007 முன்னா பாரில் ஆடுபவர் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2007 அரசு அங்கிதா கன்னடம் சிறப்புத் தோற்றம்
2007 சிவாஜி தமிழ்ச்செல்வி தமிழ்
2007 அவரப்பான் ஆலியா இந்தி
2007 துளசி பாரில் ஆடுபவர் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2007 அழகிய தமிழ் மகன் அபிநயா தமிழ்
2008 இந்திரலோகத்தில் நா அழகப்பன் பிடாரிஆத தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 மிசன் இசுத்தான்புல் அஞ்சலி சகார் இந்தி
2008 தி அதர் எண்டு ஆஃப் தி லைஃப் பிரியா சேத்தி ஆங்கிலம்
2009 ஏக் - தி பவர் ஆஃப் ஒன் பிரீத் இந்தி
2009 தோரணை இந்து தமிழ்
2009 கந்தசாமி சுப்புலட்சுமி தமிழ்
2009 குக்கிங் வித் ஸ்டெல்லா தன்னு ஆங்கிலம்
2010 குட்டி கீதா தமிழ்
2010 ஜக்குபாய் மொனிஷா ஜக்குபாய் தமிழ்
2010 நா கர் கே நா காத் கே இந்தி சிறப்புத் தோற்றம்
2010 போக்கிரி ராஜா அசுவாத்தி மலையாளம்
2010 டான் சீனு தீப்தி தெலுங்கு
2010 புலி கேசினோவில் ஆடுபவர் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2010 உத்தமபுத்திரன் கல்பனா தமிழ் சிறப்புத் தோற்றம்
2010 சிக்கு புக்கு அனு தமிழ்
2011 ரௌத்திரம் பிரியா தமிழ்
2011 ராஜப்பாட்டை தமிழ் சிறப்புத் தோற்றம்
2012 காசனோவா சமீரா மலையாளம்
2012 கலி கலி மெயின் சோர் ஹை நிஷா இந்தி
2012 நுவ்வா நேனா நந்தினி தெலுங்கு
2012 லைஃப் இஸ் பியூட்டிஃபுல் பாரு தெலுங்கு
2013 மிட்நைட்ஸ் சில்ரன் பார்வதி ஆங்கிலம்
2013 சில்லா காசியாபாத் இந்தி சிறப்புத் தோற்றம்
2013 சந்திரா மகாராணி அம்மன்மணிசந்திரவதி தமிழ்
கன்னடம்
வெளியாக உள்ளது
2013 பவித்ரா பவித்ரா தெலுங்கு படப்பிடிப்பில்

குறிப்புகள்

தொகு
  1. "Sizzling Shreya celebrates her B'day". IndiaGlitz. 11-01-2008. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "நடிகை ஸ்ரேயா திருமணம்". தினமலர் (20 மார்ச் 2018).
  3. "ரகசியமாக நடந்த திருமணம் போட்டோவை வெளியிட்டார் சிரியா". Archived from the original on 2018-03-21. Retrieved 2018-03-21. தினகரன் (21 மார்ச்சு 2018.
  4. "சுகப்பிரசவத்தில் பிறந்த மகள்! - ஷ்ரேயா குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?". நியூஸ் 18 தமிழ் (12 அக்டோபர் 2021.
  5. Gupta, Priya (29 July 2015). "Shriya Saran: I've been infatuated by almost every actor I've worked with". The Times of India இம் மூலத்தில் இருந்து 30 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240930010220/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/shriya-saran-ive-been-infatuated-by-almost-every-actor-ive-worked-with/articleshow/48251207.cms. "We are Kayasthas from UP (her original full name is Shriya Saran Bhatnagar)." 
  6. "Birthday Bumps: Shriya Saran turns 30". IBM Live. Archived from the original on 12 September 2012. Retrieved 17 February 2013. Actress Shriya Saran was born on September 11, 1982
  7. 7.0 7.1 7.2 7.3 "Shreya Saran's official website — section Me, Myself". Archived from the original on 5 December 2006. Retrieved 5 September 2010.
  8. 8.0 8.1 "Tharathinoppam — Abhaya Interviews Shreya Saran — Part 2". 13 June 2010. Archived from the original on 19 May 2014. Retrieved 20 October 2011 – via YouTube.
  9. 9.0 9.1 "'Sivaji' has been a great experience: Shriya". Sify. Archived from the original on 13 December 2011. Retrieved 13 December 2010.
  10. "Sivaji changed my life completely: Shriya Saran". Hindustan Times. 19 January 2012. Archived from the original on 28 September 2017. Retrieved 27 September 2017. Hindi comes naturally to me because it's my mother tongue.
  11. "Shreya Saran Talks About Her Childhood SIVAJITV COM Shriya". 13 September 2009. Archived from the original on 19 May 2014. Retrieved 11 July 2011 – via YouTube.
  12. "Deft moves with times". The Hindu (Chennai, India). 29 April 2008 இம் மூலத்தில் இருந்து 10 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110141318/http://www.hindu.com/mp/2008/04/29/stories/2008042950670100.htm. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரேயா_சரன்&oldid=4230931" இலிருந்து மீள்விக்கப்பட்டது