சிறீமத் ராஜ்சந்திரா
சிறீமத் ராஜ்சந்திரா (Shrimad Rajchandra ; 9 நவம்பர் 1867 - 9 ஏப்ரல் 1901) ஓர் சமணக் கவிஞரும், மாயவாதியும், மெய்யியலாளரும், அறிஞரும், சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் பிறந்தார். தனது ஏழு வயதில் தனது கடந்த காலத்தைப் பற்றிக் கூறி தான் மறுபிறவி எடுத்து வந்ததாகக் கூறினார். இவர் அஷ்டாவதானத்தை நிகழ்த்தினார். தனது நினைவாற்றலை தக்கவைத்தலிலும், நினைவுகூரும் சோதனையிலும் புகழ் பெற்றார். ஆனால் பின்னர் இவர் தனது ஆன்மீக முயற்சிகளுக்கு ஆதரவாக அதை ஊக்கப்படுத்தினார். இவர் ஆத்ம சித்தி உட்பட நிறைய தத்துவக் கவிதைகளை எழுதினார். இவர் பல கடிதங்கஆளியும், வர்ணனைகளையும் எழுதினார். மேலும், சில மத நூல்களையும் மொழிபெயர்த்தார். இவர் சமணம் பற்றிய போதனைகளுக்காகவும், மகாத்மா காந்திக்கு ஆன்மீக வழிகாட்டுதலுக்காகவும் மிகவும் பிரபலமானவர்.
சிறீமத் ராஜ்சந்திரா | |
---|---|
தாமரை முத்திரையில் ராஜ்சந்திரா | |
சுய தரவுகள் | |
பிறப்பு | இலட்சுமிநந்தன் ரவ்ஜிபாய் மேத்தா 11 நவம்பர் 1867 |
இறப்பு | 9 ஏப்ரல் 1901 ராஜ்கோட், பிரித்தானிய இந்தியா (தற்போது குசராத்து) | (அகவை 33)
சமயம் | சைனம் |
மனைவி | சபாக்பென் (தி. 1887) |
பெற்றோர் | ரவ்ஜிபாய் -தேவ்பி |
குறிப்பிடத்தக்க ஆக்கம் | அஷ்டாவதானம் மோட்சமாலா |
வேறு பெயர்(கள்) | Kavi Raichandbhai Param Krupalu Dev |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசிறீமத் ராஜ்சந்திரா, மோர்பிக்கு அருகிலுள்ள வாவனியாவில் (இப்போது இந்தியாவின் குசராத்தில் உள்ளது) நவம்பர் 9, 1867 (கார்த்திகை பௌர்ணமி, விக்ரம் நாட்காட்டி 1924), அன்று பிறந்தார். [1] இவரது தாயார் தேவ்பாய் , சமண சுவேதாம்பரர் ஆவார். இவரது தந்தை இராவ்ஜிபாய் மேத்தா, தந்தைவழி தாத்தா பஞ்சன் மேத்தா வைணவ இந்துசமயத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் இவர் சிறு வயதிலிருந்தே இவருக்கு சமணமும் இந்து சமயமும் அறிமுகமாகியது.[2][3] [4] இவர்கள் பணியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் , மேலும் தாச சிறீமாலி சாதியைச் சேர்ந்தவர்கள். [4] இவர் சாது ராம்தாஸ்ஜி என்ற பெயரில் வைணவத்தை வளர்க்க ஆரம்பித்தார்.[2][3] [4] இவர் மற்ற இந்தியச் சமயங்களைப் பற்றியும் தொடர்ந்து படித்தார். மேலும், அகிம்சை சமண கோட்பாட்டின் மீது ஈர்க்கப்பட்டார். பின்னர் இவர் சமணத்தைத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் இது " இரட்சிப்புக்கு சிறந்த பாதையை" வழங்குகிறது என்று இவர் கருதினார். [4]
இவர் மகாத்மா காந்தியின் ஆன்மீக வழிகாட்டியாக நன்கு அறியப்பட்டவர். [4] இவர்கள் 1891 இல் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது கடிதங்கள் மூலம் பல்வேறு உரையாடல்களை நடத்தினர். காந்தி தனது சுயசரிதையான சத்திய சோதனையில், இவரை "வழிகாட்டி எனவும், உதவியாளர்" எனவும் "ஆன்மீக நெருக்கடியின் தருணங்களில் அடைக்கலம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் பொறுமையாக இருக்கவும், இந்து மதத்தை ஆழமாக படிக்கவும் காந்திக்கு அறிவுறுத்தினார். இவரது போதனை காந்தியின் அகிம்சை தத்துவத்தை நேரடியாக பாதித்தது.[2][5] [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Flügel 2006.
- ↑ 2.0 2.1 2.2 Petit, Jérôme (2016). "Rājacandra". Jainpedia. Archived from the original on 9 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "Life of Shrimad Rajchandra". Computer Science Department, Colorado State University. பார்க்கப்பட்ட நாள் 8 January 2017.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Salter 2002.
- ↑ Thomas Weber (2 December 2004). Gandhi as Disciple and Mentor.
ஆதாரங்கள்
தொகு- Flügel, Peter, ed. (2006), Studies in Jaina History and Culture: Disputes and Dialogues, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-23552-0
- Salter, Emma (September 2002). Raj Bhakta Marg: the path of devotion to Srimad Rajcandra. A Jain community in the twenty first century (Doctoral thesis). University of Wales. pp. 125–150. பார்க்கப்பட்ட நாள் 2018-09-21 – via University of Huddersfield Repository.
மேலும் படிக்க
தொகு- Atma-Siddhi : In Search of the Soul பரணிடப்பட்டது 2021-10-02 at the வந்தவழி இயந்திரம் published by Vakils Feffer & Simons
- Vachanamrut, the complete works of Shrimad Rajchandra in Gujarati, including letters and writings
- Bhavana Bodh by Shrimad Rajchandra