சுகரகசிய உபநிடதம்

இந்து சமய உரை

சுகரகசிய உபநிடதம் (Shukarahasya Upanishad) ( சமக்கிருதம்: शुकरहस्य उपनिषद् ) இரகசிய உபநிடதம் என்றும் அழைக்கப்படும் இது சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். [4] சாமன்ய உபநிடதங்களில் ஒன்றின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இது கிருஷ்ண யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]

சுகரகசிய உபநிடதம்
ஆன்மீக விடுதலைக்கான தியானத்தைப் பற்றி உபநிடதம் விவாதிக்கிறது
தேவநாகரிशुकरहस्य
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புசுகரகசியம்
உபநிடத வகைசாமன்ய உபநிடதம்[1]
தொடர்பான வேதம்யசுர் வேதம்[1]
அத்தியாயங்கள்6[2][3]
அடிப்படைத் தத்துவம்வேதாந்தம்[1]

உரைநடை மற்றும் வசனங்களின் கலவையாக அமைந்துள்ள இது ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. வியாசரின் மகனான சுகருக்கும் சிவனுக்கும் இடையிலான உரையாடலாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. மிக இளம் வயதிலேயே சந்நியாசி (துறவி) ஆனவர் என்று இந்து மதத்தில் சுகர் கொண்டாடப்படுகிறார். [5][4]

நான்கு வேதங்களில் உள்ள பழங்கால அடுக்குகளில் இருந்து நான்கு மகாவாக்கியங்கள் அல்லது புனிதமான கூற்றுகள் ஒவ்வொன்றையும் பிரித்தெடுத்து விவரித்து, அவற்றை தியானப் பொருளாக வழங்குவதில் இந்த உரை குறிப்பிடத்தக்கது. சிவனிடமிருந்து சுகர் ஆன்ம விடுதலையை அடைந்தார் என்று உரை வலியுறுத்துகிறது.[6][5] நான்கு மகாவாக்கியங்களை தியானிப்பதன் மூலம் எவரும் இதேபோன்ற ஆன்மீக விடுதலையை அடைய முடியும் என்றும், இந்த நான்கையும் தியானிக்க விரும்புபவருக்கு சடங்குகள், யாத்திரைகள் மற்றும் மந்திரங்கள் தேவையில்லை என்றும் உரை மேலும் வலியுறுத்துகிறது.[5]

வரலாறு

தொகு

இந்த உபநிடதத்தை இயற்றப்பட்ட காலமும் ஆசிரியரைப் பற்றியும் அறியப்படவில்லை. இந்த உரையின் கையெழுத்துப் பிரதிகள் இரகசியோப்நிசத் மற்றும் சுகரகயோபனிசத் என்ற தலைப்பில் காணப்படுகின்றன.[6] இந்த உபநிடதம், இராமனால் அனுமனுக்கு விவரிக்கப்பட்டதாகக் கூறபடும். முக்திகா நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில் 35 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது .[7]

உள்ளடக்கம்

தொகு

இந்துக் கடவுளான பிரம்மாவிடம் முனிவர்கள் தங்களுக்கு இந்த இரகசிய உபநிடதத்தைக் கற்பிக்கும்படி கேட்பதுடன் உரை தொடங்குகிறது. [3] நான்கு வேதங்களைத் தொகுத்த வியாசரின் மகனான சுகர் தனக்கு கல்வி கற்க பிரம்மனிடம் ஆலோசனை கேட்டபோது, சிவனிடம் கற்றுக்கொண்டதை கற்பிப்பதாக பிரம்மா பதிலளித்தார்.[3] அதன்பிறகு உரையானது உரைநடை மற்றும் வசனங்களின் கலவையை சிவனுக்கும் சுகருக்கும் இடையேயான சொற்பொழிவாக செல்கிறது, சிவன் இந்த உபநிடதத்தை ஆறு பகுதிகளாகக் கூறுகிறார். [8] [9]

பிரணவ மந்திரத்துடன் ( ஓம் ) உரை தொடங்குகிறது. அறிவு, கவிதை அலகு, விதை, இலக்கு மற்றும் விடுதலையின் சக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.. [10] [11]

தத்துவமசி என்பதில் தத் என்பது பரமகம்சரையும் வாமதேவரையும் குறிக்கிறது, த்வம் விஷ்ணுவையும் வசுதேவரையும் குறிக்கிறது. அசி என்பது அர்த்தநாரீசுவரரையும் நரசிம்மத்தையும் குறிக்கிறது என்று உரை வலியுறுத்துகிறது. [12] [13] இவை அனைத்தும், ஆன்மாவாக தனக்குள்ளும், எல்லா உயிரினங்களிலும், எல்லா இடங்களிலும் இருப்பதாக உபநிடதம் கூறுகிறது. [12] [13] இதையே வேதங்களின் ஆறு அங்கங்கள் கற்பிக்க வேண்டும் என்று உரை கூறுகிறது. [12] [13]

இந்த அறிவு, குருவிடமிருந்து கேட்கப்பட வேண்டும். பின்னர் அதை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை சிந்திக்க வேண்டும், தியானிக்க வேண்டும் என்று சுகரகசிய உரை கூறுகிறது. [14] இறுதியான பிரம்மத்தைப் புரிந்துகொள்பவர் பிரம்மனாக மாறுகிறார். [14] சுகர் சிவனின் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றினார். மேலும் பிரபஞ்சத்துடன் ஒன்றாகிவிடுகிறார். இளம் வயதிலேயே உலகத்திலிருந்து பிரிந்து, ஒரு ஆன்ம விடுதலையை அடைந்து சுதந்திரமான விடுதலையான வாழ்க்கையை வாழத் தொடங்கினார். ஆரம்பத்தில் வியாசர் தனது மகனின் பிரிவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முழு பிரபஞ்சமும் அவரும் சுகரின் துறவறத்தால் மகிழ்ந்தனர்.[6][15][16]

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Tinoco 1996, ப. 87.
  2. Hattangadi 2000, ப. 2.
  3. 3.0 3.1 3.2 Warrier 1967, ப. 240.
  4. 4.0 4.1 Mahadevan 1975, ப. 184-186.
  5. 5.0 5.1 5.2 Warrier 1967, ப. 240-245.
  6. 6.0 6.1 6.2 Vedic Literature, Volume 1, A Descriptive Catalogue of the Sanskrit Manuscripts, p. PA533, கூகுள் புத்தகங்களில், Government of Tamil Nadu, Madras, India, pages 533-535
  7. Deussen 1997, ப. 556-557.
  8. Warrier 1967.
  9. Hattangadi 2000.
  10. Warrier 1967, ப. 241-242.
  11. Hattangadi 2000, ப. 1-6.
  12. 12.0 12.1 12.2 Warrier 1967, ப. 242-243.
  13. 13.0 13.1 13.2 Hattangadi 2000, ப. 3-4.
  14. 14.0 14.1 Warrier 1967, ப. 243-245.
  15. Warrier 1967, ப. 244-245.
  16. Hattangadi 2000, ப. 5-6.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகரகசிய_உபநிடதம்&oldid=3847936" இலிருந்து மீள்விக்கப்பட்டது