சூறாவளி டீன் (2007)
டீன் சூறாவளி (Hurricane Dean) 2007 ஆம் ஆண்டு அத்திலாந்திக் சூறாவளி பருவத்தின் நான்காவது பெயர் சூட்டப்பட்ட புயலும், முதல் சூறாவளியும், முதல் தரம் 5 இலான சூறாவளியுமாகும். 2005 ஆம் ஆண்டு சூறாவளி வில்மாவுக்கு பின் ஏற்பட்ட மிகவும் செறிவான அயனமண்டல சுழல் காற்றாகும். டீன், பதிவுகளில் உள்ள சூறாவளிகளில் 9வது பலம்மிக்க சூறாவளியும் தரைத்தட்டிய சூறாவளிகளில் 3வது பலமிக்கதுமான சூறாவளியாகும். கேப் வேர்டே வகை சூறாவளியான டீன் கரிபியக் கடலில் வடமேற்கு திசையான பாதையில் ஆகஸ்டு 20 இல் யமேக்காவுக்கு சற்று தெற்காக கடந்து சென்று ஆகஸ்டு 21 இல் யுகடான் தீபகற்பத்தில் தரைத்தட்டி கம்பாச்சி குடாவை அடைந்தது, மீண்டும் மெக்சிகோவின் டெகுலூட்டாவுக்க்கு அண்மையில் ஆகஸ்டு 22 இரண்டாவது முறை தரைத்தட்டியது. டீன் சூறாவளியால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளதோடு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
Category 5 major hurricane (SSHWS/NWS) | |
யுகடான் குடாவை அண்மித்த நிலையில் சூறாவளி டீன் | |
தொடக்கம் | ஆகஸ்டு 13, 2007 |
---|---|
மறைவு | ஆகஸ்டு 23, 2007 |
உயர் காற்று | 1-நிமிட நீடிப்பு: 165 mph (270 கிமீ/ம) |
தாழ் அமுக்கம் | 906 பார் (hPa); 26.75 inHg |
இறப்புகள் | 39 நேரடி, 3 மறை |
சேதம் | $3.8 பில்லியன் (2007 US$) |
பாதிப்புப் பகுதிகள் | காற்றுமுக தீவுகள் (செயிண்ட். லூசியா, Martinique,டொமினிக்கா), காற்றெதிர் தீவுகள், போற்ற ரீகோ, டொமினிக்கன் குடியரசு, எய்ட்டி, யமேக்கா, கேமன் தீவுகள், யுகடான் தீபகற்பம், பெலிஸ், நிக்கராகுவா, மத்திய மெக்சிகோ |
2007 அத்திலாந்திக் சூறாவளி பருவம்-இன் ஒரு பகுதி |
15 ஆண்டுகளின் பின்னர் அத்திலாந்திக் கடலில் தரம் 5 இலான சூறாவளியாக தரைத்தட்டிய முதல் சூறாவளி டீன் ஆகும். இதற்கு முன்னர் சூறாவளி அன்றுவ் ஆகஸ்டு 24 1992 இல் தரம் 5 இலான சூறாவளியாக தரைத்தட்டியது.[2] டீன் அன்றுவை விட பாரிய சூறாவளியானாலும் டீன் மக்களடர்த்தி குறைவான பகுதியில் தரைத்தட்டியதால் சேதங்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டன.
சுழல் காற்றின் வரலாறு
தொகுமிகச்செறிவான அந்திலாந்திக் சூறாவளிகள் செறிவு வளிமணடல அமுக்கத்தைக் கொண்டு அளக்கப்பட்டது | |||
---|---|---|---|
தரம் | சூறாவளி | பருவம் | குறை. அமுக்கம் |
1 | சூறாவளி வில்மா | 2005 | 882 mbar (hPa) |
2 | சூறாவளி கில்பேர்ட் | 1988 | 888 mbar (hPa) |
3 | சூறாவளி லேபர் டே | 1935 | 892 mbar (hPa) |
4 | சூறாவளி ரீட்டா | 2005 | 895 mbar (hPa) |
5 | சூறாவளி எலன் | 1980 | 899 mbar (hPa) |
6 | சூறாவளி கத்ரீனா | 2005 | 902 mbar (hPa) |
7 | சூறாவளி கமீலீ | 1969 | 905 mbar (hPa) |
சூறாவளி மிட்ச் | 1998 | 905 mbar (hPa) | |
9 | சூறாவளி டீன் | 2007 | 906 mbar (hPa) |
10 | சூறாவளி ஐவன் | 2004 | 910 mbar (hPa) |
மூலம்: ஐ.அ. வர்த்தக திணைக்களம் |
ஆகஸ்டு 11, 2007, ஆபிரிக்காவின் மேற்கு கரையிலிருந்து நகர்ந்த அயனமண்டல அலை,[3] சாதகமான வானிலைக் காரணிகளிகளை எதிர்கொண்டதன் காரணமாக[4] மிக விரைவாக அயன மண்டல தாழ் அமுக்கம்-4 ஆக கேப் வேர்ட்க்கு தெற்கு-தென்மேற்கு திசையில் 520 மைல் (835 கி.மீ) தொலைவில் வளர்ச்சியடைந்தது.[5] இத்தாழ் அமுக்கம் மேற்கு திசையாக கடந்துச் சென்று [6] ஆகஸ்டு 14, 1500 UTCக்கு அயனமண்டல புயல் டீனாகா தரமுயர்ந்தது.[7] வடக்கில் இருந்தான குளிர்ந்த உளர் வளி டீனின் வளர்ச்சியை தடுத்தாலும சுழல்காற்றின் செறிவு தொடர்ந்து அதிகரித்தது.[8] ஆகஸ்டு 15 அன்று சுழல்காற்றில் பட்டைகள் தோன்றின [9] புயலின் கண் அதே நாள் பின்நேரம் தென்பட்டது.[10]
சுழல் காற்றின் செறிவு அதிகரித்து,[11] ஆகஸ்டு 16, 0900 UTCக்கு சூறாவளி டீனாக தரமுயர்ந்தது.[12] வானிலைக் காரணிகள் டீனை மேற்குத் திசையாக கரிபியக் கடலை நோக்கி நகரச் செய்தது.[13] சூறாவாளி விரைவாக தரம் 2 இலான சூறாவளியாக செறிவடைந்தது.[14][15] வளர்ச்சி சிறிது மந்தப் பட்டது ஆனாலும் [16] சூறாவளி அவதானிப்பு விமானாம் ஆகஸ்டு 17 அன்று டீனின் கண் மூடப் பட்டிருப்பதை அவதானித்தது.[17] விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி டீன் தரம் 3க்கு செறிவடைந்திருப்பது அறியப்பட்டது.[18] அந்நேரம் சூறாவளியின் பட்டைகள் Lesser Antillesக்கு மேலாக காணப்பட்டன.[19] ஆகஸ்டு 17 மாலையில் டீன் தரம் 4க்கு செறிவடைந்தது,[20] இரவில் செறிவு மற்றும் பருமனிலும் வளர்ச்சிக் கண்டது.[21] ஆகஸ்டு 18 இல் இரட்டை கண் சுவர்கள் அவதானிக்கப்பட்டன.[22] இவ்விரட்டை கண் சுவர்களின் பறிமாற்றம் டீனின் செறிவில் தலம்பல் நிலையை ஏற்படுத்தியது.[23] இத்தலம்பல்கள் சூறாவளியை பாதிக்கவில்லை.[22] கண்சுவர் பரிமாற்றத்தை முடித்து, ஆகஸ்டு 19 காலையில் டீன் செறிவில் சிறு வீழ்ச்சியைக் கண்ட நிலையில் யமேக்காவை எட்டியது.[24]
சூறாவளி டீன் ஆகஸ்டு 19 மாலையில் யமேக்காவுக்கு தெற்காக கடந்து சென்று [25] அன்றிரவு மீண்டும் செறிவடைய தொடங்கியது.[26] சூறாவளியின் கண்பறிமாற்றம் முற்றுப் பெற்றதாக கருதப்பட்டது.[27] ஆகஸ்ட் 20 காலையில் மீண்டும் இரட்டை கண் சுவர் தென்பட்டது இர்ப்பினும் அது சிறிது நேரத்தில் மறந்தடது. வடக்கே காணப்பட்ட உயர் அமுக்கம் காரணமாக மேற்கு- வடமேற்காக வெப்பமான கடலுக்கு மேலாக தொடர்ந்து நகர்ந்த சூறாவளி டீன் மீண்டும் செறிவடைய தொடங்கியது.[28] கண்சுவர் தெளிவாக தெரியத்தொடங்கியது.[29] ஆகஸ்டு 21 0035 UTCக்கு டீன் சரிப் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தலிள் மிகக் கூடிய தரமான, தரம் 5 இலான சூறாவளியாக தரமுயர்த்தப்பட்டது.[30] டீன் தரம் 5இலான சூறாவளியாக யுகாடான் தீபகற்பத்தில் தரைத்தட்டியது. தரயில் செறிவு குன்றிய டீன் யுகடான் தீபகற்பத்தின் மேற்கில் தரம் 1இலான புயலாக மெக்சிகோ குடாவை எட்டியது.[31] மெக்சிகோ குடாவில் தரம் 2இலான புயலாக செறிவடைந்த டீன் ஆகஸ்டு 22 11.30 CDTக்கு டெகுலூட்டாவுக்கு அண்மையில் தரைத் தட்டியது. அங்கிருந்து மேற்காக நகர்ந்த டீன் மத்திய மெக்சிகோவுக்கு மேலாக தனது செறிவை இழந்து மறைந்தது.
ஆயத்தங்கள்
தொகுசுமார் 12 சுற்றுலாப்பயணக் கப்பல்கள் சூறாவளி டீன் காரணமாக தமது பாதையை மாற்றியமைத்துக் கொண்டன.[32] மசகு எண்ணெய்க் கிணறுகள் பாதிப்படையும் என்ற ஆய்வளர்களில் கருத்துக் காரணமாக எண்ணெய் கேள்வி அதிகரித்தது.[33][34] ஆகஸ்டு 15 இல் டிரான்ஸ் ஓசன் நிறுவனம் சூறாவளியின் பாதையில் இருந்த தமது எண்ணெய் கிணறுகளில் இருந்து அத்தியாவசியமற்ற 11 பணியாளர்களை வேறு இடங்களுக்கு அனுப்பியது.[35] ஆகஸ்டு 16 இல் செல் நிறுவனம் சூறாவளியின் பாதையில் இருந்த தமது எண்ணெய் கிணறுகளில் இருந்து 275 மேலதிக பணியாளர்களை வேறு இடங்களுக்கு அனுப்பியது.[32]
ஆகஸ்ட் 18, 2007 இல் ஒரு நாளுக்கு 10,300 பெரல் மசகு எண்ணெயும் (1,210 m³) 11 மில்லியன் கன அடி (310,000 m³) இயற்கை எரிவளியும் உற்பத்தி குன்றியது.[36] மெக்சிகோ அரச மசகு எண்ணெய் நிறுவனமான பேமெக்ஸ் ஆகஸ்ட் 19 இல் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி [37] தமது 13,360 பணியாளர்களை வேறு இடங்களுக்கு அனுப்பியது.[38]
பாதிப்புக்கள்
தொகுசூறாவளீ டீனின் பாதிப்பு 15 நாடுகளில் உணரப்பட்டதோடு மொத்தம் 42 மரணங்கள் ஏற்பட்டது.
சூறாவளி டீன் மூலமான மரணங்களும் சேதங்களும் | ||||||||
நாடு | மொத்த மரணங்கள் |
மாநிலம்/ பகுதி |
மாநிலம் மொத்தம் |
கவுண்டீ/ நகரம் |
கவுண்டீ மொத்தம் |
நேரடி மரணங்கள் |
சேதங்கள் (USD) |
மூலம் |
டொமினிக்கா | 2 | 2 | தெரியாது | |||||
டொமினிக்கன் குடியரசு | 6 | 6 | தெரியாது | [39] | ||||
எய்ட்டி | 11 | 11 | தெரியாது | [40] | ||||
யமேக்கா | 3 | 3 | ~$2 பில்லியன் | [41][42][43] | ||||
பிரான்ஸ் | 2 | Martinique | 2 | 0 | ~$270 மில்லியன் | [44] | ||
மெக்சிகோ | 14 | Hidalgo | 6 | Zacualtipán | 2 | 6 | ~$800 மில்லியன் | [45][46][47] |
Cuautepec | 2 | |||||||
San Agustín Tlaxiaca | 1 | |||||||
Pachuca | 1 | |||||||
Jalisco | 2 | Puerto Vallarta | 2 | 2 | [48][49] | |||
Michoacán | 1 | Paracho | 1 | 1 | [45][46] | |||
Puebla | 6 | Tepetzintla | 4 | 6 | [45][50] | |||
Pahuatlán | 1 | |||||||
தெரியாது | 1 | |||||||
Veracruz | 1 | Xalapa | 1 | 0 | [50][51] | |||
நிக்கராகுவா | 1 | 1 | தெரியாது | [52] | ||||
செயிண்ட். லூசியா | 1 | 1 | தெரியாது | [1] | ||||
ஐக்கிய அமெரிக்கா | 1 | புளோரிடா | 1 | சராசோட்டா | 1 | 1 | கிடையாது | [53] |
மொத்தம்: | 42 | 39 | ~$3.8 பில்லியன் | [54] | ||||
மூலங்களின் வேறுபாடு காரணமாக மொத்தங்கள் மாறுபடலாம். |
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 EQECAT (2007-08-20). "EQECAT Estimates Dean Losses Between $1.5-$ 3 Billion". பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ Pasch/Brown (2007). "Hurricane Dean Discussion Thirty Three". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ Knabb (2007). "August 11 Tropical Weather Outlook (1130)". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
- ↑ Rhome (2007). "August 12 Tropical Weather Outlook (0530)". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
- ↑ Knabb/Blake (2007). "August 13 Tropical Weather Outlook (1130)". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
- ↑ Brown/Franklin (2007). "Tropical Depression Four Discussion Three". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
- ↑ Avila (2007). "Tropical Storm Dean Discussion Five". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
- ↑ Brown (2007). "Tropical Storm Dean Discussion Seven". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-15.
- ↑ Beven (2007). "Tropical Storm Dean Discussion Eight". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-15.
- ↑ Blake (2007). "Tropical Storm Dean Discussion Ten". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-15.
- ↑ Brown (2007). "Tropical Storm Dean Discussion Eleven". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-16.
- ↑ Beven (2007). "Hurricane Dean Discussion Twelve". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-16.
- ↑ Blake (2007). "Hurricane Dean Discussion Thirteen". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-16.
- ↑ Avila/Blake (2007). "Hurricane Dean Discussion Fourteen". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-16.
- ↑ Franklin (2007). "Hurricane Dean Discussion Fifteen". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-17.
- ↑ Beven (2007). "Hurricane Dean Discussion Sixteen". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-16.
- ↑ Avila (2007). "Hurricane Dean Discussion Seventeen". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-17.
- ↑ Avila/Mainelli (2007). "Hurricane Dean Special Discussion Eighteen". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-17.
- ↑ Avila (2007). "Hurricane Dean Discussion Nineteen". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-17.
- ↑ Knabb (2007). "Hurricane Dean Intermediate Advisory Nineteen 'A'". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-17.
- ↑ Knabb (2007). "Hurricane Dean Discussion Twenty". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-17.
- ↑ 22.0 22.1 Avila (2007). "Hurricane Dean Discussion Twenty Three". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-18.
- ↑ Avila (2007). "Hurricane Dean Discussion Twenty Two". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-18.
- ↑ Pasch/Brown (2007). "Hurricane Dean Discussion Twenty Five". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-19.
- ↑ Franklin/Rhome (2007). "Hurricane Dean Discussion Twenty Seven". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ Blake (2007). "Hurricane Dean Public Advisory Twenty Eight". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ Knabb (2007). "Hurricane Dean Discussion Twenty Eight". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ Pasch/Brown (2007). "Hurricane Dean Discussion Twenty Nine". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ Franklin (2007). "Hurricane Dean Discussion Thirty". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ Knabb (2007). "Hurricane Dean Update". National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ "Hurricane weakens after hitting land (Sky News)".
- ↑ 32.0 32.1 Staff writer (2007-08-17). "Hurricane Dean Gains Power in Caribbean". அசோசியேட்டட் பிரெசு. Archived from the original on 2007-09-14. பார்க்கப்பட்ட நாள் 2007-08-17.
- ↑ Polya Lesova (2007). "Crude oil, natural gas rise sharply on storm worries". MarketWatch. பார்க்கப்பட்ட நாள் 2007-08-15.
- ↑ Alejandro Bodipo-Memba (2007). "When gas prices go up, blame Dean". Detroit Free Press. பார்க்கப்பட்ட நாள் 2007-08-15.
- ↑ Staff writer (2007-08-16). "Storm-Drenched Texas Prepare for Hurricane Dean". அசோசியேட்டட் பிரெசு. பார்க்கப்பட்ட நாள் 2007-08-17.
- ↑ Minerals Management Service (2007-08-18). "Hurricane Dean Statistics Update". United States Department of Interior. Archived from the original on 2010-07-06. பார்க்கப்பட்ட நாள் 2007-08-18.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Staff writer (2007-08-19). "Jamaica alert as Dean threatens". BBC News. http://news.bbc.co.uk/2/hi/americas/6953530.stm.
- ↑ Staff Writer (2007-08-19). "Monster hurricane bears down on Jamaica". Agence France-Presse. பார்க்கப்பட்ட நாள் 2007-08-19.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ JACQUELINE CHARLES, JIM WYSS, TRENTON DANIEL AND MARTIN MERZE (2007-08-18). "Dean kills one in D.R., heading to Jamaica". Miami Herald. பார்க்கப்பட்ட நாள் 2007-08-18.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "hdnews.net". Archived from the original on 2007-10-29. பார்க்கப்பட்ட நாள் 2007-09-04.
- ↑ Demian McLean (2007-08-20). "Hurricane, Now Category 5, Approaches Coast of Mexico (Update7)". பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ CMC (2007-08-20). "Dean kills three in Jamaica". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ AIR Worldwide (2007-08-21). "AIR: Dean Jamaica Losses will not Exceed $1.5 Billion". பார்க்கப்பட்ட நாள் 2007-08-21.
- ↑ The Associated Press (2007-08-19). "Hurricane Dean Death Toll climbs to 8". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ 45.0 45.1 45.2 Staff Writers (2007-08-24). "Hurricane Dean rains pound Mexico". The Sunday Telegraph. பார்க்கப்பட்ட நாள் 2007-08-24.
- ↑ 46.0 46.1 Javier Salinas (2007-08-23). "Provoca Dean 5 muertes y desbordamiento de ríos" (in ஸ்பானிஷ்). La Jornada. பார்க்கப்பட்ட நாள் 2007-08-23.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ Pachuca, Hidalgo (2007-08-25). "Confirman seis muertes en Hidalgo por Dean" (in Spanish). El Universal. Archived from the original on 2008-02-14. பார்க்கப்பட்ட நாள் 2007-08-26.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Staff Writer (2007-08-24). "Death toll reaches 11 from Hurricane Dean in Mexico". earthtimes.org. பார்க்கப்பட்ட நாள் 2007-08-24.
- ↑ Agencias (2007-08-26). "Aumentan a siete los muertos por 'Dean'" (in Spanish). ESMAS. Archived from the original on 2007-11-03. பார்க்கப்பட்ட நாள் 2007-08-26.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 50.0 50.1 Blanca Patricia Galindo and Dinorath Mota (2007-08-24). "Alerta máxima en Hidalgo y Puebla; van ocho muertos" (in Spanish). El Universal. Archived from the original on 2007-09-01. பார்க்கப்பட்ட நாள் 2007-08-24.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Tomas Bravo (2007-08-22). "Hurricane Dean slams Mexico's Gulf coast, kills two". Reuters. பார்க்கப்பட்ட நாள் 2007-08-22.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Howard Campbell (2007-08-19). "Hurricane Dean pummels Jamaica". Archived from the original on 2012-12-08. பார்க்கப்பட்ட நாள் 2007-08-20.
- ↑ Sarasota Herald-Tribune (2007-08-23). "Lifeguards Rescue More Than 35 Off Siesta Key". The Tampa Tribune. Archived from the original on 2007-11-09. பார்க்கப்பட்ட நாள் 2007-08-25.
- ↑ MARK STEVENSON (2007-08-21). "Hurricane Dean Bears Down on Mexico's Oil Industry".
வெளியிணைப்புகள்
தொகு- The NHC's archive on Hurricane Dean
- Hurricane Dean came to Southern Arizona Chandler, AZ, McQueen & Pecos, view to the South from Chandler Ranch பரணிடப்பட்டது 2012-11-08 at the வந்தவழி இயந்திரம்
கலைச் சொற்கள்
தொகுஆங்கிலம் | தமிழ் |
---|---|
Hurricane | சூறாவளி |
Tropical cyclone | அயனமண்டல சுழல் காற்று |
Tropical wave | அயனமண்டல அலை |
Tropical Depression | அயன மண்டல தாழ் அமுக்கம் |
Tropical Storm | அயனமண்டல புயல் |
Eyewall | கண்சுவர் |