செருக் தோக்குன்

பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம்.

செருக் தோக்குன் (ஆங்கிலம்: Cherok Tok Kun; (மலாய் Cherok Tok Kun; சீனம்: 直落卓坤; ஜாவி: چيروق توء كون) என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம்.

செருக் தோக்குன்
Cherok Tok Kun
பினாங்கு
Map
செருக் தோக்குன் is located in மலேசியா
செருக் தோக்குன்
செருக் தோக்குன்
      செருக் தோக்குன்
ஆள்கூறுகள்: 5°20′0″N 100°29′0″E / 5.33333°N 100.48333°E / 5.33333; 100.48333
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்மத்திய செபராங் பிறை
நாடாளுமன்றம்புக்கிட் மெர்தாஜாம்
அரசு
 • உள்ளூராட்சிசெபராங் பிறை நகராண்மைக் கழகம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
14000
மலேசியத் தொலைபேசி எண்கள்+6045
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்P
இணையதளம்http://www.mbsp.gov.my

இந்த நகரம் கூலிம் நகருக்குச் செல்லும் வழியில் புக்கிட் மெர்தாஜாம் நகருக்கு அருகில் உள்ளது. இங்குதான் 1845-ஆம் ஆண்டில் செரோக் தோக்குன் கல்வெட்டு நினைவுச் சின்னம் (Cherok Tok Kun Inscription) கண்டுபிடிக்கப்பட்டது.[1]

பல்லவம்; தமிழ்; சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட கி.பி. 600-ஆம் ஆண்டுக் காலத்துக் கருங்கல் கல்வெட்டு. ரமணிபரன் எனும் ரமவுனிபா பல்லவ மன்னர் ஆட்சி செய்ததை அந்தக் கல்வெட்டு நினைவூட்டுகிறது. [2]

பொது

தொகு
 
பூஜாங் வெளி நாகரிகத்தின் ஒரு பகுதியான பத்து லிந்தாங் எனும் இடத்தில் கண்டு எடுக்கப்பட்ட நடனமாதுவின் கற்சிலை

இங்குள்ள புனித அன்னம்மாள் தேவாலயம் உலக அளவில் புகழ்பெற்றது. ஆண்டு தோறும் பெரிய அளவில் நோவெனா (Novena) திருவிழா நடைபெறும். மலேசியாவின் பல பாகங்களில் இருந்தும்; வெளிநாடுகளில் இருந்தும் கிறிஸ்துவ மக்கள் இங்கு ஒன்றுகூடி பிரார்த்தனைகள் செய்வார்கள்.[3]

வரலாறு

தொகு

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்து - பௌத்த சமயங்கள் கலந்த பூஜாங் பள்ளத்தாக்கு நாகரிகத்தின் ஒரு பகுதியாக புக்கிட் மெர்தாஜாம் பிரசித்தி பெற்று விளங்கி உள்ளது. இங்குதான் 1845-ஆம் ஆண்டில் செரோக் தெக்குன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[4]

அந்தக் கல்வெட்டை ஒரு நினைவுச் சின்னமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். இப்போது கெடா என்று அழைக்கப்படும் கடாரத்தை, பூஜாங் வெளி நாகரிகம், கி.பி 6-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து உள்ளது.

செருக் தோக்குன் கல்வெட்டு

தொகு

அந்தப் புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வளாகத்திற்குள் மேலும் ஒரு வரலாற்று நினைவுச் சின்னம். அதன் பெயர் செரோக் தோக்குன் கல்வெட்டு நினைவுச் சின்னம் (Cherok Tokun Relics). 1845-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.[5]

செரோக் தோக்குன் என்பது புனித அன்னம்மாள் தேவாலயம் அமைந்து இருக்கும் இடத்தின் பெயர். அந்தத் தேவாலயத்தின் வளாகத்தில் அமைந்து இருக்கும் கல்வெட்டுப் பாறைக்கு செரோக் தோக்குன் கல்வெட்டுப் பாறை என்று பெயர்.[6]

செரோக் தோக்குன் கல்வெட்டில் பாலி மொழியைச் சார்ந்த பல்லவ எழுத்துகள் உள்ளன. தமிழ் மொழியைச் சார்ந்த தமிழ் எழுத்துகள் உள்ளன. சமஸ்கிருத எழுத்துகளும் கலந்து வருகின்றன.[7]

பூஜாங் சமவெளி

தொகு
 
புக்கிட் மெர்தாஜாம், புனித அன்னாள் தேவாலயம்

பினாங்கு; புக்கிட் மெர்தாஜாம்; செரோக் தெக்குன்; செபராங் பிறை (புராவின்ஸ் வெல்லஸ்லி) ஆகிய பகுதிகள் பண்டைய கடாரத்தின் ஒரு பகுதியாகும். கடாரம் பரந்த படர்ந்த ஒரு பெரும் பகுதி. பல்லவத் தமிழர்கள் ஆட்சி செய்த பகுதி.

கடாரம் எனும் தமிழ்ப் பெயரில் இருந்து தான் கெடா எனும் பெயர் தோன்றியது. கடாரம் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் பூஜாங் சமவெளியில் புகழ்பெற்று விளங்கிய மாபெரும் பேரரசு. அந்த வகையில் கடாரத்தை, பூஜாங் பேரரசு என்றும் அழைக்கலாம். பூஜாங் நாகரிகம் என்றும் அழைக்கலாம்.

புனித அன்னாள் தேவாலயம்

தொகு

புனித அன்னாள் தேவாலயம் 1888-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. புக்கிட் மெர்தாஜாமில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய இடங்களில் ஒன்றாகும். இது பினாங்கு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் திருச்சபைகளில் ஒன்றாகச் செயல் படுகின்றது.

ஒவ்வோர் ஆண்டும், தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நோவெனா பண்டிகை இங்கு கொண்டாடப் படுகிறது. ஏறக்குறைய 100,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது. [8]

மேற்கோள்கள்

தொகு
  1. Tan, Noel (24 July 2009). "Cherok Tok Kun inscriptions are dated to around the 5th century, which is not surprising since we know that an Indianized settlement already have existed north of Cherok Tok Kun, in the Bujang Valley (about an hour's drive from here), as early as the 2nd or 3rd century". SEAArch - Southeast Asian Archaeology. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022.
  2. The ancient ruins of Lembah Bujang probably covers a larger area than popularly believed, from Bukit Choras in Kedah to Cherok Tok Kun in central Seberang Prai
  3. User, Super. "BM 03. Tides of candlelight adoration at St. Anne's Feast". butterworthguide.com.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 March 2018. {{cite web}}: |last= has generic name (help)
  4. HABIBU, SIRA. "The Bujang Valley is a sprawling historical complex and has an area of approximately 224 square kilometres (86 sq mi) situated near Merbok, Kedah, between Gunung Jerai in the north and Muda River in the south. It is the richest archaeological area in Malaysia". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.
  5. "The inscription stone was discovered in 1845 by Lieutenant Col. James Low, Acting Resident Councillor of Penang. He noted that there are 7 inscriptions and in Sanskrit. He also noted that the longest inscription is 10 feet". Archived from the original on 27 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022.
  6. "The inscription is somewhat eroded as it is over 1500 years old (between the 5th and 6th centuries). The vandalism on megalith has also made reading difficult. The inscription was later examined by Laidlay (1886) and he recorded it as Pali and translated the inscription". Malaysia Today. 30 November 2015. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022.
  7. Kumar, B. Nantha (18 September 2020). "Batu bersurat berusia 1,600 tahun terbiar, jadi sasaran vandalisme - V Nadarajan, 75, penulis buku Bujang Valley, The Wonder That Was Ancient Kedah berkata batu bersurat Cerok Tok Kun merupakan peninggalan tamadun purba Lembah Bujang yang paling ke selatan". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022.
  8. "More than 100,000 pilgrims celebrate the feast of St Anne at Bukit Mertajam". thesundaily.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 January 2021.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருக்_தோக்குன்&oldid=3736656" இலிருந்து மீள்விக்கப்பட்டது