சோகன் சிங் பக்னா

பாபா சோகன் சிங் பக்னா (Sohan Singh Bhakna) (22 சனவரி 1870 - 21 திசம்பர் 1968) [1] இவர் ஓர் இந்திய புரட்சியாளரும், கதர் கட்சியின் நிறுவனத் தலைவரும், 1915 ஆம் ஆண்டு கதர் சதித்திட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் முன்னணி உறுப்பினருமாவார். லாகூர் சதி விசாரணையில் கதி செய்யப்பட இவர், 1930 ல் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சதித்திட்டத்தில் பங்கெடுத்ததற்காக பதினாறு ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்தார். பின்னர் இவர் இந்திய தொழிலாளர் இயக்கத்துடன் நெருக்கமாக பணியாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்திலும்,இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலும் தனது கணிசமான நேரத்தை செலவிட்டார்.

சோகன் சிங் பக்னா
பிறப்பு22 சனவரி 1870
குத்ராய் குர்த், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு21 திசம்பர் 1968
அமிருதசரசு, இந்தியா
அமைப்பு(கள்)கதர் கட்சி, அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி.
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம், 1907 பஞ்சாப் கலவரம், கதர் கலகம், பொதுவுடைமை

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் 1870 சனவரி 22 ஆம் தேதி அமிர்தசரசின் வடக்கே உள்ள குத்ராய் குர்த் என்ற கிராமத்தில் பிறந்தார். இது இவரது தாயார் ராம் கவுரின் மூதாதையர் இல்லமாக இருந்தது. இவரது தந்தை பாய் கரம் சிங், அமிர்தசரசின் தென்மேற்கே16 கி.மீ தொலைவிலுள்ள பக்னா கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் ஷெர்கில் ஜாட் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது குழந்தைப் பருவத்தை பக்னாவில் கழித்தார். அங்கு இவர் தனது கல்வியை குருத்வாரா கிராமத்திலும், ஆர்ய சமாஜத்திலும் பெற்றார். சிறு வயதிலேயே பஞ்சாபி மொழியில் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்ட இவர், இந்து மற்றும் சீக்கிய மரபுகளின் அடிப்படைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டார். இவர் தனது பத்து வயதில் லாகூர் அருகே இருந்த ஒரு நில உரிமையாளரான குஷால் சிங் என்பவரின் மகளான பிஷன் கவுர் என்பவரை மணந்தார். இவர் 1896 ஆம் ஆண்டில் தனது பதினாறாவது வயதில் ஆரம்பப் பள்ளியை முடித்தார். இவர் தனது கிராமத்தில் முதன்முதலில் தொடக்கப்பள்ளி திறக்கப்பட்டபோது பதினொரு வயதில் தொடங்கினார். அந்த நேரத்தில் இவர் உருது மற்றும் பாரசீக மொழியிலும் தேர்ச்சி பெற்ரிருந்தார்.

1900 களில் பஞ்சாபில் தோன்றிய தேசியவாத இயக்கம் மற்றும் விவசாய ப் போராட்டம் ஆகியவற்றில் இவர் ஈடுபட்டார். 1906-07 இல் காலனித்துவ எதிர்ப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 1909 இல், இவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டு மாத பயணத்திற்குப் பிறகு, சிங் 1909 ஏப்ரல் 4 அன்று சியாட்டிலை அடைந்தார்.

அமெரிக்கா தொகு

இவர் விரைவில் நகரத்திற்கு அருகில் கட்டப்பட்டு வரும் ஒரு மர ஆலையில் தொழிலாளியாக வேலையில் சேர்ந்தார். 1900 களின் இந்த முதல் தசாப்தத்தில், வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரை பெரிய அளவில் இந்திய குடியேற்றத்தைக் கண்டது. புலம்பெயர்ந்தோரில் பெரும் பகுதியினர் குறிப்பாக பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் பகுதியிலிருந்து வந்தவர்கள். இது பொருளாதார மந்தநிலையையும் விவசாய அமைதியின்மையையும் எதிர்கொண்டது. கனேடிய அரசாங்கம் தெற்காசியர்கள் கனடாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதையும், ஏற்கனவே நாட்டில் உள்ளவர்களின் அரசியல் உரிமைகளை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான சட்டங்களுடன் இந்த வருகையை சந்தித்தது. பஞ்சாபி சமூகம் இதுவரை பிரித்தானிய இராச்சியத்திற்கும் பொதுநலவாய நிறுவனத்திற்கும் ஒரு முக்கியமான விசுவாசமான சக்தியாக இருந்தது. பிரித்தானியர் மற்றும் வெள்ளை குடியேறியவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பிரிட்டிசு மற்றும் பொதுநலவாய அரசாங்கங்களிடமிருந்து அதன் அர்ப்பணிப்பு, சம வரவேற்பு மற்றும் உரிமைகளை மதிக்க சமூகம் எதிர்பார்த்தது. இந்த சட்டங்கள் சமூகத்தில் வளர்ந்து வரும் அதிருப்தி, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காலனித்துவ எதிர்ப்பு உணர்வுகளுக்கு ஊட்டமளித்தன. பெருகிய முறையில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்ட சமூகம் தன்னை அரசியல் குழுக்களாக ஒழுங்கமைக்கத் தொடங்கியது. ஏராளமான பஞ்சாபியர்களும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். ஆனால் அவர்கள் இதே போன்ற அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை எதிர்கொண்டனர். [2] இந்த குழுக்களிடையே ஆரம்பகால படைப்புகள் 1908 ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களும் பஞ்சாபி குடியேறியவர்களான பி.எஸ்.காங்கோஜ், பண்டிட் கன்சி ராம், தாரக்நாத் தாசு மற்றும் பகவான் சிங் கியானி போன்றவர்களும் ஒரு அரசியல் இயக்கத்தை நோக்கி செயல்பட்டு வந்த காலத்திலிருந்தே உள்ளன. ஓரிகானின் போர்ட்லேண்டில் காங்கோஜ் இந்திய சுதந்திரக் கழகத்தை நிறுவினார். இந்த நேரத்தில் இந்த அரசியல் இயக்கம் இந்திய குடியேறியவர்களிடையே வலுவாக உருவானது. இவரது படைப்புகள் இவரை அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்த மற்ற இந்திய தேசியவாதிகளுடன் நெருக்கமாகக் கொண்டுவந்தன.

இதற்கிடையில், இந்தியா ஹவுஸ் மற்றும் இந்திய மாணவர்களின் தேசியவாத செயல்பாடு 1910 நோக்கி கிழக்கு கடற்கரையில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஆனால் படிப்படியாக மேற்கு நோக்கி சான் பிரான்சிஸ்கோவிற்கு மாறியது. ஐரோப்பாவிலிருந்து வந்த ஹர் தயாலின் இந்த வருகையானது நியூயார்க்கில் உள்ள அறிவுசார் கிளர்ச்சியாளர்களுக்கும், முக்கியமாக பஞ்சாபி தொழிலாளர் தொழிலாளர்கள் மற்றும் மேற்கு கடற்கரையில் குடியேறியவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, கதர் இயக்கத்தின் அடித்தளத்தை அமைத்தது. [3] 1913 ஆம் ஆண்டு கோடையில், கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பிரதிநிதிகள் ஸ்டாக்டனில் சந்தித்தனர். அங்கு பசிபிக் கடற்கரையின் இந்துஸ்தானி தொழிலாளர்கள் என்ற அமைப்பை நிறுவ முடிவு செய்யப்பட்டது. பசிபிக் கடலோர இந்துஸ்தான் சங்கம், 1913 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஹர் தயால், பி.எஸ்.காங்கோஜ் மற்றும் பக்னா தலைமையில் உருவாக்கப்பட்டது. பக்னா அதன் தலைவராக இருந்தார். இது இந்திய குடியேறியவர்களிடமிருந்து உறுப்பினர்களை ஈர்த்தது, பெரும்பாலும் பஞ்சாபிலிருந்து . [2] அதன் உறுப்பினர்கள் பலர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், தயால், தாரக் நாத் தாசு, கர்த்தார் சிங் சரபா மற்றும் வி.ஜி. பிங்கிள் . கட்சி விரைவில் இந்திய வெளிநாட்டவர்களிடமிருந்து, குறிப்பாக அமெரிக்கா, கனடா மற்றும் ஆசியாவிலிருந்து ஆதரவைப் பெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ், ஆக்ஸ்போர்டு, வியன்னா, வாசிங்டன், டி.சி மற்றும் சாங்காய் ஆகிய இடங்களில் கதர் கூட்டங்கள் நடைபெற்றன. [4]

கதர் இயக்கம் தொகு

கதர் கட்சி பசிபிக் கடற்கரை இந்துஸ்தான் சங்கத்திலிருந்து உருவானது. ஆயுத புரட்சியின் மூலம் இந்தியாவில் பிரித்தானிய காலனித்துவ அதிகாரத்தை அகற்றுவதே கதரின் இறுதி குறிக்கோளாக இருந்தது. ஆதிக்க நிலை மிதமான காங்கிரசின் தலைமையிலான இந்திய விடுதலை இயக்கத்தையும், பிந்தைய அரசியலமைப்பு முறைகளையும் மென்மையாக அது கருதியது. இந்திய வீரர்களை கிளர்ச்சிக்கு தூண்டுவதே கதரின் முதன்மையான உத்தியாகும். [2] அதற்காக, நவம்பர் 1913 இல் கதர் சான் பிரான்சிஸ்கோவில் யுகந்தர் ஆசிரம அச்சகத்தை நிறுவியது. பத்திரிகைகள் இந்துஸ்தான் கதர் செய்தித்தாள் மற்றும் பிற தேசியவாத இலக்கியங்களை தயாரித்தன. [4]

மேற்கோள்கள் தொகு

குறிப்புகள் தொகு

  • Sohan Singh Bhakna from searchsikhism.com
  • Deepak, B. R. (1999), Revolutionary Activities of the Ghadar Party in China. China Report 1999; 35; 439, Sage Publications, ISSN 0009-4455.
  • Fischer-Tinē, Harald (2007), Indian Nationalism and the ‘world forces’: Transnational and diasporic dimensions of the Indian freedom movement on the eve of the First World War. Journal of Global History (2007) 2, pp. 325–344, Cambridge University Press., ISSN 1740-0228.
  • Puri, Harish K (1980), Revolutionary Organization: A Study of the Ghadar Movement.Social Scientist, Vol. 9, No. 2/3. (Sep. - Oct., 1980), pp. 53-66, Social Scientist, ISSN 0970-0293.
  • Sarkar, Sumit (1984), The Communists and 1942.Social Scientist, Vol. 12, No. 9. (Sep., 1984), pp. 45-53, Social Scientist, ISSN 0970-0293.
  • Strachan, Hew (2001), The First World War. Volume I: To Arms, Oxford University Press. USA, ISBN 0-19-926191-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகன்_சிங்_பக்னா&oldid=3045903" இலிருந்து மீள்விக்கப்பட்டது