சோழமாதேவி ஊராட்சி (திருச்சிராப்பள்ளி)

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஊராட்சி


சோழமாதேவி ஊராட்சி, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2293 ஆகும். இவர்களில் பெண்கள் 1109 பேரும் ஆண்கள் 1184 பேரும் உள்ளனர்.

சோழமாதேவி
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி திருச்சிராப்பள்ளி
மக்களவை உறுப்பினர்

துரை வைகோ

சட்டமன்றத் தொகுதி திருவெறும்பூர்
சட்டமன்ற உறுப்பினர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திமுக)

மக்கள் தொகை 2,293
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அடிப்படை வசதிகள்

தொகு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 367
சிறு மின்விசைக் குழாய்கள் 3
கைக்குழாய்கள் 32
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 11
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1
ஊரணிகள் அல்லது குளங்கள் 4
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 14
ஊராட்சிச் சாலைகள் 10
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5

சிற்றூர்கள்

தொகு

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. பீப்பிள்ஸ் நகர்
  2. சோழமாதேவி
  3. ஆனந்த நகர்
  4. சோழமாநகர்

வரலாறு

தொகு

இவ்வூர்க் கோயிலில் உள்ள கல்வெட்டில் உய்ய கொண்டான் "ஆற்று வாரியம்' என்ற அமைப்பு குறிப்பிடப்படுகிறது. இவ்வமைப்பு உய்ய கொண்டான் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்திக் கொள்ள உதவியது.[8] 993-ல் முதலாம் ராஜராஜனால் கட்டப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. தஞ்சை பெரியகோயில் மெய்க்காவலுக்கு இவ்வூரிலிருந்தும் நால்வர் சென்றுள்ளனர். இங்குள்ள வீரராஜேந்திரனின் கல்வெட்டு ஆதிசங்கரின் 'பகவத் பாதீயம்' எனும் சாரீர பாஷ்யத்திற்கு உரை எழுதிய சதானந்த பிடாரர் என்பவர் இயற்றிய உரையை தினமும் இங்கு சொற்பொழிவு ஆற்றியுள்ளார் என்றும் அவரின் பணிக்காக நிலம் கொடைகள் வழங்கப்பட்டதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு செய்தியை கேள்விப்பட்டு காஞ்சி மட சங்கராச்சாரியர் இத்தல இறைவனை தரிசித்து சென்றுள்ளார். [9] கோயில்களில் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், ‘உவச்சர்கள்’ எனப்பட்டனர். இங்குள்ள சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உவச்சர்கள் ‘பஞ்ச மகா சப்தம்’ செய்ய நிலம் அளிக்கப்பட்டதாக ராஜராஜனது 26-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு வழியே அறியலாம். பஞ்ச மகா சப்தம் என்பது 5 வகையான இசையைக் குறிக்கும். தோல், துளை, நரம்பு, கஞ்சம், வாய்ப்பாட்டு போன்றவற்றால் எழும் நாதம் 'பஞ்ச மகா சப்தம்’ என்பர். ஆதிச்சன் பாழி, சோழமாதேவி பேருவச்சன், பல்லவராயன், திருவரங்கதேவன், கடம்பனான கந்தர்வ பேருவச்சன் என்பார் இசை வாசிக்கும் உவச்சர்களில் முக்கியமானவர்கள் என கல்வெட்டு கூறுகிறது.[10]

சான்றுகள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "திருவெறும்பூர் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  8. கி.ஸ்ரீதரன் (2021-12-12). "நீரின்றி அமையாது உலகு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-09-28.
  9. காமராஜ், மு ஹரி (2022-04-22). "தஞ்சை பெரியகோயில் மெய்க்காவலுக்கு வீரர்களை அனுப்பிய சோழமாதேவி ஊர்! அதிசயக் கல்வெட்டுகள் அடங்கிய ஊர்!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01. {{cite web}}: External link in |website= (help)
  10. காமராஜ், மு ஹரி (2022-04-22). "தஞ்சை பெரியகோயில் மெய்க்காவலுக்கு வீரர்களை அனுப்பிய சோழமாதேவி ஊர்! அதிசயக் கல்வெட்டுகள் அடங்கிய ஊர்!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01. {{cite web}}: External link in |website= (help)