ஜெர்லுன் மக்களவைத் தொகுதி
ஜெர்லுன் (மலாய்: Jerlun; ஆங்கிலம்: Jerlun; சீனம்: 杰伦) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P005) ஆகும்.
ஜெர்லுன் (P005) மலேசிய மக்களவைத் தொகுதி கெடா | |
---|---|
Jerlun (P005) Federal Constituency in Kedah | |
ஜெர்லுன் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | குபாங் பாசு மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | ஜெர்லுன் தொகுதி |
முக்கிய நகரங்கள் | ஜெர்லுன்; ஜித்ரா |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அப்துல் கனி அகமது (Abdul Ghani Ahmad) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 67,601 |
தொகுதி பரப்பளவு | 316 ச.கி.மீ |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
ஜெர்லுன் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி, ஜெர்லுன் தொகுதி 35 தேர்தல் மாவட்டங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[1]
பொது
தொகுஜெர்லுன் நகரம்
தொகுஜெர்லுன் நகரம் (Jerlun) கெடா, குபாங் பாசு மாவட்டத்தில் (Kubang Pasu District) உள்ள ஒரு நகரம். பெர்லிஸ் மாநிலத்திற்கு தெற்கே உள்ளது. இது ஒரு கிராமப்புற நகரம்.
இந்த நகரத்திற்கு அருகில் கோலா ஜெர்லுன் எனும் கடற்கரை கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் புகழ்பெற்றது.[2]
ஜெர்லுன் எனும் பெயரில் ஜெர்லுன் நாடாளுமன்றத் தொகுதியும் உள்ளது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 14-ஆவது 2018|மலேசியப் பொதுத் தேர்தலில்]] இந்தத் தொகுதியில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.
ஜெர்லுன் நாடாளுமன்றத் தொகுதி
தொகுஜெர்லுன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
லங்காவி தொகுதி ஜெர்லுன்-லங்காவி தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டு, ஜெர்லுன் தொகுதி என மறுபெயரிடப்பட்டது | |||
9-ஆவது | 1995–1999 | அனாபி ரம்லி (Hanafi Ramli) |
பாரிசான் (அம்னோ) |
10-ஆவது | 1999–2004 | அபுபக்கர் ஒசுமான் (Abu Bakar Othman) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
11-ஆவது | 2004–2008 | அப்துல் ரகுமான் அரிபின் (Abdul Rahman Ariffin) |
பாரிசான் (அம்னோ) |
12-ஆவது | 2008–2013 | முக்ரிஸ் மகாதீர் (Mukhriz Mahathir) | |
13-ஆவது | 2013–2018 | ஒசுமான் அசீஸ் (Othman Aziz) | |
14-ஆவது | 2018–2022 | முக்ரிஸ் மகாதீர் (Mukhriz Mahathir) |
பாக்காத்தான் (பெர்சத்து) |
2020 | பாக்காத்தான் (பெர்சத்து) | ||
சுயேட்சை | |||
2020–2022 | பெஜுவாங் | ||
15-ஆவது | 2022–தற்போது | அப்துல் கனி அகமது (Abdul Ghani Ahmad) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
தேர்தல் முடிவுகள்
தொகுபொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் | 67,601 | 100.00% |
வாக்களித்தவர்கள் | 52,909 | 77.23% |
செல்லுபடி வாக்குகள் | 52,207 | - |
செல்லாத வாக்குகள் | 635 | - |
ஜெர்லுன் வேட்பாளர் விவரங்கள்
தொகுவேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் | (%) | |
---|---|---|---|---|
அப்துல் கனி அகமது (Abdul Ghani Ahmad) |
பெரிக்காத்தான் | 31,685 | 60.69% | |
ஒசுமான் அசீஸ் (Othman Aziz) |
பாரிசான் | 11,229 | 21.51% | |
முகமது பாட்சிலி முகமது அலி (Mohamed Fadzli Mohd Ali) |
பாக்காத்தான் | 6,149 | 11.78% | |
முக்ரிஸ் மகாதீர் (Mukhriz Mahathir) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 3,144 | 6.02% |
மேற்கோள்கள்
தொகு- "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Kawasan Pantai Di Kuala Jerlun ini agak istimewa kerana kewujudannya yang merupakan destinasi pelancongan akuatik dimana bukan sahaja nelayan ke laut untuk menangkap ikan.
மேலும் காண்க
தொகுவார்ப்புரு:கெடா மக்களவைத் தொகுதிகள்