ஜெசி ரைடர்

நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்
(ஜெஸ் ரைடர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜெசி டானியல் ரைடர் (Jesse Daniel Ryder, பிறப்பு: ஆகத்து 6, 1984), நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர்.[1] இவர் இடதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜெசி ரைடர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜெசி டானியல் ரைடர்
உயரம்1.83 m (6 அடி 0 அங்)
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 241)அக்டோபர் 17 2008 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வுசனவரி 15 2011 எ. பாக்கிஸ்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 146)பிப்ரவரி 9 2008 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 5 2011 எ. பாக்கிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 16 28 58 86
ஓட்டங்கள் 1,211 857 3,827 2,157
மட்டையாட்ட சராசரி 44.85 35.70 43.48 27.30
100கள்/50கள் 3/6 2/4 9/19 4/10
அதியுயர் ஓட்டம் 201 107 236 114
வீசிய பந்துகள் 492 298 2,903 1,222
வீழ்த்தல்கள் 5 10 46 41
பந்துவீச்சு சராசரி 56.00 31.80 29.60 29.02
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/7 3/29 4/23 4/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 9/– 46/– 28/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 8 2011

2002 ஆம் ஆண்டில் 19 வயதிற்கு உட்பட்ட துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் வெலிங்டன் மற்றும் மத்திய மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். மேலும் இவர் முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் பட்டியல் அ துடுப்பாட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும் எச்செக்ஸ் மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளளார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்,புனே வாரியர்சு இந்தியா மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

சர்வதேச போட்டிகள்

தொகு

இவர் 2008 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது அக்டோபர் 17 இல் சிட்டகொங்கில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 5 பந்துகளில் 1 ஓட்டம் எடுத்து சகீப் அல் அசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 10ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 1 ஓவரை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இவரின் பதுவீச்சு சராசரி 0.70 ஆகும். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 101 பந்துகளில்38 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இதில் 4 நான்குகளும் அடங்கும். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 3 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டி

தொகு

2011 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. டிசம்பர் 9 இல் ஹோபார்ட்டில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 10 பந்துகளில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் பட்டின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 28 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப்போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]

பெப்ரவரி 9, 2008 இல் வெலிங்டனில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 50 பந்துகளில் 31 ஓட்டங்களை எடுத்தார்.இதில் நான்கு 4 மற்றும் 1 ஆறுகள் அடங்கும். இவரின் ஸ்டிரைக் ரேட் 62.00 ஆகும்.[3]

இறுதிப் போட்டி

தொகு

2014 ஆம் ஆண்டில் நியூசிலாதுத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சனவரி 31 இல் வெலிங்டனில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 26 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4]

சான்றுகள்

தொகு
  1. "Jesse Ryder", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
  2. "2nd Test, New Zealand tour of Australia at Hobart, Dec 9-12 2011 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
  3. "1st ODI (D/N), England tour of New Zealand at Wellington, Feb 9 2008 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
  4. "5th ODI (D/N), India tour of New Zealand at Wellington, Jan 31 2014 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசி_ரைடர்&oldid=3968876" இலிருந்து மீள்விக்கப்பட்டது