ஜேம்ஸ் நீஷம்

ஜிம்மி நீஷம் (Jimmy Neesham) என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் டக்ளஸ் ஷீஹான் நீஷம் (பிறப்பு: செப்டம்பர் 17, 1990) நியூசிலாந்து பன்னாட்டுத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக அனைத்து வகையான துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடுகிறார். ஆக்லாந்தில் பிறந்த இவர் வெலிங்டன் துடுப்பாட்ட அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடுகிறார் .

ஜேம்ஸ் நீஷம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேம்ஸ் டக்ளஸ் ஷீஹான் நீஷம்
பிறப்பு17 செப்டம்பர் 1990 (1990-09-17) (அகவை 33)
ஆக்லாந்து, நியூசிலாந்து
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைவலது-கை மிதம்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 264)14 பிப்ரவரி 2014 எ. இந்தியா
கடைசித் தேர்வு16 மார்ச் 2017 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 178)19 ஜனவரி 2013 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப14 ஜூலை 2019 எ. இங்கிலாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 59)21 டிசம்பர் 2012 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப10 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009/10–2010/11ஆக்லாந்து
2011/12–2017/18ஒட்டாகோ
2014டெல்லி டேர்டெவில்ஸ்
2014கயானா அமேசான் வாரியர்ஸ்
2016டெர்பிசையர்
2017கென்ட்
2018/19வெல்லிங்டன்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப முத பஅ
ஆட்டங்கள் 12 59 61 113
ஓட்டங்கள் 709 1,247 3,055 2,784
மட்டையாட்ட சராசரி 33.76 31.17 32.50 35.69
100கள்/50கள் 2/4 0/6 5/15 2/17
அதியுயர் ஓட்டம் 137* 97* 147 120*
வீசிய பந்துகள் 1,076 1,772 6,448 3,577
வீழ்த்தல்கள் 14 59 109 122
பந்துவீச்சு சராசரி 48.21 30.74 34.25 28.77
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 2 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/42 5/31 5/65 5/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 23/– 64/– 48/–
மூலம்: ESPNcricinfo, 10 நவம்பர் 2019

பன்னாட்டுப் போட்டிகள் தொகு

இந்தியாவுக்கு எதிராக நீஷம் தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடி ஆட்டமிழக்காமல் 137 ஓட்டங்கள் எடுத்தார், இது அறிமுகப் போட்டியில் 8வதாக களமிறங்கிய தேர்வு மட்டையாளர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.[1] ஜூன் 2014 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது இரண்டாவது தேர்வுப் போட்டியில் நூறு அடித்ததன் மூலம் தனது முதல் இரண்டு போட்டிகளில் நூறு அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார். [2]

3 ஜனவரி 2019 அன்று, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நீஷம் ஒரு ஓவரில் ஐந்து ஆறுகள் உட்பட 34 ஓட்டங்கள் எடுத்தார்.[3] இது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மட்டையாளர் ஒருவர் ஒரு நிறைவில் எடுத்த அதிக ஓட்டங்களாகும். [4]

ஏப்ரல் 2019 இல், இவர் 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றார். [5] [6] 1 ஜூன் 2019 அன்று, உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் முதல் போட்டியில், நீஷம் தனது 50 வது ஒருநாள் போட்டியில் விளையாடினார். [7] ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்தின் போட்டியில், நீஷம் தனது ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தியதுடன் 50வது முறையாக மட்டையாளரை வீழ்த்தினார். [8]

மேற்கோள்கள் தொகு

  1. "Brendon McCullum hits 302 as New Zealand draw with India". BBC Sport. 18 February 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.
  2. New Zealand 7 for 508 (dec), West Indies 0 for 19 at stumps on day two of first Test in Jamaica, after century by Jimmy Neesham
  3. "James Neesham marks return with five sixes in an over". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
  4. "Neesham slams 34 in record over". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
  5. "Sodhi and Blundell named in New Zealand World Cup squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  6. "Uncapped Blundell named in New Zealand World Cup squad, Sodhi preferred to Astle". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  7. "ICC Cricket World Cup 2019 (Match 3): New Zealand vs Sri Lanka – Statistical Preview". Cricket Addictor. https://cricketaddictor.com/cricket/icc-cricket-world-cup-2019-match-3-new-zealand-vs-sri-lanka-statistical-preview/. பார்த்த நாள்: 1 June 2019. 
  8. "Neesham, Ferguson leaves Afghanistan in ruins". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 8 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_நீஷம்&oldid=2875167" இலிருந்து மீள்விக்கப்பட்டது