ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope, JWST) இது விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 2019ஆண்டு அக்டோபர் மாதம் விண்வெளியில் நிலை நிறுத்த முடிவுசெய்துள்ள தொலை நோக்கி கருவியாகும். இது ஒரு அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாக திகழும் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளார்கள். ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மற்றும் 1990 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி போன்று இருந்தாலும் இவற்றைவிட அதிகளவு திறன் கொண்டு விண்வெளியில் இருக்கும் அகசிவப்பு கதிர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பூமிக்கு அதன் முடிவுகளை அனுப்பும் திறன் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும்.[5]
![]() | |||||||||||
திட்ட வகை | விண்வெளி நோக்காய்வுக்கலம் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயக்குபவர் | தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) / ESA / CSA / STScI[1] | ||||||||||
இணையதளம் | jwst.nasa.gov sci.esa.int/jwst stsci.edu/jwst | ||||||||||
திட்டக் காலம் | 5 years (design) 10 years (goal) | ||||||||||
விண்கலத்தின் பண்புகள் | |||||||||||
தயாரிப்பு | Northrop Grumman Ball Aerospace | ||||||||||
ஏவல் திணிவு | 6,500 kg (14,300 lb)[2] | ||||||||||
பரிமாணங்கள் | 20.1 m × 7.21 m (65.9 ft × 23.7 ft) (sunshield) | ||||||||||
திட்ட ஆரம்பம் | |||||||||||
ஏவப்பட்ட நாள் | October 2018[3] | ||||||||||
ஏவுகலன் | Ariane 5 ECA | ||||||||||
ஏவலிடம் | Kourou ELA-3 | ||||||||||
ஒப்பந்தக்காரர் | Arianespace | ||||||||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||||||||
Reference system | Sun–Earth L2 | ||||||||||
சுற்றுவெளி | Halo orbit | ||||||||||
அண்மைapsis | 374,000 km (232,000 mi)[4] | ||||||||||
கவர்ச்சிapsis | 1,500,000 km (930,000 mi)[4] | ||||||||||
சுற்றுக்காலம் | 6 months | ||||||||||
Epoch | planned | ||||||||||
Main | |||||||||||
வகை | Korsch telescope | ||||||||||
விட்டம் | 6.5 m (21 ft) | ||||||||||
குவிய நீளம் | 131.4 m (431 ft) | ||||||||||
சேர்க்கும் பரப்பு | 25 m2 (270 sq ft) | ||||||||||
அலைநீளங்கள் | from 0.6 µm (orange) to 28.5 µm (mid-அகச்சிவப்புக் கதிர்) | ||||||||||
Transponders | |||||||||||
Band | அலைக்கற்றை எஸ். பாண்ட் (TT&C support) Ka band (data acquisition) | ||||||||||
பட்டையகலம் | S-band up: 16 kbit/s S-band down: 40 kbit/s Ka band down: up to 28 Mbit/s | ||||||||||
Instruments | |||||||||||
| |||||||||||
![]() James Webb Space Telescope insignia |
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் தொலைதூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் காணமுடியும். இதன் மூலம் விண்வெளியில் இருக்கும் பல புதிர்களுக்கு விடைகிடைக்கும் என்று கூறப்படுகிறது.
திட்டசெலவுதொகு
இதன் திட்டம், ஆராய்ச்சி என அனைத்திற்குமான செலவு 58,590 கோடிகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக 17 நாடுகள் கூட்டுச்சேர்ந்து உள்ளன. இதில் முக்கியமாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், மற்றும் கனடியன் விண்வெளி நிறுவனமும் பங்கு வகிக்கின்றன.
குவி ஆடிகள்தொகு
இதில் மொத்தமாக 18 அறுகோண வடிவிலான குவி ஆடிகள் பொருத்தப்படும், முதல் முயற்சியாக 2015 நவம்பர் 26 ஆம் திகதி அன்று முதல் ஆடி பொருத்தப்பட்டது. இந்த ஆடிகளில் ஒன்வொன்றும் எடை 40 கிலோ கிராம், 1.3 மீட்டர் சுற்றளவு கொண்டிருக்கும். ஆடிகள் அனைத்தும் பொருத்தப்பட்டபின்பு 6.5 மீட்டர் அளவு கொண்ட பெரிய ஒரே ஆடியாக காட்சி கொடுக்கும்.
ஒப்பீட்டுதொகு
கூட்டாளிகள்தொகு
பங்குபெரும் நாடுகள்
படம்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "NASA JWST FAQ "Who are the partners in the Webb project?"". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). பார்த்த நாள் 18 November 2011.
- ↑ "JWST – Frequently Asked Questions". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). பார்த்த நாள் 29 June 2015.
- ↑ "JWST factsheet". ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (2013-09-04). பார்த்த நாள் 2013-09-07.
- ↑ 4.0 4.1 "JWST (James Webb Space Telescope)". ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் eoPortal. பார்த்த நாள் 29 June 2015.
- ↑ வெப் தொலைநோக்கியில் முதல் கண்ணாடி பொருத்தப்பட்டது தி இந்து தமிழ் 27 நவம்பர் 2015