தமிழக கோயில்களின் பெரியத் தெப்பக்குளங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பரப்பளவில் பெரியதாக உள்ள தமிழகக் கோயில் தெப்பக்குளங்களின் (List of large temple tanks) மிக முக்கியமான கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பெரிய கோயில் தொட்டிகளின் பட்டியல்
தொகுநிலை | பெயர் | படம் | பரப்பளவு (ஏக்கர்) | பரப்பளவு (கெக்டேர்) | அமைவிடம் | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
1 | அரித்ரா நதி | 23 | 9.3 | மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் | இராசகோபாலசாமி கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் மன்னார்குடி நகரில் அமைந்துள்ள வைணவ திருக்கோயிலாகும். மழை நீர் சேகரிக்கும் அமைப்பாக நகரில் கோயிலின் தெப்பக்குளம் அரித்ரா நதி உள்ளது. இக்கோயில் 16 கோபுரங்கள், 7 பிரகாரங்கள் (வெளி முற்றத்தில்), 24 கர்ப்பக்கிரகம், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்களை உள்ளடக்கியது. இந்த கோயிலின் வளாகம் குலோத்துங்க சோழரால் கட்டப்பட்டது. பின்னர் சோழர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டது.[1] இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோயில் தெப்பக்குளமாகும். | |
2 | வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் | 16.2 | 6.6 | மதுரை, மதுரை மாவட்டம் | திருமலை நாயக்கர் மன்னர் தனது அரண்மனையான திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்குத் தேவையான செங்கற்களைத் தயாரிப்பதற்காக மண்ணைத் தோண்டிய இடம் இது. இவ்வாறு உருவான குழி இப்போது தெப்பக்குளமாகக் காணப்படுகிறது.[2] | |
3 | கமலாலயம் | 32 | 13 | திருவாரூர், திருவாரூர் மாவட்டம் | திருவாரூரில் உள்ள பழங்கால ஸ்ரீதியாகராஜா கோயில் சிவனின் சோமசுகந்த அம்சத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கமலாலயம் கோயில் தெப்பக்குளம் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த கோயில் தேர் தமிழ்நாட்டில் மிகப் பெரிய தேராகும்.[3] | |
4 | மகாமக குளம் | 6.2 | 2.5 | கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் | கும்பகோணம் நகரத்தின் மையத்தில் இந்த தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளம் 6.2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் 16 சிறிய மண்டபங்கள் மற்றும் கிழக்குப் பகுதியில் ஒரு "நவக்கன்னி கோயில்" (ஒன்பது ஆறுகள்) உள்ளது. இந்தியாவின் அனைத்து நதிகளும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் பண்டிகை நாளில் இந்த தெப்பக்குளத்தில் சந்திப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தெப்பக்குளத்தில் நீராடுவது இந்தியாவின் அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.[4] | |
5 | கபாலீசுவரர் தெப்பக்குளம் | 7.5 | 3.0 | மயிலாப்பூர், சென்னை | கபாலீசுவரர் கோயில், சிவன் கோயிலாகும். இது மயிலாப்பூரில் அமைந்துள்ளது. இந்த கோயில் வழக்கமான திராவிட கட்டிடக்கலை முறையில் உள்ளது. இந்த கோயில் விசுவகர்மா ஸ்தபதிகளுக்கான சான்றாகும். இந்த கோயிலின் இருபுறமும் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இவற்றில் உயர்ந்த கிழக்கு கோபுரம் சுமார் 40 மீ உயரமும், மேற்கு கோபுரம் தெப்பக்குளத்தினை நோக்கியுள்ளது.[4] | |
6 | திருச்சி தெப்பக்குளம் | 5 | 2.0 | திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் | திருச்சி மலைக்கோட்டைத் தெப்பக்குளம் திருச்சிராப்பள்ளியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டை அருகிலேயே அமைந்துள்ளது. மலைக்கோட்டை கோயில் பாறையின் மேல் 83 மீட்டர் உயரத்தில் உள்ளது. மென்மையான பாறையினை முதலில் பல்லவர்கள் குடைந்து கோயிலமைத்தனர். ஆனால் விசயநகரப் பேரரசின் கீழ் இரு கோயில் பணியினை நிறைவு செய்தவர்கள் மதுரை நாயக்கர்கள்.[5] | |
7 | திருக்கண்ணப்புரம் தெப்பக்க்குளம் | 4.5 | 1.8 | திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் மாவட்டம் | மயிலாடுதுறை-நாகப்பட்டினம் சாலையில் சன்னாநல்லூர் சென்று, அங்கிருந்து திருப்புகலூர் வழியே திருக்கண்ணபுரம் செல்லலாம். விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் மூலவர் நீலமேகப் பெருமாள், உற்சவர் சவுரிராச பெருமாள் ஆவார். இந்த கோயிலின் முன் தெப்பக்குளம் உள்ளது. இது 108 "திவ்ய தேசங்களில்" ஒன்றாகும். விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்கள் 12 ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டதில், இது நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலம்.[6] |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Tourist Guide to Tamil Nadu. Sura Books. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-177-2.
- ↑ "Archived copy". Archived from the original on 2012-04-22. பார்க்கப்பட்ட நாள் 2014-07-17.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Thiruvarur at Tamil Nadu tourism website". பார்க்கப்பட்ட நாள் 2006-11-11.
- ↑ 4.0 4.1 History, Religion and Culture of India, S. Gajrani
- ↑ India By Sarina Singh, Joe Bindloss, Paul Clammer, Janine Eberle
- ↑ 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu . M. S. Ramesh, Tirumalai-Tirupati Devasthanam.