தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு 40,550,382 சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்தனர். இவர்களில் 39,214,721 உள்ளூர் பயணிகள் 1,335,661 வெளியூர் பயணிகள்.[1]

பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விவரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு.

தமிழ்நாடு பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும்.

உலகப் பாரம்பரியக் களங்கள் - தமிழ்நாடு

தொகு
 
நீலகிரி மலை இரயில்

தமிழ்நாட்டில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட ஐந்து உலக பாரம்பரியக் களங்கள் உண்டு. மூன்று சோழர் கோயில்களையும் ஒரு தொகுதியாக வகைப்படுத்தப்படுவதுண்டு.

சுற்றுலாத் தலங்கள்

தொகு
 
மாமல்லபுரம்
 
ணா நூற்றாண்டு நூலகம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் விடுதி, உணவகங்கள், சுற்றுப்பயணங்கள், படகு வீடுகள், தொலைநோக்கி வீடுகள் ஆகியவற்றை நடத்துகிறது. உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தமது பண்பாட்டு மூலங்களை அறிய தமிழ்நாட்டுக்கு வருகின்றார்கள்.

உள்நாட்டு சுற்றுலா துறை

தொகு

2014 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [2] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

வரிசை மாநிலம் எண்ணிக்கை
1 தமிழ்நாடு 327.6 மில்லியன்
2 உத்தர பிரதேசம் 182.8 மில்லியன்
3 கர்நாடகா 118.3 மில்லியன்

2013 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [3] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

வரிசை மாநிலம் எண்ணிக்கை விழுக்காடு
1 தமிழ்நாடு 244232487 21.3
2 உத்தர பிரதேசம் 226531091 19.8
3 ஆந்திர பிரதேசம் 152102150 13.3

2012 ஆண்டின் உள்நாட்டுச் சுற்றுலாத் துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [4] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

வரிசை மாநிலம் எண்ணிக்கை விழுக்காடு
1 ஆந்திர பிரதேசம் 206817895 20.0
2 தமிழ்நாடு 184136840 17.8
3 உத்தர பிரதேசம் 168381276 16.2

வெளிநாட்டு சுற்றுலா துறை

தொகு

2014 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [5] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

வரிசை மாநிலம் எண்ணிக்கை
1 தமிழ்நாடு 4.66 மில்லியன்
2 மஹாராஸ்திரா 4.39 மில்லியன்
3 உத்தர பிரதேசம் 2.91 மில்லியன்

2013 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [6] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

வரிசை மாநிலம் எண்ணிக்கை விழுக்காடு
1 மஹாராஸ்திரா 4156343 20.8
2 தமிழ்நாடு 3990490 20.0
3 தில்லி 2301395 11.5

2012 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [7] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

வரிசை மாநிலம் எண்ணிக்கை விழுக்காடு
1 மஹாராஸ்திரா 5120287 24.7
2 தமிழ்நாடு 3561240 17.2
3 தில்லி 2345980 11.3
 
இரவுநேரத்தில் ஒளியூட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை

தமிழ்நாட்டில் 5 தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.

 1. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா [டாப்ஸ்லிப்],பொள்ளாச்சி
 2. முதுமலை தேசியப் பூங்கா ,நீலகிரி
 3. முக்குருத்தி வனவிலங்கு சரணாலயம்,நீலகிரி
 4. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா,மன்னார் வளைகுடா
 5. கிண்டி தேசியப் பூங்கா
 6. ஆனைமலை வன விலங்குகள் சரணாலயம்.

மலைவாசஸ்தலங்கள்

தொகு

உதகை

தொகு

உதகை 2,637 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நகரம். தொட்டபெட்டா சிகரம் உதகையில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே உயரமானது, தொட்டபெட்டா. தொட்டபெட்டாவின் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும், 2466 மீ உயரமுள்ள எல்க்ஹில்லும் உள்ளன

உதகையின் முக்கிய சுற்றுலா தாவரவியல் பூங்கா. உதகை தாவரவியல் பூங்கா 1847–67 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

கேத்தி பள்ளத்தாக்குக் காட்சி உலகிலேயே இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற புகழைப் பெற்றது. உதகை ஏரி படகு இல்லம் ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஏரி. 1823–1825 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.

கொடைக்கானல்

தொகு
 
கொடைக்கானல்

கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரம்.கொடைக்கானல் ஏரி கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் சுற்றுச் சாலை 5 கி.மீ. ஏரியின் அளவு 24 ஹெக்டேர். மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றிய சர் வேரி ஹென்றி லெவிஞ்சி (1819–1885) என்பவர்தான் இந்த ஏரியை திருத்தி அழகுப்படுத்தினார். வெள்ளியருவி கொடைக்கானல் ஏரி வழிந்தால் உருவாகும் அருவியாகும்.

தூண் பாறைகள் ஏரியிலிருந்து 7.4 கி.மீ தொலைவில் உள்ளது. 122 மீட்டர் உயரத்தில் மூன்று செங்குத்தான தூண் பாறைகள் நிற்கின்றன. பசுமைப் பள்ளத்தாக்கு மிக மிக ஆழமும் அபாயமும் கொண்ட பள்ளத்தாக்கு. இதற்கு முந்தைய பெயர் தற்கொலை முனை. வைகை அணையை இங்கிருந்து ஓர் அழகான கோணத்தில் காணமுடியும். கோடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

அருவி

தொகு

குற்றாலம்

தொகு
 
குற்றாலம் மெயின் அருவியின் தோற்றம் , இது தெற்கு ஆசியாவின் 'ஸ்பா' என்றழைக்கப்படுகிறது

குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குமலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 167அடியில் அமைந்திருக்கிறது. இங்கு ஒன்பதுக்கும் மேற்பட்ட அருவிகள் உள்ளது.

ஒகேனக்கல் அருவி

தொகு
 
ஒகேனக்கல் அருவி ஆசியாவின் நயாகரா அருவி என்றழைக்கப்படுகிறது

ஒகேனக்கல் அருவி தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லைக்கருகே உள்ளது.

கேத்தரீன் அருவி

தொகு
 
டால்பின் மூக்கிலிருந்து, குன்னூர் அருகிலுள்ள கேத்தரீன் அருவியின் தோற்றம்

இது நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரியில் அமைந்திருக்கிறது.

சுருளி அருவி

தொகு

சுருளி அருவி தேனி மாவட்டத்தில் மேகமலைத் தொடரில் அமைந்திருக்கிறது.

திற்பரப்பு அருவி

தொகு

திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

கிள்ளியூர் அருவி

தொகு

இது கிழக்கு மலைத்தொடரிலுள்ள சேர்வராயன் மலையில் ஏற்காட்டில் அமைந்திருக்கிறது.

இவற்றையும் பாக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. Commissioner of Tourism, Chennai-2 [1]
 2. Tamil Nadu Records Highest Tourist Footfalls in 2014
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-12-10.
 4. "Incredible India – Table 11 : Top states by domestic tourists" (PDF). Archived from the original (PDF) on 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-25.
 5. Tamil Nadu Records Highest Tourist Footfalls in 2014
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-12-10.
 7. "Incredible India – Table 12 : Top states by foreign tourists" (PDF). Archived from the original (PDF) on 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-25.

வெளி இணைப்புகள்

தொகு