தவமணி ஜெகஜோதிவேல் பாண்டியன்

தவமணி ஜெகஜோதிவேல் பாண்டியன் (Thavamani Jegajothivel Pandian)(பிறப்பு 15 ஜூன் 1939) என்பவர் இந்திய மரபியலாளர் மற்றும் சூழலியல் நிபுணர் ஆவார். இவர் உயிரியக்கவியல் மற்றும் விலங்கு சூழலியல் ஆகியவற்றில் முன்னோடி ஆய்வுகளுக்குப் பெயர் பெற்றவர்.[1] வேர்ல்ட்ஃபிஷ் நாகா விருதைப் பெற்ற இவர், இந்திய அரசாங்கத்தின் பயோடெக்னாலஜி துறையின் அக்வா மற்றும் மரைன் உயிரிதொழில்நுட்பக்குழு தொடர்பான பணிக்குழு குழுவின் முன்னாள் தலைவராக உள்ளார்.[2] முன்னாள் தலைவர், உலக அறிவியல் அகாடமியின் உறுப்பினரும் மற்றும் இந்தியத் தேசிய அறிவியல் கழகம், தேசிய அறிவியல் கழகம், இந்தியா, இந்திய அறிவியல் கழகம் மற்றும் தேசிய வேளாண் அறிவியல் கழகம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.[3] அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி ஆய்வு மன்றம், இவரின் உயிரியல் அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக 1984ஆம் ஆண்டில், இந்திய அறிவியல் விருதுகளில் உயரிய விருதான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதினை இவருக்கு வழங்கியது.[4]

தவமணி ஜெகஜோதிவேல் பாண்டியன்
Thavamani Jegajothivel Pandian
பிறப்பு15 சூன் 1939 (1939-06-15) (அகவை 84)
பாலமேடு, மதுரை மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
வாழிடம்மதுரை, தமிழ் நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
துறை
  • உயிராற்றல்
  • விலங்கு சூழ்நிலையியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
அறியப்படுவதுமீன்களில் பால் தீர்மானைத்தல், பாலின வேறுபாடு
விருதுகள்1978 இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஹீக்கர் விருது
1984 சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
1985 ஈசிஐ பரிசு
1991 வார்ல்ட்பிஷ் நாக விருது
1994 பால் நினைவு தங்கப் பதக்கம்
1997 தமிழ்நாடு அறிவியலார் விருது
மாநிலக் கல்லூரி, சென்னை .

தவமணி ஜெகஜோதிவேல் பாண்டியன், தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான பாலமேடு என்ற இடத்தில் 1929ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி தவமணி மற்றும் வள்ளியம்மாள் ஆவர்.1960இல் மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்ற இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் முது அறிவியல் பட்டம் 1962ஆம் ஆண்டு பெற்றார். இந்த இரு கல்லூரிகளும் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற கல்லூரிகளாகும். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து 1965இல் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றார்.[5] இவரது முனைவர் பட்ட மேலாய்வுகள் ஜெர்மனியின் ஹெல்கோலாண்டில் உள்ள பிலோகிஷே அன்ஸ்டால்ட்டில் இருந்தன. மேலும் இவர் 1968இல் கீல் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் மருத்துவர் (டாக்டர். ரெட். நாட்.) பட்டம் பெற்றார். இந்தியாவுக்குத் திரும்பிய பின், 1968இல் பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தனது கல்வி வாழ்க்கையைத் தொடங்கினார், 1971இல் தனது சொந்த ஊருக்குச் சென்று மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் கல்விப்பணியில் சேர்ந்தார். இங்கு இவர் பல பணிகளை வகித்து ஒய்வுபெறும் வரை பணியாற்றினார். பேராசிரியராக 1976 முதல் 1992 வரையிலும் மற்றும் ஒரு மூத்த பேராசிரியராக 1994 முதல் 1995 வரையிலும் பணியாற்றினார்.[6] இடையில், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1973ஆம் ஆண்டு வருகை விஞ்ஞானியாகவும், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் 1981 முதல் 1982 வரை வருகை பேராசிரியராகவும், கியோட்டோ பல்கலைக்கழகத்தில் 1989ஆம் ஆண்டு வெளிநாட்டு கூட்டாளராகவும், யுனெஸ்கோ விரிவுரையாளராகவும் பணியாற்றினார். காண்ட் பல்கலைக்கழகம் 2003 முதல் 2004 வரையும் பணியாற்றினார். வயது முதிர்வு ஓய்விற்குப்பின் தேசிய பேராசிரியர் பதவியை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் சார்பில் 1996 முதல் 2002 வரையும், முது விஞ்ஞானி பொறுப்பினை அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் சார்பில் 2002 முதல் 2005 வரையும் இந்திய தேசிய அறிவியல் கழக விஞ்ஞானி பொறுப்பினை 2005 முதல் 2009 வரை வரை வகித்தார்.குறிப்பு 1] உயிரி தொழில்நுட்பவியல் துறையின் நீர் மற்றும் பெருங்கடல் உயிரி தொழில்நுட்பவியல் தொடர்பான பணிக்குழுவுக் தலைமை தாங்கினார் [2] மற்றும் ஜெர்மனியின் சூழலியல் நிறுவனம், 1985 முதல் வருகை தரும் விஞ்ஞானியாகவும், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் 1996 முதல் வருகை பேராசிரியராகவும் இணைந்துள்ளார். 1990ஆம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் கழகம் மற்றும் 1998 முதல் 2000 வரை தேசிய வேளாண் அறிவியல் கழகத்திலும் பணியாற்றினார்.

பாண்டியன், முத்து சாந்தகுமாரியை மணந்தார். இந்த இத்தம்பதியரின் மகன், சதீஷ் கின்னே பாண்டியன் சிறுநீரக மருத்துவர்.[7] இவர்களது குடும்பம் மதுரையில் வசிக்கிறது.[5]

ஆய்வுகள் தொகு

 
பூனைமீன் (அமீயுரசு மேளாசு)

பாண்டியனின் ஆரம்பக்கால ஆராய்ச்சி உயிர் ஆற்றல்வியல் துறையிலிருந்தன. இதனால் இவர் உயிரிகளின் வளர்சிதை மாற்றத்தில் கவனம் செலுத்தினார். உணவு ஆற்றலை வளர்ச்சிக்காக மாற்றுவதைக் கணிப்பதற்கான மாதிரியை ஒன்றை இவர் உருவாக்கினார்.[8] இவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை இசுபிரிங்கர் பதிப்பக ஆய்விதழான கடல் உயிரியல் ஆய்விதழில் வெளியிட்டார். மெகலோப்சு சைப்ரினாய்டுகள் மற்றும் ஓபியோசெபாலசு இசுட்ரைட்டசு ஆகிய மீன்களில் உட்கொள்ளல், செரிமானம், உறிஞ்சுதல் மற்றும் உணவை மாற்றுவது, குறித்த இந்த ஆய்வு பல ஆய்வுகளுக்கு அடிப்படையான ஆய்வானது.[9] இதனைத் தொடர்ந்து, மீன் பாலியல் ஆய்வு மீது இவரது கவனம் திரும்பியது. கெளுத்தி மீன்களின் விந்து உயிரணுக்களை -20o சேமித்து வைக்கும்போது அவை 240 நாட்கள் வரை பிழைத்திருந்தன என்பதை நிரூபித்தார். திரவ நைட்ரஜன் எளிதில் கிடைக்காத இடங்களில் இம்முறையினைப் பயன்படுத்தலாம் என்றார்.[6] பின்னர், பாதுகாக்கப்பட்ட விந்து மற்றும் இணக்கமான உயிரினங்களின் மரபணு-செயலற்ற முட்டைகளிலிருந்து முதல் மரபணு மாற்றப்பட்ட மீனை உருவாக்கினார். இது சிற்றினத்திற்குள்ளும் சிற்றினங்களுக்கிடையிலும் ஆண்ட்ரோஜெனெடிக் நகல்களை உருவாக்க உதவியது. இவரது ஆய்வுகளின் முடிவில் இவர் (YY நிறமூர்த்தங்களுடன்) சூப்பர் ஆண்கள் எனும் மீன்களை உருவாக்கினார். திலேப்பியா, கப்பி மீன் மற்றும் பார்ப் மீன்களிலும் மோலி (ZZ) இந்தியாவில் முதன் முறையாகத் தோற்றுவித்தார்.[3] பூனை மீன்களில் ஒற்றைப் பாலின சந்ததியினரைப் பெருமளவில் உற்பத்தி செய்ய இந்த மோனோசெக்ஸ் உயிரினங்களைப் பயன்படுத்தினார். மீன்களில் வளர்ச்சிக்கான இயக்குநீர் மரபணு மாற்றக் கடத்திகளைப் பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டார்.[10] பாதுகாக்கப்பட்ட விந்தணுக்கள் மற்றும் புலி பார்பின் மரபணு-செயலற்ற முட்டைகளைப் பயன்படுத்தி ரோஸி பார்ப் இனங்களை மீட்டெடுத்த பெருமை இவருக்கு உண்டு. விலங்கு ஆற்றல்: பிவால்வியா வழியாக ஊர்வன, விலங்கு ஆற்றல்: பூச்சியின் மூலம் புரோட்டோசோவா, மீன்களில் பாலியல் நிர்ணயம், மீன்களில் மரபணு பாலின வேறுபாடு, மீன்களின் பாலினத்தினை சுற்றுச்சூழல் தீர்மானித்தல் மற்றும் கிரஸ்டேசியாவில் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி, உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளைப் பாண்டியன் வெளியிட்டுள்ளார். அறிவியல் ஆவணங்களின் இணைய களஞ்சியமான ரிசர்ச் கேட் இவற்றில் 133ஐ பட்டியலிட்டுள்ளது.[11]

1984ஆம் ஆண்டில் மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு மேம்பாட்டிற்காக ஒரு இலாப நோக்கற்ற அறிவியல் சமுதாயமான ஆசிய மீன்வள சங்கத்தினை (AFS) நிறுவிய உயிரியலாளர்களில் பாண்டியனும் ஒருவராக இருந்தார். 1992 முதல் 1995 வரை அதன் நான்காவது சபையில் தலைவராக அமர்ந்தார்.[12] இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி மற்றும் மத்திய மீன்வள கல்வி நிறுவனம், மும்பை ஆகியவற்றின் கல்விக்குழுக்களின் உறுப்பினராக இருந்துள்ளார்.[6] இவர் ஆசிய மீன் அறிவியல் ஆய்விதழ், ஹைட்ரோபயலாஜியா, கடல் சோதனை உயிரியல் மற்றும் சூழலியல் ஆய்விதல், கடல் சூழலியல் முன்னேற்றம் தொடர், கடல்சார் அறிவியல் மற்றும் அறிவியல் ஆய்விதழ் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான இந்தியன் ஆய்விதழ்களில் இணைந்து பணியாற்றினார். மேலும் மற்றும் முன்னாள் இணை ஆசிரியராக இருந்தார் நடப்பு அறிவியல், கொரிய நீர்வாழுயிர் ஆய்விதழின் ஆலோசகர் ஆசிரியர் மற்றும் மற்றும் ஹைட்ரோபயாலஜியாவின் விருந்தினர் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் 2012-14 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் யு.எஸ்.ஆர்.எஸ் திட்டத்தை ஒருங்கிணைத்தார்.[5] 36 அறிஞர்களை அவர்களின் முனைவர் பட்ட ஆய்விற்கு வழிகாட்டியாகச் செயல்பட்டுள்ளார். இவர் திருநெல்வேலியின் பி.எஸ்.என் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் அறிவியல் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும்[13] பஞ்செட்டியின் வேலம்மாள் தொழில்நுட்ப நிலையம் மற்றும் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப துறையின் இன்ஸ்பயர் இன்டர்ன்ஷிப் முகாமில்[14][15] முக்கிய உரைகளை வழங்கியது உள்ளிட்ட பல கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.[16][17] குறிப்பாக 2006இல் கடல் உணவு உற்பத்தியின் நிலைத்தன்மை குறித்த தேசிய கருத்தரங்கு [18] மற்றும் 2012இல் சி.எஸ்.ஐ.ஆர் அறக்கட்டளை தின சொற்பொழிவு.[19]

விருதுகளும் கெளரவங்களும் தொகு

1985-86 மற்றும் 1989-91 ஆகிய ஆண்டுகளில் முறையே தேசிய பல்கலைக்கழக விரிவுரை மற்றும் இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தேசிய ஆய்வு நிதியினைப் பெற்றார். 1978இல் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின்[6] அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் இவருக்குச் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை வழங்கியது. இது 1984ஆம் ஆண்டில் மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றாகும். இது உயிரியக்கவியல் மற்றும் விலங்கு சூழலியல் ஆகியவற்றில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.[1] அடுத்த ஆண்டு, இவர் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் ஈ.சி.ஐ பரிசைப் பெற்றார். இங்கு இவர் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.[20] வேர்ல்ட்ஃபிஷ் இவருக்கு 1991இல் நாகா விருதை வழங்கியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லியின் பயோசயின்சஸ் சங்கத்தின் 1994 கே.என். பஹ்ல் நினைவு தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.[10] இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் இவரை 1996இல் தேசிய பேராசிரியராகத் தேர்ந்தெடுத்தது [குறிப்பு 2] மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் 1997இல் தமிழ்நாடு விஞ்ஞானி விருதுக்கு இவரைத் தேர்ந்தெடுத்தது.

பாண்டியன் பல முக்கிய இந்திய அறிவியல் கழகங்களில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய அறிவியல் கழகம், இந்தியா, 1984ஆம் ஆண்டில் இவரை ஒரு சக உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது.[21] 1985ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழக உறுப்பினரானார்.[22] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இதனைத் தொடர்ந்து 1992இல் தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டில், உலக அறிவியல் கழகத்தின் ஆய்வு உதவிப்பெற்றார்.[23]

தேர்ந்தெடுக்கப்பட்ட நூலியல் தொகு

புத்தகங்கள் தொகு

  • Animal Energetics: Bivalvia through reptilia. Academic Press. 
  • Animal Energetics: Protozoa through insecta. Academic Press. 
  • Fish Genetics and Aquaculture Biotechnology. Science Publishers. 2 January 2005. 
  • Sexuality in Fishes. Science Publishers. 20 July 2010. 
  • Sex Determination in Fish. CRC Press. 2 September 2011. 
  • Genetic Sex Differentiation in Fish. CRC Press. 5 June 2012. 
  • Endocrine Sex Differentiation in Fish. CRC Press. 26 February 2013. 
  • Environmental Sex Differentiation in Fish. CRC Press. 22 December 2014. 
  • Reproduction and Development in Crustacea. CRC Press. 5 April 2016. 

கட்டுரைகள் தொகு

  • Pandian T. J. (October 1983). "Intake, digestion, absorption and conversion of food in the fishes Megalops cyprinoides and Ophiocephalus striatus". Marine Biology 1: 16–32. doi:10.1007/bf00346690. 
  • Santhakumar Kirankumar, Thavamani Jegajothivel Pandian (October 2002). "Effect on growth and reproduction of hormone immersed and masculinized fighting fish Betta splendens.". J. Exp. Zool. 293 (6): 606–16. doi:10.1002/jez.10181. பப்மெட்:12410610. 
  • Venugopal Thayanithy; Thayanithy Venugopal; Vikas Anathy; Santhakumar Kirankumar; Thavamani Jegajothivel Pandian (June 2004). "Growth enhancement and food conversion efficiency of transgenic fish Labeo rohita.". J Exp Zool a Comp Exp Biol 301 (6): 477–90. doi:10.1002/jez.a.78. பப்மெட்:15181642. 
  • Santhakumar Kirankumar, Thavamani Jegajothivel Pandian (December 2004). "Production and progeny testing of androgenetic rosy barb Puntius conchonius.". J Exp Zool a Comp Exp Biol 301 (12): 938–51. doi:10.1002/jez.a.117. பப்மெட்:15562453. 
  • Clifton Justin David, Thavamani Jegajothivel Pandian (January 2006). "GFP reporter gene confirms paternity in the androgenote Buenos Aires tetra, Hemigrammus caudovittatus.". J Exp Zool a Comp Exp Biol 305 (1): 83–95. doi:10.1002/jez.a.247. பப்மெட்:16358274. 
  • Thavamani Jegajothivel Pandian (April 2008). "Endosulfan suppresses growth and reproduction in zebrafish". Current Science 94 (7). 

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
  2. 2.0 2.1 "List of Members Task Force Committee" (PDF). Department of Biotechnology. 2016. Archived from the original (PDF) on 2 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "T J Pandian on National Institute of Oceanography" (PDF). Scientist profile. National Institute of Oceanography. 2016. Archived from the original (PDF) on 2 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
  5. 5.0 5.1 5.2 "Fellow profile - National Academy of Agricultural Sciences". National Academy of Agricultural Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 6.2 6.3 "Indian Fellow - Pandian". Indian National Science Academy. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
  7. "Sathish Kinne Pandian". Medical Council of India. 2016. Archived from the original on 11 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
  8. "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners" (PDF). Council of Scientific and Industrial Research. 1999. p. 33. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. Pandian T. J. (October 1983). "Intake, digestion, absorption and conversion of food in the fishes Megalops cyprinoides and Ophiocephalus striatus". Marine Biology 1: 16–32. doi:10.1007/bf00346690. http://garfield.library.upenn.edu/classics1983/A1983RK20200001.pdf. 
  10. 10.0 10.1 "Year Book entry - NIIST" (PDF). National Institute for Interdisciplinary Science and Technology. 2016. Archived from the original (PDF) on 16 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "T. J. Pandian on ResearchGate". Author profile. 2016. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
  12. "Fourth Council (1992-1995)". Asian Fisheries Society. 2016. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
  13. "Mentors and Resource Persons". PSN College of Engineering and Technology, Tirunelveli. 2016. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
  14. "Inspire Internship Camp" (PDF). Velammal Institute of Technology. 2015. Archived from the original (PDF) on 26 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "'Inspire' science camp from Monday". The Hindu. 24 August 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
  16. "Guest Lecture-Cancer Genetics - Role of the Laboratory". Dr.N.G.P. Arts and Science College. 2016. Archived from the original on 25 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "Frontier Lecture" (PDF). University of Calicut. March 2014. Archived from the original (PDF) on 26 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  18. "National Seminar on Sustainability of Seafood Production". National Institute of Oceanography. 2016. Archived from the original on 27 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  19. "CSIR Foundation Day lecture". National Institute of Oceanography. 2016. Archived from the original on 26 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  20. "ECI Prize". Ecology Institute. 2016. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
  21. "NASI fellows". National Academy of Sciences, India. 2016. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  22. "Fellow Profile IAS". Indian Academy of Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
  23. "T J Pandian - TWAS fellow". The World Academy of Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.

 

வெளி இணைப்புகள் தொகு