தால்மா வனவிலங்கு சரணாலயம்

தால்மா வனவிலங்கு சரணாலயம் (Dalma Wildlife Sanctuary) இந்திய மாநிலமான சார்க்கண்டில் உள்ள ஜம்சேத்பூர் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனை 1975ஆம் ஆண்டு சஞ்சய் காந்தி திறந்து வைத்தார். இந்த வனவிலங்கு சரணாலயம் ஓர் முக்கியமான சரணாலயமாகும். இங்கு இந்திய யானைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.[1][2]

தால்மா வனவிலங்கு சரணாலயம்
Dalma Wildlife Sanctuary
அமைவிடம்சார்க்கண்டு, இந்தியா
அருகாமை நகரம்ஜம்சேத்பூர்
பரப்பளவு195 km2.
நிறுவப்பட்டது1976
வருகையாளர்கள்NA (in NA)
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாற்ற அமைச்சகம், சார்க்கண்டு அரசு
வலைத்தளம்www.forest.jharkhand.gov.in

நிலவியல் தொகு

தால்மா வனவிலங்கு சரணாலயத்தினைச் சுற்றி தால்மா மலை அமைந்துள்ளது. தால்மா வனவிலங்கு சரணாலயம் சண்டியில் தொடங்கி கிழக்கு 40 கி.மீ. தூரம் வரை 195 சதுர கிலோமீட்டர் அளவில் பரந்த பரப்பளவைக் கொண்டுள்ளது.

இது சார்க்கண்டு தலைநகர் ராஞ்சியிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் சாம்சேத்புரிலிருந்து 15 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம் தேசிய நெடுஞ்சாலை 33க்கு இணையாகக் கடல் மட்டத்திலிருந்து சுமார் 915 மீட்டர் உயரத்தில் மலைகளுடன் காணப்படுகிறது. இது சார்க்கண்டு மாநிலத்தின் கிழக்கு பகுதியான சிங்க்பம் மற்றும் சரிகேலா-கர்சவன் மாவட்டங்களின் 193 சதுர கி.மீ காடுகளில் பரவியுள்ளது. தால்மாவின் காடுகள் "உலர் தீபகற்ப சால்" மற்றும் "வடக்கு உலர் கலப்பு இலையுதிர் காடு" என்ற பிரிவின் கீழ் வருகின்றன. தால்மா காடுகளின் பெரும்பகுதி கோடையில் இலைகளை உதிர்த்தும், மழைக்காலத்தின் தொடக்கத்தில் முழு மலர்ச்சியுடன் காணப்படுகிறது.

தாவரங்கள் தொகு

பல ஆண்டுகளாக மர மாஃபியாக்களால் குறிப்பிட்ட மரங்களை வெட்டியெடுத்ததன் காரணமாக வனப்பகுதி 90% வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள விலங்குகளில் ஆபத்தான நிலையினைச் சந்திக்கின்றன.

விலங்குகள் தொகு

 
தால்மா வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு பெண் இந்திய யானை
 
தால்மா வனவிலங்கு சரணாலயத்தில் பாம்பு கழுகு
 
தால்மா வனவிலங்கு சரணாலயத்திற்குள் இந்தியன் நீர் எருமையுடன் செம்முகக் குரங்கு கூட்டம்
 
தால்மா வனவிலங்கு சரணாலயத்தில் சாவுக்குருவி

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் யானைகள், கேளையாடு, தேன் கரடி மற்றும் முள்ளம்பன்றி ஆகியவை முக்கியமாகக் காணப்படும் விலங்குகளாக உள்ளன. யானை அதிக அளவிலும் மற்றும் பிற விலங்குகளை அதிகமாக வைத்திருப்பதில் இந்த சரணாலயம் பிரபலமானது. யானைகள் மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் மலை அடிவாரத்திலுள்ள கிராமங்கள் மற்றும் சார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காள நகரங்களுக்குள் நுழைகின்றன. இது எப்போதாவது மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு வழிவகுக்கிறது. தேசுவா சங்கரின் மோசமான நடைமுறையின் காரணமாக விலங்குகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துவிட்டது. இது கோடையில் காட்டு விலங்குகளின் படுகொலையாகும். சில ஆன்மீக நிகழ்வுகளின் கீழ் காடுகளின் அளவு அதிகமாகக் குறைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

தால்மா யானைகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. கோடைக்காலத்தின் உச்சத்தில் யானைகளின் எண்ணிக்கை 100ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை சரணாலயத்திற்குள் உள்ள ஆழமான நீர்நிலைகளில் உள்ள நீரைப் பருகித் தாகத்தைத் தணிக்கின்றன. சமீபத்தில் கொண்டுவரப்பட்ட நான்கு யானைகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பவையாக உள்ளன. கடந்த காலத்தில் சரணாலயத்தில் மான்களின் எண்ணிக்கையிலான அதிகமாகக் காணப்பட்டன. இந்த எண்ணிக்கை குறைந்து வருவதால், மான்களை ஓரிடத்தில் அடைத்து இனப்பெருக்கம் செய்ய அடைப்பு ஒன்று நிறுவப்பட்டது. மான்களின் எண்ணிக்கை இங்கு அதிகரிக்கும் போது, அதிகப்படியான மான்களைக் காட்டுப்பகுதிக்குள் விடுவிக்கின்றனர். மக்குலகோச்சாவில் உள்ள இந்த மான் அடைப்பு பகுதியில் புள்ளிமான்கள் மற்றும் கடமான்கள். உள்ளன. இந்த இடம் புள்ளி மற்றும் கடமான்களுக்கு தாங்கள் இயற்கையான வாழ்விடத்தில் வாழ்வதைப்போன்ற உணர்வினைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

யானைகள் தவிர இச்சரணாலயத்தில் கிழக்கத்திய பெரும் அணில், தேன் கரடி, கேளையாடு, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, சருகுமான், எறும்புத்தின்னி மற்றும் கீரி ஆகியவை உள்ளன. சரணாலயத்தில் பொதுவாகக் காணப்படும் பறவைகளாக வல்லூறு, மாங்குயில், இந்தியன் ட்ரீ பை, பாரடைசு ஈப்பிடிப்பான், இந்தியச் சாம்பல் இருவாச்சி, இந்திய மயில், பல்வேறு வகையான மீன் கொத்திகள், ஹெரான், எக்ரெட்டுகள், மைனா, புறாக்கள், துடுப்பு வால் கரிச்சான், கருஞ்சிட்டுகள் உள்ளன.

2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, [3] மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 43 நீர்ப் பகுதி கணக்கெடுப்பின்படி தால்மாவில் 66 யானைகள் காணப்பட்டன. இதன் மூலம் யானைகள் பாதுகாப்பாக வாழ தால்மா உகந்த வாழ்விடமாக உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். 2017ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, யானைகளின் எண்ணிக்கை 95 ல் இருந்து 48ஆகக் குறைந்துவிட்டது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. காட்டுக் கரடிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 13ல் இருந்து இந்த ஆண்டு 19ஆகவும், காட்டுப்பன்றிகள் 152லிருந்து 162 ஆகவும், முள்ளம்பன்றிகள் 63லிருந்து 79 ஆகவும், லாங்கர்கள் 38லிருந்து 40 ஆகவும், குரங்குகள் 496லிருந்து 552 ஆகவும், நாணல் அணில் 39லிருந்து 45 ஆகவும், மயில்கள் 53லிருந்து 120 ஆகவும் முயல்கள் 18லிருந்து 24 ஆகவும், பாம்புகள் 4லிருந்து 13 ஆகவும், ஜாக்கல்ஸ் 3 ல் இருந்து 9 ஆகவும், காட்டுக் கோழிகள் கடந்த ஆண்டு 71லிருந்து இந்த ஆண்டில் 137 ஆக உள்ளன.

செயல்பாடுகள் தொகு

காட்டு விலங்குகளை அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் காணச் சரணாலயத்திற்குள் சிறிய மறைவிடங்கள் உள்ளன. இந்த சரணாலயம் மலையேறுபவர்களுக்கு ஏற்ற இடமாகும். இங்குச் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஒன்றிற்குச் சிவராத்திரி பண்டிகையின்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நக்சலைட் தொந்தரவு காரணமாக நிலவும் நிலையற்ற சூழ்நிலை காரணமாகச் சரணாலயத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது.

சுற்றுலா இடங்கள் தொகு

• அனுமன் கோயில் • சிவன் கோயில் • பிண்ட்ராபேரா எஃப்.ஆர்.எச் • மஜ்லாபந்த் / நிச்லாபந்த் • மூங்கில் குடிசை • இயற்கை விளக்கம் மையம் • மான் அடைப்பு • யானை மீட்பு மையம்

தங்குமிடம் தொகு

இங்குள்ள வன விருந்தினர் மாளிகையில் தங்குமிட வசதிகள் உள்ளன. அக்டோபர் முதல் ஜூன் வரை பார்வையிடச் சிறந்த நேரம். ஜம்சேத்பூரில் உள்ள பேயல் திரையரங்கம் அருகே உள்ள வன வரம்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம். விண்ணப்பத்துடன் தங்குமிட கட்டணம் ரூ. 600 செலுத்தவேண்டும்.

சுற்றுலாப் பயணிகளுக்கு இனிமையான மற்றும் வசதியான தங்குமிடத்தை வழங்குவதற்காக நன்கு பராமரிக்கப்படும் வன ஓய்வு இல்லங்களைக் கொண்டிருப்பதாக தால்மா பெருமை கொள்ளலாம். பிந்த்ராபெராவில் உள்ள வன ஓய்வு இல்ல மொட்டை மாடியிலிருந்து எஃகு நகரமான ஜம்சேத்பூர் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளைப் பார்க்க முடியும். மகுலகோச்சாவில் ஓய்வு இல்லங்களும் மூங்கில் குடிசைகளும் உள்ளன.

அணுகல் தொகு

அருகிலுள்ள நகரம் சண்டில்
அருகிலுள்ள நகரம் ஜம்சேத்பூர், கம்காரியா, அடியாபூர் (10 கி.மீ)
அருகிலுள்ள இரயில் பாதை சண்டில் ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம் ராஞ்சி, சார்க்கண்டு
அருகிலுள்ள நெடுஞ்சாலை டாடா - ராஞ்சி தேசிய நெடுஞ்சாலை -33

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு