திருநாகேஸ்வரம்
திருநாகேஸ்வரம் (ஆங்கிலம்:Thirunageswaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் மற்றும் உப்பிலியப்பன் கோயில் உள்ளது.இது வணிக நகரமான கும்பகோணத்தின் புறநகர் பகுதி ஆகும்
திருநாகேஸ்வரம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | கும்பகோணம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] |
பெருந்தலைவர் | எஸ்.சாமிநாதன் |
மக்கள் தொகை • அடர்த்தி |
15,082 (2011[update]) • 2,251/km2 (5,830/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 6.70 சதுர கிலோமீட்டர்கள் (2.59 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/thirunageswaram |
அமைவிடம்
தொகுதிருநாகேஸ்வரம் பேரூராட்சி கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 40 கிமீ தொலைவிலும் உள்ளது.
தொழில்
தொகுநெசவுத்தொழில், விவசாயம் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்கள்.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு6.70 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,940 வீடுகளும், 15,082 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]
சிறப்புமிக்க கோவில்கள்
தொகு- உப்பிலியப்பன் கோயில் வைணவ தலம் ஆகும்.
- திருநாகேஸ்வரம் (கோயில்) சைவ திருத்தலம்.
சிறு கோவில்கள்
தொகு- வெள்ளை விநாயகர் ஆலயம்
- ரெட்டை பிள்ளையார் கோயில்
- கற்பக விநாயகர் ஆலயம், சன்னாபுரம்
- தோப்புதெரு மாரியம்மன் கோயில்
- சன்னாபுரம் மாரியம்மன் கோயில்
- காளியம்மன் கோயில்
- செல்வ வினாயகர் ஆலயம்
- ஆதி தேவி மாரியம்மன் - மேலத்தெரு
- அண்ணாமலையார் கோயில்
- திரௌபதையம்மன் கோயில்
- பிரித்தியங்கிரா தேவி ஆலயம்
வெளி இணைப்புகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருநாகேஸ்வரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/thirunageswaram/population
- ↑ Thirunageswaram Population Census 2011
- ↑ Thirunageswaram Town Panchayat