திருவண்ணாமலை தொடருந்து நிலையம்

திருவண்ணாமலை ரயில் நிலையம்
(திருவண்ணாமலை நகர தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவண்ணாமலை இரயில் நிலையம் (Tiruvannamalai railway station, நிலையக் குறியீடு:TNM) இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இது திருவண்ணாமலை நகர மக்கள் பயன்பாட்டில் உள்ள முதல் பிரதான தொடருந்து நிலையம் ஆகும்.

திருவண்ணாமலை
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே நிலையம் சாலை, (பெங்களூரு - புதுச்சேரி சாலை), திருவண்ணாமலை- 2 , தமிழ்நாடு, இந்தியா - 606 602
ஆள்கூறுகள்12°14′19″N 79°04′40″E / 12.2385°N 79.0777°E / 12.2385; 79.0777
ஏற்றம்213 m (699 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்காட்பாடிவிழுப்புரம் வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடகையுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுTNM
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருச்சிராப்பள்ளி
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
திருவண்ணாமலை is located in தமிழ் நாடு
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
தமிழக வரைபடத்தில் திருவண்ணாமலை
திருவண்ணாமலை is located in இந்தியா
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
இந்திய வரைபடத்தில் திருவண்ணாமலை

இது தென்னகத்தின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர் - காட்பாடி - திருவருணை - அரகண்டநல்லூர் - பண்ருட்டி - கடலூர் தொடருந்து பாதையில் அமைந்துள்ளது.

சேவைகள் தொகு

இந்த தொடருந்து நிலையம் தென்னக இரயில்வேயின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் தொடருந்து பாதையில் திருவண்ணாமலை உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை தொடருந்து பாதை மின்மயமாக்க பட்ட தொடருந்து பாதையாகும்.

திருவண்ணாமலை வழியாக பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள்:

சிறப்பு தொகு

இந்த தொடருந்து நிலையம் வழியே செல்லும் அனைத்து தொடருந்துகளும் நின்று செல்கிறது. இது மக்கள் பயன்பாட்டிற்கு 1889இல் திறக்கப்பட்டது. ஆன்மீகக் குரு இரமண மகரிசி, இந்த ரயில் நிலையத்தில் தான் 1891இல் திருவண்ணாமலை வந்தடைந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Station code list, Indian Railways
  2. [1]

வெளியிணைப்புகள் தொகு