தேசிய நெடுஞ்சாலை 216 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 216 | ||||
---|---|---|---|---|
வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் தேசிய நெடுஞ்சாலை 216அ | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 391.3 km (243.1 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | கத்திப்பூடி, ஆந்திரப் பிரதேசம் | |||
தெற்கு முடிவு: | ஒங்கோல், ஆந்திரப் பிரதேசம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஆந்திரப் பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | காக்கிநாடா, யானம், அமலாபுரம், ராஜோலு, பாலகொல்லு, நரசாபுரம் மண்டலம், பீமவரம், மேற்கு கோதாவரி மாவட்டம், மச்சிலிப்பட்டணம், ரேபள்ளே, செருக்குப்பாலே, பாபட்லா, சிராலா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 216 (தே. நெ. 216) (முன்பு தே. நெ. 214, தே. நெ. 215) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். பழைய தேசிய நெடுஞ்சாலைகள் 214-ம் 214அவும் இணைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை 216 என மறுபெயரிடப்பட்டன. இது கத்திப்பூடியில் தேசிய நெடுஞ்சாலை 16-ன் சந்திப்பிலிருந்து தொடங்கி காக்கிநாடா, அமலாபுரம், திகமர்ரு (பாலகோல்லு) நரசாபுரம், மச்சிலிப்பட்டணம், ரேப்பல்லே, செருகுப்பள்ளி, பாபட்லா, சிராலா வழியாகச் சென்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை 16ஐ ஒங்கோலில் இணைக்கிறது.[1][2] விசாகப்பட்டினம்-காக்கிநாடா பெட்ரோ ரசாயன வழித்தடம், நெடுஞ்சாலையில் முன்மொழியப்பட்ட திட்டமாகும்.
வழித்தடம்
தொகுஇந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 391.3 கிலோமீட்டர்கள் ஆகும்.[2]/ இது ஆந்திராவின் காக்கிநாடா, கோணசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி. கிருஷ்ணா, பாபட்லா, பிரகாசம் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 216, தேசிய நெடுஞ்சாலை 16-லிருந்து கத்திப்பூடி கிராமத்தில் தொடங்கி, கொல்லப்பிரோலு, பிதாபுரம், காக்கிநாடா, யானம், மம்மிதிவாரம், அமலாபுரம், ராஜோல், திகமர்ரு (பாலகோல்லு) , நரசாபுரம், பெடானா, மச்சிலிப்பட்ணம், ரேப்பல்லே, செருகுப்பள்ளி, பாபட்லா, சிராலா போன்ற நகரங்கள் வழியாகச் சென்று, ஓங்கோலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை16-உடன் இணைக்கிறது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.11.2018". Ministry of Road transport and Highways, India. National Informatics Centre. 30 November 2018. p. 1. Archived from the original (PDF) on 16 April 2019. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ 2.0 2.1 "List of National Highways passing through A.P. State". Roads and Buildings Department. Government of Andhra Pradesh. Archived from the original on 28 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.