தேஜா நிதமானுரு

அனில் தேஜா நிதமானுரு (Anil Teja Nidamanuru, பிறப்பு: 22 ஆகத்து 1994) என்பவர் இந்தியாவில் பிறந்து, நெதர்லாந்து துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட வீரர். இவர் முன்னர் ஆக்லாந்து அணியில் நியூசிலாந்து உள்ளூர் துடுப்பாட்ட விளையாட்டுகளில் விளையாடினார்.[1][2]

தேஜா நிதமானுரு
Teja Nidamanuru
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அனில் தேஜா நிதமானுரு
பிறப்பு22 ஆகத்து 1994 (1994-08-22) (அகவை 29)
விசயவாடா, இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 80)31 மே 2022 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப25 அக்டோபர் 2023 எ. ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 54)11 சூலை 2022 எ. பப்புவா நியூ கினி
கடைசி இ20ப4 ஆகத்து 2022 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017/18–2018/19ஆக்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பஒநா இ20ப ப.அ இ20
ஆட்டங்கள் 27 6 27 11
ஓட்டங்கள் 665 30 625 36
மட்டையாட்ட சராசரி 28.91 10.00 27.17 12.00
100கள்/50கள் 2/3 0/0 2/2 0/0
அதியுயர் ஓட்டம் 111 21 111 21
வீசிய பந்துகள் 6 18 84
வீழ்த்தல்கள் 0 0 3
பந்துவீச்சு சராசரி 43.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 1/– 7/– 2/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 12 நவம்பர் 2023

துடுப்பாட்டத் துறை தொகு

நிதமானுரு இந்தியாவில் விசயவாடாவில் பிறந்தார்.[1][3] தனது முதலாவது இருபது20 போட்டியை ஆக்லாந்து அணிக்காக 2017 திசம்பரில் விளையாடினார்.[4] அதே அணிக்காக 2018 நவம்பரில் தனது முதலாவது பட்டியல் அ போட்டியில் விளையாடினார்.[5] 2019 இல் நெதர்லாந்துக்குப் புலம்பெயர்ந்தார்.[6] அங்கு உத்ரெக்ட் நகரில் காம்பொங் துடுப்பாட்ட அணியில் பயிற்சியாளராகச் சேர்ந்தார்.[7] அதன் பின்னர் பஞ்சாப் ரொட்டர்டாம் அணியில் விளையாடினார்.[8]

மே 2022 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் இடச்சு பன்னாட்டு ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டு,[9] தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியை 2022 மே 31 இல் விளையாடினார்.[10] 2022 சூலையில், நெதர்லாந்தின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் சேர்க்கப்பட்டார்.[11] தனது முதலாவது இ20ப போட்டியை 2022 சூலை 11 இல், பப்புவா நியூ கினி அணிக்கெதிராக விளையாடினார்.[12]

2023 மார்ச்சில், தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் நூறு (துடுப்பாட்டம்)|சதத்தை]] சிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிப் பெற்றார்.[13]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Teja Nidamanuru". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
  2. "'Bizarre' but memorable day". Otago Daily Times. பார்க்கப்பட்ட நாள் 25 May 2022.
  3. "Stratex: from the call centre to the board room". 50 Global Leaders. 16 June 2021. https://50globalleaders.com/stratex-from-the-call-centre-to-the-board-room-how-a-telecoms-worker-became-a-global-leader/. பார்த்த நாள்: 31 May 2022. 
  4. "1st Match (D/N), Super Smash at Auckland, Dec 13 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
  5. "The Ford Trophy at Lincoln, Nov 14 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
  6. "Versterking vanuit Nieuw-Zeeland". SV Kampong Cricket. பார்க்கப்பட்ட நாள் 25 May 2022.
  7. "Hollis signs pro contract". Gisborne Herald. 11 April 2019. https://www.gisborneherald.co.nz/local-sport/20190411/hollis-signs-pro-contract/. பார்த்த நாள்: 31 May 2022. 
  8. "Last eight seek places in Dutch T20 finals day". Emerging Cricket. 20 August 2021. https://emergingcricket.com/news/last-eight-seek-places-in-dutch-t20-finals-day/. பார்த்த நாள்: 31 May 2022. 
  9. "Dutch mens cricket squad announced for ICC Super League Series against West Indies". Royal Dutch Cricket Association. பார்க்கப்பட்ட நாள் 25 May 2022.
  10. "1st ODI, Amstelveen, May 31, 2022, West Indies tour of Netherlands". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  11. "Squad announcement for T20 World Cup Qualifier in Zimbabwe". Royal Dutch Cricket Association. பார்க்கப்பட்ட நாள் 4 July 2022.
  12. "3rd Match, Group B, Bulawayo, July 11, 2022, ICC Men's T20 World Cup Qualifier". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.
  13. "Maiden ODI hundred Nidamanuru helps the Dutch past Zimbabwe in insane match". Royal Dutch Cricket Association (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜா_நிதமானுரு&oldid=3826882" இலிருந்து மீள்விக்கப்பட்டது