தைபானி பிரார்
தைபானி பிரார் (Tiffany Brar) என்பவர் இந்தியச் சமூக சேவகர் ஊழியர் ஆவார். இவருடைய குழந்தைப் பருவத்தில் ஆக்ஸிஜன் நச்சுத்தன்மையால் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. பார்வையற்றவர்களுக்கு வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான ஜோதிர்காமாயா அறக்கட்டளையின் நிறுவனர் பிரார் ஆவார். இவர் பயிற்சியாளர், ஊனமுற்றோர் விழிப்புணர்வு பிரச்சாரகர் மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்திற்கான முன்னோடியாகவும் செயற்பாட்டாளராகவும் உள்ளார்.[1]
தைபானி பிரார் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தைபானி மரியா பிரார் சென்னை, தமிழ் நாடு |
பெற்றோர் | தேஜ் பிரதாப் சிங் பிரார், லெஸிலி பிரார் |
முன்னாள் கல்லூரி | ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் |
வேலை | நிறுவனர், ஜோதிர்காமாயா அறக்கட்டளை, மாற்றுத்திறனாளி உரிமைச் செயல்பாட்டாளர் |
தொழில் | சமூக சேவகர், சிறப்பு கல்வியாளர் |
விருதுகள் | குடியரசுத் தலைவரின் தேசிய விருது, ஹோல்மன் பரிசு |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுதைபானி பிரார் இராணுவ அதிகாரி டி. பி. எஸ். பிரார் மற்றும் லெஸ்லி பிரார் ஆகியோரின் ஒரே மகள் ஆவார்.[2] சென்னையில் பிறந்த தைபானி, தந்தையின் பணியின் காரணமாக பஞ்சாபில் வளர்ந்தார். [3]
தைபானி பிரார் டெர்ரி நோய்த்தொகுதி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு, பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு பார்வையினை இழந்தார்.[4] இவரது தந்தையின் வேலை காரணமாக, பிரார் நாடு முழுவதும் பரவலாகப் பயணம் செய்தார். பார்வையற்றவராக இருந்ததால், வாய்மொழி தொடர்பு முக்கியமாக அமைந்தது. இவர் பன்மொழி பேசும் திறனுடையவராக வளர்ந்தார்.[5]
பிரார் தனது குழந்தைப் பருவத்தில், ஐந்து இந்திய மொழிகளைச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்.[4] பெரிய பிரித்தானியாவில் தனது கல்வியைத் தொடங்கினார்.[3][6] இவரது குடும்பம் இந்தியா திரும்பியபோது, பிரார் பார்வையற்றோர் பள்ளிகளிலும், ஒருங்கிணைந்த பள்ளிகளிலும், ராணுவப் பள்ளிகளிலும் படித்தார்.[4] கேரளாவில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, அவரது தந்தை டார்ஜீலிங்கிற்கு மாற்றப்பட்டார். அங்கு தைபானி பார்வையற்றோருக்கான மேரி ஸ்காட் இல்லத்தில் படித்தார்.[4]
பார்வையற்றவரான, பிரார் பள்ளிப் படிப்பினை கடினமாக உணர்ந்தார்.[6] வகுப்பில் கடைசி வரிசையில் உட்கார வைக்கப்பட்டார். சில நேரங்களில் கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. அவரது பிரெயில் குறிப்புகள் தாமதமாக வந்தன அல்லது வராமலும் இருந்தன.[6] இச்சூழலில் அவருடைய பெற்றோர்களால் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.[7]
அவரது பள்ளிகளில், பிரார் மற்ற மாணவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதை உணர்ந்தார். மேலும் பள்ளியின் பிற நிகழ்வுகளிலிருந்தும் விலக்கிவைக்கப்பட்டார். ஆனால், நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய தேர்வில் 12-ம் வகுப்பில்[3] முதல் பள்ளியில் பிறமாணவர்களுடன் முதல் இடத்தை அடைந்தாள்.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, பிரார் 2006இல் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில்[4] சேர்ந்து 2009இல் பட்டம் பெற்றார். பின்னர் பிரார் தொலைப்பேசி எல்லை இயக்குநராக எல்லைகள் இல்லாமல் பிரெய்லி வேலை செய்யத் தொடங்கினார்.[8][4] இவர் பல்வேறு அமைப்புகளுக்குச் சென்றார். அங்கு அவர் பல வசதியற்ற பார்வையற்றவர்களைக் கண்டனர். இவர்கள் தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டனர் மற்றும் முறையான பயிற்சி இல்லாதவர்களாக இருந்தனர்.[4] ஒரு பயணத்தின் போது, சாலைகள் வழுக்கும் அல்லது கற்களால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு, அவை பார்வையற்றவர்களுக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதையும், இந்தியாவின் சில பகுதிகளில், பார்வையற்ற மக்கள் ஆதரவற்ற சமூகங்களால் தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டார். இந்த அவலநிலை காரணமாகத் தூண்டப்பட்ட பிரார், ஜோதிர்காமாயா அறக்கட்டளையினைத் தோற்றுவித்தார். [6] பார்வையற்ற மற்றும் பகுதி பார்வையுடைய குழந்தைகளின் கல்விக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.[6] கேரளாவில், பார்வை குறைபாடுள்ள குழந்தைகள், பிராந்திய மொழியான மலையாளத்தில், உரை-அங்கீகார மென்பொருள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டனர். ஜோதிர்காமாயா அமைப்பின் மூலம் பிரார் பிரச்சாரம் மேற்கொண்டார்.[8]
இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கல்வியில் (பார்வைக் குறைபாடு) இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றார்.[3] ஜூலை 2012இல், ஜோதிர்காமாமய ("வெளிச்சத்திற்கு வழிவகுக்கும்" என்று அர்த்தம்) பார்வையற்றோருக்கான நடமாடும் பள்ளியை நடத்தத் தொடங்கினார். இந்த அமைப்புக்கான யோசனை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி என். கிருஷ்ணசாமியிடமிருந்து வந்தது. வறுமை, இயலாமை அல்லது தூரத்தால் கட்டுப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு உதவ இப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது.[8]
2018ஆம் ஆண்டில், வயனாட்டில் வெள்ளத்தின் போது பிராரின் முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பாராட்டியது, இங்கு இவர் நிவாரண முகாம்களுக்கான பொருட்களைச் சேகரித்தார்.[9]
பிரார் இப்போது இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் தனியாகவே பயணம் செய்கிறார்.[10][11]
தொழில்
தொகுதைபானி பிரார் முதல் வேலை வரவேற்பாளராக இருந்தது. பின்னர் இளங்கலை கல்வியியல் கல்வியினை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் பார்வையற்ற, பகுதி பார்வை குறைபாடுடைய மக்களுக்காக ஜோதிர்காமாய அறக்கட்டளை ஜூலை 2012இல் [12] நிறுவி கேரளாவில் பணியாற்றினார்.[13][14]
பிரார், பார்வையற்ற குழந்தைகளுக்காக ஒரு நடமாடும் பள்ளியை நிறுவினார். "பார்வையற்றவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டால் என்ன?, பள்ளி அவர்களுக்காகச் செல்லும்" என்பது பிராரின் நோக்கமாகும்.[15] ஜெர்மானிய பெண்மணியான சப்ரியே டென்பெர்கன் மற்றும் அவரது இடச்சு பங்குதாரரான பால் க்ரோனன்பெர்க், வெள்ளையனை காந்தரியில் நடத்திய தலைமைப் பயிற்சியின் போது இந்த யோசனைக்கு உந்தப்பட்டார்.[2]
ஜோதிர்காமாயா அறக்கட்டளை மூலம், பிரார் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி பயிற்சி, அடிப்படை கணினி பயன்பாடு, இயக்கம் மற்றும் வாழ்க்கைத் திறன்களைப் பயிற்றுவித்தார்.[9] இவர் சமீபத்தில் கேரளாவில் சுதந்திரத்திற்கான சாலை எனும் பயிற்சி முகாம்களைத் தொடங்கினார். இவர் ஒரு கலைஞர், ஆசிரியர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர், [16] மற்றும் இந்தியாவில் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் 2016ஆம் ஆண்டின் புவி மணிநேர பிரச்சாரத்தின் தூதராக பணியாற்றியுள்ளார்.[17] 2020ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த பார்வையற்றோரின் கலங்கரை விளக்கம் மற்றும் பார்வைக் குறைபாடுள்ளோரின் அமைப்பின் ஹோல்மன் பரிசினைப் பெற்றார். இப்பரிசினைப் பெற்ற முதல் இந்தியர் இவராவார்.[2] பிராருக்கு 25,000 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் 18.28 இலட்சம்) வழங்கப்பட்டது. இந்த பரிசுத் தொகை பார்வையற்ற மற்றும் ஓரளவு பார்வை உள்ளவர்களுடன் இவரது பணிக்கு உதவும் வகையில் அமைந்தது.[2]
2019ஆம் ஆண்டில், பிரார் திருவனந்தபுரத்தில் பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஆயத்தப் பள்ளியையும் மழலையர் பள்ளியையும் நிறுவினார். இதைக் கேரள சுகாதார அமைச்சர் கே.கே. சைலஜா திறந்து வைத்தார்.[18]
பிரார் தைபி வார்ப்புருவினை வடிவமைத்தார். இதனுடைய கண்டுபிடிப்பாளர் பால் டிசோசா ஆவார். பார்வையற்றவர்கள் வர்த்தகர்களால் ஏமாற்றப்படுவதைத் தடுக்க இந்திய நாணயத் தாள்களை அடையாளம் காட்டும் சிறிய வார்ப்புரு இதுவாகும்.[19][20]
விருதுகள்
தொகு- 2012இல், சமூக சேவகருக்கான கேரள மாநில விருது
- 2015ஆம் ஆண்டில், ஹோப் அறக்கட்டளையின் மகளிர் விருது
- 2016ஆம் ஆண்டில், பன்னாட்டுச் சுழற் சங்கத்தின் ரோட்டரி மிக உயர்ந்த விருதான ஃபார் தி சேக் ஆஃப் ஹானர் விருது
- 2016ஆம் ஆண்டில், மதிப்புமிக்க சார்தக் நாரி பெண்கள் சாதனையாளர் விருது
- 2017ஆம் ஆண்டில், தூர்தர்ஷனிடமிருந்து தைரியம் மற்றும் அழகு விருது
- 2017ஆம் ஆண்டில், சரோஜினி திரிலோக் நாத்-தேசிய சிறந்த பார்வையாளர் மாதிரியான தேசிய பார்வையற்றோருக்கான சங்கத்தின் விருது.
- 2017ஆம் ஆண்டில், டெட் (மாநாடு) விருது
- 2017 ஆம் ஆண்டில், இந்திய ஜனாதிபதியிடமிருந்து 'சிறந்த முன்மாதிரியாக' தேசிய விருது [18]
- 2018ஆம் ஆண்டில், வேலை நாள் அறக்கட்டளையின் ஆண்டு மகளிர் விருது.
- 2018ஆம் ஆண்டில், பன்னாட்டுச் சுழற் சங்க மேக் எ டிஃபெரன்ஸ் விருது.
- 2018ஆம் ஆண்டில், கேரளா வனிதா ரத்னா விருது
- 2018ஆம் ஆண்டில், பத்மசிறீ மம்மூட்டியிடம் பீனிக்ஸ் விருது
- 2018ஆம் ஆண்டில், பன்னாட்டுச் சுழற் சங்க தொழில்சார் சிறப்பான விருது.
- 2018ஆம் ஆண்டில், விவேக் ஓபரோய், ஓமங் குமார் மற்றும் ஹுமா குரேசி ஆகியோரிடமிருந்து சீ தொலைக்காட்சியின் உண்மையான கதாநாயகி விருது
- 2018ஆம் ஆண்டில், பாம் இன்டர்நேஷனலில் இருந்து சிறந்த சமூக சேவகருக்கான கர்ம ரத்னா விருது
- 2018ஆம் ஆண்டில், மாண்புமிகு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சத்ய பால் சிங் வழங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்திலிருந்து ஹெலன் கெல்லர் விருது[9]
- 2019ஆம் ஆண்டில், ஜான் ஆபிரகாமால் வழங்கப்பட்ட தேசிய பார்வையற்றோருக்கான சங்கத்தின் நீலம் குர்சித் கங்கா விருது[21]
- 2019ஆம் ஆண்டில், மகளிர் வட்டத்தின் இந்தியச் சமூக சேவைக்காக அதிசய பெண் விருது
- 2019ஆம் ஆண்டில், கொச்சோசெப் சிட்டிலப்பிள்ளியால் வழங்கப்பட்ட கொச்சோசெப் சிட்டிலப்பிள்ளி அறக்கட்டளையிலிருந்து சமூக சேவையில் சிறந்து விளங்கியதற்கான விருது
- 2019ஆம் ஆண்டில், மகளிர் பொருளாதார மன்ற விருது
- 2019ஆம் ஆண்டில், ஆத்திரேலியாவில் உள்ள பெண்களுக்கான பன்னாட்டுக் கூட்டமைப்பு விருது
- 2019ஆம் ஆண்டில், நெதர்லாந்தின் குரலின் தி ஸ்பிண்டில் விருது
- 2020ஆம் ஆண்டில், அமெரிக்காவின் வேர்ல்ட் பல்சின் உந்துசக்தி விருது
- 2020ஆம் ஆண்டில், அமெரிக்காவின் பார்வையற்றோருக்கான கலங்கரை விளக்க அமைப்பின் ஹோல்மேன் பரிசு[22][2]
- 2021-ஈஐடி நாஸ்காமின் ஊக்கமளிக்கும் பெண் விருது
அங்கீகாரம்
தொகு- இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 2017இல் தேசிய விருது பெற்றபோது, தேசத்திற்கான தனது உரையின் வாழ்த்திப் பேசினார் [23].
- இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், உலகெங்கிலும் உள்ள பார்வைக் குறைபாடுள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தைப்பானி பிரார் மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
- மலையாள நடிகர் பத்மஸ்ரீ மோகன்லால், தனது நிகழ்ச்சியான லால் சலாம் நிகழ்ச்சியில் பிராரை பாராட்டி, தைபானை 'ஒரு அதிசய பெண்' என்று பெருமைப்படுத்தினார்.
மேற்கோள்கள்
தொகு- "Tiffany Brar at BBC radio service".
- "For Your Eyes Only".
- "Visually Impaired Teacher Helps Others See the World". NDTV.
- "Reading notes in a jiffy".
- "Lighting up Lives". The Tribune. 2015-10-25.
- "From darkness to light". https://www.thehindu.com/features/kids/From-darkness-to-light/article13986332.ece.
- "Read How Visually Impaired Tiffany Brar Is Changing Lives Of Others Like Her". Indian Women Blog - Stories of Indian Women. 8 September 2015.
- "Tiffany Brar: Life is Beautiful". Athmeeya Yathra Television. 15 February 2017.
- "Ability beyond disability". Taaza Khabar News. 1 June 2015.
- "Doordarsan Live". Archived from the original on 2017-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.
- "Every Woman is a wonder".
- "It's not sympathy that Blind needs". Manorama News. Archived from the original on 2017-08-02. பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.
- "വെളിച്ചത്തിലേക്ക് നടക്കാം കൂട്ടിന് ടിഫാനിയുണ്ട്". Archived from the original on 2018-08-17. பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.
- "Carpe diem in Europe!". Deccan Chronicle. 7 July 2017.
- "Kerala State Award for Best documentary: Prakasham Parathunna Penkutty". New Indian Express.
- K. Anandaraj (7 August 2018). "எல்லாம் நல்லபடியா நடக்கும்! - டிஃபனி பிரார் - Tiffany Brar is best role model". Aval Vikatan - அவள் விகடன்.
- ↑ "Welcome to Jyothirgamaya Foundation! | Jyothirgamaya". www.jyothirgamayaindia.org. பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Tiffany Brar bags Holman Prize 2020". The New Indian Express. 30 August 2020. https://www.newindianexpress.com/states/kerala/2020/aug/30/tiffany-brar-bags-holman-prize-2020-2190106.html.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Visually challenged Tiffany Brar has big vision". thehansindia.com. 10 June 2019. https://www.thehansindia.com/hans/opinion/news-analysis/visually-challenged-tiffany-brar-has-big-vision--536494.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 .
- ↑ "Dispelling Darkness- Jyothirgamaya Foundation's Tiffany Brar". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2016-05-02.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 .
- ↑ .
- ↑ 8.0 8.1 8.2 "India's mobile school for blind students puts empowerment on the curriculum | Charukesi Ramadurai". 29 August 2013. https://www.theguardian.com/global-development/poverty-matters/2013/aug/29/india-blind-school-braille-without-borders.
- ↑ 9.0 9.1 9.2 "Tiffany Brar of Jyothirgamaya Foundation gets Mindtree Helen Keller Award". The New Indian Express. 4 December 2018. https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2018/dec/04/tiffany-of-jyothirgamaya-foundation-gets-mindtree-helen-keller-award-1906988.html.
- ↑ "From darkness to light". The Hindu. 2016-01-07. http://www.thehindu.com/features/kids/read-all-about-tiffany-brar-and-the-jyothirgamaya-foundation/article8077057.ece.
- ↑ "Tiffany Brar". YouTube. 10 November 2017. பார்க்கப்பட்ட நாள் 10 May 2021.
- ↑ "Behold a world unseen" (in en-IN). 2012-07-23. http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/behold-a-world-unseen/article3672492.ece.
- ↑ "They Say the Blind Should Not Lead the Blind. She Proves Them Wrong". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-02.
- ↑ "Tiffany Brar, the blind woman who now lead other people through 'Jyothirgamaya' - MotivateMe.in". MotivateMe.in (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-01-07. Archived from the original on 2016-05-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-02.
- ↑ "A Star Named 'Tiffany'". The Citizen. பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Dispelling Darkness- Jyothirgamaya Foundation's Tiffany Brar". The New Indian Express. 8 March 2016. https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2016/mar/08/Dispelling-Darkness--Jyothirgamaya-Foundations-Tiffany-Brar-901198.html.
- ↑ "Interview Of The Week: Outshining The Darkness - Trivandrum News | Yentha.com". www.yentha.com. Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-05-02.
- ↑ 18.0 18.1 "This 28-year-old woman plans to change lives of visually-challenged children of Trivandrum". The New Indian Express. 29 July 2019. https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2019/jul/29/this-28-year-old-visually-impaired-woman-plans-to-change-lives-of-visually-challenged-children-of-tr-2010799.html.
- ↑ "TIFFY TEMPLATE: NOW, NO CHEATING THE VISUALLY IMPAIRED!". பார்க்கப்பட்ட நாள் 10 May 2021.
- ↑ "Bengaluru man invents device to help the blind distinguish fake currency". Deccan Chronicle. 31 January 2017.
- ↑ "Thiruvananthapuram: Tiffany to start 'school' for visually challenged". 18 July 2019. https://www.deccanchronicle.com/nation/current-affairs/180719/thiruvananthapuram-tiffany-to-start-school-for-visually-challen.html.
- ↑ "This Kerala-based visually-challenged activist vows to empower disabled". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ http://jyothirgamayaindia.org/content/president-calls-tiffany-courageous-daughter-india பரணிடப்பட்டது 2021-05-10 at the வந்தவழி இயந்திரம் The courageous daughter of India
வெளி இணைப்புகள்
தொகு- அமைப்பின் இணையதளம்-ஜோதிர்காமாயா
- 2012, yentha.com, தி டார்க்னஸ், ஜூலை 30,2012 பரணிடப்பட்டது 2018-10-31 at the வந்தவழி இயந்திரம்
- 2014, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், உங்கள் கண்களுக்கு மட்டும், ஜூலை 7, 2014
- 2015, தி சிட்டிசன், தைபானி என்ற நட்சத்திரம், மார்ச் 20, 2015 பரணிடப்பட்டது 2015-06-03 at the வந்தவழி இயந்திரம்
- 2015-தி இந்து-தைபானி பிரார்-இன்டிலிங் சுதந்திரம்
- 2015-என்டிடிவி-தைபானி பிரார்-ஜோதிர்காமாயா
- 2016-இருளை அகற்றுவது-தைபானி பிரார்-தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
- டி.கே.எம் பொறியியல் கல்லூரியில் ஆற்றிய உரை