நெமிலிச்சேரி (செங்கல்பட்டு மாவட்டம்)
நெமிலிச்சேரி (ஆங்கில மொழி: Nemilicherry) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் குரோம்பேட்டை பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4] பத்து ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று நெமிலிச்சேரி பகுதியில் அமைந்துள்ளது.[5][6]
நெமிலிச்சேரி Nemilicherry | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 12°56′44″N 80°09′40″E / 12.9456°N 80.1610°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு மாவட்டம் |
ஏற்றம் | 50 m (160 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600044[1] |
அருகிலுள்ள ஊர்கள் | குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் மற்றும் தாம்பரம் |
மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | த. ரா. பாலு |
சட்டமன்ற உறுப்பினர் | இ. கருணாநிதி |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 50 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நெமிலிச்சேரி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 12°56′44″N 80°09′40″E / 12.9456°N 80.1610°E ஆகும். குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் மற்றும் தாம்பரம் ஆகியவை நெமிலிச்சேரி பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
நெமிலிச்சேரியில், அகத்தீசுவரர் கோயில் ஒன்று அமையப் பெற்றுள்ளது.[7]
நெமிலிச்சேரி பகுதியானது, பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் இ. கருணாநிதி ஆவார். மேலும் இப்பகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக த. ரா. பாலு, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "NEMILICHERY Pin Code - 600044, Tambaram All Post Office Areas PIN Codes, Search KANCHIPURAM Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "Small bus service between Nemilichery and Chromepet sought". The Hindu (in Indian English). 2016-10-01. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ Tamil Nadu (India) Legislature Legislative Assembly (1971). Madras Legislative Assembly debates; official report. Legislative Assembly.
- ↑ தமிழ் மரபு அறக்கட்டளை (2022-04-19). மின்தமிழ்மேடை - 29. தமிழ் மரபு அறக்கட்டளை.
- ↑ "குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரி ஏரி தூய்மை பணியில் பொதுமக்கள் குவிந்தனர்". Hindu Tamil Thisai. 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "நெமிலிச்சேரி ஏரியில் சீரமைப்பு பணி : செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு :". Hindu Tamil Thisai. 2021-08-24. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ Hariprasath (2018-11-24). "நீண்ட கால நோய்கள் இக்கோயிலில் வழிபட்டால் தீரும் தெரியுமா?". Dheivegam. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.