பத்திந்தா மக்களவைத் தொகுதி
பத்திந்தா மக்களவைத் தொகுதி (Bathinda Lok Sabha constituency) வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 18வது மக்களவையில், அர்சிம்ரத் கவுர் பாதல் இத்தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2009 முதல் மக்களவையில் பத்திந்தா மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். 2009 இந்தியப் பொதுத் தேர்தலில், அர்சிம்ரத் கவுர், யுவராஜ் ரனிந்தர் சிங்கை (அணித்தலைவர் அமரீந்தர் சிங்கின் மகன்) 1,20,948 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர் மன்பிரீத் சிங் பாதலை 19,395 வாக்குகள் வித்தியாசத்திலும், 2019ஆம் ஆண்டில் அமரீந்தர் சிங் ராஜா வாரிங், அர்சிம்ர்த் கவுர் பாதலிடம் 21,722 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2024 இந்தியப் பொதுத் தேர்தலில், அர்சிம்ர்த் கவுர் பாதல் 49,656 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பத்திந்தா PB-11 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பத்திந்தா மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | சிரோமணி அகாலி தளம் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுபத்திந்தா மக்களவைத் தொகுதியின் கீழ் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] 2012 சட்டமன்றத் தேர்தலுக்காக, சில தொகுதிகள் மறுவடிவமைக்கப்பட்டன.[2] மவுர், புச்சோ மண்டி, பத்திந்தா ஊரகம் மற்றும் தல்வாண்டி சபோ ஆகியவை புதிய தொகுதிகளாகும்.
தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | கட்சி | 2024-இல் முன்னிலை |
---|---|---|---|---|
83 | லம்பி | முக்த்சர் சாகிப் | ஆஆக | சிஅத |
91 | புச்சோ மண்டி (ப.இ.) | பத்திந்தா | ஆஆக | சிஅத |
92 | பதிண்டா நகர்ப்புறம் | ஆஆக | பாஜக | |
93 | பத்திண்டா கிராமப்புறம் (ப.இ.) | ஆஆக | சிஅத | |
94 | தல்வாண்டி சபோ | ஆஆக | சிஅத | |
95 | மெளர் | ஆஆக | ஆஆக | |
96 | மான்சா | மான்சா | ஆஆக | ஆஆக |
97 | சர்துல்கர் | ஆஆக | ஆஆக | |
98 | புதாலடா (ப.இ.) | ஆஆக | சிஅத |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | சர்தார் குக்காம் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
அஜித் சிங் | |||
1957 | சர்தார் குக்காம் சிங் | ||
அஜித் சிங் | |||
1962 | தனா சிங் குல்சன் | சிரோமணி அகாலி தளம் | |
1967 | கக்கர் சிங் | ||
1971 | பான் சிங் பௌரா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1977 | தனா சிங் குல்சன் | சிரோமணி அகாலி தளம் | |
1980 | அக்கம் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | தேஜா சிங் தர்தி | சிரோமணி அகாலி தளம் | |
1989 | பாபா சுச்சா சிங் | சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) | |
1991 | கேவல் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | அரிந்தர் சிங் கல்சா | சிரோமணி அகாலி தளம் | |
1998 | சத்தீன் சிங் சமாவோன் | ||
1999 | பான் சிங் பௌரா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
2004 | பரம்சித் கவுர் குல்சன் | சிரோமணி அகாலி தளம் | |
2009 | அர்சிம்ரத் கவுர் பாதல் | ||
2014 | |||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிஅத | அர்சிம்ரத் கவுர் பாதல் | 3,76,558 | 32.71 | ▼8.81 | |
ஆஆக | குர்மீத் சிங் குத்தியன் | 3,26,902 | 28.40 | 17.21 | |
காங்கிரசு | ஜீத் மொகிந்தர் சிங் சித்து | 2,02,011 | 17.55 | ▼21.75 | |
பா.ஜ.க | பாரம்பால் கவுர் சித்து | 1,10,762 | 9.62 | புதிது | |
சிஅத (அ) | இலக்கா சித்தானா | 84,684 | 7.36 | New | |
நோட்டா | நோட்டா | 4,933 | 0.43 | ▼ 0.67 | |
வாக்கு வித்தியாசம் | 49,656 | 4.31 | 2.50 | ||
பதிவான வாக்குகள் | 11,51,170 | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 16,51,188 | ||||
சிஅத கைப்பற்றியது | மாற்றம் | ▼ 8.81 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "List of Parliamentary & Assembly Constituencies". Chief Electoral Officer, Punjab website.
- ↑ "Delimitation Order & Notification - 2006" (PDF). Electoral Office, Punjab. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ "2024 Loksabha Elections Results - Bathinda". Election Commission of India. 4 June 2024 இம் மூலத்தில் இருந்து 2 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240702081105/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S1911.htm. பார்த்த நாள்: 2 July 2024.