பன்ஸ்காம் தொடருந்து நிலையம்

பன்ஸ்காம் தொடருந்து நிலையம், (நிலையக் குறியீடு:PJGM) இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள 4 தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மற்ற மூன்று தொடருந்து நிலையங்கள் அவந்திபுரா தொடருந்து நிலையம், கக்கபோரா தொடருந்து நிலையம் மற்றும் பம்போர் தொடருந்து நிலையம் ஆகும். பன்ஸ்காம் தொடருந்து நிலையம் அவந்திபோரா வருவாய் வட்டத்தில் உள்ள தோக்கிரி போரா கிராமத்திற்கு அருகே, பிர் பாஞ்சல் மலைத்தொடரில் 1598 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது இரண்டு நடைமேடைகள் கொண்டது.

தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பன்ஸ்காம், அவந்திபோரா வட்டம், புல்வாமா மாவட்டம், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
இந்தியா
ஆள்கூறுகள்33°57′11″N 74°54′49″E / 33.9531°N 74.9136°E / 33.9531; 74.9136
ஏற்றம்1598
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு மண்டல இரயில்வே
தடங்கள்ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுPJGM
மண்டலம்(கள்) வடக்கு மண்டல இரயில்வே
கோட்டம்(கள்) ஃபிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது2013
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
இந்தியா இல் அமைவிடம்
பன்ஸ்காம் (ஜம்மு காஷ்மீர்)

தொடருந்து சேவைகள்

தொகு

பன்ஸ்காம் தொடருந்து நிலையத்திலிருந்து அவந்திபுரா தொடருந்து நிலையம், பனிஹால் தொடருந்து நிலையம், சிறிநகர் தொடருந்து நிலையம் மற்றும் பாரமுல்லா தொடருந்து நிலையங்களுக்கு தொடருந்துகள் ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை வழியாக இயக்கப்படுகிறது.[1]

இத னையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு