007fps
வாருங்கள்!
வாருங்கள், 007fps, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- Surya Prakash.S.A. (பேச்சு) 15:41, 14 சூலை 2022 (UTC)
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. For Non-Tamil users: Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation. Machine translated articles and content will be deleted immediately without notice. Please do not attempt to breach the policy as it may warrant your user account block. |
--AntanO (பேச்சு) 04:21, 17 சூலை 2022 (UTC)
- தானியங்கி மொழிபெயர்ப்பு ஒருவகையில் குறிப்பு எடுத்துக்கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மற்ற வகையில் நீங்கள் கூறியது போலவே இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, ஓர் இரவு முழுதும் பிழை திருத்தி முழுவதும் எழுதப்பட்டவை. மேலும் நான் சினிமாத்துறையில் இருப்பதால் ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே மொழி பெயர்க்காமல் ஆங்கிலத்தில் அவர்கள் சொல்லாததையும் நான் தமிழ் மொழிபெயர்ப்பில் இணைத்துள்ளேன். இதே கட்டுரையில் நான் இன்னும் தொகுக்க வேண்டிய பகுதிகள் நிறைய உள்ளது. அவற்றை தொகுக்கும் போது பழைய பகுதிகளையும் சீரமைத்து விடுகிறேன். ஆகவே அழித்ததை மீண்டும் தொகுத்து இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி...
- ி. 007fps (பேச்சு) 22:34, 17 சூலை 2022 (UTC)
- அக்கட்டுரை விக்கி கட்டுரைபோல் இல்லை. விக்கி முறையை விளங்கிக்கொள்ளும் வரை மணல் தொட்டியில் எழுதிப் பழகுங்கள். நன்றி--AntanO (பேச்சு) 06:14, 18 சூலை 2022 (UTC)
- இந்த விக்கி கட்டுரை உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பயன்பெற, எளிமையாக புரியும் வகையில் எழுதப்பட்டது. குறிப்பெடுத்துக்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட்ட தானியங்கி மொழி பெயர்ப்பை நான் எழுதிய பிறகு அணைக்காமல் விட்டதால் உங்களுக்கு ”தானியங்கி மொழிபெயர்த்ததாக” தெரிகிறது. அதையும் சரி செய்து விடுகிறேன். உண்மையில் அது ஒரு தொழில்நுட்ப கோளாரு மட்டுமே. மேலும் இது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். எனவே தனிமனித விருப்பத்தை தாண்டி அதில் உள்ள உழைப்பை வீணாக்காமல் உதவிபுரியுங்கள். நன்றி. 007fps (பேச்சு) 13:32, 18 சூலை 2022 (UTC)
- தானியங்கி மொழிபெயர்ப்புகள் நீக்குதல் என்பது இங்கு நடைமுறையில் உள்ள செயற்பாடு. இது தனிமனித விருப்பமல்ல. அக்கட்டுரை விக்கி கட்டுரைபோல் இல்லை. விக்கி முறையை விளங்கிக்கொள்ளும் வரை மணல் தொட்டியில் எழுதிப் பழகுங்கள். அதன்பிறகு பொதுவெளியில் எழுதலாம். AntanO (பேச்சு) 16:02, 18 சூலை 2022 (UTC)
- புதிதாக துவங்கப்பட்ட கணக்கு என்பதால் விக்கிக்கு நான் புதிது என நினைத்துக்கொள்ள வேண்டாம். இதற்கு முன்னமே பெயரில்லாமல் நிறைய கட்டுரைகளை திருத்தியிருக்கிறேன். மேலும் நடைமுறை செயல்பாடாக இருந்தாலும் தொழில்நுட்ப பிழையை நான் திருத்திக்கொள்வதாக முன்னரே சொல்லிவிட்டேன். மேலும் எதை வைத்து இது விக்கி கட்டுரை போல இல்லை என சொல்கிறீர்கள் என தெரியவில்லை. கட்டுரையின் மூலமே ஆங்கிலம் தான். அதை தமிழாக்கம் மட்டும் தான் செய்திருக்கிறேன். ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள், படத்தின் விபரங்கள் இன்னமும் தமிழாக்கம் செய்யப்படவில்லை. மேலும் இது இன்னும் முடிவுறாத கட்டுறை. ஆங்கில பிரதியை பாருங்கள். இன்னும் நிறைய தலைப்புகள் உள்ளன. இன்னமும் கதைக்கு பின்னால் மொழி பெயர்த்து சேர்க்கவேண்டிய பிரதிகள் மீதம் உள்ளது. என்னிடம் இதன் ஒரு சேமிப்பு பிரதி கூட இல்லை. குறைகள் இருப்பின் கூறுங்கள் நான் திருத்திக்கொள்கிறேன். ஆங்கில பெயர்களை தமிழில் மாற்றிவிடுகிறேன். அதற்காக மொத்த பக்கத்தையே முடக்குவது மிகவும் கடினமாக உள்ளது. எனவே கட்டுரையை மீட்டுருவாக்கம் செய்துதாருங்கள். நன்றி. 007fps (பேச்சு) 17:15, 18 சூலை 2022 (UTC)
- கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றவாறு கட்டுரை உருவாக்குக. நன்றி AntanO (பேச்சு) 18:43, 18 சூலை 2022 (UTC)

July 2022
தொகுதயவு செய்து விக்கிபீடியாவின் பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தல் வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு எதிரானதும், அனுமதிக்கப்படாததும் ஆகும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக் கூடாது. உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 09:19, 19 சூலை 2022 (UTC)
- விக்கிபீடியாவின் பெயரிடும் மரபுகளில் தமிழக உச்சரிப்புகளுக்கும் ஏற்புடைய வகையில் மாற்றிக்கொள்ளும் உரிமை எல்லோருக்கும் உண்டு. மேலும் இது உங்களுக்கு மட்டும் தான் மோசமானதாக தெரிகிறது. மேலும் இது உங்களுக்கோ உங்களைச்சேர்ந்த மற்றவர்களின் தனிப்பட்ட கொள்கைகளுக்காக விக்கிபீடியா இயங்கவில்லை. இது பல்வேறு மக்கள் படிக்க பயன்பெற தங்கள் நியாயமான கருத்துக்களை சேர்த்துக்கொள்ள பயன்படும் இடம் ஆகும். எனவே உங்கள் தனிப்பட்ட விருப்பத்தை தாண்டி பொதுமக்கள் பயனபடுத்தும் எழுத்துவழக்கையே நான் முன்மொழிகிறேன். மேலும் பேச்சுப்பக்கத்தில் நீங்கள் எனக்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை. நேரடியாக எனது பக்கத்தையே அழித்துவிட்டீர்கள். தங்களுக்கு வந்தால் ரத்தம் எனக்கு வந்தால் மட்டும் என்ன தக்காளி சட்னியா தொழரே !!! 007fps (பேச்சு) 09:32, 19 சூலை 2022 (UTC)
- ஒரு கட்டுரையின் தலைப்பை மாற்றும் முன்னர் கட்டுரையில் பெயரை மாற்றவேண்டும் என்பதற்கான வார்ப்புருவை இட்டு பிறரின் கருத்தறிந்து அதன்பிறகே தலைப்பை நகர்த்தவேண்டும். உங்கள் விருப்பப்படி கட்டுரையின் தலைப்பை மாற்றக் கூடாது.--அருளரசன் (பேச்சு) 10:46, 19 சூலை 2022 (UTC)
- ”ஸ்டான்லி குப்ரிக்” என்ற பெயர் பொதுவான மக்களின் புழக்கத்தில் உள்ள எழுத்துவடிவம். எனவே பொதுநலன் கருதி நான் திருத்தியுள்ளேன். என்னைப்போல எத்தனை பேர் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க, தலைப்பை மாற்ற விக்கிபீடியாவில் அனுமதி உள்ளது. ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட விதத்தில் சொல்ல வேண்டும் அனுமதி கேட்க வேண்டும் என்ற எந்த தனிப்பட்ட விதிகளும் கிடையாது. உங்களுக்குள் விதிகள் இருப்பின் அது எனக்கு பொருந்தாது. ஏனெனில் நீங்கள் சொன்ன எனக்கு எந்த விதியின் படியும் உதவி வழங்கப்படவில்லை. எனது பக்கம் நீக்கப்படுவதற்கு முன்பு நீங்கள் சொன்ன எந்த வளர்ப்புருவும் எனது பக்கத்தில் இடவில்லை. நீக்கிய பிறகு விளக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டது. 007fps (பேச்சு) 11:14, 19 சூலை 2022 (UTC)
- தானியங்கி மொழிபெயர்ப்பு அறிவித்தல் இன்றி நீக்கலாம். AntanO (பேச்சு) 11:21, 19 சூலை 2022 (UTC)
- ”ஸ்டான்லி குப்ரிக்” என்ற பெயர் பொதுவான மக்களின் புழக்கத்தில் உள்ள எழுத்துவடிவம். எனவே பொதுநலன் கருதி நான் திருத்தியுள்ளேன். என்னைப்போல எத்தனை பேர் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க, தலைப்பை மாற்ற விக்கிபீடியாவில் அனுமதி உள்ளது. ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட விதத்தில் சொல்ல வேண்டும் அனுமதி கேட்க வேண்டும் என்ற எந்த தனிப்பட்ட விதிகளும் கிடையாது. உங்களுக்குள் விதிகள் இருப்பின் அது எனக்கு பொருந்தாது. ஏனெனில் நீங்கள் சொன்ன எனக்கு எந்த விதியின் படியும் உதவி வழங்கப்படவில்லை. எனது பக்கம் நீக்கப்படுவதற்கு முன்பு நீங்கள் சொன்ன எந்த வளர்ப்புருவும் எனது பக்கத்தில் இடவில்லை. நீக்கிய பிறகு விளக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டது. 007fps (பேச்சு) 11:14, 19 சூலை 2022 (UTC)
- //தங்களுக்கு வந்தால் ரத்தம் எனக்கு வந்தால் மட்டும் என்ன தக்காளி சட்னியா தொழரே// தேவையற்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. AntanO (பேச்சு) 11:22, 19 சூலை 2022 (UTC)
- ஒரு கட்டுரையின் தலைப்பை மாற்றும் முன்னர் கட்டுரையில் பெயரை மாற்றவேண்டும் என்பதற்கான வார்ப்புருவை இட்டு பிறரின் கருத்தறிந்து அதன்பிறகே தலைப்பை நகர்த்தவேண்டும். உங்கள் விருப்பப்படி கட்டுரையின் தலைப்பை மாற்றக் கூடாது.--அருளரசன் (பேச்சு) 10:46, 19 சூலை 2022 (UTC)
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.பெயரிடும் மரபுகளுக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்துதல். AntanO (பேச்சு) 11:14, 19 சூலை 2022 (UTC)
வணக்கம், 007fps!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல். காண்க: {{விக்கியாக்கம்}}, விக்கிப்பீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தமிங்கிலம் தவிர்த்து எழுதுதல்)
- தகுந்த ஆதாரம் (மேற்கோள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
- மூன்று வரிக்கு (வாக்கியங்கள்) அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்குக் (வாக்கியங்கள்) குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்)
- சரியான பகுப்பு(கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம், விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்
- பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--AntanO (பேச்சு) 03:32, 20 சூலை 2022 (UTC)
வலிந்து கிரந்தத்தில் எழுதுதல், மாற்றுதல், இலக்கண மீறல் சொற்கள் பயன்படுத்தல்,தமிங்கிலச் சொற்கள் கொண்டு எழுதுதல் போன்ற தொகுப்புகள் தவிர்க்கப்படவேண்டும். இவ்வழிகாட்டல்களை ஊதாசீனம் செய்துகொண்டு தொகுத்தல் தொடர்ந்தால் உங்கள் கணக்கு தடைக்குள்ளாக நேரிடலாம்.--AntanO (பேச்சு) 03:37, 20 சூலை 2022 (UTC)
- விக்கிபீடியா போன்ற பொதுத்தளத்தில் மக்கள் எளிதில் பயன்படுத்தும், அவர்களுக்கு புரியும் எளிய சொற்களை தாண்டி நீங்கள் பயன்படுத்தச்சொல்லும் வார்த்தைகள் தான் வலிந்து இலக்கிய நடையில் எழுத சொல்வது போல தெரிகிறது. இது எல்லா மக்களும் படித்து பயன்பெறும் பொதுத்தளம் தானே. இலக்கிய பத்திரிக்கை அல்லவே. மேலும் தமிங்கலச்சொற்கள் என்பது தொழில்நுட்பச்சொற்கள் மக்களுக்கு புரிவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ”காபி”யை காப்பி என்றே தமிழ் விக்கி கட்டுரைத்தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ’கொட்டை வடிநீர்’ என எங்கும் குறிப்பிடவில்லை. எல்லா இணைய தமிழ் கட்டுரைகளிலும் “ஆஸ்கார்” என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆசுக்கர் என்று பெரும்பாலான மக்கள் யாரும் குறிப்பிடுவதில்லை. 'பிலிம் நெகடிவ்’ என்பது உலகில் உள்ள எல்லா தமிழ் மக்களுக்கும் புரியும் தொழில்நுட்ப சொல். ’படல மறை’ என்று யாருக்கும் புரியாத வார்த்தையை வலிந்து திணித்து அப்படி நீங்கள் என்ன சாதிக்கப்போகிறீர்கள். மீண்டும் சொல்கிறேன். இது எளிய மக்களுக்கான தளம். இலக்கிய பத்திரிக்கை அல்ல.
- உங்கள் ஊரில் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட எழுத்துநடையை எல்லோர் மீதும் திணிப்பது எங்களையும் திணிக்கச்சொல்வது சர்வாதிகாரம். மேலும் என் கணக்கை தடை செய்துவிடுவேன் என நீங்கள் மீண்டும் மீண்டும் மிரட்டுவது சர்வாதிகாரத்தின் உச்சம். கட்டுரைகளில் மேற்கோள்களும் உசாத்துக்களும் இணைக்கப்பட வேண்டும் என்றால், அதை குறிப்பிடுங்கள். நான் சரிசெய்து கொள்கிறேன். எதற்கெடுத்தாலும் என் பக்கத்தை நீக்கிவிடுவேன் நீக்கிவிடுவேன் என சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்ள வேண்டாம். 007fps (பேச்சு) 16:09, 20 சூலை 2022 (UTC)
- இங்குள்ள விதிகளின்படி தொகுக்கவும். தன்னிலை விளக்கம் தேவை இல்லை. தேவையற்ற பேச்சும்கூட AntanO (பேச்சு) 16:38, 20 சூலை 2022 (UTC)
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.use talk pages for inappropriate discussions. AntanO (பேச்சு) 16:36, 20 சூலை 2022 (UTC)
Hello, I'm AntanO. I noticed that you made a comment that didn't seem very civil, so it has been removed. Wikipedia is built on collaboration, so it's one of our core principles to interact with one another in a polite and respectful manner. If you have any questions, you can leave me a message on my talk page. Thank you. AntanO (பேச்சு) 16:54, 20 சூலை 2022 (UTC)
இது ஒரு கலைக்களஞ்சியம் என்பதையும் அதன் கொள்கைகளின்படியே தொகுக்க வேண்டும் என்பதையும் அறிக. சமூகவலைத்தளங்களில் எழுதுவதுபோல் இங்கு எழுத முடியாது. புரிதல் ஏற்படும்வரை மணல்தொட்டியில் எழுதிப்பழகவும். விக்கி சமூகத்தில் குழப்பம் விளைவிப்பவரை தடை செய்ய இங்கு இடமுள்ளது என்பதையும் அறிக. நன்றி. --AntanO (பேச்சு) 16:58, 20 சூலை 2022 (UTC)