வாருங்கள், MUTTUVANCHERI NATARAJAN! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் MUTTUVANCHERI NATARAJAN, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் MUTTUVANCHERI NATARAJAN, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! நல்வரவு! --செல்வா 16:43, 3 ஏப்ரல் 2010 (UTC)

நீங்கள் கேட்டிருந்த சொற்களுக்கான பரிந்துரைகள் தொகு

  • system ஒருங்கியம், அமைப்பு, தொகுதி, முறைமை --செல்வா 17:43, 3 ஏப்ரல் 2010 (UTC)
  • ergonomics * பணிபுரிபவர்கள் அவர்கள் வேலைகளைச் செய்ய எளிமையாகவும்,பலமுறை ஒரே வகையான பணிகளைச் செய்யும் பொழுது ஊறுகள் விளையாமல், பணியாளர்களின் உடலியலுகளுக்கு ஏற்றவாறு செய்கருவிகள்,துணைக்கருவிகள், இட ஒழுக்கப்பாடுகள் ஆகிவற்றைச் தேர்ந்து வகுத்து அமைக்கும் பொறியியல் துறை. இதனைத் தமிழில் பணியிணக்கவியல் அல்லது பணியிணக்கவகுதி எனலாம். வகுதி = design. --செல்வா 17:43, 3 ஏப்ரல் 2010 (UTC)
  • fluidised = பாய்மமாக்கல் (மணல், துகள், குருனை போன்ற வடிவில் உள்ளவற்றை பாய்மம் போல் நகரச் செய்யும் தன்மை. காற்று நீர் போன்றவற்றைக் கலந்து பாய்மப்பண்பூட்டுவர். --செல்வா 17:43, 3 ஏப்ரல் 2010 (UTC)

லாஜிஸ்டிக்ஸ் என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன? "வள மேலாண்மை " - "வள ஒருங்கிணைப்பு" - "போக்குவரத்து மேலாண்மை" வேறு ஏதேனும் சொல்லலாமா?

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தொகு

ஏற்கனவே இதைப்பற்றிய கட்டுரை ஒன்று உள்ளதால் உங்களது கட்டுரை உள்ளடக்கத்தை அதில் இணைத்து பக்கத்தை வழிமாற்றம் செய்துள்ளேன்.--சோடாபாட்டில் 16:22, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

கையொப்பம் தொகு

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் கையொப்பம் இட வேண்டாம். நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள் என்ற தகவல் கட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் பதிவாகியிருக்கும்--சோடாபாட்டில் 17:24, 23 அக்டோபர் 2010 (UTC)Reply[பதிலளி]

ஐந்தாண்டு திட்டங்கள் தொகு

நீங்கள் பங்களித்து வரும் ஐந்தாண்டு திட்டம் கட்டுரை நன்றாக வளர்ந்து வருகிறது. வாழ்த்துக்கள். -- மாஹிர் 16:17, 1 நவம்பர் 2010 (UTC)Reply[பதிலளி]

கணக்கியல்/பொருளியல் கட்டுரைகள் தொகு

பல நல்ல முக்கிய கட்டுரைகள் எழுதி வருகிறீர்கள். என் வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள். சில கட்டுரைகளில் இந்தியாவில் உள்ள விதிகளைப் பற்றி மட்டும் எழுதியுள்ளீர்கள் (எ. கா. சேவை வரி). கொஞ்சம் பொதுப்படையாக விளக்கியபின், இந்தியாவில் உள்ள நிலைகளை விளக்குங்கள். (go from the generic to the specific).--சோடாபாட்டில் 03:59, 4 நவம்பர் 2010 (UTC) திரு சோடா பாட்டில் அவர்களுக்கு நன்றி.Reply[பதிலளி]

இன்று கணக்கியல் தலைப்புகளில் உள்ள ஒரு கட்டுரையைப் பார்த்தேன்.இதில் ஐந்தொகை என்ற சொல்லுக்கான இணைப்பின் வழி சென்று பார்த்தேன்.அங்கு காணப்படும் கட்டுரை இலக்கியம் தொடர்பானதாக உள்ளது.நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன்.--MUTTUVANCHERI NATARAJAN 15:23, 7 நவம்பர் 2010 (UTC)Reply[பதிலளி]

சரி செய்யப்பட்டுள்ளது. இக் கட்டுரையைப் பார்க்கவும்: ஐந்தொகை (கணக்கியல்) --Natkeeran 15:27, 7 நவம்பர் 2010 (UTC)Reply[பதிலளி]

திரு நக்கீரன் அவர்களுக்கு தங்களின் உடனடி செயல்பாடு என்னை வியப்பில் ஆழ்த்தியது.மிக்க நன்றி--MUTTUVANCHERI NATARAJAN 15:32, 7 நவம்பர் 2010 (UTC)Reply[பதிலளி]

மெய்கண்டான் கருத்துக்கள் தொகு

அன்புடையீர், வணக்கம். தங்களின் குறிப்புக்காகச் சிலசெய்திகள்: வாழ்க வளமுடன்" என்ற தொடரில் மூன்றுசொற்கள் வாழ்க, வளம், உடன் என்பன உள்ளன. வளம்+உடன்= வளத்துடன் என வருவதேசரி. ஆனால் வளம்+உடன்= வளமுடன் என்றும் வரலாம். முன்னையதில் அத்துச்சாரியை வந்துள்ளது. பின்னதில் சாரியை இல்லாமல் இயல்பாக வந்துள்ளது. இவ்வாறு வருவது மிகவும் அருகிய வழக்கு. தொல்காப்பியர், எழுத்ததிகாரம் உருபியலில் அத்துச் சாரியை வரும் என்கின்றார். எடுத்துக்காட்டு: மரம்+ஐ=மரத்தை; மரத்தொடு, நுகத்தை, நுகத்தொடு ;

"மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை"(185) என்பது நூற்பா.

(அதனால்தான் திருவாளர் நன்னன் அவர்கள் அவ்வாறு அத்துச்சாரியை இல்லாமல் வருவது தவறு என்று கூறியிருக்கின்றார் என்று கருதுகின்றேன்.) இங்கு 'அத்து' என்பது சாரியை. புணர்ச்சியில் வருவது; சொல்லாக்கத்திற்குப் பயனாக இருப்பது சாரியை; அதற்குத் தனிப்பொருளி்ல்லை. சொற்களைச் சார்ந்து, அதனுடன் இயைந்து வருவதனால் அதற்குச் 'சாரியை' என்றுபெயர். பொறதுவாகச் சாரியையுடன் சொல்வதே மரபு.அது வரவில்லையென்றால் தவறா என்றால் தவறி்ல்லை, வந்தால் சிறப்பு அவ்வளவுதான்; "சிறையாரும் மடக்கிளியே வா" எனச் சான்றோர் பாடலில் அத்துச் சாரியை இல்லாமல் 'மடக்கிளி' என வந்துள்ளதை நோக்குக.மடப்பத்தை உடைய கிளி என்றுபொருள். 'மடப்புலவன்' என்ற சொல்லில் கட்டாயமாக அத்துச் சாரியை இட்டே கூறவேண்டும். இல்லையென்றால், அறிவற்ற புலவன் என்ற பொருள்மயக்கத்தை அது விளைவிக்கும். இவ்வாறு வருவது 'இன்றியமையாச்சாரியை' என இலக்கண உலகில் கூறப்படும். அதாவது, சாரியை பொருள் தெளிவுக்காக இங்கு வருவதைக் காணலாம். விவாதத்திற்குரிய 'வாழ்கவளமுடன்' என்பதில் வாழ்க வளத்துடன் என்றாலும், வாழ்க வளமுடன் என்றாலும் பொருள் மயக்கம் இல்லை. எனவே, அதில் தவறி்ல்லை என்ற முடிவுக்கு நாம் வரலாம். ஆனால், வாழ்க வளத்துடன் என்பதே நன்றாக உள்ளது அதனைத்தான் தாங்கள் 'அவ்வடிக்கு உயி்ர்கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வாறு உணர்வதற்குக் காரணம் அத்துச்சாரியையுடனேயே கேட்டுப் பழக்கப்பட்டுவிட்டுத் திடீரென அது இல்லாமல் கேட்டால் மனம் ஏற்றுக் கொள்ளுவதி்ல்லை. அவ்வளவுதான். இனி, வாழ்க வளமுடன் என்றே பழக்கப்பட்ட ஒருவருக்கு "வாழ்கவளத்துடன்" என்றால் அது சரியாகப்படாது. எனவே பயன்பாடுதான் முக்கியம். ஆகையால், வாழ்க வளமுடன் என்றாலும் சரியே; ஆனால் வாழ்க வளத்துடன் என்றுசொல்வதே பெருவழக்கு. அன்புடன், மெய்கண்டான், திருச்சி.--Meykandan 04:04, 12 நவம்பர் 2010 (UTC)--[[]] 04:01, 12 நவம்பர் 2010 (UTC)Reply[பதிலளி]

சாதாரண வழக்கிலும் நலமுடன் வாழ்க என்றுஉள்ளதே! நலத்துடன் என்றும் எழுதலாம், நலமுடன் என்றும் எழுதலாம். அதேபோல் குணமுடன் குணத்துடன் என்ற வழக்கும் உண்டு. எனவே, வளமுடன் என்பது தவறி்ல்லை. அன்புடன்,--Meykandan 01:22, 13 நவம்பர் 2010 (UTC)Reply[பதிலளி]

என்னைப் பற்றி .... தொகு

பெயர் : சே.நடராசன்

பிறந்த ஊர் : அரியலூர் மாவட்டத்தில் உள்ள முட்டுவான்சேரி

படித்தது : குணமங்கலம் ப.யூ. து. பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப் பள்ளி .திருச்சியில் உள்ள இ.ரெ.உயர் நிலைப் பள்ளி .

கல்லூரிக் கல்வி : புத்தனாம்பட்டியில் உள்ள நேரு நினைவுக் கல்லூரி - இளம் அறிவியல் பட்டம்

வேலை : திருச்சியில் உள்ள நடுவன் அரசு பொதுத்துறை நிறுவனத்தில் கணக்கு அதிகாரி

இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர்கள் நிறுவனத்தில் உறுப்பினர் (ஐ.சி.டபிள்யூ. ஏ ) நிறுமச் செயலரியல் - இறுதித் தேர்வில் வெற்றி

தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூகவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம்

மின்னஞ்சல் : tamilnat@gmail.com

:படிமம்:NATRAJ.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:NATRAJ.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். AswnBot 02:04, 27 நவம்பர் 2011 (UTC)Reply[பதிலளி]


:படிமம்:MUTTUVANCHERI S. NATARAJAN.JPG இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:MUTTUVANCHERI S. NATARAJAN.JPG படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். AswnBot 02:05, 27 நவம்பர் 2011 (UTC)Reply[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு தொகு

 
அனைவரும் வருக

வணக்கம் MUTTUVANCHERI NATARAJAN!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:46, 30 திசம்பர் 2014 (UTC)Reply[பதிலளி]
வணக்கங்க, நீங்கள் மீண்டும் முனைப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி :) தொடர்ந்து சிறப்பாக பங்களியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் கேளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 15:40, 11 சனவரி 2015 (UTC)Reply[பதிலளி]
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:54, 30 சனவரி 2015 (UTC)Reply[பதிலளி]

சட்டக் கட்டுரைகள் தொகு

உள்ளடக்கம் எதுவுமற்ற சட்டம் குறித்த கட்டுரைகள் பலவற்றைத் தொடங்கியிருக்கிறீர்கள். இவற்றை முழுமையாக்கும் எண்ணம் உள்ளதா?--Kanags \உரையாடுக 11:36, 10 சனவரி 2015 (UTC)Reply[பதிலளி]

ஒவ்வொரு கட்டுரையாகத் தொடங்கி முடித்த பின்னர் மற்றைய கட்டுரைகளைத் தொடர்வது நல்லது.--Kanags \உரையாடுக 12:08, 10 சனவரி 2015 (UTC)Reply[பதிலளி]
வெற்றுப்பக்கங்கள் உடனடியாக நீக்கப்படுவது வழமை. அல்லது பயனர்:MUTTUVANCHERI NATARAJAN/மணல்தொட்டி இங்கு கட்டுரைகளை உருவாக்கிய பின் கட்டுரை வெளிக்கு வரவும். --AntonTalk 12:57, 10 சனவரி 2015 (UTC)Reply[பதிலளி]

100 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், MUTTUVANCHERI NATARAJAN!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 13:34, 31 சனவரி 2015 (UTC)Reply[பதிலளி]

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள் தொகு

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)Reply[பதிலளி]


தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்! தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:MUTTUVANCHERI_NATARAJAN&oldid=3184417" இலிருந்து மீள்விக்கப்பட்டது