பயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 5

Add topic
Active discussions

9, 90, 900தொகு

தொண்டு, தொண்பது, தொண்ணூறு என்பது பண்டைத் தமிழ் வழக்கு. பலர் இதைப் பற்றி கருத்து தெரிவித்து உள்ளார்கள். சுட்டிகள்...விரைவில்...

--Natkeeran 16:15, 21 மார்ச் 2007 (UTC)

புணர்ச்சி விதி (கள்)தொகு

 • ல் + (தகரம் | பகரம் | ககரம்) -> றகரம்

இப்படி வேறு புணர்ச்சி விதிகள் உண்டா, அவற்றை பட்டியலிட முடியுமா...எடுத்துக்காடுக்களுடன். நன்றி. (சுட்டிகள் இருந்தாலும் சரி). --Natkeeran 18:25, 21 மார்ச் 2007 (UTC)


புணர்ச்சி விதிகளும் சந்தி விதிகளும் ஒன்றுதானே ?? --Natkeeran 18:31, 21 மார்ச் 2007 (UTC)

"விகார மனைத்து மேவல தியல்பே."(நன்னூல் 153) பல்+பொடி=பற்பொடி பல்+காரை = பற்காரை பல்+தொகுதி=பற்றொகுதி--ஞானவெட்டியான் 02:02, 22 மார்ச் 2007 (UTC)

தமிழ்99தொகு

ரவி, தமிழ்99 பயன்படுத்த நான் ஒரு புது விசைப்பலகையைப் பழக வேண்டுமா..??? Must I actually map the keyboard to the Tamil99 keyboard in my mind? "என்ன கொடுமை சரவணன் இது..??" --மது 17:37, 23 மார்ச் 2007 (UTC)

ரவி, நான் உங்கள் கட்டுரையைப் படித்துத் தான் தமிழ்99-க்கு மாறினேன். மிகவும் எளிமையாகத் தான் இருக்கிறது. ரொம்ப நன்றி.--Sivakumar \பேச்சு 18:50, 23 மார்ச் 2007 (UTC)

விக்கிபீடியா, விக்சனரிக்கு logo - நிரல் துண்டு கொடுத்த மாதிரி தமிழ்99-க்கும் ஒரு logo-நிரல் துண்டு கொடுத்து உங்க கட்டுரைக்கு இணைப்பு கொடுக்கலாமா? வலைப்பதிவர்கள் அதை பயன்படுத்துவார்கள் இல்லையா?--Sivakumar \பேச்சு 19:02, 23 மார்ச் 2007 (UTC)

ரவி, தமிழ்-99 பயன்படுத்த முயலுகிறேன்... இதில், 'ஸ்ரீ', 'ஹ', மற்றும் 'ஸ' எழுத முடியுமா? ஆம் எனில், எப்படி? --மது 08:53, 9 ஏப்ரல் 2007 (UTC)

பேச்சு கருத்துதொகு

நிரோஜன் பேச்சு பக்கத்தில் நான் இட்ட கருத்துக்களின் மேலால் உங்கள் கருத்துக்களை ஒருமுறை பதிந்திருந்தது. அது தற்செயலாக நடந்ததா, அல்லது database குளறுபடியா..--Natkeeran 21:33, 25 மார்ச் 2007 (UTC)

ஒரு முறை மெய்ப்பார்த்து விடுங்கள், நன்றி.தொகு

உதவிதொகு

ரவி, 'புதுக்கோட்டை' என்ற தலைப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தைப் பற்றிய கட்டுரை உள்ளது. இது அறியாமல் நான் 'புதுக்கோட்டை மாவட்டம்' என்ற புது குறிங்கட்டுரையை உருவாக்கிவிட்டேன். 'புதுக்கோட்டை மாவட்டம்' என்ற கட்டுரையை நீக்கி விட்டு, 'புதுக்கோட்டை' எனும் கட்டுரையை 'புதுகோட்டை மாவட்டம்' என்ற தலைப்புக்கு நகர்த்த வேண்டும். --மது 15:56, 27 மார்ச் 2007 (UTC)

இன்னொரு உதவி... இந்த பக்கத்தை முழுவதும் படித்தேன். ஆனால், தெளிவான முடிவிற்கு வந்தது போல எனக்கு தோன்றவில்லை. விக்கிபீடியாவில் எழுத்துப்பெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா..? --மது 18:41, 2 ஏப்ரல் 2007 (UTC)
.... முந்தைய உதவிக்கு நன்றி சொல்ல மறந்து விட்டேன்... :( மன்னிக்கவும். --மது 18:44, 2 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ் விக்கிமூலம் ... ரவி, பார்க்கதொகு

http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

--Natkeeran 18:31, 30 மார்ச் 2007 (UTC)

த.வி இடைமுகத்தை தமிழாக்குவது எப்படி?தொகு

தயந்து உங்களுக்கு தெரிந்த தகவல்களை நுட்ப நெற்ப்படுத்தல் பக்கத்தில் சேருங்கள். நன்றி.

--Natkeeran 22:14, 3 ஏப்ரல் 2007 (UTC)

நன்றிதொகு

பாராட்டுகளுக்கு நன்றி ரவி :) --யோகேஸ் 04:56, 4 ஏப்ரல் 2007 (UTC)

படங்களைப் பெரும்பாலும் ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து எடுக்கிறேன். அதில் கிடைக்காதவற்றை கூகுள் தேடல் மூலம் பெறுகிறேன். அதில் காப்புரிமை பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே கட்டுரைகளில் பயன்படுத்துகிறேன். --யோகேஸ் 18:04, 4 ஏப்ரல் 2007 (UTC)

புதிய பயனர்கள்தொகு

உண்மை ரவி. மதுவும், யோகேஸ்சும் மிக நல்ல ஆக்கங்கள் செய்துவருகின்றனர். காயத்திரியும் மிக நல்ல ஆக்கங்கள் செய்துளளார். இவர்களைப்போல இன்னும் 10-15 பேர் முன்னுக்கு வரவேண்டும். இருப்பவர்களும் விடாது 2-3 கட்டுரைகள் எழுதவேண்டும். கடந்த பல நாட்களாக போதிய அளவு பங்கு கொள்ள இயலவில்லை. --செல்வா 19:46, 4 ஏப்ரல் 2007 (UTC)

கட்டுரை எண்ணிக்கை முதலியனதொகு

ரவி, நாம் எல்லோருமே, தன்னார்வலர்கள்தானே. யார் யாருக்கு எவ்வெப்பொழுது முடியுமோ, அதுவும் செய்யவேண்டும் என்னும் ஆர்வமும் போக்கும் இருந்தால் மட்டுமே செய்வார்கள். என்றாலும் கண்காணிப்பும், குறிக்கோள்களும் நினைவில் கொள்வது நல்லது. இதனால் யாரும் எந்தவித அழுத்தங்களும் உணரக்கூடாது. இது விறுவிறுப்பாக நடந்தாலும் மெதுமெதுவாக நடந்தாலும் நம்முடைய ஆர்வம், பணியின்பம் பற்றியே நடக்க வேண்டும் - நடக்கவும் இயலும். குறிக்கோள்கள் கண்காணிப்புகள் வைத்திருப்பது நல்லது. தவறில்லை. எல்லாம் என் தனிப்பட்ட கருத்துக்களே. 70 மில்லியன் தமிழர்களில், குறைந்தது ஒரு 5,000-10,000 தமிழர்களாவது இணைய அறிவோடு, தமிழிலும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்பது என் கணிப்பு, அதில் ஒரு 200 பேராவது த.வி யில் பங்கு கொள்ளலாமே. அதில் 100 பேர் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு குறுங்கட்டுரையாவது எழுத்வார்கள் என்று நான் கற்பனையாவது செய்யலாம் அல்லவா ரவி! அப்படிச் செய்தால் ஓராண்டில் 36,000 கட்டுரைகள் எழுதலாம். எல்லாம் கற்பனைதான் :) இந்நிலையை நாம் எட்டாது இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அவற்றுள் இப்படி ஓர் அரும் தொகுப்பு இருப்பதின் அருமையை உணராததும், நாமும் சிறிது கை கொடுப்போமே என்னும் நினைப்பும் இல்லாதது சிலவாகும். மொத்த பைட் அளவிலும் தரத்திலும் நாம் ஏறத்தாழ 45/40 ஆவது இடங்களில் உள்ளோம்.--செல்வா 00:04, 6 ஏப்ரல் 2007 (UTC)

செல்வா, உங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றேன். ஆரம்பத்தில் நான் விக்கிபீடியாவில் இணைந்த 2005 ஆம் ஆண்டுப்பகுதியில் நான் சுனாமியால் பாதிக்கப்ட்ட பகுதியில் வேலை செய்து வந்தேன் அங்கே ஒருவிதமான ஒழுங்கான இணைப்பும் கிடையாது. ஆரம்பத்தில் நான் பங்களித்த கட்டுரைகள் எனது விடுமுறை நாட்களில் வவுனியா வந்து சனி ஞாயிற்றுக் கிழமைகளில் எழுதியதே. 5,000-10,000 அல்லது ஒரு நிச்சயமாக இதை விடப் பலமடங்குபேர் நிச்சயமாக தமிழ் எழுதப்படிக்கத்தெரிந்திருப்பார்கள் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. நாம் விக்கிபீடியாவை முன்னேடுப்பதில் புதியவர்களை ஈடுபடுத்தவேண்டும் தவிர விக்கிபீடியா பற்றி மேலும் பலர் அறிந்து இங்கே வரவேண்டும். "அடம்பன் கொடியும் திரண்டாம் மிடுக்கு" என்பது போல நாம் ஒருசிலர் தொடர்ந்து கட்டுரை எழுதுவதை விட பலர் சேர்ந்து கூட்டுமுயற்சியில் கட்டுரைகளை ஆக்குவது விக்கிபீடியாவை வலுப்படுத்தும் என்று உறுதியாக நம்புகின்றேன். விக்கிபீடியா அறிமுகம் இன்னமும் போதாதென்றே நினைக்கின்றேன். நிச்சய்மாகப் பலர் இத்திட்டத்தினைப் பார்க்கும் போது கூடுதலானபேர் பங்களிக்கவருவார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஒரு காலத்தில் இங்கையில் கொடிகட்டிப் பறந்த தமிழர்களின் கல்வி இன்று கவலைக்கிடமாக உள்ளது. இலங்கையில் முழுஅளவிலுமே தமிழர்கள் அரைவாசிக்கு மேல் பல்கலைக்கழக அனுமதி பெற்ற காலம் போய் இன்று பிந்தங்கிய மாவட்டமாக அநேகமாகத் தமிழர்கள் இருக்கும் மாவட்டங்கள் இருப்பது வருந்தத் தக்கது. "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு" போல் இப்போது இருக்கும் திட்டங்களில் இது ஒரு மகத்தான திட்டம் தமிழர்களின் கல்விப் பின்னடைவை நீக்குவதற்கு இதைவிடச் சிறந்த திட்டம் இற்றைவரை இல்லை. 1996 காலப்பகுதியில் யுத்ததின் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்த எனது அப்பாப்பாவின் வீடு உட்டபடப் பல அரிய நூல்களும் இல்லாமற் போயின அன்றே நான் எடுத்த முடிவு எப்படியாயின் தமிழ் நூல்களைப் பின்னால் ஒருவர் பார்க்கும் வண்ணம் செய்யவேண்டும் என்பதே. நேரம் கிடைப்பதில்லை என்ற ஒரே சிக்கலே தவிர வேறு பிரச்சினைகள் இப்போது இல்லை. இயன்றவரை முயன்று இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வோம். தமிழனென்று சொல்லித் தனிநிமிரும் காலத்தை ஏற்படுத்த விரைவோம்.--Umapathy 02:52, 6 ஏப்ரல் 2007 (UTC)
உமாபதியின் ஏக்கமும் உறுதியும் பல இலங்கைத் தமிழர்களுக்கு உள்ளது. யாழ்ப்பாணத்தில் எங்களுடைய வீட்டில் இருந்த ஏராளமான நூல்களும், அரும் பொருட்களும் கூட (மூன்று நான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவை) அழிந்து போய்விட்டன. இவ்வாறான இழப்புக்களை நேரடியாக அநுபவித்தவன் என்ற வகையில் உமாபதியின் கருத்துக்களை நானும் ஏற்றுக்கொள்கிறேன். உண்மையில் விக்கித் திட்டம் போன்ற தமிழுக்கான ஒரு முயற்சி தமிழ்நாட்டிலிருந்து தொடங்கவேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனாலும், நனது நாடுகளின், அரசியல் நடைமுறைகளினாலும், தலையீடுகளினாலும் இத்தகைய திட்டம் உரிய முறையில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இப்போதைக்கு இல்லை. எனவே, விக்கித் திட்டங்களின் வசதிகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். செல்வாவைப் போலவே நானும், நிறையப் பங்களிப்பவர்கள் வந்து தமிழ் விக்கிபீடியாவின் கட்டுரை எண்ணிக்கையையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறேன். எந்தவொரு வெற்றிகரமான திட்டத்திலும் தொடக்கத்தில் மிகச்சிலரே உறுதியாக நின்று உழைத்திருக்கிறார்கள். அவர்களுடைய, தளராத உழைப்பே பல வெற்றிகளுக்குக் காரணமாயிருந்துள்ளது. இந்த வரலாற்றுப் பாடத்தை மனதிற் கொண்டு தளராது உழைப்போம். Mayooranathan 05:47, 7 ஏப்ரல் 2007 (UTC)

Ravi, would you please see my user pages at Wikisource and follow through them...Thanks.தொகு

Wikisource:Language domain requests versus m:Meta:Language proposal policyதொகு

Hi, after a discussion on foundation-l, I received the answer that the current requests made on the Wikisource:Language domain requests aren't 100% ok to the current policy to create new wikis. See above:

Because it, I think that te best to do is:

 1. Archive all current requests on Wikisource:Language domain requests as unsuccessful and re-open these requests at m:Requests for new languages using a very basic structure (a simply stub request form to make the life more easy for these users and a central place to all type of language requests).
 2. Send a invite to the Wikipedians of affected languages to expand these requests, to arguing instead of voting etc.
 3. Replace the current text on Wikisource:Language domain requests to a general warning of maintaning the source-texts here versus requesting a new wiki and pointing to make new requests on Meta-Wiki in a way 100% ok to the m:Meta:Language proposal policy and 100% ok to the current policies "texts on this wiki versus a specific wiki for one language" (I don't have intention to do this step due to my poor English).

In other words: this wiki continues accepting new texts for languages that don't have yet a wiki and continues serving as a coordination wiki, but new requests may need to be placed at the Meta-Wiki and fully following the m:Meta:Language proposal policy.

Someone agree/disagree? 555 23:36, 1 April 2007 (UTC)

பாட்டி வடை சுட்ட கதைதொகு

ரவி, நல்ல தொடக்கம். நிறைய கதைகள் எதிர்பார்க்கின்றேன். எனக்கு தெரிந்தால் சேர்க்கின்றேன். இது நல்ல ஒரு சிறு cluster ஆக தொகுக்கலாம். --Natkeeran 14:39, 7 ஏப்ரல் 2007 (UTC)

சிறு வயதில் அம்புலிமாமா, பாலமித்திரா, ரானி கொமிக்ஸ், தமிழ் பாட புத்தகங்கள், சைவ நெறி இப்படி கதைகள் படிப்பதென்றால் அலாதி. இப்பொழுதும் தொன்மவியல் கதைகள், கொமிஸ் என்றால் படிப்பதுண்டு. இப்போது நீண்ட நாவல்கள் படிப்பது அரிது. கற்பனைக் கதைகளில் இருக்கும் சுவை யதார்த்த கதைகளில் இல்லை. திரைப்படங்களும் அப்படித்தான்...நேற்று மொழி (திரைப்படம்) பார்த்தேன். அண்மைக்காலத்தில் பார்த்த அருமையான தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று. பார்க்கவிட்டால் பாருங்கள். --Natkeeran 14:50, 7 ஏப்ரல் 2007 (UTC)

FARCதொகு

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

நன்றிதொகு

கல்லூரி இப்பதான் அரம்பிச்சிருக்கு அதனால கொஞ்சம் விடுமுறை அதிகம் அத பயன்படுத்தி கொஞ்சம்....... எப்படியாயினும் எனக்கும் மகிழ்ச்சியே--டெரன்ஸ் \பேச்சு 08:14, 15 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ் விக்சனரிதொகு

தமிழ் விக்சனரிக்கும் வருகிறேன்.--Sivakumar \பேச்சு 19:17, 20 ஏப்ரல் 2007 (UTC)

பேச்சுப் பக்க வார்ப்புருதொகு

ரவி இந்த வார்ப்புரு தேடல் பொறிகளின் மூலம் ஒரு கட்டுரைக்கு நேரடியாக வரும் பயனருக்கான வழிகாட்டல் பக்கமாக இருக்கும் என்று எண்ணிதான் இட்டேன். இது ஆங்கில விக்கியில் இருந்து பெறப்பட்ட கருத்துதான். அங்கே கூடுதலான பேச்சு பக்கங்களுக்கு இட்டுள்ளார்கள். மேலும் நாம் எல்லா பயனுனர்களையும் கணக்குகளை ஆக்கி எல்லாவற்றையும் தெரிந்த பின் கட்டுரைப் பக்கத்துக்கு வருவார்கள் என்க் கருத முடியாது தானெ.மேலும் பேச்சுக்கள் இடம்பெறாத பக்கங்கள் சிவப்பு இணைப்பாக இருப்பது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும். இரண்டாவது கேள்விக்குப் பதில் ஆம் முடியுமானவரை, உங்கள் கேள்வி ஏதோ ஆட்சபனைப் போல ஒலிக்கிறது??? ஏதாவது எதிர்ப்பு உண்டா?--டெரன்ஸ் \பேச்சு 10:10, 25 ஏப்ரல் 2007 (UTC)


பேச்சுப் பக்கங்கள் அதிகரிப்பதால் என்ன பிரச்சினை ரவி. எனது கருத்துப்படி பேச்சுப்பக்கங்கள் அதிகரிப்பது ஒரு தடையாக கருத தேவையில்லை. ஆங்கில விக்கி தளத்தை உதாரணமக எடுத்தால் கட்டுரை எண்ணிக்கையைப் போல 4 மடங்கு கட்டுரை அற்றப்பக்கங்கள் காணப்படுகின்றன. அங்கே கட்டுரை அனைத்தினதும் பேச்சுப்பக்கங்களில் ஒரு வார்புருவை இட்டுள்ளதைக் கவணிக்கலாம். எல்லாவற்றுக்கும் ஆங்கில விக்கியை உதாரணமாக கொள்ளத்தேவையில்லை என்றாலும் இந்தவிடயத்தில் பரவாயில்லைப் போலத்தான தோன்றுகிறது. தமிழ் விக்கியின் depth குறைந்து காணப்படுவதற்கு மொத்தபக்கங்களில் குறைவும் ஒரு காரணம் என்பதை மீடியாவிக்கி பக்கத்தைப் பார்த்தால் தெளிவாகும். எதிர்ப்பின் காரணமாக தற்போதைக்கு வார்ப்புருக்கள் இடுவதை தள்ளிவைக்கிறேன். ஆலமரத்தடியில் உரையாடிப்பார்ப்போம்.--டெரன்ஸ் \பேச்சு 11:59, 25 ஏப்ரல் 2007 (UTC)


Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள்தொகு

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள் ரவி தங்களது கவனத்தை இந்த பக்கத்துக்கு வேண்டுகிறேன். முடியுமான போது வந்து பங்களிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:03, 26 ஏப்ரல் 2007 (UTC)

சுந்தர்பாட்தொகு

சுந்தர்பாட்டின் செயல்பாடு குறித்த கவனத்திற்கு நன்றி, ரவி. இரு கட்டுரைகளில் இருந்து ஒரே கட்டுரைக்கு இணைப்பு இருந்தால் இவ்வாறு செய்கிறது. இதை இப்படி செய்யாமல் இருக்க என்ன செய்ய முடியும் என பார்க்கிறேன். -- Sundar \பேச்சு 14:13, 3 மே 2007 (UTC)

அந்தத் தவறான தொகுப்புகளில் தேவையான மாற்றங்களைச் செய்துள்ளேன். இனி இப்படி நடைபெறாமல் இருக்க வகை செய்ய முயற்சிக்கிறேன். மற்றபடி "பாட்"டுகள் கடின உழைப்பிற்குத் தானே! -- Sundar \பேச்சு 14:27, 3 மே 2007 (UTC)

தொகுத்தல் பெட்டி இற்றைதொகு

ரவி, அடிக்கோடு எவருக்கும் வராமல் தடுப்பது எப்படி எனத் தெரியவில்லை. மற்றபடி விக்சனரிக்குச் சென்று இங்குள்ள மீடியாவிக்கி:Common.css மற்றும் மீடியாவிக்கி:Common.js என்ற பக்கங்களைச் சேர்த்து விட்டேன். இப்போது சரியாகியுள்ளது. -- Sundar \பேச்சு 12:43, 4 மே 2007 (UTC)

Bot status BotMultichillதொகு

Hi, Ravidreams. I request a bot bit for BotMultichill. I hope this is a suitable place to ask, i couldn't find another place to ask for bot status.

 • Botmaster : Multichill
 • Bot's name : BotMultichill
 • List of botflags on others wikipedias: 30 atm (see meta:User:Multichill for the current list)
 • Purpose: Interwiki (pywikipedia)
 • Technical details : BotMultichill is an interwiki bot starting at the Dutch wikipedia. The bot uses the pywikipedia framework and runs day and night in autonomous mode. Sometimes the bot will run in manual assisted mode to solve interwiki conflicts. Multichill 13:53, 5 ஜூன் 2007 (UTC)
  Thank you for the bot status and the message at my Dutch talk page. Multichill 19:41, 5 ஜூன் 2007 (UTC)

இணைய விடுப்புதொகு

ரவி, இணைய விடுப்பு முடிந்து விட்டதா :)--Sivakumar \பேச்சு 19:43, 5 ஜூன் 2007 (UTC)

நல்லது ரவி, என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள். ;)--Sivakumar \பேச்சு 19:56, 5 ஜூன் 2007 (UTC)

Bot statutதொகு

Hi ! My primary account have bot statut but I will now edit on my bot account User:Le Pied-bot (list of flag). Can you please switch the bot flag from my primary account User:EDUCA33E to my bot account User:Le Pied-bot ? Cordialy, EDUCA33E 05:00, 7 ஜூன் 2007 (UTC)

அளவிடக்கூடிய ஒரு வேலைத் திட்டத்தையும் சேர்த்து முன்வைத்தால் நன்று.தொகு

அல்லது, கட்டுரைகளை தேர்ந்து, இந்தக் கட்டுரைகளை மெய்ப்பார்க்கவும் அல்லது மெய்பார்க்கலாம் என்று பரிந்துரையுங்கள். மெய்பார்த்த பின்பு அதை பட்டியலில் இருந்து நீக்கி விடலாம். சும்மா மொட்டையாக சொல்வது, சும்மாவே இருந்துவிடும். --Natkeeran 16:29, 9 ஜூன் 2007 (UTC)

ரவி, கட்டுரைகளைத் தேர்ந்து ஒரு பட்டியலிட்டால், அதை மெய்ப்பார்த்த பின்னர் குறிப்பிடலாம். தற்போது, இப்பணியில் ஈடுபடக்கூடிய ஆற்றல் சிலருக்கே உள்ளது. எழுத்துப்பிழைகள் அதிகமாக உள்ள நீண்ட கட்டுரைகள், முக்கிய தலைப்பில் உள்ள கட்டுரைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரலாம். இது மெய்ப்பாத்தல் என்ற கூற்றுக்கு மட்டுமே பொருந்தும்.

படங்களைச் சேர்ப்பது, உள் இணைப்புகளை சேர்ப்பது போன்ற செயற்பாடுகளுக்கு இப்படி செய்ய தேவையில்லை. --Natkeeran 18:22, 9 ஜூன் 2007 (UTC)

Bot bit SieBotதொகு

Hi Ravidreams, i was looking for a place to request bot status for my bot and i stumbled onto your talk page, i hope this is the right place to ask.

 • Botmaster : Siebrand
 • Bot's name : SieBot
 • List of botflags on others wikipedias: 70 approved, 10 pending
 • Purpose: Interwiki (pywikipedia)
 • Technical details : SieBot is an interwiki bot starting at the Dutch wikipedia. The bot uses the pywikipedia framework and runs day and night in autonomous mode. Sometimes the bot will run in manual assisted mode to solve interwiki conflicts. Siebrand 23:01, 18 ஜூன் 2007 (UTC)
Hi Siebrand. விக்கிபீடியா பேச்சு:தானியங்கிகள் is the page to request ofr bot status. However, I've already granted bot status to SieBot based on your request above with details. Thanks. -- Sundar \பேச்சு 07:34, 19 ஜூன் 2007 (UTC)
Thanks you for the speedy approval. Cheers! Siebrand 18:05, 19 ஜூன் 2007 (UTC)

நன்றிதொகு

நன்றி ரவி. மீண்டுன் விக்கியில் செயற்பட நேரம் கிட்டியுள்ளது.--டெரன்ஸ் \பேச்சு 11:18, 4 ஆகஸ்ட் 2007 (UTC)


மறு: வணக்கம் ரவிதொகு

வணக்கம் ரவி, நான் முதுநிலை (Master of Science in Physics) பட்டம் பெற்றுள்ளேன், ஆனால் ஆங்கிலவழிக் கல்வியில்தான் முழுவதும் பயின்றேன், தமிழ் என் முதல் மொழியாய் இருந்தது. -நரசிம்மவர்மன்10 05:47, 27 செப்டெம்பர் 2007 (UTC)

பொறுத்தருளுங்கள்!தொகு

(செல்வாவின் பேச்சு பக்கத்தில் உள்ள தங்களின் (கலைசொல்லாட்சி பற்றிய) கருத்துகளுக்கான எனது மறுமொழி (உண்மையில், இஃது "உடன்மொழி" தங்களின் எந்த கருத்துகளையும் நான் "மறு"க்கவில்லையே :-) )

செல்வ, ரவி, தங்களின் கருத்துகளுக்கு முதற்க்கண் நன்றி. செல்வாவின் கருத்துகளை ஏற்பதோடல்லாமல், அவர் அதை பகர்வதர்க்கு முன்னமே என் நிலைபாடும் அதான். விக்கிபீடியா எந்த ஒரு தமிழ்ச்சார் ஆக்க குழுவிற்க்கும் சளைத்தது அல்ல. சொல்லப்போனால், அரசியல் மற்றும் பிற சார்புகள் பற்றி தமிழ்த் "தொன்டாற்றும்" இயக்கங்களை விட, தமிழ்நாட்டு தமிழர் மட்டுமின்றி அனைத்து ("த.நா" தமிழரை விட "இல" தமிழர் இங்கே அதிகம் என்பது தாங்கள் அறியாததல்ல!) தமிழரும் பங்களிக்கும் த.வி. ஓர் உண்மையான தமிழ் இயக்கம். உழுதுண்டு வாழ்வோராய் நாம் முன்செல்வோம் மற்றவர் தொழுதுண்டு பின் தொடரட்டும்!

ஆயினும், தோழர் ரவியின் கவலை நியாயம்தான்! இலைமறை காயாய் சில (பல?) நல்ல சொற்கள் த.இ.ப. போன்றவற்றிலும் இருக்கத்தான் இருக்கும். அவற்றை அறவே ஒதுக்குதல் மடமை. இங்கே நான் செய்யும் பிழையும் அஃதே! த.இ.ப. என் உலவியில் சரியாய் படிக்கபடாததால் அதனை நான் ஒப்புவதில்லை! மற்றபடி, அதனை ஒப்பக் கூடவேகூடாது என்ற பிடிவாதம் எதுவும் இல்லை! உலவியில் உள்ள பிரச்சனை தீரும்வரை த.வி-யில் பங்களிக்காமல் இருப்பதை விட, செய்ய முனைந்ததை செய்துவிட்டு பின்னர் (தவறோ அஃதில் மேலும் சிறப்பாய் செய்ய வாய்ப்போ இருப்பின்) திருத்திக்கொள்ளலாம் என்ற மனப்பாங்கில்தான் நான் பனியாற்றுகிறேன்! இதை பொறுத்தருளி, த.வி-க்கு சிறப்பாய் பங்களிக்க எனக்கு மேலும் உதவுமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறேன் :-)

-நரசிம்மவர்மன்10 04:55, 1 அக்டோபர் 2007 (UTC)

நன்றி ரவி, பிரச்சனை தீர்ந்தது! இனி முறன்பாடின்றி கட்டுரைகளை ஆக்குவேன் :-)
-நரசிம்மவர்மன்10 09:25, 1 அக்டோபர் 2007 (UTC)


மறு:Redirectதொகு

நான் force என்று நடத்திய தேடலில் "விசை" என்ற கட்டுரை இருந்தும் அஃது தேடல் முடிவுகள் பக்கத்தில் முதலில் இடம்பெறவில்லை, இதனால் ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு தேடுகையில் பொருத்தமான ஒரு கட்டுரை இருந்தும் அஃது அறியப்படாமல் மறைக்கப்படும் வாய்ப்பு இருப்பதன் பொருட்டே அவ்வாறு வழிமாற்று பக்கத்தை உருவாக்கினேன்! இப்பிரச்சனைக்கு வேறு நல்ல தீர்வு தோன்றுமாயின் ஆலமரத்தடியில் பகர்கிறேன் :-) -நரசிம்மவர்மன்10 08:04, 2 அக்டோபர் 2007 (UTC)

நிச்சயம் ரவி! விக்கிபீடியால குப்பைகூலம் சேர்பது என் நோக்கம் இல்ல! பிரச்சனை தீரும்வரை பொருத்திருக்கிறேன் :-)
-நரசிம்மவர்மன்10 09:16, 2 அக்டோபர் 2007 (UTC)

நாள்மீன்தொகு

தாரகை என்பது தமிழல்ல என்று நினைக்கிறேன் (பரிபாடலில் பயன்பட்டுள்ளது, தமிழ்வழி பொருள் கூறமுடியும்). ஆனால் நாள்மீன் மிக அருமையான சொல், அது வேண்டாம் என்றால் விண்மீன். அல்லது மின்னுவது மீன் என்பதால் தமிழில் மீன் என்றாலே நாள்மீன்தான், எனவே மீன் என்றே எழுதலாம். மீன் என்னும் உயிரினத்தோடு குழப்பம் ஏதும் வராது. இடத்திற்கு ஏற்றார்போலத் தானே பொருள் கொள்ளும். மீன் என்றால் நாள்மீன் என்று பரவலாக ஆளப்பட்டு வந்துள்ளது. மீன் என்பது சுருக்கமாகவும் உள்ளது.--செல்வா 12:14, 12 அக்டோபர் 2007 (UTC)

திட்டங்களை அறிமுகப்படுத்தல்தொகு

இங்கிருக்கும் திட்டங்களை ஒவ்வொன்றாக வலைப்பதிவுகளில் அறிமுகப்படுத்தினால் நன்று. ஏலுமென்றால் இந்திய மொழி ஒப்பீட்டு கலந்துரையாடல் ஒன்றை உந்துவித்தும் சற்று கவனம் ஈர்க்கலாம். பரந்த பங்களிப்பை மீண்டும் மீண்டும் அழுத்தி செல்லுங்கள். நன்றி. --Natkeeran 00:39, 13 அக்டோபர் 2007 (UTC)

விக்கி விடுமுறைகள்தொகு

கருத்துக் கந்தசாமி மீண்டும் மும்முரமாகப் பங்களிப்பதையிட்டு மகிழ்ச்சி. உரை திருத்தங்களிலும்தான். மேலேயுள்ள அறிவிப்பையும் நீக்கலாமே.. :) கோபி 18:14, 16 நவம்பர் 2007 (UTC)

புகை வண்டிதொகு

நீண்ட நாட்களாக எழுத நினைத்து வரும் ஒன்று. கட்டாயம் செய்வேன் ரவி. :) --Sivakumar \பேச்சு 07:30, 17 நவம்பர் 2007 (UTC)

Hi Seniorதொகு

Hi எப்படி இருக்கீங்க ? என்னோட Feelings-ஐ ஏதோ College Senior-ங்கிறதால் சொல்றேன்.

Senior, Free Time-ல உருப்படியாவது ஏதாவது பண்ணலாம்னு தான் இங்க வந்தேன். நான் உருப்படியா First-First எழுதுன Articles இவ்வளவு Reaction தரும்னு எதிர்பார்க்கல.ஸ்ரீ யால இவ்வளவு Problem வரும்ன்னு நான் கனவுல கூட நினைக்கல. எல்லாரும் இஷடத்துக்கு கத்தறாங்க.நான் College Student அவ்வளவு தான். மத்தவங்க மாதிரி, எனக்கு திருவாழ்மொழியோ எதுவுமே தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச தமிழ்ல எழுதி இருந்தேன். ஏங்க அதுக்கு இவ்வளவு Opposition-ஆ?. 'ஸ்ரீ' முன்ன பின்ன வாழ்க்கைல பார்க்காத மாதிரி பேசுறாங்க(ஒவ்வொரு தெருக்கோடி கோயில்லையும் இதத்தான் சாமி பேரு முன்னாடி எழுதி இருக்கான்). விட்டா செல்வா நேர்ல வந்து என்னை அறைஞ்சுடுவாரு போல. அவரோட reply-ஐ பாக்கும்போது, மனசுக்குள்ள என்ன கண்டபடி திட்டிட்டு எழுதன மாதிரி எனக்கு தோணுது. ஏங்க நான் சின்ன பையங்க, அப்பப்ப எல்லாரும் அத மறந்துடராங்க.?. உங்கள மாதிரி எனக்கு தமிழ் அனுபவம் எல்லாம் இல்லை. ஏதோ ஆர்வகோளருல இங்க வந்துட்டேன். வேண்டாம்னா சொல்லுங்க விக்கிபீடியான்னு ஒன்னு இருக்கறதே மறந்துடறேன். ஏதோ எல்லாரும் என்ன திட்டர மாதிரி ஒரு Feeling. ரொம்ப formal-ஆ reply பண்ணாலும், என்னோட உள்ளுணர்வு அப்படி சொல்லுது.

இருந்தாலும் ஏதோ நீங்க கேட்ட கேள்விக்கு எனக்கு தெரிஞ்சு பதில் சொல்லிருக்கேன்.

O.K. என் ஃபீலிங்கெல்லாம் கொட்டிட்டேன். நான் வர்ரேன் வினோத் 11:11, 19 நவம்பர் 2007 (UTC)

கண்டனங்கள்தொகு

உங்கள் யூனியர் என்றதுக்காக அப்பாத்தா வினோத்துராசன் என்றுதான் கூப்பிடுவார் என்பதைக் குறிப்பிடாமல் விட்டமைக்குக் கண்டனங்களைப் பதிவுசெய்கிறேன். அப்புறம் சந்தடி சாக்கில் வினோத்தின் பேச்சுப் பக்கத்தில் நானும் சின்னப்பையன்தான் என்ற அர்த்தப்படும்படியான கருத்துச் சொல்லியிருப்பதைக் காட்டிக் கொடுக்க வேண்டாம். :) நன்றி. கோபி 11:52, 19 நவம்பர் 2007 (UTC)

 1. அக்கா தங்கைகள் பெயர்தானே? பரவாயில்லை. நான் சிந்துஜா என்பதையே ஏற்கவேண்டியிருக்குதே !!! (அவரும் இங்கு பயனர். யாரும் காட்டிக் கொடுக்க வேண்டாம்)
 2. ஜூனியரா யூனியரா என்று ஒருவிவாதத்துக்கு நான் தயார். நீங்கள் தயாரா? ஜூன், ஜூலையை விட்டுக் கொடுத்தது போல (அதுகளை நான் பாடம்வேறு ஆக்கினேன் என்றதை வினோத்துக்குச் சொல்லுங்க. விக்கிபீடியாவின் அதிகாரம் சின்னப்பையன்களைப் படுத்தாதபாடு படுத்துது.) யூனியரை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.
 3. இனிமேல் நீங்க அப்பத்தா என்று எழுதும்போது பிறைக்குறிக்குள் ஈழவழக்கு:அப்பாத்தா என்பதையும் குறிப்பிட வேண்டும். எங்கள் வழக்கை விட்டுக் கொடுக்க மாட்டமுங்கோ
 4. அப்புறம் உங்கள் அப்பாத்தா (தமிழக வழக்கு:அப்பத்தா) என் பெயரைக் கோபிநாத்து என்றா அல்லது கோவிநாத்து என்றா உச்சரிப்பார்?
 5. முதலில் கட்டுரை எழுதும் வழக்கை முதன்மைப்படுத்தும் வழக்கு இங்கிருப்பதால் தமிழக வழக்கை முன்னிறுத்த அப்பத்தா என்று கட்டுரை எதுவும் தொடங்க வேண்டாம். சொல்லுக்குக் கருத்துச் சொல்லும் கட்டுரைகளை நீக்கி விக்சனரிக்கு நகர்த்த நற்கீரன் விடுகிறாரில்லை.
 6. நான் சின்னப்பையன் என்றால் நீங்க குழந்தைகள் என்றதை ஏற்றுக் கொள்கிறேன். இதுக்கெல்லாம் கண்டனம் சொல்லுவாங்களா என்ன?

கோபி 12:06, 19 நவம்பர் 2007 (UTC)

மீண்டும் ஜூனியர்தொகு

ஏதோ நான் உணர்ச்சிவசப்பட்டு நான் சொன்ன விஷயத்தை, இப்படி அநியாயத்துக்கு காமெடி பண்றது சரியில்ல. விக்கிபீடியாவிலேயே Raggingஆ? வினோத் 12:34, 19 நவம்பர் 2007 (UTC)

தமிழகத்தில் காமடி என்றா காமெடி என்றா பயன்படுத்துகிறீர்கள்? இங்கே நாம் கொமடி என்கிறோம். comedy உங்களுக்குக் காமடியாக இருப்பது எங்களுக்குக் கொமடியாக இருக்கிறது :-) என நான் கருத்துச் சொன்ன [1] உரையாடலை உங்கள் தேர்வு முடிந்தபின்னர் வாசியுங்கள். :) பொதுத்தரத்துக்கான சச்சரவுகள் இங்கே வழமையானவைதாம். கோபி 12:48, 19 நவம்பர் 2007 (UTC)


Moondram Piraiதொகு

Dear Ravi,
Thank you for your encouragement. I have updated the article in Chinese. now the 2nd paragraph reads "The meaning of original title <<Moondram Pirai>>" mentioned Sundar's explanation as well as similarity between the movie and chinese author Lao She's novel & later movie.

I have been to Tamilnardu, love the land, food, people and culture there. If you know some other good Tamil movies please recommend to me !

Thank you very much again - & Ciao by now - zh:Mori Riyo 03:18, 23 நவம்பர் 2007 (UTC)

Ok, Ravi, point taken - I have moved the article to a new name : <<Shin Yue Yaar Er>> - literally translates to <<New Crescent Moon>>.
& I also made a paragraph to explain these Tamil words in the title. as well as the following RE-Direct pages : மூன்றாம் பிறை, Moondram pirai, Sadma
Thank you again !! Mori Riyo 06:37, 23 நவம்பர் 2007 (UTC)
P.S. on Chinese Mandarin Wiki and Cantonese Wiki I am the biggest contributor for this category -- <<Indian Movies>> - & hope continue to receive comments / critics / encouragement from wiki people like you !!

வினோத்தொகு

ரவி அண்ணா, தயவு செஞ்சு என்ன நீங்க வாங்க போங்கன்னு கூப்பிடாதீங்க. எனக்கு ஒரு மாதிரி ஒரு Odd Feeling. என்னோட வயசுல பெரியவர் நீங்க. என்ன வாங்க போங்கன்னு கூப்பிடறது ஒரு மாதிரி இருக்கு. வினோத் 17:50, 29 நவம்பர் 2007 (UTC)

வினோத், விக்கிபீடியாவுக்கு வெளிய அப்படி அழைக்கலாம். அதுவுமே, நான் இப்பவும் அனைவரையும் வாங்க போங்க என்று அழைக்கத் தொடங்கி விட்டேன். ஆனா, விக்கிபீடியாவுல எல்லாரையும் வாங்க போங்க என்று அழைப்பது ஒரு வழக்கமாக வைத்திருக்கிறோம். வயது காரணங்களால், நீ வா என்று அழைப்பதாக யாரும் intimidate ஆகி விடக்கூடாது அல்லவா? அதே போல் வயதில் மிகவும் மூத்தவர் என்பதால் sir, மோர், ஐயா, madam குழையல்களும், அதனால் உரையாடல்களில் தேவையற்ற சாய்வு இருப்பதும் இங்கு தவிர்க்கப்படுகிறது. இங்கு எல்லாரும் தோழர்கள் தான் :) --ரவி 19:11, 29 நவம்பர் 2007 (UTC)

கீ-மேன்தொகு

Technically & Legally பொதுப்பயன்பாட்டிற்கு விட முடியாது.ஏனெனில் அதன் Serial Key இணையத்தில் இருந்து பெற்றது. நான் அதை பொதுப்பயன்பாட்டிற்கு விட்டால் அது EULA Violation, Copyright Infringment என பல்வேறு பிரச்சனைகள் வரும். வேண்டுமென்றால் Unofficialஆக எல்லோருக்கும் Personalஆக தரலாம்(Windows Pirated Edtions போல).

எ-கலப்பையில் இருந்து பெரிதாக வேறுபாடு இல்லை. எனது பயன்பாட்டிற்கு தகுந்தவாறு எழுதியிருக்கிறேன்.

'n' + 't' -->ந்த் 'n' + 'd' --> ண்ட் 't' + 'r' --> ற்ற் 'n' + 'd' + 'r' --> ன்ற்

சொல்லின் முதலெழுத்தாக 'n' எழுதினால் அது தானாக 'ந்' ஆகி விடும்.

தமிழ் எண்களை உள்ளீடு செய்யலாம். மற்றும் யூனிகோட் Control Characters உள்ளீடு செய்யலாம். அவ்வளவுதான் வினோத் 06:14, 30 நவம்பர் 2007 (UTC)

AWBதொகு

AWT=தொகு

நான் இன்றிலிருந்து பயன்படுத்தபோகும் AWB என்ற விக்கி மென்பொருளுக்கு அனுமதி வேண்டுகிறேன். ஆங்கில விக்கியில் அனுமதி வாங்க வேண்டும் என்று இருந்தது இங்கு எப்படி என்று எனக்கு தெரியவில்லை. எனவே இந்த மென்பொருளை இங்கே தொடர்ந்து பயன்படுத்த அனுமதி தரும்படி வேண்டுகிறேன் வினோத் 13:10, 1 டிசம்பர் 2007 (UTC)

ரவி, கணக்கு உருவாக்கி விட்டேன். எனது பாட்டின் மூலம் என்னென்ன செயல்கள் செய்யலாம் என தாங்கள் கூறினால் அவற்றை மட்டும் அறிந்து செய்கிறேன். VinodhBOT 14:56, 1 டிசம்பர் 2007 (UTC)

ரவி மேலும், IASTக்கு மாற்றாக துணைஇலக்கங்களுடன் தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தலாமா என்பதை தெரிவிக்கவும். தெரிவித்தால் எனது கட்டுரைகளில் உள்ள தேவநாகரி எழுத்துக்களை அகற்றி விட்டு இந்த முறையினை ஆள்வேன் வினோத் 15:05, 1 டிசம்பர் 2007 (UTC)

ரவி, எனது பாட் கணக்கு(VinodhBOT) Confirm ஆகிவிட்டதா என தெரிவிக்கவும். எனது மின்னஞ்சலில் வந்த இணைப்பை க்ளிக் செய்தால் கட்டுரையை உருவாக்கு என வருகிறது. வினோத் 15:10, 1 டிசம்பர் 2007 (UTC)

ரவி, நாம் உருவாக்கிய கணக்குகளை Confirm செய்ய மின்னஞ்சல் இணைப்பு வரும் அல்லவா. அந்த இணைப்பு எனக்கு வேலை செய்யவில்லை. அது வேலை செய்யவில்லை என்றால் எனது கணக்கு காலாவதியாகிவிடும்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Confirmemail/1d55918ed016ae6d451d20f6208f90a7

இந்த இணைப்பை நான் கிளிக் செயது எனது கணக்கை ஊர்ஜிதபடுத்தவேண்டும். ஆனால் இதை க்ளிக் செய்தால் கட்டுரையை உருவாக்கு என வருகிறது. இதற்கு என்ன செய்ய ??? VinodhBOT 15:49, 1 டிசம்பர் 2007 (UTC)

ரவி, என்ன மாயமோ? உங்கள் பக்கத்தில் மேல் உள்ள இணைப்பை க்ளிக் செய்ததும் எனது மின்னஞ்சல் உறுதிபடுத்தப்பட்டுவிட்டது VinodhBOT 15:52, 1 டிசம்பர் 2007 (UTC)

மெய்ப்பார்த்தல்தொகு

ஆண்டு அறிக்கையை மேம்படுத்தியும், மெய்ப்பார்த்து விடுங்கள். நன்றி.

வேலைப் பணிகள் சற்று அதிகம். ஆகவே, நீங்கள் சொல்லியும் சற்று மேம்போக்காக முதற்பக்கத்தில் கட்டுரைகளை இணைத்து விட்டோனோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இருப்பினும் நீங்கள் சரி செய்வீர்கள்தானே :) --Natkeeran 23:32, 1 டிசம்பர் 2007 (UTC)

தடை நீக்க வேண்டுதல்தொகு

ரவி, இந்த 171.64.138.233 ஐ.பி முகவிரியின் தடையை நீக்க வேண்டுகிறேன்.

இந்த ஐ.பி முகவரி ஸ்டார்ன்ஃபார்டு பல்கலைக்கழகத்தின் இணைய வலையினுள் வருகிறது. எனவெ இதைச்தடைசெய்தல் அதுவும் நிரந்தரத் தடை செயதால் தகாது. ஏதோ ஒரு மாணவர் அல்லது யாரோ ஒருவரின் தவறான செய்கையால ஒரு பலகலைக்கழகத்தின் ஐ.பி முகவரியை தடை செய்வது தவறாகும். தயவு செய்து புனராய்வு செய்க வினோத் 14:15, 13 டிசம்பர் 2007 (UTC)

பாராட்டுக்கள்தொகு

வேட்பிரஸ் தமிழ் இல் வெளிவந்தமை கண்டேன் இந்திய மொழிகளுள் முதலாவதாகத் தமிழ் வந்திருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இதற்காக உடனுழைத்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாட்டுக்களும் உரித்தாகட்டும். --உமாபதி 15:45, 13 டிசம்பர் 2007 (UTC)

Inc, கொம்பனிதொகு

கொம்பனி, கும்பனி, நிறுவனம், தாபனம், கூட்டுத்தாபனம், தொழிலகம், தொழில்முனைவகம் என்று பலவற்றைப் பற்றி நீங்கள் முன்னர் எங்கோ அலசியதாக நினைவு. ஒரு பட்டியல் தரமுடியுமா. சட்ட வரையறைகளை கருத்தில் கொண்டும், ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள் நிறுத்தியும். நன்றி. --Natkeeran 02:20, 16 டிசம்பர் 2007 (UTC)

தமிழ் ஒலிதொகு

தமிழின் இயற்பு ஒலி எது? திணிக்கப்பட்ட ஒலி எது? என்ற கேள்விகளுக்கு நல்ல விளக்கம். ஆனால், நடைமுறையில் தான் எல்லா சிக்கலுமே. எழுத்திலாவது ஒற்றுமை, பொதுப்பண்பு, சீர்தரம், அனைவருக்கும் பயன் தரும் அல்லவா. எம்மிடையே புரிந்துணர்வுகள் மேலும் வளர வேண்டும். அதே வேளை இது ஒரு மரபுத் திமிர் அல்லது புலமைத் திமிர் போலவும் எனக்கு படுகின்றது. ஆனால் நீங்கள் பாமர மக்களின் தமிழும் இப்படி என்ற சென்ன பின்னர்தான் எனக்கு சற்று புரிதல் கிடைத்தது. அந்தப் பயனரின் motive அறிய ஆவலகா இருக்கிறேன். ஒரு சில கிரந்த சொற்களை ஏற்றாலும் (ஸ், ஜ) போன்றவை, பிற எனக்கு சற்றும் பரிச்சியமில்லாதவை. நீங்களே சிலவற்றை தரப்படுத்தியும் உள்ளீர்கள் :-) ஜுன், ஜூலை.

Natkeeran 02:20, 16 டிசம்பர் 2007 (UTC)

நற்கீரன், "மரபுத் திமிர்", "புலமைத் திமிர்" என்று நீங்கள் எதைக் கூறுகின்றீர்கள் என்று தெரியவில்லை. தமிழில் தமிழ் மரபாகக் கூறுவது ஏறத்தாழத் தமிழ்மக்களின் பொது அறிவாகும். சென்னைத் தமிழை (செங்கல்பட்டுத்தமிழை) இழித்தும் பழித்தும் பலரும் பேசுவர். ஆனால் அப்பகுதிப் பாமர மக்கள்தான் "மெயாவா"?, "பால்மாறாதே", "இசுத்துகினு போறான்" (இசுத்தல் என்பது அருமையான தமிழ்ச்சொல். அது இழுத்தல் என்பதைச் சொல்லத்தெரியாதவர்கள் சொல்லும் சொல் அல்ல. இசுத்தல் என்பது வேறு சொல். வழுக்கும் நிலத்தை இசும்பு என்பார்கள். இசுத்தல் என்றால் இழுத்தல். நாங்கள் சென்னையில் இருந்தபொழுது வீட்டைச் சுற்றி முட்கம்பி வேலி போட்டோம். அப்பொழுது, பணிபுரிந்தவர்கள் "வலி" "வலி" என்று கத்தினார்கள் (முட்கம்பியை நன்றாக இழுத்துப் பிடிக்க ("இழுக்க") வலி என்றார்கள்). இவையெல்லாம் பொதுமக்கள் சொற்கள். "மெய்" என்பதை ""உயர்" வழக்காக, "புலமை" வழக்காக நினைப்பவர்கள் அறியாதவர்கள். அது போலவே "இயலாது" என்பதையும் "உயர்" வழக்காகக் கருதுவோர், அது வழக்கில் இருக்கும் இலங்கை போன்ற தமிழ் நிலங்களை அறியாதவர்கள். உண்மையில் ஆயிரக்கணக்கான பொது மக்களின் சொற்களும் வழக்குகளும் ஒரு சிலருக்குத் தெரியாவிட்டால், அவற்றை "செயற்கை", "புலமை" வழக்கு என்று கூறிவிடுகிறார்கள். தமிழ் வழக்குகள் எத்தனையும் வீழ்ந்துபட்டு வருகின்றது என்பதைக் கூர்ந்து அறிந்தால் அது எத்தகைய இழப்பு என்பதை அறியலாம். ஒரு சொல் அழிந்தால், ஒரு சொல் வலுப்படாமல் விடுபட்டால் அதன் வழி பல நூறு சொற்களும், இணையான வழக்குகளும் அறுபடுகின்றன. மெய் என்பது எத்தனை இயல்பான சொல் என்று அறிந்தால் மெய்யியல் எத்தனை இயல்பான சொல் என்பதனை அறிவர். இதெல்லாம் புலமைத் திமிர் அல்ல. --செல்வா 03:16, 16 டிசம்பர் 2007 (UTC)
செல்வா, ரவி நான் யாரையும் தனிப்பட்ட மாதிரி விமர்சிக்க முயலவில்லை. வலையை வலிக்கிறது, படகை வலிக்கிறது என்வவை இலங்கையிலும் பேச்சு வழக்கில் இருக்கின்றது. தமிழில் மணப்பிரவாளம் பற்றி அறியாத ஒரு காலத்தில் வில்லி புத்திரரின் மகா பாரதத்தையும் அது போன்ற சில நூற்களையும் படிக்க முயன்று ஏமாற்றம் அடைந்த அனுபவமும் உண்டு. "உயர்"-"புலமை" வழக்கு எதிர் தமிழ் என்றதற்கு உங்கள் இருவரின் கருத்துடனும் பெரும்பாலும் ஒத்தே போகிறேன். சில நிகழ்ச்களில் கருத்துரு, அல்லது கருத்துபடிவம் என்ற சொல்லிற்கு பதிலாக concept concept என்று சொல்லி என்னை கடுக்கேத்தி விடுகின்றார்கள். அப்படித்தான் உங்களுக்கும் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. மீண்டும், நான் எந்த விதத்திலும் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க வேண்டும் என்று அவ்வாறு சொல்லவில்லை. நன்றி.

நற்கீரன், செல்வாவும் நானும் உங்களைப் பற்றி நன்கு அறிவோம். கவலை வேண்டாம் :) தனித்தமிழ் ஆதரவு என்றால் நிறைய தமிழ் தெரிய வேண்டும், படித்திருக்க வேண்டும், புலவராக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் தனித்தமிழில் பேச இயலாது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இப்படி நினைப்பவர்கள் எல்லாம் ஒரு மொழியையும் உருப்படியாகப் படிக்காதவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து :) மெத்தப்படித்த தமிழ்ப் புலவர்கள் ஆராய்ந்து செய்யும் தனித்தமிழ் இயக்கங்கள், தமிழ் சீர்த்திருத்தங்களை எல்லாம் பாமர மக்கள் எந்தக் கல்வியும் இன்றி இயல்பாகப் பின்பற்றுகிறார்கள் என்பது நான் கண்டறிந்த அனுபவம். 10 முதல் 17 வரை ஒரு அத்துவானக் கிராமத்தில் வளர்ந்தேன். தற்போது உலகம் சுற்றி விட்டு அந்த ஊருக்குப் போகும் போது தான் அந்த வளர்ப்பின் முக்கியத்துவம் புரிகிறது. தொடர்ந்து 2 நிமிடம் தமிழில் நம்மால் பேச இயலாத அளவுக்கு நம் சிந்தனை மொழி குழம்பிக் கிடக்கிறது. ஆனால், படிக்காமல் வயலில் வேலை செய்யும் பாமரர்கள் எவ்வளவோ சிக்கலான உணர்வுகள், கருத்துக்களையும் அனாயசமாக தமிழில் பேசுகிறார்கள். ஒரு சொல்லாவது ஆங்கிலம், வேற்று மொழி வருமா என்று உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்து ஏமாந்தேன். ஏமாற்றத்தைத் தொடர்ந்து "இங்காவது தமிழ் உயிர்ப்புடன் இருக்கிறதே" என்று மகிழ்ந்தேன். ஆனால், அந்த மகிழ்ச்சியும் விரைவில் காணாமல் போய் விடும் என்ற கவலை வந்திருக்கிறது. இப்போது ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிகள், satellite channelகள், dvdகள் வருகையை அடுத்து மக்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் நேரம் குறைகிறது. திருவிழா போன்ற கூடும் நிகழ்வுகள் குறைகிறது. மெல்ல மெல்ல தொலைக்காட்சி நாடகத் தமிழைத் தங்களை அறியாமல் மனதில் பதிந்து வருகிறார்கள். தொலைநோக்கில் இது உள்ளூர் பேச்சு வழக்கு இழப்பு, dialectகள் குறித்த தாழ்வு மனப்பான்மை, பிற மொழிச் சொற்கலப்பு என்று போய் முடியும். அதற்கு முன் விழித்துக் கொண்டு குறைந்தபட்சம், இச்சொற்களை ஆவணப்படுத்தவாவது முயற்சி எடுக்க வேண்டும்.

செல்வா, இசுத்துக் கொண்டுப் போவது என்றால் இழுத்துக் கொண்டு போவது என்று தான் நானும் நினைத்திருந்தேன். கண்ணைத் திறந்ததற்கு நன்றி :) ;) கால், கை வலித்தால் எண்ணெய் போட்டு வலித்து விடச் சொல்வார்கள்..இந்த இடத்திலும் நீங்கள் சொல்லும் "வலி" பயன்படுகிறது.--ரவி 19:54, 16 டிசம்பர் 2007 (UTC)

பிள்ளைத் தமிழ்தொகு

--Natkeeran 23:05, 16 டிசம்பர் 2007 (UTC)

இனியன்தொகு

நன்றி ரவி. ஏற்கனவே அதனைப் பயன்படுத்தியுள்ளேன். JagadG அவர்களுடனும் மின்மடல் வழி உரையாடி இருக்கின்றேன். நல்ல பயனுள்ள மென்பொருள்.--செல்வா 21:58, 6 ஜனவரி 2008 (UTC)

Ircதொகு

Do i have to create an account in IRC like yahoo messenger etc. --Terrance \பேச்சு 03:55, 7 பெப்ரவரி 2008 (UTC)

இலங்கையின் முழுப்பெயர்........!தொகு

ஒரு சிறு ஐயம் சனநாயகம், குடியரசு, மக்களாட்சி இவை அனைத்தும் Republic என்று ஒருபொருள் தரும் சொல் தானே. அதே போல சோசலிசம் என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் சொல் சமதர்மம், சமத்துவம் என்பதாகும். அதனால் "இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு" என்பதை "இலங்கை சமத்துவக் குடியரசு" என்று கூறலாம் அல்லவா? உங்கள் கருத்து...!--Rnarendr 19:19, 14 பெப்ரவரி 2008 (UTC)

இது Sri Lanka Democratic Socialist Republic என்பதன் உத்தியோகபூர்வ (official) மொழி பெயர்ப்பு. இதில் நாம் விரும்பியபடி மாற்றம் செய்யக்கூடாது. இங்கே சொற்கள் இடம் மாறுவதில் கூட வேறுபாடுகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக 1977க்கு முன் இலங்கை சோசலிச முகாம் பக்கம் கூடுதலாகச் சார்ந்திருந்தபோது அதன் பெயர் "இலங்கை சோசலிச சனநாயகக் குடியரசு" என்றிருந்தது. இதிலே சோசலிசம் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். 1977ல் எதிர் முகாம் சார்ந்த அரசு இப் பெயரை, சனநாயகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து "இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு" என மாற்றியது. நீங்கள் சொல்வதுபோல் "இலங்கை சமத்துவக் குடியரசு" என மாற்றினால் இவ்வாறான வேறுபாடுகளைக் காட்ட முடியாது. மயூரநாதன் 14:41, 15 பெப்ரவரி 2008 (UTC)

சொல் பற்றிய உரையாடல்கள்தொகு

ரவி, இன்று இப்பகுப்பில் சேர்த்தவை எல்லாம் செல்வாவின் பங்களிப்புப் பக்கங்களைப் பார்த்து. :)--சிவகுமார் \பேச்சு 12:02, 15 பெப்ரவரி 2008 (UTC)

Bot Status for Purbo_Tதொகு

Hi, I'd like to ask for a bot flag for Purbo_T (contributions)

Thank you! --Purodha Blissenbach 11:17, 23 பெப்ரவரி 2008 (UTC)

bot statusதொகு

done --ரவி 13:25, 23 பெப்ரவரி 2008 (UTC)

revoked bot status for purodha and granted for purbo T, now :) --ரவி 01:23, 26 பெப்ரவரி 2008 (UTC)

Bot flag on ta.wikibooksதொகு

wikibooks:ta:பயனர் பேச்சு:Ravidreams#Bot flag request for பயனர்:கணினி

Please take a look, thanks..

-- Cat chi? 17:47, 14 மார்ச் 2008 (UTC)

BodhisattvaBotதொகு

Hi,

 • Operator: Dalibor Bosits
 • Purpose: Interwiki, auto and manually mode, from hr Wiki, daily
 • Software: Pywikipedia framework
 • Bot flagged on: bg, bs, ca, ceb, cs, da, de, el, en, eo, es, et, eu, fr, gl, hr, hu, id, ja, la, ms, nl, nn, no, pl, pt, ro, ru, sh, simple, sk, sl, sr, su, sv, sw, uk, te, th, tr, vo

thank you --Dalibor Bosits (talk) 19:00, 17 மார்ச் 2008 (UTC)

Two different figuresதொகு

I'm getting different values at different sites. Looks like the page count here is 100K if I use this link [2], but if I use the link from Wikimedia [3] I get a lower figure (by one tenth!). --EncycloPetey 04:05, 20 March 2008 (UTC)

Which turns out to be the page cache
However, there is a apparently a serious problem: a huge number of entries have been created by bot on the ta.wikt, and it is clear that at least some of them are junk, and all of them may be copyright violations. Would you look and see? (I am same user on en.wikt) Robert Ullmann 08:18, 22 மார்ச் 2008 (UTC)

Hijack என்பதற்கு இணையான சொல்தொகு

பயண வழியில் வழிமறித்து களவாடி துன்பம் தருபவர்களுக்கு ஆறலைக் கள்வர் என்று பெயர். ஆறலை என்றாலே வழிபறிக் கொள்ளை. எனவே ஆறலை என்பதை அடிப்படையாக கொண்டு இடத்திற்கு ஏற்றார்போல சொற்கள் ஆக்கலாம். ஆறு என்றால் வழி என்று பொருள். இதனை விக்சனரியின் உரையாடல் பக்கத்திலும் சேர்த்துள்ளேன்.--செல்வா 23:35, 21 மார்ச் 2008 (UTC)

உயிரி பொறியியல், பேண்தகு பொறியியல்தொகு

உங்கள் துறை சார் தலைப்புகளில் சில அறிமுக கட்டுரைகளை உங்கள் வலைப்பதிவில் படித்தேன். அவற்றை சற்று நடை மாற்றி இங்கு இணைத்தால் நன்றாக இருக்கும். பார்க்க: Wikipedia:விக்கித் திட்டம் பொறியியல்.

--Natkeeran 19:22, 8 ஏப்ரல் 2008 (UTC)

மெய்ப்பு திருத்தல்தொகு

ரவி தமிழர் மெய்ப்பு திருத்தினால் நன்று. இன்னும் சில பகுதிகள் இன்னும் சேர்க்க வேண்டும் (எ.கா: தமிழர் மெய்யியல், தமிழர் சட்டம்). உங்கள் விமர்சங்களயும் தெரிவியுங்கள். சார்பு சற்று அதிகம் எண்டால் குறித்து விட்டு எடுத்து விடுங்கள். நன்றி. --Natkeeran 17:33, 20 ஏப்ரல் 2008 (UTC)

நூலகத் திட்டம்தொகு

நீங்கள் நூலகத் திட்டம் பற்றி அறிவீர்கள். அதில் தற்போது ஏறத்தாழ 1600 நூற்கள் பதிவேற்றப்பட்டுவிட்டன. அடுத்த கட்ட செயற்திட்டமும் (+1000) தொடங்கி விட்டது. இந்த நூற்களை பரந்த வாசிப்பு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவ்வப்பொழுது சில இடுக்கைகள் (5-10 வரிகள்) எழுதி பங்களித்தால் நன்றாக இருக்கும். எ.கா நீங்கள் படித்த நூற்களின் அறிமுகங்கள் தரலாம். ஈழத்து இலக்கியம் பற்றியும் இடுக்கைகள் தரலாம்.

--Natkeeran 16:24, 3 மே 2008 (UTC)

நிருவாக அணுக்கம்தொகு

நிருவாக அணுக்கம் நான் ஏன் பெற்றுக்கொள்ளகூடாது என்று நீங்கள் விட்ட செய்தியைப் பார்த்தேன் ரவி. இருக்கின்ற வேலைகளையே என்னால் சரிவர பார்க்கமுடியவில்லை, வெறும் அணுக்க உரிமைகள் பெற்று என்ன பயன்? செய்யவும் இயலுமா என்று அறியேன். ஏதோ இரண்டொரு முறை இந்த அணுக்கம் இருந்தால் இதனைச் செய்யலாம் என்று தோன்றிய நேரங்கள் உண்டு, ஆனால் வேண்டுகோள் விடுத்தால் நிருவாகிகள் யாரேனும் ஒருவர் வந்து செய்வார்களே என்ற நம்பிக்கைதான் :) --செல்வா 15:56, 19 மே 2008 (UTC)

நீங்கள் கேட்டு, அதை நிர்வாகிகள் கவனித்துச் செய்கின்ற நேரத்தில் நீங்களே செய்து விடுவது எளிது அல்லவா? :)--ரவி 15:58, 19 மே 2008 (UTC)

கனகு, ரவி, நிர்வாகி ஆன பின்பு என்னென்ன செய்ய இயலும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? உண்மையிலேயே பயனுடையதாக இருக்கும் என்றால் நான் அணுக்கம் பெற முன்வருவேன்.--செல்வா 23:11, 19 மே 2008 (UTC)
சரி, ரவி. நான் நிர்வாகியாக பொறுப்பேற்க முன்வருகிறேன். முன்மொழிந்து, ஆதரவு தாருங்கள். --செல்வா 13:37, 20 மே 2008 (UTC)

Wikitravelதொகு

Interested in Wikitravel? tamil il wikitravel ai mozhipeyarppoma?

http://wikitravel.org/en/Main_Page

Please help Mugunth Kumar 15:37, 29 மே 2008 (UTC)

Wikitravelதொகு

Interested in Wikitravel? tamil il wikitravel ai mozhipeyarppoma?

http://wikitravel.org/en/Main_Page

Please help Mugunth Kumar 15:43, 29 மே 2008 (UTC)

விக்சனரிக்கு நன்றிதொகு

உங்களின் பங்களிப்பாலும், இடையுறா முயற்சியாலும் விக்சனரி மிக்க பயனுள்ள ஒரு திட்டமாக மலர்ந்துள்ளது. இப்போ கூகிளில் அடிக்கடி தட்டுப்படுகிறது. பாரட்டுக்கள். --Natkeeran 18:50, 26 ஜூன் 2008 (UTC)

english word தமிழ்தொகு

 • gear தமிழ்
 • furnace தமிழ்

என்று கூகுளில் போட்டால் தமிழ் விக்சனரி அனேகமாய் முதலில் வருகிறது. இதை ஒரு உத்தியாகவே அறிமுகப்படுத்தலாம். இதை tamilvu போட்டு ஒவ்வொன்றாக தட்டி சென்று பார்த்து முடிப்பதற்குள் சீவியம் முடிந்து விடும் போல் முன்னர் இருந்தது. விக்சனரியில் முதலில் போடாமல் கூகிளில் முதலில் போட்டால் வேறு எங்கே பயன்படுத்தப்படிருக்கும் என்றும் உடனேயே தெரிந்து விடும்.

ஆசை யாரை விட்டது கேட்டுப் பாப்பம். http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ விக்சனரியில் போடலாமா? ஏற்கனவே இணையத்தில் இருக்கு....ஆனா விக்சனரியிர பயன் கூடும். ஆறுதலா....


இங்கே தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து ஒலிபரப்பு செய்த போது மே 10 மூன்றே மூன்று மிக்கிய நபர்கள் பிறந்திருந்தார்கள்...அவர்கள்..:-)

இது த.வி இளமையாக வைத்திருக்கிறது என்று நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

--Natkeeran 23:20, 26 ஜூன் 2008 (UTC)

விக்சனரிக்கான இணைப்புதொகு

ரவி விக்சனரிக்கான இணைப்பை Tamil Font help என்றதோடு போட்டால் நன்றாக இருக்குமே. அடிக்கடி போகிறேன். நல்ல அறிமுகமாகவும் இருக்கும். என்ன சொல்லிறீங்க...--Natkeeran 16:01, 6 ஜூலை 2008 (UTC)

நன்றி. அகரமுதலி...அகராதி ! --Natkeeran 16:14, 6 ஜூலை 2008 (UTC)

தமிழ் விக்சனரிக்கு கட்டுரையில் இருந்து பெட்டித் தொடர்பு எப்படி தருவதுதொகு

 • ஒரு கட்டுரையின் தலைப்பு பற்றிய அகரமுதலி விளக்கங்கள் விக்கிசனரியில் கிடைக்கும் என்ற பெட்டியை எப்படி இடுவது. நன்றி. --Natkeeran 21:35, 7 ஜூலை 2008 (UTC)

குறிப்புதொகு

--Natkeeran 15:09, 19 ஜூலை 2008 (UTC)


கட்டுரைகளைச் சற்று விரிவா எழுத மாட்டீங்களா? நீண்ட காலத் திட்டமா 1000 பைட்டைவிடச் சிறிய கட்டுரைகளை 1300+ இலிருந்து 500 க்கும் குறைவாக்க முடிந்தது. அதை 200 வர குறைக்கலாம்னு பார்த்தா விட மாட்டீங்க போலிருக்கே? :) கோபி 15:17, 19 ஜூலை 2008 (UTC)

அறிபுனைதொகு

தமிழை பொழுந்து வழைச்சு எடுத்தாளிறீங்க. அறிவியல் புனைக்கதைத் திரைட்படம் என்பதை விட அறிபுனைத் திரைப்படம் என்பது நன்றாக இருக்கின்றது. --Natkeeran 15:05, 22 ஜூலை 2008 (UTC)

தொகு மறையுதுதொகு

நற்கீரன், இது IE தலைவலி. FF 3ல் நல்லா தெரியுதே?--ரவி 21:22, 25 ஜூலை 2008 (UTC)

ஆமா. அத்தோட தமிழில முகவரி வருகிறது (ஒருங்குறியைப் பிரிச்சு போடல). அட சக்க. --Natkeeran 21:36, 25 ஜூலை 2008 (UTC)

அப்ப நீங்க இத்தனை நாள் FF பயன்படுத்தலையா? சரியா போச்சு. FF3 யில் இன்னும் ஏகப்பட்ட நல்ல விசயம் இருக்கு. பயன்படுத்திப் பாருங்க--ரவி 00:56, 26 ஜூலை 2008 (UTC)

Bot username renameதொகு

Hi, I'd like my bot பயனர்:கணினி to be renamed to User:タチコマ robot. This rename request is per my wikimedia wide bot username rename. I have decided to have a single username to more efficiently use SUL. Thanks.

 • If this is not the right place to make this request, please move it to the right place.

-- Cat chi? 15:48, 13 ஆகஸ்ட் 2008 (UTC)

Return to the user page of "Ravidreams/தொகுப்பு 5".