வாருங்கள்!

வாருங்கள், Sivam29, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சண்முகம்ப7 (பேச்சு) 19:25, 28 ஆகத்து 2012 (UTC)Reply

தனிக்கட்டுரை

தொகு

கச்சாய் பற்றிய விவரங்கள் இங்கே உள்ளது. தனிக்கட்டுரை எழுத மேலே காணும் வழிமுறைகளை பின்பற்றவும்--சண்முகம்ப7 (பேச்சு) 19:27, 28 ஆகத்து 2012 (UTC)Reply

வணக்கம், கச்சாய் கட்டுரையில் கெர்பேலி என்ற இடத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இது நான் கேள்விப்படாத பெயராக இருக்கிறது. எழுத்துப்பிழை உள்ளதா என்பதைப் பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:42, 29 ஆகத்து 2012 (UTC)Reply

அந்த இடம் கெற்பலி என்று எழுத்தில் பார்த்திருக்கின்றேன்.--கலை (பேச்சு) 16:34, 29 ஆகத்து 2012 (UTC)

வணக்கம். கெர்பேலி என்ற இடம் உள்ளது, இக்கிராமம் மிகவும் சிறியது என்பதனால் யாரும் அறிந்திருக்க முடியாது, இக்கிராமம் சாவகச்சேரி கச்சாய் வீதியில் கிளாலி போகும் வழியில் உள்ளன, பாலாவுக்கு அடுத்த கிராமம் இதுவாகும்.--Sivam29 (பேச்சு) 08:59, 31 ஆகத்து 2012 (UTC)Reply

கட்டுரையும் கலைக்களஞ்சிய நடைமுறையும்

தொகு

வணக்கம் சிவம், உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். கட்டுரைகளை உருவாக்கும்போது அவை கலைக்களஞ்சிய நடைமுறைக்கேற்ப அமைப்பது முறை எனவே இதனை கவனத்திற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எ.கா: பாலாவி. மேலும், கட்டுரைகளை அமைக்கும்போது முறையான பதங்களையும் அவற்றிற்கான ஆங்கில இணைப்பையும் (இருந்தால்) இணையுங்கள். எ.கா: தோடம்பழம் என்ற கட்டுரையுள்ளது. ஆகவே தோடை எனும் கட்டுரையின் உழைப்பு வீணாகிவிடும். நீங்கள் குறிப்பிடுவது வேறாயின் அதற்கான ஆங்கில விக்கியின் இணைப்பு, மேற்கொண்டு தொகுக்க உதவும். உதவி தேவைப்படுமாயின் ஒத்தாசைப் பக்கத்தை அல்லது பயனாளிகளை அணுகுங்கள். நன்றி. --Anton (பேச்சு) 14:27, 30 ஆகத்து 2012 (UTC)Reply

வணக்கம் அன்டன் உங்கள், உங்கள் உதவிகளுக்கு நான் தலை வணங்குகிறேன், என்னால் முடிந்த வரை விக்கி இணையத்தில் மேலும் பல கட்டுரைகளை இணைக்க விரும்புகிறேன், அதில் உங்களுடைய உதவிகள் எனக்கு என்றும் இருக்கும் என்று நம்புகிறேன்.--Sivam29 (பேச்சு) 11:52, 31 ஆகத்து 2012 (UTC)Reply

நல்வரவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு. உங்களின் கட்டுரைகளை ஆர்வம் தூண்டுபவையாக அமைகின்றன. உங்களுக்கு எதாவது உதவிகள் தேவை எனின் கேளுங்கள், விக்கி பயனர்கள் இயன்றவரை உதவுவார்கள். --Natkeeran (பேச்சு) 20:09, 30 ஆகத்து 2012 (UTC) நன்றி விக்கி நண்பர்களின் உதவியினால் கச்சாய் என்னும் பக்கம் பார்பதற்கு மிகவும் அழகாக உள்ளன.--Sivam29 (பேச்சு) 08:53, 31 ஆகத்து 2012 (UTC)Reply

கச்சாய் கண்ணகி அம்மன் கோவில்(.) இந்த பக்கத்தின் தலைப்பில் இருக்கும் இந்த புள்ளியை அகற்றி விட முடியுமா விக்கி நண்பர்களே?? அந்த புள்ளி எமக்கு இடைஞ்சலாக உள்ளது.--Sivam29 (பேச்சு) 10:05, 31 ஆகத்து 2012 (UTC)Reply

யாழ் கச்சாய் தமிழ் கலவன் பாடசாலையில் சில திருத்தங்கள் செய்துள்ளேன் ஆனால் அதன் தலைப்பை மாற்ற என்னால் முடியவில்லை, விக்கி நண்பர்களே தலைப்பை மாறிவிட முடியுமா???--Sivam29 (பேச்சு) 13:32, 31 ஆகத்து 2012 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு.
  • கச்சாய் கண்ணகி அம்மன் கோவில்(.) கட்டுரையின் தலைப்பில் புள்ளியைக் காணோமே?
  • கச்சாய் தமிழ் கலவன் பாடசாலை என்றே கட்டுரையின் தலைப்பு உள்ளது. அதன் தலைப்பை எவ்வாறு மாற்ற வேண்டும்? யாழ் அரசினர் கச்சாய் தமிழ் கலவன் பாடசாலை என்றா?
  • கட்டுரையில் எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளன. அவற்றையும் கொஞ்சம் கவனித்துச் செய்தீர்கள் என்றால் நல்லது.
  • கட்டுரையில் கொடுக்கப்படும் தகவல்களுக்கு மேற்கோள்கள் கொடுத்தால் நல்லது. ஏதாவது புத்தகத்தில் இருந்து எடுத்தால், புத்தகத்தின் பெயரை உசாத்துணையாகக் கொடுங்கள்.

--கலை (பேச்சு) 13:45, 31 ஆகத்து 2012 (UTC) நன்றி , யாழ் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்று மாத்த வேண்டும். --Sivam29 (பேச்சு) 13:55, 31 ஆகத்து 2012 (UTC)Reply

ஆரம்பத்தில் புள்ளியுடன் கட்டுரைத் தலைப்பை இட்டுள்ளார். பின்னர் சரியான தலைப்பில் வேறொரு கட்டுரை எழுதியுள்ளார். பிழையான தலைப்புக் கட்டுரையை நீக்கியிருக்கிறேன். பாடசால கட்டுரை கச்சாய் தமிழ் கலவன் பாடசாலை என்றிருப்பதே சரியானது. தலைப்பை மாற்ற வேண்டாம். ஆனாலும் கச்சாய் தமிழ்க் கலவன் பாடசாலை என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.--Kanags \உரையாடுக 13:50, 31 ஆகத்து 2012 (UTC)Reply

அந்த பாடசாலையின் சரியான பெயர் > யாழ் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை படம் இணைத்து இருக்கின்றேன் சரி பாருங்கள். --Sivam29 (பேச்சு) 13:54, 31 ஆகத்து 2012 (UTC)--Sivam29 (பேச்சு) 13:54, 31 ஆகத்து 2012 (UTC)Reply

பொதுவாக இலங்கைப் பாடசாலைகள் அனைத்தும் நிருவாக வசதிக்காக அந்தந்த மாவட்டத்தின் முதலடியைக் கொண்டே எழுதப்படுகின்றன. அந்த நடைமுறை பொதுவாக விக்கியில் இல்லை. கச்சாய் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் வேறொரு பாடசலை வேறு ஒரு மாவட்டத்தில் இருந்தால், விக்கித் தலைப்பு கச்சாய் தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் என வரும். ஆனால் அவ்வாறு இல்லாதபடியால் இப்போதிருக்கும் தலைப்பே சரியானது. ஏனைய இலங்கைப் பாடசாலைகள் கட்டுரைகளைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 14:12, 31 ஆகத்து 2012 (UTC)Reply

நன்றி உங்கள் கருத்தை நான் ஏற்று கொள்ளுகிறேன், அப்படி ஆனால் கச்சாய் கட்டுரை பக்கத்தில் இந்த தலைப்பை இணைக்கின்றேன், நன்றி.--Sivam29 (பேச்சு) 14:16, 31 ஆகத்து 2012 (UTC)Reply

காப்புரிமைப் படங்கள்

தொகு

வணக்கம், அண்மையில் சில படங்களை விக்கி கொமன்சில் ஏற்றியிருக்கிறீர்கள். இவை நீங்கள் எடுத்த படங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அவற்றில் சில இணையத்தில் இருந்து எடுத்தவை போல் காணப்படுகிறது. இவை உங்களுடையது இல்லாவிட்டால் அவற்றை விக்கியில் உங்கள் படங்கள் எனத் தரவேற்ற முடியாது. அவற்றுக்கான பதிப்புரிமை என்னவென்பதைத் தெரிவிக்க வேண்டும். இவை விரைவில் நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 12:39, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தரவேற்ற பட்ட படங்கள் பல நான் எடுத்த படம் தான் , அதில் எந்த சந்தேகமும் வேண்டாம், ஆனால் அந்த படங்கள் erth goole போன்றவற்றில் நான்தான் இணைத்தேன், ஒரு படம் மட்டும் நான் எடுத்தது இல்லை, மிளகாய் செடி நான் எடுத்த படம் இல்லை. அப்படியென்றால் அதை அளித்து விடுகிறேன் நான் எடுத்த படத்தை அதில் இணைக்கிறேன் நன்றி. --Sivam29 (பேச்சு) 20:18, 1 செப்டெம்பர் 2012 (UTC) படம் மார்ரபட்டு இப்போ நான் எடுத்த படம் இணைத்துள்ளேன்.--Sivam29 (பேச்சு) 20:40, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

கட்டுரை தலைப்பு மாற்றம்

தொகு

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இந்த கட்டுரை தலைப்பு நடராஜா ரவிராஜ் என்ற கட்டுரையுடன் இணைக்கலாம் என்று கருதுகிறேன். காரணம் இரண்டும் ஒரு நபர்தான்.--Sivam29 (பேச்சு) 19:40, 3 செப்டெம்பர் 2012 (UTC)Reply


உங்கள் கருத்துக்கு நன்றி. சில நிகழ்வுகள் அவற்றின் முக்கியத்துவம் காரணமாக தனிக்கட்டுரைகளாக உள்ளன. --Natkeeran (பேச்சு) 02:51, 4 செப்டெம்பர் 2012 (UTC)Reply

பயனர் பெயரை மாற்றுதல்

தொகு

வணக்கம் சிவம், பயனர் பெயரை இவ்வாறு மாற்ற இயலாது,உங்கள் பயனர் பெயரை மற்றொரு பெயருக்கு மாற்ற விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப் பலகை இங்கு வேண்ட வேண்டும், அதிகாரிகள் மாற்றித் தருவர், இப்போது இதனை பழைய பயனர் பெயருக்கு நகர்த்திவிடவும்--சண்முகம்ப7 (பேச்சு) 15:18, 4 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் சண்முகம் அண்ணா. உங்கள் கூற்றுப்படியே செய்துள்ளேன்.--Sivam29 (பேச்சு) 15:55, 4 செப்டெம்பர் 2012 (UTC)Reply

ஐயையோ அண்ணாவெல்லாம் இல்லை, நான் ரொம்ப சின்ன பையன் :D . தமிழ் விக்கியில் அனைவரையும் பெயர் சொல்லியே அழைக்கலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 16:06, 4 செப்டெம்பர் 2012 (UTC)Reply

ஈழத்து பத்திரிக்கையாளர் வளர்ச்சி

தொகு

ஈழத்து பத்திரிக்கையாளர் வளர்ச்சி கட்டுரை ஒரு வலைப்பதிவில் இருந்து படியெடுக்கப்பட்டு இங்கு இடப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. இது உங்கள் சொந்த ஆக்கமா? இல்லாவிடின் இதை இங்கு இடுவதற்கு அனுமதி உண்டா. அப்படி இருந்தால் அதற்கான ஆதாரத்தைப் பேச்சுப் பக்கத்தில் இட்டு விடுங்கள். பிறரது ஆக்கங்களை அனுமதி இல்லாமல் இங்கு சேர்க்க முடியாது. நன்றி. --Natkeeran (பேச்சு) 16:50, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

அந்த இணையத்தில் வரும் கட்டுரைகளில் நானும் பங்கு வகிக்கின்றேன், ஆனால் அதில் இருக்கும் அனைத்து கட்டுரைகளுக்குமான அனுமதி எனக்கு இல்லை. அனுமதி கிடைக்குமா என்று கேட்டுப் பாக்கிறேன். நன்றி.--Sivam29 (பேச்சு) 16:56, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றி. அனுமதி கிடைக்குமாயின் விக்கிக்குத் தகுந்த கட்டுரைகளைச் சேர்க்கலாம். பேச்சுப் பக்கத்தில் ஆக்கரைப் பற்றிய குறிப்புக்களையும், அனுமதிக்கான ஆதாரத்தையும் இடலாம். --Natkeeran (பேச்சு) 17:03, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
மேலும் ஒரு கருத்து. கட்டுரையில் மாற்றங்களும் தேவை. விக்கி நடைக்கேற்ப கட்டுரை எழுதப்பட வேண்டும். உங்களுக்கு இப்போது விக்கி நடையைப் பற்றி ஓரளவு புரிதல் இருக்கும் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 22:17, 7 செப்டெம்பர் 2012 (UTC

துறை சார் கட்டுரைகள்

தொகு

காற்றுத் திறன், காற்றுச் சுழலி, en:Wind farm, en:Induction generator, en:Wind power by country, en:Microgeneration மற்றும் பிற பொறியியல் தலைப்புகள் போன்ற உங்கள் துறைசார் கட்டுரைகளையும் எழுதுவது பற்றி பரிசீலிக்கவும். நன்றி.

இக் கட்டுரையை எழுதுவதற்கு நானே நினைக்கவில்லை, ஆனால் நீங்கள் என்னை நினைப்புட்டியதுக்கு நன்றி. காற்று தொடர்பான அனைத்து கட்டுரைகளுக்கும் என்னால் முடிந்த வரை தொகுக்கிறேன் நன்றி. --சிவம் 03:51, 10 செப்டெம்பர் 2012 (UTC) india Karnataka City:Bangalore நன்றி உங்கள் நம்பிக்கைக்கும், உங்கள் தூண்டுதலுக்கும்.--சிவம் 04:11, 10 செப்டெம்பர் 2012 (UTC)

கோளம்

தொகு

பேச்சு:கோளம் பார்க்கவும்.--Booradleyp (பேச்சு) 01:14, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

???????=

தொகு

உங்களுக்கு உள்ள தமிழ் மொழிப் புலமையும் பொது அறிவு எந்தளவுக்கு உள்ளதென்பது நீங்கள் எழுதும் கட்டுரைகளே சான்று. அதிர்ச்சி (மருத்துவம்) - இக்கட்டுரையில் அதிர்ச்சி ஆனது உயிரினங்களை பொறுத்த வகையில் அனைத்து உயிரினங்களுக்கும் பொருத்தமானது, இதில் மனிதன், மிருகம், ஊர்வனம், மரம் என்ற வேறுபாடு இல்லை. பொதுவாகவே சிந்திக்கும் ஆற்றல் உயிரனகளுக்கு உள்ளன, அதே வேளை மரம் செடிகளுக்கும் உள்ளன. என்று எழுதியுள்ளீர்கள். இங்குள்ள தமிழையும், அறிவியல் விடத்தையும் பாருங்கள். நீங்கள் தமிழ் வளர்க்க வந்தவரோ? உங்களுக்கும் இது புரியவில்லை. விக்கியில் உள்ளவர்களுக்கும் விளங்கவில்லை! :)

காற்றுச் சுழலி - இக்கட்டுரையையும் ஆங்கிலக் கட்டுரையினையும் ஒப்பு நோக்கிப் பாருங்கள். என்ன பிதட்டல்? அதிலும் அரசியல்வாதி போன்று சுய விளம்பர புகைப்படங்கள். வெட்கம் இல்லையா?

எந்த ஒரு மதத்தையும் இவர் இழிவு படுத்துவது இல்லை. அனைத்து மத,மற்றும் இறை நம்பிக்கை கொண்டவர்களையும் இவர் நேசிப்பவர். இது நீங்கள் உங்கள் பயனர் பக்கத்தில் எழுதியது. ஆனால் விக்கிப்பீடியாவில் இஸ்லாம் மீதும், முஸ்லிம்கள் மீதும் நடுநிலை என்ற பெயரில் தாக்குதல் நடத்துவது. நல்ல அரசியல்!! −முன்நிற்கும் கருத்து KGB303 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

அன்பான நண்பரே ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!! நான் இசுலாமியர் மேல் தாக்குதல் நடத்தவில்லை. அதேவேளை உண்மை சம்பவங்களுக்கும் நடு நிலை கொள்கைகளுக்குக்கும் விக்கிபீடியாவில் நேர்மை முக்கியமானது அதன் அடிப்படையில் நான் செயல் பட்டேன். இது உங்கள் பார்வையில் பிழை என்றால் என்னை மன்னிக்கவும். ஆனால் ஒரு இனத்தையோ அல்லது ஒரு மதத்தையோ தாக்க வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை..நான் எந்த மதம் சார் கொள்கையும் அற்றவன். அதனால் என் கருத்தை புரிந்து கொள்வது உங்கள் திறமை. --சிவம் 12:44, 20 செப்டெம்பர் 2012 (UTC)

எனக்கு விளம்பரம் தேவை இல்லை!! ஏன் எனில் கல்வி துறை சார் பகுதியில் என்னை விளம்பர படுத்த முடியும் அனால் நான் அப்படி செய்யவில்லை!!! காரணம் இப்போ உங்களுக்கு தெரியும். ஆனால் படங்களை பொறுத்தவரையில் பதிப்புருமை என்ற பிரச்சனை வந்த படினால் , நான் சேகரித்த படங்களை தரவேற்றம் செய்யவேண்டி இருந்தன அவளவுதான்.--சிவம் 12:54, 20 செப்டெம்பர் 2012 (UTC)

Do you try to interpret your vandalism as justice? You would say I didn’t say like that, and you would write what your mind says. Good logic man! I don’t say that Islam is perfect, but be a human and understand others feeling. In your mind, you did nothing. But, it can harm somebody! If you can’t understand this, I can’t help you.

Does any wikipedian add their snap on the article? I’ve gone through your user page. It speaks lots! :) −முன்நிற்கும் கருத்து KGB303 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சிவம், தயந்து பெயர்குறிப்பிடாத பயனர் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டாம். அவர் உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி உள்ளார். இது விக்கியில் வரவேற்கப்படுவதன்று. --Natkeeran (பேச்சு) 13:23, 20 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றி நக்கீரன். உங்கள் கட்டளையை ஏற்றுகொள்கிறேன்.--சிவம் 13:40, 20 செப்டெம்பர் 2012 (UTC)

நன்றி. கட்டளை இல்லை. தயவான வேண்டுகோள். --Natkeeran (பேச்சு) 13:46, 20 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தகுந்த மேற்கோள்கள்

தொகு

தகுந்த மேற்கோள்கள் என்னும் போது பிற கலைக்களஞ்சியங்கள், ஆய்வேடுகள், ஆய்வு நூல்கள் போன்றவை எடுத்துக்காட்டுக்கள். பல தரமான மதிப்புப் பெற்ற மூலங்களில் இருந்து மேற்கோள்களைச் சுட்டுவதே நன்று. சமயம், அரசியல் நோக்கிலான கட்டுரைகளுக்கு இது மேலும் சிக்கலானது. மேலதிக தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல். --Natkeeran (பேச்சு) 17:39, 20 செப்டெம்பர் 2012 (UTC)Reply

கருத்து வேறுபாடு

தொகு

வணக்கம் சிவம், கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பே, அதற்கான நீங்கள் ஒட்டுமொத்த விக்கியர்களையும் அரசியல்வாதிகளாக உவமித்துள்ளதையிட்டு கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். இங்கும் சில அரசியல் செயல்பாடுகளை போல தன்னலம் கருதி செயல்படுவதையும், செயல்பாட்டில் சில மூத்த விக்கி நண்பர்கர் செயல்படுவதையும் நான் அறிவேன். என நீங்கள் நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள். ஆதாரம் இருந்தால் வீக்கியில் முறையிடுங்கள். அதைவிடுத்து சில என பொதுவாக குறிப்பிடுவது சகல விக்கியர்களையும் குற்றம் சாட்டுவதாகவே அமையும். கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதைத் தீர்த்துவிடுவது சிறந்த பண்பெனக் கருதுகின்றேன். நான் இங்கு இதனைக் குறிப்பிடுவதுகூட உங்கள் மீது நான் கருத்து வேறுபாடு இன்றி இருக்கவேயன்றி உங்களுடன் "சண்டைக்கு" வருவதற்கு அன்று. நன்றி. --Anton (பேச்சு) 02:05, 21 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் அன்டன். உங்கள் கண்டனத்தை ஏற்றுகொள்கிறேன், நான் அப்படி சொல்லியதுக்கு தகுந்த ஆதாரம் இதற்க்கு மேலே உள்ளன. KGB303 இந்த பயனர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு மூத்த விக்கியருகே இருக்கிறது என்று கருதலாம், அதேவேளை அவர் எந்த நாட்டில் இருந்து உரையாடினார் என்பதையும் சொல்லி இருந்தேன். ஆனால் அவரும் விக்கியின் பயன்பாட்டில் உள்ள ஒரு விக்கியர்தான். அவரைத்தான் நான் சிலர் என்று குறிப்பிட்டேன், அதை நீங்கள் பிழையாக புரிந்து கொண்டால் என்னை மன்னிக்கவும். கண்டிப்பாக நான் யாருடனும் சண்டைக்கு வரவில்லை. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் அன்டன். உங்கள் கண்டனத்துக்கு நன்றி, நீங்கள் எனக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு ஒரு காரணம் இருப்பது போன்று, நான் சொன்ன சொல்லுக்கும் காரணம் இருக்கிறது என்று தாழ்மையோடு புரிவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.--சிவம் 03:40, 21 செப்டெம்பர் 2012 (UTC)

Return to the user page of "Sivam29/தொகுப்பு 1".