பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு13

நிரல்

தொகு

மேற்கோள்கள் கொடுக்கும் போது {{Reflist}}, <references/> என்று வருவதற்கு பதிலாக,

==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/> என்று வருமாறு செய்யலாமா?--தென்காசி சுப்பிரமணியன் 05:36, 1 திசம்பர் 2011 (UTC)Reply

வேண்டாம். முன் இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இடங்களில் மாற்ற வேண்டி வரும். மேலும் reflist ஐ குறிப்புகள், அடிக்குறிப்புகள் வரும் இடங்களிலும் பயன்பட்டிருக்கும். அங்கும் மாற்ற வேண்டி வரும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:45, 1 திசம்பர் 2011 (UTC)Reply

வார்ப்புருகள் என்ற விக்கிநிரல் பகுதியில் {{பக்கவழிநெறிப்படுத்தல்}}, {{Original research}}, {{குருங்கட்டுரை}} போன்றவற்றை சேர்க்கலாமா?--தென்காசி சுப்பிரமணியன் 06:21, 1 திசம்பர் 2011 (UTC)Reply

விக்கிப்பீடியா கட்டுரைகள்

தொகு

விக்கிப்பீடியா: என்று வரும் கட்டுரைகளை யார் வேண்டுமனாலும் எழுதலாமா?--தென்காசி சுப்பிரமணியன் 06:26, 1 திசம்பர் 2011 (UTC)Reply

எழுதலாம் - ஆனால் அவை 1)விக்கித்திட்டங்களாக இருக்க வேண்டும் அல்லது 2) விக்கிப்பீடியா கொள்கைப் பக்கங்களாக இருக்க வேண்டும் --சோடாபாட்டில்உரையாடுக 06:37, 1 திசம்பர் 2011 (UTC)Reply


I need help

தொகு

vanakkam soda bottle, i would like to translate some of the articles from other languages to tamil, how can i add the language option to them on the left side bar. can you please help ?

நான் மற்ற மொழி கட்டுரைகளில் இருந்து, சிலவற்றை தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன், மற்ற மொழி கட்டுரை பக்க பட்டையில் அதனை சேர்ப்பது எப்படி.. நீங்கள் உதவ முடியுமா?

கட்டுரையின் இறுதியில் பிற மொழி இணைப்புகள் சேர்க்கலாம். எ.கா [[en: english language title]] “english language title" என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இடது பட்டையில் இணைப்பு தோன்றி விடும். அது போலவே பிற மொழிகளுக்கும். எடுத்துக் காட்டாக இந்தியா என்ற பக்கத்தைத் தொகுத்து இறுதிப்பகுதியில் பாருங்கள். பிற மொழி இணைப்புகள் தெரியும்.


one small doubt

தொகு

அய்யா சில நாட்கள் முன்பு நான் தடைசெய்யப்பட்ட காலங்களில் எழுதிய ஜமின் கோடங்கிப்பட்டி , கலப்பநாயக்கன் பட்டி போன்ற கட்டுரைகளை தாங்கள் நீக்கினீர். அவற்றை தற்போது அப்படியே போடலாமா அல்லது மாற்றி தான் போடவேண்டுமா ?? --Rajanaicker

அப்படியே போடுங்கள். தற்போது உங்கள் தடை நீங்கிவிட்டதால், அவற்றை மீண்டும் இடுவதற்கு எத்தடையுமில்லை--சோடாபாட்டில்உரையாடுக 14:10, 1 திசம்பர் 2011 (UTC)Reply

நன்றி அய்யா --Raja naicker

உதவி வேன்டும் ...

தொகு

நான் ஒரு புகை படத்தை உள்ளீடு செய்கையில் அதனுடைய அளவு புகைப்படத்தின் மீது தோன்றுகிறது . அதனை தவிர்க்க வழி கூறுங்கள் .

முழுமையாகப் பதிவேற்றிவிட்டு, சுட்டி தாருங்கள். என்ன சிக்கலெனப் பார்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:38, 2 திசம்பர் 2011 (UTC)Reply

விளக்கம் தேவை

தொகு

சோடா, அஸ்ஸபா வித்தியாலயத்தில் நான் பதிவேற்றியுள்ள படிமம் போன்ற படிமங்களை எந்த உரிமத்தின் கீழ் பதிவேற்ற வேண்டும்? என்பது பற்றித் தெளிவில்லை. தயவுசெய்து அதற்குரிய மாற்றீடு யாது? என்பதை விளக்குக. --கலைமகன் பைரூஸ் 06:24, 2 திசம்பர் 2011 (UTC)Reply

சின்னங்கள், பதாகைகள் போன்றவற்றுக்கு ”சின்னம்” என்ற உரிமத்தைத் தெரிவு செய்ய வேண்டும். (நான் தற்போது மாற்றியுள்ளேன் இது போதும்). நீங்களே எடுத்த படங்களை gfdl/ செயார் அலைக் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 06:27, 2 திசம்பர் 2011 (UTC)Reply

அதிமதுரம் கட்டுரை

தொகு

அதிமதுரம் கட்டுரையில் பெயரிடாப் பயனர் சேர்த்த தகவல்கள் குறித்து நம்பகத்தன்மை இல்லாவிடினும் பயன்கருதி மீண்டும் சேர்த்துள்ளேன். மாற்றுக் கருத்திருந்தால் தெரிவிக்கவும்.--சஞ்சீவி சிவகுமார் 17:29, 2 திசம்பர் 2011 (UTC)Reply

நான் நீக்கியது நம்பகத்தன்மைக்காக அல்ல சஞ்சீவி. இங்கிருந்து படியெடுக்கப்பட்டிருந்ததால் நீக்கினேன். முழு வாக்கியங்கள் பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் நீக்கியுள்ளேன்--சோடாபாட்டில்உரையாடுக 17:44, 2 திசம்பர் 2011 (UTC)Reply

மிக்க நன்றி சோடாபாட்டில். இத்தகைய வெட்டியொட்டல்களைக் கண்டறிய இலகுவான முறை ஏதும் உள்ளதா?--சஞ்சீவி சிவகுமார் 23:07, 2 திசம்பர் 2011 (UTC)Reply

நான் கூகுளைத் தான் பயன்படுத்துகிறேன். கட்டுரையில் ஒரு சிறிய பகுதியை வெட்டி எடுத்து கூகுள் தேடு பொறியில் இட்டுத் தேடினால் கிடைத்து விடும்.--Kanags \உரையாடுக 01:24, 3 திசம்பர் 2011 (UTC)Reply
நன்றி கனக்ஸ். நல்ல யோசனை.--சஞ்சீவி சிவகுமார் 16:54, 3 திசம்பர் 2011 (UTC)Reply

இலையின் ஏழு பருவங்கள்

தொகு

தாங்கள் சொல்லவரும் கருத்து புரியவில்லை. ' குறித்த எ.கா கள் தரவேண்டாம். இதே போல் இல்லாத சொற்களைக் காட்டி சொல்வளம் இல்லையெனவும் சொல்லலா)' எ.கா என்றால் என்ன? சொல்லலா=சொல்லலாம் ? --Jambolik 14:48, 5 திசம்பர் 2011 (UTC)Reply

குறிப்பிட்ட ஒரு எடுத்துக்காட்டைக் கொண்டு ஒரு மொழியின் பொதுப்படையான கூறுகள் இவை என்று சொல்ல இயலாது. இலைக்குத் தமிழில் ஏழு சொற்கள் உள்ளன என்பதால் அதனால் அது சொல்வளம் மிக்கது என்று கூறுவது இலக்கியச் சுவைக் கட்டுரைகளுக்குப் பொருந்தும், கலைக்களஞ்சியக் கட்டுரைக்குப் பொருந்தாது. இதே போல் செய்தால் மாற்று எடுத்துக்காட்டாக நான் ஒரு கருதுகோளுக்கு தமிழில் சொற்கள் இல்லை எனவே தமிழில் சொல்வளம் குறைவு என்றும் சொல்லலாம். எனவே ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டு பொதுப்படைக்கூற்றுக்கு சான்றாக அமையாது. அவ்வாறு இங்கு பயன்படுத்தவும் கூடாது--சோடாபாட்டில்உரையாடுக 14:52, 5 திசம்பர் 2011 (UTC)Reply

விளக்கத்திற்கு நன்றி.--Jambolik 15:56, 5 திசம்பர் 2011 (UTC)Reply

இணையக் குழுக்களில் பரப்புரை

தொகு

முகநூல் அல்லது வேறு இணையதளக் குழுக்களில் பரப்புரை ஆவணங்கள் அந்தக் குழுக்களிலுள்ள அனைவருக்கும் தகவலாகப் போய்ச் சேரும். இந்தக் குழுக்களில் நான்கில் ஒரு பங்கினர் விக்கிப்பீடியாவிற்கு வரக் கூட்டும். நூற்றில் ஒருவராவது இப்போட்டியில் பங்கேற்க முன்வரலாம். நான் இணைந்துள்ள 4 குழுக்களில் பரப்புரை பகிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் விக்கிப்பீடியா: தமிழ் விக்கி ஊடகப் போட்டி எனும் பக்கத்தில் பரப்புரை எனும் தலைப்பில் இணையக் குழுக்கள் எனும் உள் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. தாங்களும் பிற தமிழ் விக்கிப்பீடியார்களும் இணைந்துள்ள குழுக்களில் பரப்புரையைச் சேர்க்க முயலலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:38, 5 திசம்பர் 2011 (UTC)Reply

பூலித்தேவன் பிறந்தநாள்

தொகு
  1. 1-9-1715 - பூலித்தேவன்
  2. 18.10.???? - [[1]]

எது சரி?--தென்காசி சுப்பிரமணியன் 09:58, 6 திசம்பர் 2011 (UTC)Reply

OTRS

தொகு

Dear Sodabottle, I need some more info for closing Sengai Podhuvan's OTRS ticket. Can you please help him for that. Due to privacy issues I can't reproduce the content of the mail which I have sent to him. I put a note in the ticket why I have sent a clarification mail. Surya Prakash.S.A. can help you guys. Thank you --கிரண் கோபி 05:11, 7 திசம்பர் 2011 (UTC)Reply

பார்க்கவும்

தொகு

பகுப்பு பேச்சு:கற்பனைக் கண்டங்கள்--தென்காசி சுப்பிரமணியன் 07:39, 7 திசம்பர் 2011 (UTC)Reply


சென்னையிலிருந்து நான்கு குடியரசுத் தலைவர்கள்

தொகு

மேற்கண்ட என் இடுக்கையின் மீது உங்கள் கருத்து 'முகவரியாகக் கொண்டவர்கள் சேர்ந்தவர்கள் அல்லர்' என்பதாகும். திரு வி.வி.கிரி அவர்களைத்தவிர மற்ற மூவரும் திருவாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கடராமன், எ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகியோர் தமிழ் நாட்டில் பிறந்தவர்களே. சென்னையில் பிறந்தவர்கள் அல்லர் என்பதால் சென்னையைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பதில் 'தர்க்கம்' இருக்கிறது. ஆனால் இவர்கள் நால்வருமே தங்கள் அரசியல், தொழிற்சங்க மற்றும் அறிவுசார் நடவடிக்கைகளுக்காக சென்னையை மையமாகக்கொண்டு, அங்கு ஒரு முகவரியோடு செயல்பட்டனர் என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் சென்னையைச் சேர்ந்த பிரமுகர்களின் பெயர்களை இந்த பக்கத்தில் சேர்ப்பது என் நோக்கமல்ல. அது ஒரு மிக மிக நீண்ட பட்டியலாகிவிடும். நாட்டிலேயே அரசியல் சாசனப்படி மிக உயர்ந்த பதவியில் இவர்கள் இருந்தவர்கள் என்பதற்காகத்தான் என் இந்த முயற்சி. என் கருத்து சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் விடுங்கள், பரவாயில்லை.--Jambolik 14:59, 8 திசம்பர் 2011 (UTC)Reply

மேலும் சென்னையைச் சேர்ந்த பிரமுகர்களின் பெயர்களை இந்த பக்கத்தில் சேர்ப்பது என் நோக்கமல்ல. அது ஒரு மிக மிக நீண்ட பட்டியலாகிவிடும் இக்காரணமே நான் சொல்வதும். குடியரசுத் தலைவர் என்பது உங்களுக்கு குறிப்பிடத்தக்க பதவியாகப் படுகிறது. இது போல பல்வேறு துறைகளில் பல்வேறு பதவிகள் பிறருக்குப் படலாம். மேலும் நீங்கள் முதற்குறிப்பிட்ட நால்வரில் கிரியை சென்னைக் காரர் என சொல்லவே இயலாது. ராதாகிருஷ்ணனும் அது போலவே. அப்துல் கலாம். 2002 ஆம் ஆண்டு தான் சென்னையில் குடியேறினார் (அண்ணா பல்கலைக்கழகத்தில் முத்தையன் இருக்கைப் பேராசிரியராக ஆனபின்னரே) பின் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடியும் வரை சென்னை வாசம் கிடையாது. இது போன்று பல சொல்லலாம். தமிழ்நாட்டிலிருந்து பிரமுகர் யாரை எடுத்துக் கொண்டாலும், ஏதேனும் ஒரு காலத்தில் சென்னையில் ஒரு முகவரி இருந்திருக்கும். அனைவரையும் சென்னைக் காரர்கள் என்று சேர்க்க இயலாது.--சோடாபாட்டில்உரையாடுக 16:11, 8 திசம்பர் 2011 (UTC)Reply


வேண்டுகோள்

தொகு

அய்யா தான் தொட்டிய நாயக்கர் என்ற பக்கத்தில் தகுந்த சான்றுகளுடன் சில வரலாறுகளை எழுதிவருகிறேன் , அதற்கான ஆதரங்களையும் கொடுத்துள்ளேன் , ஆனால் தற்போது அதில் சில பகுதிகளை காணவில்லை , நான் அதனை திரும்ப போடலாமா அல்லது விட்டுவிடுவதா ? முன்னிலை ஆக்கப் பாடுள்ளது என்று போடப்பட்டுள்ளது வரலாற்றில் , முன்னிலை என்றால் என்ன என்று தெரியவில்லை .. --Rajanaicker

நானே திரும்ப சேர்த்துள்ளேன். “பேஸ்புக்கின் பேன் பேஜில் இணையுங்கள்.நாயக்கர் பேஜில் கிளிக் செய்யவும்.” என்ற வரிகள் சேர்க்கப்பட்டதால், உங்கள் மொத்த பங்களிப்பும் முன்னிலையாக்கப்பட்டிருந்தது. இது போன்ற விளம்பரங்கள் விக்கிப்பீடியாவில் இடக்கூடாது. இப்போது அவ்வரிகளை நீக்கிவிட்டு எஞ்சியதை சேர்த்திருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:45, 9 திசம்பர் 2011 (UTC)Reply

thanku sodabottil

தொடுப்பிணைப்பி

தொகு

தொடுப்பிணைப்பி மூலம் வேலை நடந்துகொண்டிருக்கிறது என்ற வார்ப்புருவை இட்டால்

//கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; யாரும் தொகுக்க வேண்டாம் using [[விக்கிப்பீடியா:தொடுப...) //

இது போல் வருகிறது. யாரும் தொகுக்க வேண்டாம் என்று நான் தட்டச்சு செய்யாமலே அப்படி வருகிறது. நாமாகவே தொடுப்பிணைப்பி இல்லாமல் அவ்வாறு வார்ப்புரு இட்டால் அவ்வாறு வருவதில்லை என நினைக்கிறேன்--தென்காசி சுப்பிரமணியன் 03:44, 12 திசம்பர் 2011 (UTC)Reply

தொடுப்பிணைப்பியில் கொடுத்திருந்த சுருக்க வாக்கியம் இது. தொடுப்பிணைப்பி பயன்படுத்தும் போது தன்னியக்கமாக சில சுருக்கங்கள் வரும்படி செய்துள்ளோம். இதிலுள்ள ”யாரும் தொகுக்க வேண்டாம்” என்பதை நீக்கியுள்ளேன். கேஷை காலி செய்து விட்டு இட்டுப்ப் பாருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 05:15, 12 திசம்பர் 2011 (UTC)Reply

முதற்பக்கப் படம்

தொகு

செங்குருதியணுவைக் குறிக்கும் தகவல், ஆனால் படம் குருதி வளர்ப்பூடகமாக உள்ளது. படத்திற்கேற்ற தகவல் அமையவில்லை. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:05, 12 திசம்பர் 2011 (UTC)Reply

செந்தி, தகவல் இந்த இணைப்பில் உள்ளது - விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 11, 2011 . தவறானவற்றைத் திருத்தி விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 13:44, 12 திசம்பர் 2011 (UTC)Reply
) தவறு ஒன்றும் இல்லை. படம் சிறப்பாகப் பொருந்தவில்லை (செங்குருதியனுவைக் குறிக்கும் படமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்) எனும் எனது கருத்தைத் தெரிவித்தேன்.:) --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 11:17, 13 திசம்பர் 2011 (UTC)Reply
ஹி ஹி. இது படத்துக்கு ஏற்ற கட்டுரையைத் தேடுவதால் வந்த சிக்கல். (படம் அழகாக இருந்ததால், அதற்கு நெருக்கமான கட்டுரையை எடுத்துப் போட்டு விட்டேன்) --சோடாபாட்டில்உரையாடுக 11:56, 13 திசம்பர் 2011 (UTC)Reply
சிறப்புப் படங்கள் இதுகுறித்த என் வலைப்பதிவைப் பார்க்கவும். :) --சூர்யபிரகாசு உரையாடுக... 12:32, 18 திசம்பர் 2011 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம் நான் தமிழ் விக்கியில் சிலகணினி விளையாட்டுகளுக்கான கட்டுரைகளை உருவாக்கலாம் என நினைக்கிறன்.அவற்றின் தலைப்பை எவ்வாறு மொழிபெயர்ப்பது. எ.கா. age of empires ஐ ஏஜ் ஆப் எம்பயர்ஸ் என்பதா? அல்லது அதை தமிழில் அப்படியே மொழிபெயர்ப்பதா (பேரரசுகளின் காலங்கள்)? நன்றி.

பெயர்ச்சொற்களை அப்படியே எழுத்துப்பெயர்த்தால் போதும், மொழி பெயர்க்க வேண்டாம். எ.கா. ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ்: ரைஸ் ஆஃப் ரோம் (இது தான் நான் கடைசியாக ஆடிய பதிப்பு.. ஏஜ் ஆஃப் கிங்க்ஸ் வரை கூடத் தாங்கவில்லை :-))--சோடாபாட்டில்உரையாடுக 11:26, 14 திசம்பர் 2011 (UTC)Reply
உங்கள் உதவிக்கு நன்றி .. ஒரு பத்தியின் (PARAGRAPH) முதல் வரியை மட்டும் அல்லது எதாவது ஒரு வரியை மட்டும் எப்படி உள்தள்ளி ஆரம்பிப்பது.. இடைவெளி விட்டால் அது சரியாக ஓன்று சேர வில்லை.. முழு பத்தியும் ஒரே வரியில் வருகிறது.எ. கா ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் இதை கவனிக்கவும்.மற்றும் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கட்டுரையை உருவாக்குவதில் தவறு ஒன்றுமில்லையே?--shanmugam 09:05, 15 திசம்பர் 2011 (UTC)Reply
பத்தி உள்தள்ளித் தொடங்கும் வழக்கம் (paragraph indenting) விக்கி நடைக்கையேட்டில் கிடையாது (எனவே தான் நகர்த்தினால் முழு வரியும் நகரும் படி் நிரல் அமைந்துள்ளது). இங்கு அனைத்து வரிகளும் முதல் எழுத்தில் இருந்தே துவங்குகின்றன (ஏனிந்த வழக்கமென்று தெரியவில்லை.). எனவே இவ்வழக்கத்தையே பயன்படுத்தக் கோருகிறேன்
தாராளமாக தினம் கொஞ்சமாக உருவாக்கலாம். பெரும்பாலான கட்டுரைகள் விக்கியில் அவ்வாறே எழுதப்படுகின்றன. --சோடாபாட்டில்உரையாடுக 09:20, 15 திசம்பர் 2011 (UTC)Reply

அன்புடையீர் நான் தொடங்கி எழுத நினைத்த பசுமை வேதியியல் கட்டுரையில் நான் செய்யும் மாற்றங்கள் அவ்வப்பொழுது நீக்கப்பட்டு விடுகின்றன.எனவே இந்தக் கட்டுரயைத் தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சரியான காரணஙகளைத் தெரிவிக்காமல் என்னுடைய பங்களிப்புகளில் மாற்றம் செய்வது தொடருமேயானால் விக்கிபீடியாவுக்கு "குட் பை" சொலவது தவிர வேறு வழி இல்லை.நன்றி. அன்புடன்--MUTTUVANCHERI NATARAJAN 15:29, 18 திசம்பர் 2011 (UTC)Reply

நீங்கள் தொடங்கி இரு நாட்களாக பாதியில் இருந்த அக்கட்டுரையில் நான் செய்த மாற்றங்கள் - 1)வேலை நடந்து கொண்டிருக்கிறது வார்ப்புரு சேர்ததது 2) விக்கியாக்க மாற்றங்கள் (விக்கிப்பீடியா நடைக்கையேற்ப) 3) விக்கியிடை இணைப்புகள் - பிற விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு - சேர்த்தது. இவை கட்டுரையை மேம்படுத்தத் தான். விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி. ஒருவர் எழுதுவதை இன்னொருவர் மேம்படுத்தியே விக்கிப்பீடியா இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது. நீங்கள் தொடங்கி பாதியில் விட்ட எவ்வளவோ கட்டுரைகளை நானும் பிறரும் மேம்படுத்தி மாற்றியுள்ளோம். நீங்கள் தொடங்கிய கட்டுரைகளின் வரலாற்றைப் பார்த்தாலே இது புலனாகும். கட்டுரை வெளியில் இரு வரிகளை எழுதிவிட்டு அடுத்து அந்தப்பக்கமே பல நாட்கள் வராமல் பின் யாராவது அதை மாற்றினால், “சரியான காரணம் தெரிவிக்கவில்லை” என்று சொல்வதற்கும் நாம் சரிவரச் செய்யாததை/பாதியில் விட்டுச் செல்வதை பிறர் திருத்தி மேம்படுத்துவதை ஏற்றுக் கொண்டு இங்கு பங்களிக்க இயலவில்லை என்று சொல்வதற்கும் என்னிடம் வேறு பதில் கிடையாது.--சோடாபாட்டில்உரையாடுக 15:49, 18 திசம்பர் 2011 (UTC)Reply

அன்புடையீர் வெறும் விளம்பரத்திற்காகவோ அல்லது கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவோ நான் விக்கியில் எழுதவில்லை.தொடர்ந்து எழுதுவதில்லை என்பது நேரமின்மை என்ற ஒரே காரணத்தினால்தான்.விக்கியில் எத்தனையோ கட்டுரைகள் இன்னும் மூன்று வரியிலேயே நிற்கின்றன.அவற்றை தாங்கள் இன்னும் மேம்படுத்தவில்லை.என்னுடைய கட்டுரைகளில் இதுவரையில் செய்யப்பட்டுள்ள பல மாற்றங்ககள், அவற்றின் உள்ளடக்கத்தில் செய்யப்படவில்லை.ஆனால் தற்பொழுது உள்ளடக்கம் நீக்கப் படுவது ச்ரியானதாகத் தெரியவில்லை.தமிழுக்குத் தொண்டு செய்ய இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. நன்றி!குட் பை!

--MUTTUVANCHERI NATARAJAN 16:42, 18 திசம்பர் 2011 (UTC)Reply

நாமெழுதும் கட்டுரைகளை பிறர் மாற்றுவதை எற்கும் மனமுதிர்ச்சி இல்லையெனில் இங்கு தொடர்ந்து பங்களிக்க இயலாது. உங்கள் தமிழ்த்தொண்டை வேறெங்கினும் செய்ய வாழ்த்துக்கள். --சோடாபாட்டில்உரையாடுக 17:04, 18 திசம்பர் 2011 (UTC)Reply

பிறருடைய பணிகளில் சரியான முகாந்திரம் இன்றி தலையிடுவதுதான் மனமுதிர்ச்சி இன்மைக்கு அடையாளம்.எனக்கு இந்தப் பட்டம் தேவையானதுதான்.வாழ்க உங்கள் விக்கி சேவை.முடிந்தால் நமது உரையாடலை ஆலமரத்தடியில் வெளியிடுங்கள்.இதற்குமேல் நான் இதைப்பற்றி எழுத விரும்பவில்லை.--MUTTUVANCHERI NATARAJAN 17:11, 18 திசம்பர் 2011 (UTC)Reply

”சரியான முகாந்திரம்” என்ற வார்த்தைகளே காட்டுகிறது உங்களுக்கு விக்கி என்றால் என்ன என்பதே புரியவில்லை என்பது. நீங்கள் பாதியில் விட்டுப்போனதை /விக்கி நடையில் எழுதாதை மாற்ற யாருக்கும் எந்த முகாந்திரமும் தேவையில்லை. இதை ஆலமரத்தடியில் வெளியிட விருப்பமென்றால் நீங்களே வெளியிடுங்கள், அதற்கு எதற்கு நான்?. --சோடாபாட்டில்உரையாடுக 17:19, 18 திசம்பர் 2011 (UTC)Reply

கவனிப்புப் பட்டியல்

தொகு

எனது கவனிப்புப் பட்டியலில் சிலவற்றின் நேரே +60 என்று பச்சை நிறத்திலும் -9 என்று சிவப்பு நிறத்திலும் உள்ளன. இலக்கங்கள் வேறுபடுகின்றன. அவற்றின் அர்த்தங்கள் என்ன? --மதனாஹரன் 06:22, 19 திசம்பர் 2011 (UTC)Reply

கட்டுரையின் பைட் அளவில் உள்ள மாற்றம். அக்கட்டுரையின் கடைசி மாற்றத்தால் அதன் பைட் அளவு கூடியதா குறைந்ததா எனக் காட்டுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 06:24, 19 திசம்பர் 2011 (UTC)Reply

நன்றி! நான் அவை பயனர்கள் செய்யும் விருப்பங்கள், விருப்பமின்மைகள் என்று நினைத்தேன். --மதனாஹரன் 06:25, 19 திசம்பர் 2011 (UTC)Reply

ஆகா! சமூக வலை இடைமுகத்தின் வீச்சு :-). --சோடாபாட்டில்உரையாடுக 06:27, 19 திசம்பர் 2011 (UTC)Reply

அவ்வாறான அம்சங்கள் விக்கிப்பீடியாவில், விக்சனரியில் இல்லையா? சரியான கலைச் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில்... --மதனாஹரன் 06:28, 19 திசம்பர் 2011 (UTC)Reply

தங்கள் போன்ற நிர்வாகிகளுக்கு விக்கிப்பீடியாவில் புதிய அம்சங்களைச் சேர்ப்பதற்கு, புதிய கருவிகளை உருவாக்குவதற்கு, அவற்றைப் பரிந்துரை செய்வதற்கு அதிகாரங்கள் இல்லையா? நிர்வாகிகளின் அதிகாரங்கள் எவை என்று கூற முடியுமா? --மதனாஹரன் 06:30, 19 திசம்பர் 2011 (UTC)Reply

விக்கிப்பீடியாவில் “நிருவாகி” என்போர் சாதாரண பயனரைக் காட்டிலும் கூடுதலாக சில பொறுப்புகளையும் அணுக்கங்களையும் பெற்றவர். அவை - கட்டுரைகளை நீக்கல், காத்தல், இணைத்தல், மீள்வித்தல்; பயனர்களையும் ஐபிகளையும் தடை செய்தல், தடை நீக்குதல், சில குறிப்பிட்ட பக்கங்களைத் தொகுத்தல் ஆகியவை.
புதிய கருவிகளை உருவாக்குதல், அம்சங்களைச் சேர்த்தல் போன்றவை ஒட்டு மொத்த சமூகத்தின் கையில் உள்ளது. தன்னிச்சையாக நிருவாகிகள் செயல்படுவதில்லை. எ.கா. புதிய கருவி ஒன்றை மீடியாவிக்கி நிரலாளர்கள் துணையின்றி நாமே சேர்க்க இயலுமெனில் ஒரு “கருத்து வேண்டல்” (request for comment) ஒன்றை நடத்தி, அதில் தெரிவிக்கப்படும் அனைத்து கருத்துகளையும் உள்வாங்கி இணக்க முடிவெடுத்து பின்பு அக்கருவி சேர்க்கப்படும். பல கருவிகள் நாமாக இணைக்க இயலாமல் விக்கிமீடியா திட்டங்களின் மீடியாவிக்கி நுட்பக் குழுவிடம் கேட்க வேண்டியிருக்கும். விக்கி சமூகத்தின் இசைவு கிடைத்தவுடன், மீடியாவிக்கி நிரலாளர்களிடத்து “வழு/வேண்டல்” ஒன்றைப் பதிவு செய்து கோருவோம். அவர்கள் செய்து தர இயலுமெனில் செய்து தருவர்.
மேற் சொன்னவை அனைவரையும் பாதிக்கும் மாற்றங்களுக்கு மட்டும். தனிப்பட்ட பயனர்கள் மட்டும் பயன்படுத்தகூடிய கருவிகளை ஜாவாஸ்கிரிப்ட் நிரலாக யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். செய்த பின்பு பிறருக்கும் தெரிவிக்கலாம். இதற்கு எந்தத் தடையும் கிடையாது.
புதிய கருவிகள், அம்சங்கள் வேண்டுமென யார் வேண்டுமென்றாலும் பரிந்துரை செய்யலாம். ஆலமரத்தடியில் ஒரு குறிப்பினை இட்டு, பரிந்துரைக்கான காரணங்களைத் தெரிவிக்கலாம். பிறர் ஆதரவு, எதிர்ப்பு, கருத்து, தொழில்நுட்பச் சிக்கல்கள், சாத்தியக்கூறுகள், தடைகள் போன்றவற்றைத் தெரிவிப்பர்.--சோடாபாட்டில்உரையாடுக 06:39, 19 திசம்பர் 2011 (UTC)Reply

மிகவும் நல்லது. --மதனாஹரன் 11:05, 19 திசம்பர் 2011 (UTC)Reply

ஊடகப் போட்டி விக்கி தள அறிவிப்பு பதாகைகள்

தொகு

வணக்கம் சோடாபாட்டில், தாங்கள் கேட்டதற்கிணங்க, ஊடகப் போட்டிக்காக விக்கி தள அறிவிப்பிற்கான புதிய பதாகைகள் நான்கை வடிவமைத்து பதிவேற்றியுள்ளேன். வடிவமைக்கப்பட்ட பதாகைகளின் இணைப்புகள் வருமாறு. நன்றி. --தாரிக் அஸீஸ்  உரையாடுக  18:18, 21 திசம்பர் 2011 (UTC)Reply

அருமை தாரிக். பயன்படுத்திக்கொள்கிறோம் :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:18, 22 திசம்பர் 2011 (UTC)Reply
தாரிக் தங்கள் பதாதைகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். இருப்பினும், இதுவொரு போட்டி நிகழ்ச்சிக்கான அறிவிப்புப் பதாகை. எனவே போட்டிக்கு வந்த படங்களை போட்டி முடிவு வெளிவருவதற்கு முன்பு போட்டிக்கான பதாகையில் சேர்ப்பது பொருத்தமாக இருக்குமென நான் கருதவில்லை. இது தொடர்பாக ஏனைய பயனர்களினதும் ஆலோசனைப் பெறுவது பயனுள்ளதாக இருக்குமென கருதுகின்றேன். ஏனெனில், போட்டிக்கு வந்த படங்களை சேர்க்கும்போது இவை தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் என்ற ஓர் உணர்வு ஏற்படக்கூடிய வாய்ப்புண்டு அல்லவா? இதனை சோடாபாட்டிலும் கவனத்திற்கொள்வார் என எதிர்பார்க்கின்றேன்.--P.M.Puniyameen 04:58, 22 திசம்பர் 2011 (UTC)Reply
நன்றி புன்னியாமீன். ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்கியே தாரிக் இவற்றை உருவாக்கி உள்ளார். போட்டிக்கு வந்த படங்கள் ஏற்கனவே கட்டுரைகளில் பயன்படத் தொடங்கிவிட்டன. எனவே “போட்டிக்கு வந்தவை” என வெளிப்படையாகக் குறிப்பிடாமல், அவற்றை முன்னுதாரணமாகப் பதாகைகளில் பயன்படுத்துவது குழப்பம் விளைவிக்காதெனக் கருதுகிறேன். போட்டி ஆரம்பிக்கையில் பதாகை உருவாக்க குறைவான மாதிரிப் படிமங்களே இருந்தன. போட்டியின் மூலம் அக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனவே போட்டிக்கு வந்தவை என்று குறிப்பிடாமல் பயன்படுத்தினால் குழப்பமும் ஏற்படாது. பொருத்தமான (பல்வகைக் கருப்பொருட்களைக்) படங்களைக் கொண்ட பதாகைகளும் நமக்குக் கிட்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:08, 22 திசம்பர் 2011 (UTC)Reply
போட்டித் தெரிவுக்கான மதிப்பீட்டு முறையும் பதாதைக்கான தெரிவுமுறையும் ஒன்றில் ஒன்று தாக்கஞ் செலுத்தாத சுயாதீன தெரிவுகளே. தாரிக்கிடம் ஒருங்கிணைப்பளர்கள் இப்படி ஒன்றைத் தயாரிக்கும்படி கோரினார்கள். அவரது படத்தெரிவு சுயாதீனமாயிருந்தது. அத்துடன் போட்டிக்கான தெரிவுமுறைகூட திறந்த வகை கொண்டது. எனவே வெற்றியாளர்களை தீர்மானிப்பதை இது பாதிக்காது. அக்கறையுடனான தங்களின் கலந்துரையாடலுக்கு நன்றி புன்னியாமீன்.--சஞ்சீவி சிவகுமார் 05:44, 22 திசம்பர் 2011 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம் திரு சோடா பாட்டில். எனக்கு விக்கிபீடியாவை உபயொகிப்பது சற்று கடினமாக உள்ளது.மேலும் நீங்கள் எனக்கு அனுப்பிய ஈ-மெயில் படிக்கவே முடியவில்லை. தற்சமயம் எனது மெயிலிலும் இல்லை. நான் எந்த மாதிரியான் கட்டுரைகள் எழுதலாம் என்பதையும் சொன்னால் மிக உதவியாக் இருக்கும். நன்றி. --Uma ganesh 17:03, 23 திசம்பர் 2011 (UTC)--Uma ganesh 17:03, 23 திசம்பர் 2011Reply

மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:11, 30 திசம்பர் 2011 (UTC)Reply

வார்ப்புரு:Infobox Film

தொகு

வார்ப்புரு:Infobox Film வார்ப்புருவின் name, producer தமிழிலும் ஆங்கிலத்திலும் தருமாறு செய்ய வேண்டும். எப்படிச் செய்யலாம் என்று தெரிந்தால் கூறவும். அதாவது பெயர், அல்லது name இரண்டுக்கும் வேலை செய்ய வேண்டும். --Natkeeran 04:21, 24 திசம்பர் 2011 (UTC)Reply

இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் வருமாறு செய்துள்ளேன். ஒவ்வொரு “data" அளபுருவிலும் ஒரு அல்லது | இட வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:29, 24 திசம்பர் 2011 (UTC)Reply
நன்றி. --Natkeeran 04:31, 24 திசம்பர் 2011 (UTC)Reply

Greetings

தொகு

The Tamil Wikipedia has reached 1,000,000 page edits... Congrats --Naveenpf 05:40, 26 திசம்பர் 2011 (UTC)Reply


i need some help

தொகு

dear soda bottle, i need some help regarding tagging a wikipedia article. i have created a tamil page on a technical topic(ஒற்றைச்சில் நிரலாக்க கட்டகம்). the problem lies in searching the page from the first page of wikipedia. the page is displayed only when the full title is given. that too with correct spelling. but when i search for some topics even some pages which are slightly related are also listed in the search results. why this is so. are there any options available for tagging some words from inside of my article, so that search phrases which contain even a part of the word would be listed in the search results? your reply would greatly help me --பிரசன்னா காந்திராஜ் 07:24, 30 திசம்பர் 2011 (UTC)Reply

Proper indexing of newly created articles takes anywhere between a few days and a week. Dont worry, in roughly a week, the new article will be fully search indexed and partial term searches will be fetching it. (this is the case with all new articles)--சோடாபாட்டில்உரையாடுக 08:06, 30 திசம்பர் 2011 (UTC)Reply

நன்றி சோடாபாட்டில், மூன்று நாட்கள் கழித்துச் சொதித்துப் பார்தேன் இப்பொழுது தேடல் முடிவுகளில் என் கட்டுரை காட்டப்படுகிரது--பிரசன்னா காந்திராஜ் 08:28, 30 திசம்பர் 2011 (UTC)Reply

பயனர் பெயர் மாற்றம்

தொகு

மீன்டும் மீன்டும் கேள்விகள் கெட்பதர்க்கு மன்னிக்கவும் சோடாபாட்டில்,நான் என் விக்கிபபீடியா பயனர் பெயரை மாற்ற வேன்டும் எப்படி செய்வது?--பிரசன்னா காந்திராஜ் 06:51, 30 திசம்பர் 2011 (UTC)Reply

விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை என்ற பக்கத்தில் கோரிக்கை எழுப்புங்கள். பெயர் மாற்ற அணுக்கம் உள்ள அதிகாரிகள் மாற்றி விடுவார்கள் (மேலும் ஏதேனும் ஐயம் இருப்பின் தயங்காமல் கேளுங்கள்
-))
Return to the user page of "Sodabottle/தொகுப்பு13".