பயனர் பேச்சு:Theni.M.Subramani/தொகுப்பு 3

இரு கட்டுரைகளை இணைப்பது எப்படி? தொகு

தேனி, A, B என்ற இரு கட்டுரைகளை இணைக்க வேண்டுமானால், முதலில் எந்தக் கட்டுரைத் தலைப்பை முதன்மைப்படுத்துவது என்று தீர்மானியுங்கள். எ+கா: A என்ற கட்டுரையை முதன்மைப்படுத்துவோம். A கட்டுரையில் உள்ள முக்கிய தகவல்களை B கட்டுரையில் சேருங்கள். பின்னர் அதனை A கட்டுரைக்கு மாற்றுங்கள். மாற்றும் போது A கட்டுரை ஏற்கனவே உள்ளது. அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கும். ஆம், என்று தயங்காமல் கூறி மாற்றுங்கள். பின்னர் A கட்டுரையை நீக்க வேண்டும். பின்னர் அதே A கட்டுரையை மீள்விக்க வேண்டும். மீட்டமைக்க என்பதை அழுத்துங்கள். அவ்வளவு தான். மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் ஐப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 05:17, 3 சூலை 2011 (UTC)Reply

  • இரு கட்டுரைகளை இணைப்பது குறித்து இப்போதுதான் சோடாபாட்டிலுடன் தொடர்பு கொண்டேன். அவர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் முயற்சித்தேன். என் செயல்பாட்டில் ஏதோ தவறு நடந்து விட்டது அறிந்து கொண்டேன். தங்கள் விளக்கம் அறிந்து கொண்டேன். இனி முயற்சித்துப் பார்க்கிறேன். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 05:20, 3 சூலை 2011 (UTC)Reply
  • கனக்ஸ், இன்று தொட்டிய நாயக்கர், ராஜகம்பளம் எனும் இரு கட்டுரைகளை இணைக்க முயற்சித்து மாற்றியுள்ளேன். கடைசியாக மீட்டமைக்க என்பதை அழுத்தினேன். அது செயல்படாததால் மீட்டெடு அழுத்தி செயல்படுத்தினேன். இது சரியா? --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:58, 5 சூலை 2011 (UTC)Reply

ரேனியஸ் தொகு

நீங்கள் இக்கட்டுரையை விக்கியாக்கம் செய்வதைப் பார்த்தேன். கட்டுரை முழுக்க இங்கிருந்து படியெடுத்து ஒட்டப்பட்டுள்ளது. முழுக்க பதிப்புரிமை மீறல். எனவே குறுங்கட்டுரையாக சுருக்கி விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 03:37, 7 சூலை 2011 (UTC)Reply

  • இக்கட்டுரை முழுக்க முழுக்க என்னுடைய நண்பர் திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாளை.சுசி என்கிற பேராசிரியர்.சிட்னி சுதந்திரன் என்பவரால் எழுதப் பெற்றது. இது எனது முத்துக்கமலம் இணைய இதழில் அடையாளம் பகுதியில் வெளியிடப்பட்டது.(பார்க்க). இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க என்னுடைய முத்துக்கமலம் இணைய இதழிலிலிருந்து திருடப்பட்டு தாங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளது. நான் பாளை. சுசி எனும் பேராசிரியர். சிட்னி. சுதந்திரனை விக்கிப்பீடியாவிற்கு கொண்டு வரும் முயற்சியாக அவருக்கு இக்கட்டுரையை எப்படி வெளியிடுவது என்று தெரியாததால் என்னுடைய முத்துக்கமலம் இணைய இதழிலிலிருந்து அப்படியே பிரதி எடுத்து ஒட்டச் சொன்னேன். அதன் பிறகு அதை விக்கியாக்கம் செய்ய முயன்று வருகிறேன். இதில் பதிப்புரிமை மீறிய செயல் வலைப்பூவினருடையதுதான். எனது முத்துக்கமலம் இணைய இதழில் வெளியிடப்படும் பல படைப்புகள் இது போன்று எவ்வித மாற்றமுமில்லாமல் திருடப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்த வலைப்பூவிலாவது எழுதியவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஆன்மிகம் மனிதன்.co எனும் வலைத்தளம் முத்துக்கமலத்தில் வெளியான கதை உட்பட பல தகவல்களை எழுதியவர் பெயரே இல்லாமல் முழுக்க முழுக்க திருடி வெளியிட்டு வருகிறது. வலைப்பதிவுகளில் திருட்டு அதிகமாகி விட்டது. இது போன்ற திருட்டுக்களைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட வலைப்பதிவர்கள் மீது வழக்கு தொடுப்பது குறித்து குறித்து எனது வழக்கறிஞரிடம் ஆலோசித்து வருகிறேன். தகவலுக்கு நன்றி. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:53, 7 சூலை 2011 (UTC)Reply
நன்றி. நான் செய்த மாற்றங்களை முன்னிநிலையாக்கி நீங்கள் செய்த பதிப்புக்கே மீளமைத்துள்ளேன். கட்டுரை பேச்சுப் பக்கத்தில் பாளை சுசியும், சிட்னி சுதந்திரனும் ஒருவர் தான் என்றொரு குறிப்பினை இட்டு விடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். (பிற்காலத்தில் மீண்டும் யாருக்கேனும் இந்த சந்தேகம் எழுந்தால், என்னைப் போல தவறாக புரிந்து கொள்ளாமல் இருக்கப் பயன்படும்)--சோடாபாட்டில்உரையாடுக 04:05, 7 சூலை 2011 (UTC)Reply

எனது இணைய இணைப்பு தொகு

நண்பரே! எப்படி இருக்கிங்க. நீங்கள் மின்னஞ்சலில் சில மாதங்களுக்கு முன் இணைய இணைப்பு பற்றி எழுதியிருந்தீர்கள் அல்லவா? அதனை என் நண்பனுக்கு கூறிவிட்டேன்.நன்றி. நான் சென்ற மாதம் தான் BSNL இணைய இணைப்பு வாங்கினேன். இனி தொந்தரவு இல்லை.எனினும், அதுவும் காலையில் தான் உகந்த வேகத்தில் இருக்கிறது. நீங்கள் இன்னும் அலைப்பேசி வழி இணைய இணைப்பைப் பயன்படுத்துகிறீர்களா? ஆர்வத்தில் கேட்கிறேன்.01:22, 9 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

  • ஆம். நான் நகர்பேசி வழியிலான இணைய இணைப்பைத்தான் பயன்படுத்துகிறேன். எனக்கு இதுவரை எவ்விதப் பிரச்சனையுமில்லை. BSNL இணைய இணைப்புக்கு கட்டணம் அதிகம் என்பதுடன் இந்தப் பகுதியில் அதற்கான சேவை குறைபாடுகளும் அதிகமாக உள்ளது. இது எனக்கு சிறப்பாகப்படுகிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:26, 9 சூலை 2011 (UTC)Reply

அதிக கட்டணம் தான். இருப்பினும் ஒருவாறு சமாளிக்கிறேன்.தங்கள் தகவலுக்கு நன்றி. வருகிறேன். வணக்கம்01:32, 9 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

நன்றி தொகு

எனது கட்டுரைகளில் பிழைதிருத்தங்கள் செய்து மேம்படுத்தி வருவதற்கு நன்றிகள் ! --மணியன் 10:13, 11 சூலை 2011 (UTC)Reply

தொடுவானம் தொகு

தொடுவானம் போன்ற நிகழ்வுகள் நன்று. அரசு மட்டத்தில் தங்களுக்கு உள்ள தொடர்புகள் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வளம் சேர்ப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி--இரவி 13:27, 17 சூலை 2011 (UTC)Reply

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

பங்களிப்பு வேண்டுகோள் அறிவிப்பு நல்லதொரு முயற்சி சுப்பிரமணி. பாராட்டுக்கள். சற்று வேலைப்பழு காரணமாக எனது பங்களிப்புகளும் சில வாரங்களாக குறைவாகவே முடிகிறது. அதிகரிக்க முயலுகிறேன். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் 09:32, 21 சூலை 2011 (UTC)Reply

முன்பே விக்கிப்பீடியாவிற்கு அறிமுகமாகி, ஏதோ ஒரு காரணத்தால் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்க முடியாமல் இருப்பவர்களை மீண்டும் விக்கிப்பீடியாவிற்குப் பங்களிக்க அழைக்கலாமே என்கிற எண்ணத்தில் இந்த பங்களிப்பு வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது. இதில் சிலர் மீண்டும் பங்களிக்கக் கூடும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. பார்ப்போம்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:50, 21 சூலை 2011 (UTC)Reply


நல்ல முயற்சி. நன்றிகள். --Natkeeran 23:01, 21 சூலை 2011 (UTC)Reply

விக்கிப்பீடியாவில் படங்கள் தொகு

ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள படங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தலாமா?, சில ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை தமிழில் எழுதும் போது அந்த படிமத்தின் பெயரையே பயன்படுத்தி பார்தேன் ஆனால் படம் வரவில்லை. ரசினிகாந்து போன்ற நடிகர்களின் ஆங்கில மற்றும் தமிழ் விக்கிப்பீடியாக்களில் ஒரே படிமம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை எவ்வாறு செய்வது? - கிருஷ்ணபிரசாத் 12:49, 31 சூலை 2011 (UTC)Reply

இதற்கான விளக்கத்தை நண்பர் சோடாபாட்டில் தங்கள் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கத்திலேயே அளித்திருக்கிறார். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:01, 31 சூலை 2011 (UTC)Reply


என்னுடைய கட்டுரைகள் முன் அறிவித்தல் இன்றி நிக்கபடுகின்றது ஏன் --Msmasfaq (பேச்சு) 02:25, 2 ஏப்ரல் 2012 (UTC)

நகர்த்தல் தொகு

வழிமாற்றில்லாமல் பக்கங்களை நகர்த்தும் போது (redirect suppressed) இணைப்புகள் முறிகின்றனவா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் (இடது புறம் கருவிப்பெட்டியில் உள்ள “இப்பக்கத்தை இணைத்தவை” சுட்டியைக் கொண்டு). அழிக்கப்பட்டும் தலைப்புக்கு இணைப்புகள் இருப்பின், அப்பக்கங்களில் இணைப்பை சரி செய்து விட்டு பின் வழிமாற்றின்றி நகர்த்துங்கள். இல்லையெனில் ஒரு வழிமாற்றை விட்டு நகர்த்துங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 04:37, 1 ஆகத்து 2011 (UTC)Reply

விஷ்ணுவின் பெயர்கள் என்ற பகுப்பைப்பற்றி நிர்வாகிகளின் கவனத்திற்கு தொகு

'விஷ்ணுவின் பெயர்கள்'என்பதால் இது எதோ வைணவசமயத்தின் கொள்கைகள் என்ற எண்ணம் வரும். விஷ்ணு சஹஸ்ரநாமம் வைணவர்களின் தனிச்சொத்து அல்ல. இந்து சமயத்திற்கே பொதுவானது.ஆதி சங்கரர் அதற்கு பாஷ்யம் எழுதியதிலிருந்தே தெரிய வரும்.

இதே ரீதியில் போனால் நாளை 'சிவனின்' பெயர்கள், அம்பாளின் பெயர்கள், முருகனின் பெயர்கள் என்ரு தனித்தனியே பகுப்பு வைக்கவேண்டி வரும்.

'கடவுளின் பெயர்கள்' என்று வைப்பதே சரி. இந்து சமயத்தில் பழைய நூற்றாண்டுகளில் (11, 12, 13வது), வைணவம், சைவம், சாக்தம், என்ற வித்தியாசங்கள் இருந்தது உண்மை. ஆனால் தற்காலத்தில் அவ்வித்தியாசங்கள் இல்லை. மேலும் நாம் த.வி. மூலம் இந்த வேறுபாடுகளை வளர்ப்பதற்கு காரணமாகக்கூடாது.

இந்து சமூகத்திலும் யாரும் இவைகளை விஷ்ணுவின் பெயர்கள் என்று சொல்வதில்லை. 'பகவந்நாமம்' என்றுதான் சொல்கிறார்கள்.

தயவு செய்து 'கடவுளின் பெயர்ப்பெருமை' என்று பகுப்பின் பெயரை மாற்றவும். அப்படிச்செய்தால், எல்லாக்கடவுளின் முக்கிய பெயர்களும் இதில் அடங்கிவிடும். பார்க்கப்போனால் எல்லாக்கடவுளின் பெயர்களும் ஒரே பொருளைக்கொடுப்பது தெரியவரும்.

--Profvk 00:57, 8 ஆகத்து 2011 (UTC)Reply

விஷ்ணு என்பவர் வைணவக் கடவுளாக முன்பு கொள்ளப்பட்டிருந்தாலும் தற்போது இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகத்தான் அறியப்படுகிறார். தற்போது சைவம், வைணவம் என்பது போன்ற பிரிவுகளில் தீவிரமோ, இதைக் கொண்டு பாகுபாடுகளோ அதிகம் இல்லை. எனவே தங்கள் பயம் தேவையற்றது. ஆதிசங்கரர் காலத்தில் இந்து சமயத்தில் மட்டும் 72 பிரிவுகள் இருந்தன. இந்தப் பிரிவுகளால் இந்து சமயம் அழிந்து போய்விடக் கூடாது என்பதற்காக அந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பல பிரிவுகளை இணைத்தும், சில பிரிவுகளைத் தவிர்த்தும் முடிவில், "சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்” என்று வகைப்படுத்தினார். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட ஆறு பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் இறைவன் ஒருவனையே சாரும் என்றும், இவையனைத்தும் சேர்ந்து “ஷண்மதம்” என்றும் சொன்னார். இந்த ஷண்மதம் தான் இந்து மதம் என்பதாகி விட்டது. எனவே தங்களின் வேறுபாடுகள் தோன்றிவிடுமோ என்கிற பயம் தேவையில்லை. மேலும் சிவனின் பெயர்கள், அம்பாளின் பெயர்கள், முருகனின் பெயர்கள், கணபதியின் பெயர்கள் என்பது போன்ற பகுப்புகள் உருவாக்கப்படுவதும் நல்லதுதான். இது தமிழ் விக்கிப்பீடியாவிற்குள் வருபவர்கள் இந்து சமயக் கடவுள்களின் பெயர்களை அவர்கள் விரும்பும் விதங்களில் வேகமாகப் பார்வையிடுவதற்கு உதவும். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:51, 8 ஆகத்து 2011 (UTC)Reply

தொங்கு பாலம், தொங்குபாலம் எது சரி? தொகு

தொங்கு பாலம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத நினைக்கின்ரேன். இதில் ஒரு சிறு சந்தேகம். தொங்கு பாலம், தொங்குபாலம் இவற்றுள் எந்தப் பெயரில் கட்டுரையை துவக்க வேண்டும்? -- கிருஷ்ணபிரசாத் 15:10, 3 ஆகத்து 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Theni.M.Subramani,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

மனுவந்தரம் தொகு

மனுவந்தரத்தில் என்ன பிரச்சினை?--தென்காசி சுப்பிரமணியன் 11:06, 11 ஆகத்து 2011 (UTC)Reply

தாங்கள் எழுதிய மனுவந்தரம் கட்டுரையில் அது குறித்து முழுமையான தகவல்கள் இருந்தால் பரவாயில்லை. இந்துக் காலக் கணிப்பு முறை எனும் கட்டுரையில் அனைத்துத் தகவல்களும் அட்டவணைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளது. நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் இக்கட்டுரையிலேயே இருக்கின்றன.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:32, 11 ஆகத்து 2011 (UTC)Reply

பொறுக்கவும் தொகு

  • Theni.M.Subramani,நீங்கள் இதை வளர்த்தெடுக்கும் என்னத்தில் இட்டுள்ளீர்கள் என்பதை நான் அறியவில்லை.
  • மேலும் 20 கட்டுரைகளை மட்டும் எழுதிவிட்டு நான் மட்டும் கட்டுரை எழுதுகிறேன் என்று நான் நினைக்கவில்லை.
  • பொதுவாக விரிவாக்கப்பட வேண்டிய கட்டுரைக்கு அதற்கான வார்ப்புருவை தானே இடுவர். வார்ப்புரு இடப்படுமுன் நீங்கள் காரணத்தை குறிப்பிடவில்லை.
  • இதற்கு முன்னும் சித்தர் நூல்கள் பற்றிய கட்டுரை அடைப்புக்குறிக்குள் தக்க காரணம் குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்டது. அதற்கு நான் ஒன்றும் கூறவில்லை.
  • மேலும் under construction வார்ப்புருவை இடாதது என் தவறே. அந்த வார்ப்புருவை பற்றி ஏற்கனவே கூறியிருந்தீர்கள்.
  • உங்கள் தரத்தை பற்றி நான் எதுவும் கூறவில்லை. திடுமென காரணம் கூறாமல் புதியவர்களுக்கு எதையும் செய்ய வேண்டாம் என்பதே என் கருத்து.தென்காசி சுப்பிரமணியன்

Invite to WikiConference India 2011 தொகு

 

Hi Theni.M.Subramani,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011


அய்யா எனக்கு புகை படம் தான் பதிவு ஏற்றகூடாது என்று தெரியும் , இந்த மாதிரி நம்பக தகுந்த ப்ளாக் இல் இருந்து எடுக்கலாம் என்று நினைத்தேன் . நான் பலவற்றை பல ஆவன புத்தகங்களில் இருந்து , வரலாறு புத்தகங்களில் இருந்து தான் எடுத்து விக்கியில் இடுகுறேன் , ஆனால் அப்படியே போட கூடாது என்று இப்போது தான் தெரிகிறது , நான் தற்போது தான் விக்கியில் வந்து எழுதுபவன் , எனவே இதனை போல சிறு தவறுகள் ஏதேனும் செய்தால் தெரிவியுங்கள் , மாற்றி கொள்கிறேன் .. --rajanaicker

சீகன் பால்க் வெளியிணைப்பு தொகு

சுப்பிரமணி, பயனர்கள் நாம் நடத்தும் வலைத்தளங்கள்/ வலைப்பதிவுகளுக்கு வெளி இணைப்புகள் தர வேண்டாம் என்று விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் கொள்கை உள்ளது. விளம்பரத்துக்காக இணைப்பவர்கள், விக்கிப்பீடியாக்காரர்கள் நீங்கள் மட்டும் இணைத்துக் கொள்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுவதால், நமது இணைப்புகளை நாம் தரக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். எனவே சீகன் பால்க் கட்டுரையிலிருந்து முத்துக்கமலம் வெளி இணைப்பை மீண்டும் எடுத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:20, 18 ஆகத்து 2011 (UTC)Reply

சோடாபாட்டில், தங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.முத்துக்கமலத்தில் வெளியான கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரையை விரிவுபடுத்தலாமா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:33, 18 ஆகத்து 2011 (UTC)Reply

ஆம் மேற்கோளாக/உசாத்துணையாக சுட்டிவிட்டால் ஒரு சிக்கலும் இல்லை.--சோடாபாட்டில்உரையாடுக 12:47, 18 ஆகத்து 2011 (UTC)Reply
நன்றி. அப்படியே செய்துவிடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:50, 18 ஆகத்து 2011 (UTC)Reply

புதுப்பயனர் வரவேற்பு - ஐபிக்கு வேண்டாம் தொகு

தேனி சுப்ரமணி, நீங்கள் புதுப்பயனர் வரவேற்புகளில் ஐபி முகவரிகளுக்கு இடுவது தேவையற்றது என்று கருதுகிறேன். குறிப்பிட்ட ஐபிக்கள் டயனமிக்காக இருப்பதால் அதே பயனருக்கு அதே ஐபி கிடைப்பதும் அவர் மீண்டும் தவிக்கு வருவதும் மிகவும் அரிது. மற்றபடி புதிய கணக்குகளில் மட்டும் புதுப்பயனர் வார்ப்புருக்கள் இடுவது நல்லது. -- மாகிர் 14:24, 18 ஆகத்து 2011 (UTC)Reply

தீரன் சின்னமலை தொகு

அய்யா தீரன் சின்னமலை பற்றிய கட்டுரை படித்தேன் , அதில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான செய்திகள் எந்தவிதமான மேற்கொள்ளும் இல்லாததாக தான் உள்ளது .. அதில் மேற்கோள் என்று ஒரு பதிவை வெளி இனிப்பாக வேய்துள்ளார்கள் அது அவர்களின் சமுதாயத்தினரால் எழுதுபட்டவை .. ஆங்கிலேயர்க்கு போராடினார் என்பது உண்மையா இருந்தாலும் .. கரும்புள்ளி , செம்புள்ளி குத்தினார் போன்ற பல விஷயங்கள் வரலாற்றிலேயே இல்லாததாக உள்ளது . சின்னமலை பற்றிய ஆங்கிலேய ஆவணங்களில் இருந்தால் அதனை மட்டுமே போடுவது தான் வரலாறு ஆகும் ,, சாதியை பற்றி போடும் பொழுது அதில் ஏற்றம் சொன்னால் பரவா இல்லை .. ஆனால் இதனை போன்ற செய்திகள் வரலாறு . தவறான வரலாறை போடுவது தவறான செய்தியை கொண்டு செல்வதற்கு அமையும் .. வரலாற்று மாணவன் என்ற முறையில் என் கருத்தை சொல்கின்றேன் ,, அதில் தவறு இருந்தால் அதனை மாற்றி தகுந்த வரலாற்றை மாற்றி பதிவு செய்யும்படி கேட்டுகொள்கிறேன் . நன்றி அய்யா .. -raja naicker

ராஜா, தங்களுடைய கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. ஆங்கிலேய ஆவணங்களில் இருப்பது மட்டுமே உண்மை என்பது போல் உங்கள் கருத்து உள்ளது. தீரன் சின்னமலைக் கட்டுரையில் கட்டுரைக்கு ஆதாரமாக சில மேற்கோள்கள் சுட்டப்பட்டுள்ளன. தாங்கள் வரலாற்று மாணவர் என்பதால் இது குறித்த மேலும் நல்ல கருத்துக்களைச் சேர்க்கலாம். தவறு இருக்கும் நிலையில் அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். இந்த உரையாடல் பகுதி அப்படியே தீரன் சின்னமலை கட்டுரையின் உரையாடலுடன் இணைக்கப்படுகிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:46, 26 ஆகத்து 2011 (UTC)Reply

இரண்டு மேற்கோள்கள் அக்கட்டுரையில் உள்ளது , அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார் ஆனால் ஆங்கிலேயர்களை கரும்புள்ளி , செம்புள்ளி குத்தி அனுப்பினார் என்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லையே ???.. அவர்கள் குறிப்பிட்ட அந்த மேற்கோள் அவர்களின் சமுதாயத்தினரால் எழுதப்பட்ட பி.டி .எப். file தானே? . அதை எவ்வாறு உண்மை என்று எடுத்துகொள்வது ???.. ஆதாரம் வேறு எந்த இதுவும் இல்லை அல்லவா ??.. அதனால் சொன்னேன் அய்யா .. --raja naicker

உங்களுக்குத் தெரியுமா திட்டம் தொகு








நன்றி தொகு

தங்கள் அழைப்பிற்கு நன்றி! --இராஜ்குமார் 19:03, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை தொகு




தமிழ் விக்கி ஊடகப் போட்டி தொகு

ஆலமரத்தடியில் தங்கள் கருத்தினைத் தெரிவித்தற்கு நன்றி. அனைவரது கருத்துகளையும் உள்வாங்கி போட்டிக்கான திட்ட முன்மொழிவைத் தயாரித்துள்ளேன். அது குறித்த உங்கள் கருத்துகளை - இப்பக்கத்தில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:21, 4 அக்டோபர் 2011 (UTC)Reply

உங்களின் உதவி தேவை... தொகு

நாகை ஸ்ரீராம் எனும் பெயரில் ஒரு கட்டுரையை 28.10.2011 அன்று எழுதினேன். அந்தக் கட்டுரை இன்னமும் ஆங்கிலக் கட்டுரையுடன் தொடர்புபடுத்தப்படவில்லை (not yet linked with english article). எனக்கு உதவுங்கள்.

செய்துவிட்டேன். நீங்களே கூட செய்துவிடலாம். கட்டுரையின் கடைசி வரியில் நான் இணைத்த வரியினைக் காணுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 12:40, 4 நவம்பர் 2011 (UTC)Reply

உங்களின் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி. 'தொடர்புபடுத்தலை' (linking the article with other language) நிர்வாகிகள்தான் செய்யவேண்டும் என இதுவரை நினைத்திருந்தேன். இனிமேல் இந்த வேலையை நானே செய்துகொள்வேன்.--பயனர்:Selvasivagurunathan m

ஊடகப் போட்டி சோதனை தொகு

சுப்பிரமணி,

ஊடகப் போட்டி ஏற்பாடுகள் முடிந்து விட்டன. வலைவாசலையும், பதிவேற்றத்தையும் சோதித்துப் பார்க்க வெளிச் சோதனையாளர்கள் தேவைப்படுகின்றனர் :-). எனவே வலைவாசல்:ஊடகப் போட்டி வழியாக காமன்சு போய் பதிவேற்றி ஏதேனும் முறிந்துள்ளதா, சிக்கல் உள்ளதா என்று சொதித்துப் பார்க்க வேண்டுகின்றேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:23, 8 நவம்பர் 2011 (UTC)Reply

தலப்பாக்கட்டி என்ற பெயர் திண்டுக்கல்லில் இருந்து தான் தொடங்கியதா? இன்று தான் அதை சாப்பிட்டுவிட்டு கடைக்காரரிடம் பெயர்காரணம் வினவ அவ்ர் தெரியவில்லை என்றுவிட்டார். பார்ப்பதற்கு சேக் போல் இருந்தார். கடைப்பெயர் சென்னை ராவுத்தர் தலப்பாக்கட்டி பிரியாணி, சோழிஙகநல்லூர்.--தென்காசி சுப்பிரமணியன் 08:15, 28 நவம்பர் 2011 (UTC)Reply

தென்காசி சுப்பிரமணி, நான் திண்டுக்கல் செல்லும் போது சில நாட்கள் தலப்பாகட்டி பிரியாணிக் கடையில் பிரியாணி சாப்பிட்டு இருக்கிறேன். (விலை சற்று கூட) அவர்கள் சொன்ன தகவலைக் கொண்டு குறுங்கட்டுரையாக இடம் பெறச் செய்தேன். திண்டுக்கல்லில் வேலு பிரியாணியும் பிரபலம்தான். இன்றும் அசைவ சாப்பாடுகளுக்கு மதுரை முனியாண்டி விலாஸ்தான் முதலிடம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:35, 28 நவம்பர் 2011 (UTC)Reply

எங்களூரில் பிரியாணி தயாரிக்கும் முறையை பார்க்கும் போது இந்த 'தலப்பாக்கட்டி' என்பதின் பொருள் புலப்படுகிறது. இதன் மூலம் 'தலைப்பாகைக்கட்டி' என்பதாக இருக்கலாம். நீண்ட துணியை தலையில் வட்டமாக சுற்றி தலைப்பாகை கட்டுகிறோம். இதே போன்று ஒரு செயல் பிரியாணி தயாரிப்பதில் இருக்கிறது. வாயகன்ற பாத்திரங்களை அடுப்பிலேற்றி அடியில் கட்டை விறகுகளில் தீயூட்டி பிரியாணி தயாரிப்பர். நன்றாக உணவு வெந்ததும் அடியில் எரியும் தீயை அகற்றிவிடுவர். பின்னர் சற்று குழிவான பெரிய மூடிகளைக்கொண்டு சமைக்கும் பாத்திரத்தின் வாயை மூடி அதன்மேல் அடுப்பிலிருந்தே எடுத்த நெருப்புத்துண்டுகளை தலைப்பாகை கட்டுவதுபோன்று தாராளமாக வட்டமாக இட்டுக்கொண்டு வருவர். இந்த நிலையில் பிரியாணி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் இருந்தபிறகுதான் உணவைப் பரிமாறுவார்கள். இந்த செயலால் பிரியாணி உடனே சூடாறாமல் மிகக் குறைவான வேகத்தில் சூடாறி மேலும் பக்குவமடைகிறது.மணம் வெளியேறி வீணாவதில்லை. மணமும் சுவையும் சரிசமானமாக பிரியாணி முழுவதும் ஈர்க்கப்பட்டு மிகச்சிறந்த உணவாகிறது. இதனால்தானோ என்னவோ தலப்பாக்கட்டி பிரியாணி என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் அது வியாபார சின்னமாக மாறிவிட்டிருக்கும் !?--Jambolik 16:07, 9 திசம்பர் 2011 (UTC)Reply

அடுத்த முறை திண்டுக்கல் சென்றால் விசாரிக்க வேண்டும். விவரம் அறிந்தால் கட்டுரையில் அத்தகவலைச் சேர்த்து விடுவோம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:30, 9 திசம்பர் 2011 (UTC)Reply

விக்கிஅகாடமி தொகு

சிவகாசி பி.எஸ்.ஆர். பெண்கள் பொறியியற்கல்லூரியில் விக்கிஅகாடமி ஒன்று டிசம்பர் 30 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. நீங்கள் அங்கு விக்கிப்பீடியா குறித்த அறிமுகத்தைச் செய்ய இயலுமா? தயவுசெய்து தெரிவிக்கவும். இதுகுறித்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. :) நன்றி. --சூர்யபிரகாசு உரையாடுக... 11:30, 22 திசம்பர் 2011 (UTC)Reply

  • பத்து நாட்களுக்கு முன்பே சோடாபாட்டில் எனக்கு இதுகுறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அன்று என் மனைவிக்குப் பல்கலைக்கழகத் தேர்வுகள் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்துவிட்டேன். தகவலுக்கு நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:49, 22 திசம்பர் 2011 (UTC)Reply

நன்றி தொகு

தங்கள் அழைப்பிற்கு நன்றி! --[[பயனர்:|பாரதி.மாதவன் ]] 19:03, 12 சனவரி 2012 (UTC)

Return to the user page of "Theni.M.Subramani/தொகுப்பு 3".