ஊக்கத்திற்கு நன்றி தொகு

டெரன்ஸ், தயக்கத்துடன் தொடங்கிய எனக்கு உங்களை போன்றோறின் ஊக்கம் நம்பிக்கையுடன் பங்களிக்க உதவுகின்றது.

டெரென்ஸ்பாட் தொகு

டெரென்ஸ், உங்கள் தானியங்கி மூலம் செயல்படாத வெளி இணைப்புக்களைக் கண்டறிந்து தந்ததற்கு நன்றி. ஒரு படி மேலே போய் இத்தகைய இணைப்புக்களுக்கு இணையான இணைய பரண் இணைப்புகளைத் தருவிக்கும்படி செய்ய முடியுமா? (எ.கா. http://web.archive.org/web/20060426071327/http://eks.brownmajik.com/2006/02/09/when-will-gmail-give-me-3-gb/ ) -- Sundar \பேச்சு 07:02, 15 மே 2007 (UTC)Reply

மீண்டும் வரவேற்பு தொகு

டெரன்ஸ், விக்கி விடுமுறையைப் பயனுள்ள முறையில் களித்திருப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். விக்கிக்கு மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.--Kanags 11:45, 4 ஆகஸ்ட் 2007 (UTC)

மீண்டும் நல்வரவு! விக்கி மீண்டும் களை கட்டுகின்றது என்று நினைக்கின்றேன். உங்கள் படிப்பு வெற்றியடைந்து நோக்கி வாழ்த்துக்கள். --Natkeeran 13:29, 4 ஆகஸ்ட் 2007 (UTC)
மீண்டும் நல்வரவு டெரன்ஸ்! வரும் சில கிழமைகள் என் பங்களிப்புகள் மிக அருகியே இருக்கும், ஆகையால் உடனே மறுமொழி தர இயலாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் ஆக்கங்களை ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் நண்பர்களுள் நானும் ஒருவன். --செல்வா 12:23, 6 ஆகஸ்ட் 2007 (UTC)

சிறு மாற்றம் தொகு

ஆங்கிலத்தில் பகுப்பிடுவதற்குப் பதிலாக பகுப்பு:கொடி வார்ப்புருக்கள் என்பதைப் பயன்படுத்தலாமே... சில மாற்றங்கள் செய்தேன். சரிபாருங்கள். நன்றி. --கோபி 15:50, 14 செப்டெம்பர் 2007 (UTC) அப்படியே செய்கிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 15:54, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply

டெரன்ஸ், எந்தப் பகுப்பு மாற்றங்களைக் குறிப்பிடுகிறீர்களென விளங்கவில்லை.... --கோபி 16:04, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply
ஓரிரு மாற்றங்களைச் செய்தேன். மேலும் நிரோ உருவாக்கிய திரைப்படக் கட்டுரைகளில் காலநீளம் . எனப் பல இடங்களில் வருகிறது. குறிப்பில்வழிப் பக்கம் வழியே நகரும்போது பலதடவை திரைப்படக் கட்டுரைகள் வருவதால் பலதடவை திருத்தினேன். உங்கள் தானியங்கியால் அந்தப் புள்ளிகளை அகற்ற வழியுண்டா? --கோபி 16:09, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply

மிக்க நன்றி. நான் இதுவரை நேரம் வீணாக்கிவிட்டேன்...:( --கோபி 16:13, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நன்றி! மேலும் ஓர் உதவி! தொகு

டெரன்ஸ், இந்தியப் பெருங்கடல் என மாற்றம் செய்ததற்கு நன்றிகள்!

மேலும் ஓர் உதவி வேண்டும். கிரேக்க மொழி, இலத்தீன் ஆகிய கட்டுரைகளில் பயன் படும் வார்ப்புருவாகிய வார்ப்புரு:Infobox Language என்பதில் The number of speakers என்ன்னும் வரியும், மொழிக்குடும்பம் என்பதும் ஏனோ சரியாக இணைப்பு பெறாமல் உள்ளது. அதனை சற்று சரி செய்து தர இயலுமா? முன்கூட்டியே என் நன்றிகள். --செல்வா 14:21, 20 செப்டெம்பர் 2007 (UTC)Reply

மிக்க நன்றி, டெரன்ஸ்! உங்கள் சீனப் பயணம் வெற்றியுடன்/பயனுடன் நிகழ வாழ்த்துகிறேன். அக்டோபர் 30க்குப் பின் பார்க்கலாம். அதற்குள் பெரும்பாலான நாடுகள் பற்றி தகவற்சட்டத்துடன் ஒரு சிறு தொடக்கமாவது நிறைவேறும் என்று நம்புகிறேன்.--செல்வா 19:36, 20 செப்டெம்பர் 2007 (UTC)Reply

உலகக்கோப்பை?? தொகு

2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் என்ற கட்டுரையில் உலகக்கிண்ணம் என்பதைவிட உலகக்கோப்பை என்பது பொருந்தும் என்பது என் தாழ்மையானக் கருத்து! (விக்கிபீடியாவில்தான் இலங்கைத் தமிழ்யன்பர்களின் தமிழ்வழக்கை நான் அறிகின்றேன் என்பதினால் எனக்கு சிற்சில வார்த்தைப் பயன்பாடுகள் புதிதாய் இருக்கின்றன, ஆதலின் இவ்வாறான என் கருத்துக்களை பொருத்தருள்க) :-) -நரசிம்மவர்மன்10 05:50, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நாட்டு தகவல் சட்டங்கள் தொகு

நாட்டு தகவல் சட்டங்கள் கட்டுரையின் தொடக்கத்தில் பெரிய இடைவெளியே விடுகின்றன. எ.கா கனடா அமெரிக்கா போன்ற நாடுகளின் தகவல் சட்டங்கள். எப்படி சரிசெய்வது என்று தெரியுமா? --Natkeeran 00:12, 26 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நன்றி. --Natkeeran 02:25, 29 செப்டெம்பர் 2007 (UTC)Reply

விக்கி நாடுகள் திட்டத்தை பல வழிகளில் ஒருங்கிணைவு செய்து வருகின்றீகள் என்பதால், உங்களை அத்திட்டம் நோக்கி தொடர்பாக மேற்கண்ட பக்கத்தில் குறித்துள்ளேன். ஆட்சோபனை எதுவும் இருந்தால் தெரியப்படுத்தவும். நன்றி. --Natkeeran 16:04, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply

தரமறிதல் முறைகள் தொகு

டெரன்ஸ், ஆங்கில விக்கியில் உள்ள தரநிலைகளை ஓரளவிற்கு அறிவேன். ஆனால் அம்முறையைக் கையாண்டால் நன்றாக இருக்குமா அல்லது 1-5 நாள்மீன்கள் வரை இட்டு தெரிவித்தால் நன்றாக இருக்குமா என அறியேன் நாள்மீன்கள் படத்தில் கூட, 2 நாள்மீன்கள் பெறும் சின்னத்தை 5 நாள்மீன்களில் இரண்டு நாள்மீன்கள் மட்டும் நிரப்பி இருக்குமாறு செய்யலாம். (அதாவது எத்தனை நாள்மீன்கள் இந்த தர அளவீட்டின் எல்லையாக உள்ளது என்பது தெரியுமாறு). இப்படி தரநிலைகளைக் குறித்தால் எப்படி இருக்கும் என்று சோதனை செய்து பார்க்கவே இட்டேன். இன்னும் தரநிலைகளை முறையாக பதிக்கத் தொடங்கவில்லை. ஆங்கில விக்கியில் இருப்பதுபோலவே தரங்களைத் தேர்வு செய்யலாம் (ஆனால் அங்கே 6 நிலைகள் உள்ளன: FA, GA, G, B, Start, Stub; அப்படியும் செய்யலாம்). பொதுவாக பயனர்களும், நிர்வாகிகளும் (ஆளுநர்?), அதிகாரிகளும் (மேலாளுநர்?) கலந்து முடிவெடுத்தால் செயல்படுத்தலாம். ஒரு கட்டுரை வார்ப்புரு:4 நாள்மீன் நிலைக்கு வந்த பிறகே கட்டுரையில் செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றி கருத்தாடும் தேவை இருக்கும் என நினைக்கிறேன் (கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க, 5 நாள்மீன் தரக் கட்டுரைகாக்கும் நோக்கில்). இன்னும் இது பற்றி கலந்துரையாட வேண்டும் என நினைக்கிறேன். கட்டுரைகளின் தரநிலைகளைக் குறிப்பது மிகவும் தேவை என நான் நினைக்கிறேன். நீங்கள் செய்த 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் கட்டுரை மிக அழகாக அமைந்து இருந்தது; உங்கள் சூறாவளி டீன் (2007) நன்றாக அமைந்து இருந்தது. இப்படி எத்தனை கட்டுரைகள் உள்ளன என்று அறிய வேண்டும். தரநிலை பதிவு செய்வது பற்றி முடிவு செய்தால் நீங்கள் கூறுவதுபோல தரநிலைகள் எப்படி தேர்வு செய்தல் நலம் என்று எழுதி முறைப்படுத்தலாம். --செல்வா 04:01, 12 அக்டோபர் 2007 (UTC)Reply

ஆபிரிக்க யானை தொகு

பல தகவல்களை நீக்கி விட்டீர்கள். இந்தக் குறிப்பிட்ட கட்டுரையில் தரப்பட்ட தகவல்களை பயன்படுத்தி கட்டுரையை மேம்படுத்தலாம் என்று தோன்றுகின்றது. அவற்றை பேச்சு பக்கத்திலாவது சேர்ப்பது நன்று. --Natkeeran 00:31, 13 அக்டோபர் 2007 (UTC)Reply

நன்றி. நல்ல ஒரு கட்டுரை. ஆர்வமாக இருக்கின்றது. உசாத்துணைகள் இணைப்படவில்லை :-( பின்னர் அதைப் பயன்படுத்தி மேலும் விரிவுபடுத்திவிடுகிறேன். --Natkeeran 00:53, 13 அக்டோபர் 2007 (UTC)Reply

நாட்கள் தொகு

டெரன்ஸ், எனது திடீர் சுகவீனம் காரணமாக விக்கி பக்கம் கடந்த ஒரு வார விக்கி பக்கம் வர முடியவில்லை. இன்னும் இரு மாதங்களுக்கு எனது பங்களிப்பு மிகவும் மட்டுப் படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும். முதற்பக்க நாட்கள் கட்டுரைகள் இரண்டு நாட்கள் இற்றைப் படுத்தப்படாமல் இருந்தன. அவற்றைக் கவனித்து இற்றைப் படுத்தியமைக்கு மிக்க நன்றிகள். என்னால் இயன்றவரையில் இற்றைப் படுத்த முயல்கிறேன். நீங்களும் மற்றைய பயனர்களும் அவ்வப்போது கவனித்து அவற்றை இற்றைப் படுத்தினால் நல்லது. நன்றி.--Kanags 23:23, 17 அக்டோபர் 2007 (UTC)Reply

நடப்பு நிகழ்வுகள் வார்ப்புரு தொகு

டெரன்ஸ், நடப்பு நிகழ்வுகளுக்கான வார்ப்புருக்களை அமைத்தமைக்கு நன்றிகள். இவை மிகவும் பயனுள்ள வார்ப்புருக்கள். முக்கியமாக ஈழப்போர்ச் செய்திகளுக்கான வார்ப்புருக்கள்.--Kanags 12:35, 24 அக்டோபர் 2007 (UTC)Reply

நன்றி தொகு

அண்மைய நாட்களில் மிக வீரியமாகப் பல விதங்களில் பங்களிக்கிறீர்கள். காண நிறைவாக இருக்கிறது. நன்றி.--Ravishankar 19:15, 24 அக்டோபர் 2007 (UTC)Reply

நடவடிக்கை பகுதி நீங்கள் எழுதியதா, மொழி பெயர்ப்பா தொகு

ஏன் என்றால் தகுந்த மூல ஆதாரத்தை முன்னிறுத்துவது நன்று. இதை நீங்கள் நன்றாக செய்துவருகின்றீர்கள் என்று தெரியும். இருப்பினும் ஒரு குறிப்புக்கு. நன்றி. --Natkeeran 14:30, 27 அக்டோபர் 2007 (UTC)Reply

பிரச்சினையில்லை, நானும் மேலும் சில உசாத்துணைகள் சேர்க்க வேண்டும். நன்றி. --Natkeeran 14:50, 27 அக்டோபர் 2007 (UTC)Reply

நான் சில உப தலைப்புகளை இணைத்துள்ளேன். பொருத்தம் இல்லாவிடில் நீக்கிவிடவும். இரண்டு நிரையாக அட்டவனைப்படுத்தியதும் நன்று. நன்றி. --Natkeeran 12:21, 28 அக்டோபர் 2007 (UTC)Reply

ஆண்டு நிறைவுகள் தொகு

டெரன்ஸ், ஆண்டு நிறைவுகள் வார்ப்புரு நன்றாக உள்ளது. சில மாற்றங்கள் செய்துள்ளேன். தேவையில்லாத சிலவற்றை அழித்துள்ளேன். அவை தேவையென்று கருதினால் மீண்டும் தருவித்து விடுங்கள். மற்றும், முடிக்காதுள்ள ஆண்டு நிறைவுகள் சிலவற்றை தொகுப்பீர்களா? நவம்பர் 14 வரை உள்ளவற்றை நான் விரைவில் முடிக்கப் பார்க்கிறேன். நவம்பர் 15 இலிருந்தான நாட்களை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது முன்கூட்டியே எழுதத்தொடங்கினால் மிக விரைவில் அனைத்தையும் முடிக்கலாம். நன்றி.--Kanags 10:15, 29 அக்டோபர் 2007 (UTC)Reply

நன்றி டெரன்ஸ்.--Kanags 12:10, 29 அக்டோபர் 2007 (UTC)Reply

சௌமியமூர்த்தி தொண்டமான் தொகு

மொழிபெயர்ப்பு மட்டும் சில கட்டுரைகளுக்கு தகுந்தது அல்ல தொகு

த.வி.புலிகள் பற்றிய கட்டுரையை நீங்கள் விரிவாக்கியது ஒரு நல்ல முயற்சி. ஆனால் அது மிகவும் ஒரு வெளிப் பார்வை என்றே சொல்ல வேண்டும். கொலைகளும், அவர்களின் குற்றங்களும், முக்கியப்படுத்தப் பட்டது போல அதற்கு ஈடான மறுபர்க்க பார்வை தகுந்தவாறு தரப்படவில்லை. நேரம் இருக்கும் பொழுது ஈடுசெய்ய முயற்சிக்கிறேன். சில முக்கிய விடயங்களில் நாம் தகுந்த balance தருவதை அக்கறையுடன் கவனித்து கொள்தல் வேண்டும், அதுவே த.வி பொறுப்பான நம்பிக்கையான வளர்ச்சிக்கு உதவும். நான் சொல்வதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றேன். நன்றி. --Natkeeran 01:40, 9 நவம்பர் 2007 (UTC)Reply

டெரன்ஸ், உங்களுடைய நடுநிலைமையையோ அல்லது ஈழப்போர் பற்றிய அறிவையை கேள்விக்குட்படுத்துவது என்நோக்கமல்ல. எந்த விதத்திலும் தனிப்பட்ட ரீதியில் விமர்சித்து நான் அக்கருத்துக்களை சொல்லவில்லை. பொதுவாக அந்தக் கட்டுரை நடுநிலைமையோடு இருந்தாலும், முதல் வாசிப்பில் அது மிகவும் விமர்சனத் தன்மையாகவே எனக்கு தெரிகின்றது. ஈழப்போரை இந்திய அமைப்படைப் முன் பின் என்றோ, அல்லது உள் நாட்டு பிரச்சினை என்று சொல்வதோ நிச்சியம் கேள்விக்குட்படுத்தப்படும். ஒரு விதமாமக Frame பண்ணப் பார்க்கிறோம் என்று விமர்சனம் வரும். வந்திருக்கின்றது. இதை எப்படி அணுகுவது என்று தெரியாமல் இந்த விடயங்களை தவிர்க்க முற்பட்டது உண்மை. இங்கு த.வி தேவையற்ற இழுப்பறிக்குள் செல்ல நேரிடலாம். இருப்பினும் இயன்றவரை முயற்சி செய்வோம். நன்றி. -பயனர்:Natkeeran

டெரன்ஸ், உங்கள் மொழிபெயர்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அவதானித்தே வருகிறேன். நற்கீரனது ஆதங்கமும் நியாயமானதே. ஆனால் பல தகவல்கள் இணைக்கப்படுவதும் அது தொடர்பான விவாதங்கள் நடப்பதுவும் நல்லதே. ஆங்கில விக்கியில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான சகல கட்டுரைகளிலும் சில சிங்களப் பயனர்களே ஆதிக்கக்ம் செலுத்துகின்றனர். உதாரணத்துக்கு பிரபாகரன் பற்றிய கட்டுரையில் முதற்பகுதியே பொது அறிமுகமாக இல்லாமல் அவரைக் குற்றவாளி என நிறுவுவதாக உள்ளது. சூசை பற்றிய சிறு கட்டுரையில் மூன்று இடத்தில் பயங்கரவாதி என்பது பயன்படுத்தப்படுகிறது. ஒரு கலைக்களஞ்சியத்தின் தகவல்கள் மொழிக்கு மொழி வேறுபடாது தானே :-) உண்மையில் இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுவது விக்கிபீடியாவின் நம்பகத்தன்மையே. விக்கிபீடியா எப்பொழுதுமே ஒரு நடுநிலையான கலைக்களஞ்சியமாகாது என்பது நாமறிந்ததே. ஆனால் உங்களது மொழிபெயர்ப்புக் காரணமாக பல தகவல்கள் இங்கே ஆவணப்படுத்தப்படுகின்றன. நீங்கள் முழுவதுமாக விரிவாக்கியபின்னர் உரையாடலாமென்று இருந்தேன். நன்றி. கோபி 02:22, 9 நவம்பர் 2007 (UTC)Reply
திருத்தம்: பிரபாகரன் பற்றிய ஆ.வி.க் கட்டுரையில் Criminal indictments என்றபகுதி அண்மையில் கடைசிப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. கோபி 02:28, 9 நவம்பர் 2007 (UTC)Reply
டெரன்ஸ், கொல்லப்பட்ட, இடம்பெயர்ந்த, உடமைகள் அழிக்கப்பட்ட, சூறையாடப்பட்ட தமிழ் மக்கள் பற்றி தகவல்களை திரட்டுவதலும் உங்கள் பங்களிப்பை நல்கினால் நன்றாக இருக்கும் நன்றி. --Natkeeran 14:41, 10 நவம்பர் 2007 (UTC)Reply


டெரன்ஸ், பொதுவாக ஊடகங்களில் 64000 என்று (இப்போ மிக அதிகம்) என்று ஒரு தரவைத் தருவார்கள். பொதுவான ஊடகங்களில் கிடைக்கும் தகவல்களை corss - check செய்தால் சில அடிப்படைத் தகவல்களை சேர்க்கலாம். எ.கா: http://www.sangam.org/2007/11/Killed_1956_2007.php?uid=2619. இந்திய அகதி முகாம்களில் இருக்கும் மக்களின் தொகையை பற்றிய தகவல்களையும் பெறக்கூடியதாக இருக்கும். படுகொலைகளைப் பற்றிய தகவல்களை அக்கால பத்திரிகைகளை வைத்து சரிபார்க்கலாம். http://www.slmm.lk/, http://www.uthr.org/, http://www.tamilnet.com/ போன்ற இடங்களிலும் தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில விக்கிபீடியாவிலும் தகவல்கள் இருக்கின்றன. உங்களின் ஈடுபாட்டுக்கும், நல்நோக்கு அணுகுமுறைக்கும் நன்றி. --Natkeeran 15:49, 10 நவம்பர் 2007 (UTC)Reply


நன்றி டெரன்ஸ். நான் ஒரு balance approach தேவை என்பதை சுட்டவே மேலே அந்தக் குறிப்பை இட்டேன். உங்களின் நல்நோக்கையும், நடுநிலைமையையும் நான் நன்றே அறிவேன். இங்கு நான் இன்னுமொரு கருத்தையும் பகிர விரும்புகிறேன். மனிதனுக்கு இருக்க கூடிய அடிப்படைப் பிரச்சினைகள் எவை. முக்கியமான பிரச்சினைகள் எவை. தீர்வுகள் என்ன. என்று ஒரு மனித அடிப்படையிலான பொதுவான அறிவுத் திரட்டலே உங்களிடம் இருக்க கூடிய finite நேரத்துக்கும், வளச் செலுத்தலுக்கும் ஒரு நல்ல அடிப்படையாக் இருக்கும். அந்த வேலைத்திட்டத்தில் நாம் இருக்கும் சமூகத்தை நோக்கிய புரிந்துணர்வும், நிகழ் நேர தகவல் திரட்டலும் அடங்கலாம். நன்றி. --Natkeeran 16:18, 10 நவம்பர் 2007 (UTC)Reply


சில தகவல்கள் தொகு

சிங்கள அரசப் பேரினவாதம் அல்லது சிங்கள பேரினவாதம் என்ற சொற்தொடர் தமிழ் சொல்லாடடில் முக்கியம். தனிச் சிங்களச் சட்டம், பெளத்த சமயத்துக்கு முன்னுருமை, தமிழ் நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு, புரிந்துணர்வற்ற கல்வித் தரப்படுத்தல் அணுகுமுறை போன்றவை அடிப்படையில் தவறான கருத்தமைப்பையும், கொடிய விளைவுகளும் தந்தவை, தொடர்ந்து தருபவை. இவைற்றுக்கான ஒரு அடிப்படைக் காரணம் சிங்களப் அரசப் பேரினவாதம் ஆகும். புலிகளின் முதன்மையான எதிர்ப்பு இதை நோக்கியே கருத்தியல் நோக்கில் அமைகின்றது. இன்றைய இலங்கை அரசும் சிங்களப் அரசப் பேரினவாதமும் ஒன்றே. அல்லது சிங்கள பேரினவாதம் இலங்கை அரசில் அதிமிக்க செல்வாக்கு செலுத்துகின்றது. --Natkeeran 16:55, 10 நவம்பர் 2007 (UTC)Reply

சீர்பெற வேண்டுகிறேன் தொகு

அன்புள்ள டெரன்ஸ், நீங்கள் அண்மையில் "தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்டுள்ள சில கடினப்பாடுகள் காரணமாக விக்கியில் எனது பங்களிப்புகள் தை மாதம் வரையும் தடைப்படும்." என குறிப்பு இட்டிருந்தீர்கள். கடினப்பாடுகள் ஏற்பட்டுள்ளது அறிந்து மிகவும் வருந்துகிறேன். விரைவில் அவை அகன்றோ, தீர்ந்தோ, நலம் பெற்று சீர் பெற வேண்டுகிறேன். ஒப்பரிய பணி புரிந்து வரும் தங்களுக்கு இடர்ப்பாடுகள் என அறிந்து கவலையுறுகின்றேன். ஊக்கம் உடைமை உடைமை என்று எதிர்கொள்வீர்கள் என்று உறுதி கொள்கிறேன். மெதுவாக, பின்னர் இயலும்பொழுது த.விக்குப் பங்களிக்கலாம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், கவலை கொள்ளாதீர்கள். விரைந்து கடினப்பாடுகள் தீர வேண்டுகிறேன் -அன்புடன் --செல்வா 23:40, 4 டிசம்பர் 2007 (UTC)

பாராட்டுகள் தொகு

 
டெரன்ஸ் உங்கள் சீரிய பன்முகப் பணியைக் கண்டு பாராட்டி என் உவப்பை தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா

டெரன்ஸ் வாழ்க உங்கள் நல்ல தமிழுள்ளம். தமிழ் விக்கிக்கு உங்கள் பணி எத்தனைக் கோணங்களில் செழுமை அளித்துள்ளது என்று கண்டு வாழ்தி இப்பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். நீங்கள் ஆக்கித்தந்த வார்ப்புருக்களும், கிறிஸ்த்தவ தொடர்க் கட்டுரைகளும், நாடுகள் கட்டுரைகளும், துடுப்பாட்டப் போட்டி நிகழ்வுகளும், சூறாவளிக் கட்டுரைகளும் என்று எத்தனை ஆழமாகவும் விரிவாகவும் கட்டுரைகள் எழுதி ஆக்கம் தந்துள்ளீர்கள். தொடர்ந்து எங்கள் எல்லோருக்கும் ஆர்வம் ஊட்டி வழிகாட்டியாய் பணியாற்றி முன்னிற்க வேண்டுகிறேன். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் கடினப்பாடுகள் எல்லாம் இறைவன் திருவருளால் விரைவில் நீங்கி மகிழ்வுடன் தாங்கள் வாழ இறைஞ்சுகிறேன். அன்புடன் --செல்வா 18:26, 20 டிசம்பர் 2007 (UTC)


தாங்கள் இரண்டாம் உலகப்போர் பற்றிய கட்டுரைகளை உங்களுடைய பாணியில் அழகாக ஆழமாகவும் விரைவாகவும் ஆக்கி வருகிறீர்கள். கட்டாயம் ஆவணப்படுத்தப்பட வேண்டிய பகுதி. பாராட்டுக்கள் டெரன்ஸ்.--சிவகுமார் \பேச்சு 11:53, 16 ஜனவரி 2008 (UTC)

நத்தார் வாழ்த்துக்கள் தொகு

டெரன்ஸ், தங்களுக்கு எனது மகிழ்ச்சிகரமான நத்தார், புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.--Kanags 02:16, 25 டிசம்பர் 2007 (UTC)

டெரன்ஸ், இனிய நத்தார், புத்தாண்டு வாழ்த்துக்கள்! --செல்வா 15:20, 25 டிசம்பர் 2007 (UTC)

Dearest Trengarasu, how are you? I am wondering if you could help me translate a short version of this article for the Tamil Wikipedia, which you have helped to build. The introductory two or three sentences would be more than enough since a short stub-translation could provide the basis for future development. I would really appreciate it if you could help with this, even if it’s with a short 1 sentence stub. Thank you for any help you could provide, Angayarkarasi 16:02, 21 ஜனவரி 2008 (UTC)


பொதுவிக்கியில் உள்ள படங்கள் தொகு

பொதுவிக்கி (விக்கிகாமன்ஸ்) இல் உள்ள படிமங்களை இங்குள்ள படிமங்களுடன் ஒப்பிட்டு காமன்ஸில் உள்ளதால் இங்குள்ளதை நீக்கவேண்டுமா? காமன்ஸ் இல் இப்படிமம் நீக்கப்பட்டால் இங்கும் நீங்கிவிடுமே?. இங்கு நீக்குவது எல்லாவற்றையும் நிச்சயமாக மீள்விக்கலாம் ஆகவே தமிழ் விக்கிபீடியாவில் அளவு குறைவதற்கும் சாத்தியம் இல்லையென்றே நினைக்கின்றேன். பொதுவிக்கியில் உள்ள படிமங்கள் இங்கு இருந்தால் நீக்குவதன் காரணத்தை அறியலாமா?. இதைவிட கட்டுரை ஆக்கத்தில் பங்களிப்பது கூடுதல் பலனைத் தருமென்றே நான் நினைக்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்தே. --உமாபதி \பேச்சு 16:32, 2 பெப்ரவரி 2008 (UTC)


வார்ப்புரு இல்லா படிமங்களை பதிவேற்றுபவர்களுக்கு தானியங்கி மூலமாக எச்சரிப்பதற்காக வார்ப்புரு:image source என்ற வார்ப்புருவை ஆ.வி.யில் இருந்து மொழிப்பெயர்த்தேன். இதன் மொழிப்பெயர்ப்பை சரிபார்க்குமாறு வேண்டுகிறேன் βινόδ  வினோத் 15:16, 3 பெப்ரவரி 2008 (UTC)

மேலும் தானியங்கி மூலம், Commonsஇல் உள்ள படிமங்களை இங்கிருந்து நீக்கி விடலாம். தாங்கள் Manualஆக செய்வதை தானியங்கி மூலம் இதை செய்தால் நிறைய வேலை மிச்சம் ஆகும் என நினைக்கிறேன். அதே போல் அண்மைய பதிவேற்றங்களை கண்கானிக்கும் பொருட்டு, இரு நாட்களுக்கு ஒரு முறை தானியங்கியை ஏவி, சரியான வார்ப்புரு இல்லையெனில் பதிவேற்றியவருக்கு எச்சரிக்கை அனுப்பலாம் காண்க பயனர் பேச்சு:Vinodh.vinodh βινόδ  வினோத் 15:23, 3 பெப்ரவரி 2008 (UTC)

சில கட்டுரைகளில் வார்ப்புருவை மாற்றுதல்/வார்ப்புருவை மேம்படுத்தல் தொகு

தாங்கள் தொடங்கிய மலையகம் பற்றிய கட்டுரைகள் சிலவற்றில் {{புவியியல் அமைவு|7|22|0.0|N|80|37|0.0|E}}வார்ப்புருவை எடுத்துவிட்டு {{coor title dms|7|44|45|N|79|47|24|E|region:LK_type:landmark}}போன்ற வார்புருவைப் பயன்படுத்த விரும்புகின்றேன். ஒருதடவை அக்குரணை மற்றும் அரியாலை கட்டுரைகளைப் பார்க்கவும். அதில் பூமியைக் கிளிக் செய்ததும் தோன்றும் தேசப்படம் {{coor title dms|7|44|45|N|79|47|24|E|region:LK_type:landmark}} வார்புருவுடன் சிறப்பாக இயங்குவதால் மாற்ற விரும்புகின்றேன். அல்லது {{புவியியல் அமைவு|7|22|0.0|N|80|37|0.0|E}} வார்ப்புருவையே மாற்றிவிடலாமா? உங்களின் கருத்துக்களை அறியவிரும்புகின்றேன். --உமாபதி \பேச்சு 16:47, 3 பெப்ரவரி 2008 (UTC)


Please give you comments regarding the Functioning of my bot, for tagging those who upload images without copyright information at user talk:Mayooranathan.

I Strongly Suggest you automate your functions, which you do routinely by using bots, This may help to reduce you workload very much. Thank you βινόδ  வினோத் 18:08, 3 பெப்ரவரி 2008 (UTC)

---

As regards the enwiki template I thought it would time saving, to do so.Like you just give a regex check in the bot and the bot would do all the replacement in a jiffy. I copied this ides :-) of using this template(and also the template ofcourse) from the Hungarian Wiki(I am unaware if the knowledge of English is that much high in Hungaria, given the opposition from you), those guys do these stuff.

Another possiblity when there is a comment abt the source of the wiki, it would be better use a bot to tranfer the description automatically from the respective wiki source to ta wiki. Like when you have umpteen number of images, it takes too much of manual work around(Won't it be boring :-) and timeconsuming) to transfer if possible translate certain standard description like 'Photographed by so and so', 'own work of so and so' etc. (Fair use wiki's can be shortlisted for manual review and translation). Guys, try reducing the manual work around here, which could be used some other useful surface.

I Strongly suggest, that some one run the chekcimages.py script(ofcourse with some modification in the script) around here, atleast from now onwards, to check the image uploads. 90% of the images I have uploaded does not contain any info. It was due do to fact that, you guys weren't strict around here, so out of my laziness I left them out :-) . If I had done this in Commons or En wiki, I would have received a BOT warning to add the source in minutes. Due to Which I make a point to add sources, when uploaded to enwiki(..now tawiki ofcourse), without fail.

Also replacing image links, with image links available in commons, is yet another routine activity that can be automated.

Checking the images and placing a tag for replacement with the commons image automatically if the replica exists, is also possible, given the bot is operated by an admin. Same goes with removing images(Which is done only in commons I suppose, that too with bots which itself has admin flag), it can be done only by an Admin operated bot.

Also please consider using imagetransfer.py script, if not atleast upload.py script as it copies the images along with descriptions and templates, reducing again manual work.

Instead of just using the bots to add interwiki links or check broken links, I suggest using the other features that can be got by the usage of bots, which reduces manual work greatly.

Whether to use bots are not is one's personal decision, it depends how much one wishes to automate his/her own work which again depends on his/her work culture. I just wanted to say, what I felt frankly about the usage of bots.

Me operating a bot running this sort of script, must have been informed before hand. Since the same script is implemented in enwiki and commons, I just ran it over here. So I again aplogize for the inconvenience that has been caused by the 'unannounced' operation of my bot. If I want to run any other script, in future(?) whose operations may turn messy, I henceforth will report to the Village Pump and explain in features, gain the approval, and modify the script if any objections is raised and then run it.

Sayanora :-)) βινόδ  வினோத் 18:13, 4 பெப்ரவரி 2008 (UTC)

பாராட்டு தொகு

நடிகைகள் குறித்த கட்டுரைகளை உருவாக்கி கலைச்சேவை புரிவதற்கு பாராட்டுக்கள் ;) நடிகைகள் போன்ற நபர்கள் குறித்த கட்டுரைகளில் அவர்களின் முகத்தைத் தெளிவாகக் காட்டுவது போல் உள்ள close-up profile படங்களை முதன்மைப் படமாகச் சேர்க்கலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். --ரவி 17:32, 5 பெப்ரவரி 2008 (UTC)

terens, try installing chatzilla firefox extension and tben type irc://irc.freenode.net/tamil_wikimedia in the firefox address bar. i hope it should take you to the chat room. i am not a regular user of irc. so i am learning too. --ரவி 10:26, 7 பெப்ரவரி 2008 (UTC)


அபுதாபி (அமீரகம்) தொகு

டெரன்ஸ், அபுதாபி (அமீரகம்) கட்டுரையில் இருந்த வார்ப்புருவைச் சரி செய்ததற்கு நன்றிகள். நிலப்படத்தில் அபுதாபியின் அமைவிடத்தைக் குறிக்கும் புள்ளி வேறிடத்தில் வருகிறது. அதையும் சரிசெய்ய முடியுமா? மயூரநாதன் 04:09, 8 பெப்ரவரி 2008 (UTC)

மயுரநாதன் ஆங்கில விக்கியிலும் அவ்வாறுதான் வருகின்றது. ஆள்கூறு சரியாக இல்லையென நினைக்கின்றேன். ஓரளவு சரிசெய்துள்ளேன் முழுமையாக அல்ல.--உமாபதி \பேச்சு 04:25, 8 பெப்ரவரி 2008 (UTC)மேலே தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டேன் (பிழையாக விக்கிமினி ஆட்லஸ் என விளங்கிவிட்டேன்). டெரன்ஸ் திருத்தங்களைச் செய்தமைக்கு நன்றி.--உமாபதி \பேச்சு 05:16, 8 பெப்ரவரி 2008 (UTC)

படிமங்களை நீக்குதல் தொகு

தாங்கள், தெலுங்கு கட்டுரையில் இருந்த தெலுங்குத்தாயின் படிமத்தை நீக்கியுள்ளீர்கள். அந்த படிமம் ஃப்ளிக்கர் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது, என தெ.வி.யில் பார்த்தேன். மறுபதிவேற்றம் தகுந்த வார்ப்புருவை சேர்த்து விட்டேன். படிமங்களை நீக்கும் முன் பதிவேற்றியவர்களுக்கு தெரிவித்தீர்களானால், தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடுவர். எனவே இனி படிமத்தை நீக்கும் முன் பதிவேற்றியவருக்கு ஒரு அறிவிப்பு விடும் படி கேட்டுக்கொள்கிறேன் βινόδ  வினோத் 05:30, 14 பெப்ரவரி 2008 (UTC)

எனினும் தெ.வியில் காண்க http://te.wikipedia.org/wiki/బొమ్మ:Telugutalli_image.jpg Creative Commons 2.0 Attribution என உள்ளது. மேலும் புகைப்படத்தை எடுத்தவர், தெ.வியர். எனவே பொதுவில் விடக்கூடிய உரிமத்தை தான் அதற்கு அவர் கொடுத்திருப்பார் என நினைக்கிறேன். இல்லையெனில் கூறுங்கள், அவரிடம் வேறேதேனும் கீழ் இப்படிபத்தை இடுமாறு கேட்டுக்கொளிகிறேன் βινόδ  வினோத் 05:41, 14 பெப்ரவரி 2008 (UTC)

இருவரும் ஒருவர் தான் :-)). Non-Commerical Licenseஐ Deprecate செய்து விட்டார்கள் என அறியேன். இப்போதே ஆ.வியை Image License பிரிவை கண்டேன். தெ.வியில் அந்த பயனரை விக்கியில் பயன்படுத்துவதற்கு தகுந்த காப்புரிமையில் விடுமாறும் வேண்டுகோள் விடுக்கிறேன். அதுவரை ஒரு 7 நாட்கள் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் βινόδ  வினோத் 05:52, 14 பெப்ரவரி 2008 (UTC)

மிக்க மகிழ்ச்சி தொகு

நீங்கள் படிமங்கள் அனைத்திற்கும் உரிமங்கள் இணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. முன்பும் சில தடவைகள் சுட்டிக் காட்டப்பட்டபோதும் இப்பொழுதுதான் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மிக்க நன்றி. கோபி 05:39, 14 பெப்ரவரி 2008 (UTC)

நீங்கள் படிமங்களைச் சீர்ப்படுத்தும் வேகத்தைப் பார்த்தால் இதைச் செய்வது டெரன்ஸா இல்லை டெரன்ஸின் தானியங்கியா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அயரா உழைப்புக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். --ரவி 22:44, 14 பெப்ரவரி 2008 (UTC)

முதற்பக்க கட்டுரைகள் தொகு

மறுபடியும் நீண்ட நாட்களாக முதற்பக்கம் இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது. சிந்துவெளி நாகரிகம் மற்றும் சாமுராய் ஆகிய கட்டுரைகளை முதற்பக்கத்தில் இடலாமா ?

தாங்கள் படிமங்களை சரிபார்த்துக்கொண்டிருப்பதால், சிறப்புப்படிமத்தையும் இற்றைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். βινόδ  வினோத் 08:29, 14 பெப்ரவரி 2008 (UTC)

படிமம்:படிமம்:TrengarasuBOT check 3.svg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:TrengarasuBOT check 3.svg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 15:42, 18 பெப்ரவரி 2008 (UTC)


படிமம்:படிமம்:TrengarasuBOT check 2.svg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:TrengarasuBOT check 2.svg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 15:42, 18 பெப்ரவரி 2008 (UTC)


படிமம்:படிமம்:TrengarasuBOT check 1.svg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:TrengarasuBOT check 1.svg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 15:43, 18 பெப்ரவரி 2008 (UTC)


படிமம்:படிமம்:TrengarasuBOT check 3.svg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:TrengarasuBOT check 3.svg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:02, 18 பெப்ரவரி 2008 (UTC)


:படிமம்:TrengarasuBOT check 3.svg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:TrengarasuBOT check 3.svg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:06, 18 பெப்ரவரி 2008 (UTC)

சொற்பிழை தொகு

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும்



மேலும் தேடுபொறியில் கிடைக்கும் படங்களை பதிவேற்றம் செய்தல் கூடாது என்பதையும் இதில் தெளிவுப்படுத்தும் குறிப்பும் இதில் இடம்பெற வேண்டும் என கருதிகுறேன் βινόδ  வினோத் 16:48, 18 பெப்ரவரி 2008 (UTC)

படிமங்கள் தொகு

படிமங்கள் தொடர்பாக உங்கள் அலுப்புத்தராத விடாப் பணிக்கு நன்றி. விட்டிருந்தால் இது பின்னர் ஒரு சிக்கலான பிரச்சினையாக வளர்ந்திருக்கும்.

நானும் Creative Commons தொடரபான படிமங்களில் சற்று அலட்சியமாக இருந்துவிட்டேன். படிமம்:Farm.jpg ஏற்றுக் கொள்ள தக்கத் என்று நினைக்கின்றேன். படிமங்களின் உரிமைகள் தொடர்பான ஒரு விழிப்புணர்வு நமக்கு வேண்டும். நன்றி. --Natkeeran 15:31, 23 பெப்ரவரி 2008 (UTC)

வார்ப்புரு:மாத இறுதி செய்திகள் தொகு

டெரன்ஸ், இந்த வார்ப்புருவில் ஏதோ பிழை தற்போது ஏற்பட்டுள்ளது. சரியாகத் தெரியவில்லை. (பார்க்க: மார்ச் 2008). இதனை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது திருத்தித் தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 00:03, 2 மார்ச் 2008 (UTC)

வார்ப்புருவைத் திருத்தியமைக்கு நன்றி டெரன்ஸ்.--Kanags \பேச்சு 07:41, 3 மார்ச் 2008 (UTC)

வார்ப்புருத் தமிழாக்கம் தொகு

வார்ப்புரு:Infobox NBA Player இனைத் தமிழாக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 10:52, 13 மார்ச் 2008 (UTC)

படிமம் தமிழாக்கம் தொகு

நீங்கள் தமிழாக்கியிருந்த படம் நன்றாக இருக்கிறது. 'ஆபிரிக்க' என்பதை 'ஆப்பிரிக்க' என்று மாற்ற வேண்டும். -- சுந்தர் \பேச்சு 05:34, 2 ஏப்ரல் 2008 (UTC)

நீங்கள் தொடர்ந்து பல படங்களைத் தமிழாக்கி வருவதுகண்டு மகிழ்ச்சி. புவி வெப்பநிலை அதிகரிப்பு கட்டுரையிலுள்ள படத்தை நான் மொழிபெயர்த்தேன். முதல்பக்கத்தில் சரியாக வருகிறது, கட்டுரையில் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை. சற்று பாருங்களேன். -- சுந்தர் \பேச்சு 07:05, 14 ஏப்ரல் 2008 (UTC)

மொழிபெயர்ப்புப் பக்கம் தொகு

டெரன்ஸ், விக்கிப்பீடியா மொழி பெயர்ப்புப் பக்கத்தின் இணைப்பு எங்குள்ளது? மயூரநாதன் 21:00, 5 ஏப்ரல் 2008 (UTC)

நன்றி டெரன்ஸ், நான் பல மாதங்களுக்கு முன்னரே அப்பக்கத்தில் பதிவு செய்து சில மொழிபெயர்ப்புக்களையும் செய்தேன். பின்னர் பல நாட்கள் அப்பக்கத்துக்குச் செல்லாததால் இணைய முகவரியை மறந்து விட்டேன். மயூரநாதன் 10:35, 6 ஏப்ரல் 2008 (UTC)

Template Ambox தொகு

டெரன்ஸ், வார்ப்புரு:Ambox சரியாக இல்லை, இதன் மூலத்தை நான் ஆ.வி.யில் இருந்து அப்படியே நகலெடுத்து, தேவையான் அனைத்து(?_ துணை வார்ப்புருக்களையும் உருவாக்கியும் இது சரியாக இல்லை. இதை சரி செய்து தர வேண்டுகிறேன். நன்றி వినోద్  வினோத் 06:20, 7 ஏப்ரல் 2008 (UTC)

மன்னிக்கவும், தவறு என்னுடைய மோனோபுக்.Cssல். :-)) వినోద్  வினோத் 06:33, 7 ஏப்ரல் 2008 (UTC)

நன்றி தொகு

Taxoboxஇல் திருத்தங்கள் செய்து சரி செய்துவிட்டீர்கள் போல் உள்ளது. மிக்க நன்றி டெரன்சு! --செல்வா 15:04, 14 ஏப்ரல் 2008 (UTC)

விலங்குகளின் அழிவு-காப்புநிலைகள் பற்றிய சொற்களுக்கான பரிந்துரைகள் தொகு

டெரன்சு நீங்கள் கேட்டிருந்த பரிந்துரைகள் இங்குள்ளன==> Wikipedia:கலைச்சொல் ஒத்தாசை --செல்வா 12:41, 16 ஏப்ரல் 2008 (UTC)

பட உரிமை தெரிவு தொகு

  • {{பொ.உ.}}
  • அனுமதிகளில் Public Domain அல்லது பொதுவில் உள்ள தெரிவு இல்லையே. அதாவது, சொந்தமல்லாத, ஆனால் வேறு ஓருவிர் பொதுவில் விட்ட படம். சேர்த்தால் நன்று. நன்றி. --Natkeeran 03:02, 22 ஏப்ரல் 2008 (UTC)

upload பக்கம் இயங்கவில்லை தொகு

டெரன்சு, இதனை ஒருக்கால் சரி செய்யுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 12:30, 22 ஏப்ரல் 2008 (UTC)

இடதுபக்க menu வில் உள்ள "கோப்பைப் பதிவேற்று" மற்றும் "தற்போதைய நிகழ்வுகள்" காணாமல் போய்விட்டன. பக்கங்களில்லை என்று வருகிறது. பக்கப் பெயர்களை மாற்றி விட்டீர்களா? நடப்பு நிகழ்வுகள் பக்கத்தின் பெயரை மாற்றிவிட்டீர்களா, என்ன? தயவு செய்து உடனடியாகக் கவனியுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 09:08, 23 ஏப்ரல் 2008 (UTC)

நன்றி டெரன்சு, "கோப்பைப் பதிவேற்று" Wikipedia:Upload என்ற வெற்றுப் பக்கத்துக்கு செல்கிறது. நான் பாவிப்பது IE. ஆனால், firefox இல் கோப்பைப் பதிவேற்று என்ற சரியான பக்கத்துக்குச் செல்கிறது. IEயில் ஏன் தெரியவில்லை?--Kanags \பேச்சு 10:23, 23 ஏப்ரல் 2008 (UTC)

தமிழ் ஆளுமைகள் பெயர்கள் தொகு

நீங்கள் பெயர் குறிப்பிட வேண்டி ஆக்கிய வார்ப்புருவை தவற விட்டுவிட்டேன். தெரிவித்தால் பெயர்களைச் சேர்த்து விடுகிறேன். நன்றி.--Natkeeran 18:15, 23 ஏப்ரல் 2008 (UTC)

வார்ப்புரு உதவி தொகு

டெரென்சு, வார்ப்புரு:Clade சரியாக இயங்கவில்லை. ஆங்கில விக்கியில் இருந்து படி எடுத்து இட்டேன். ஏதோ சரியாக இல்லை. என்னவென்று பார்த்து திருத்தித் தர முடியுமா? மிக்க நன்றி.--செல்வா 02:23, 15 மே 2008 (UTC)Reply

டெரன்சு, வார்ப்புருவை திருத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி! --செல்வா 12:08, 15 மே 2008 (UTC)Reply

வாங்க...கனகாலம் கண்டு. தொகு

--Natkeeran 14:29, 6 ஆகஸ்ட் 2008 (UTC)

:படிமம்:புதிய விக்கி சின்னம் 3.png இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:புதிய விக்கி சின்னம் 3.png படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 05:59, 27 ஆகஸ்ட் 2008 (UTC)


:படிமம்:புதிய விக்கி சின்னம் 2.png இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:புதிய விக்கி சின்னம் 2.png படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 05:59, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

தானியங்கி உதவி தேவை தொகு

டெரன்சு, ஆப்பிரிக்கப் பொருளியல் நிலை கட்டுரையில் ஆங்கில விக்கியிலிருந்து பெறப்பட்ட உரையில் பல வார்ப்புருக்கள் உள்ளன. அவற்றை மொத்தமாக இங்கு பதிவேற்றும் வசதி எதுவும் உள்ளதா? -- சுந்தர் \பேச்சு 08:20, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

தகவலுக்கும் நிரலுக்கும் நன்றி, டெரன்சு. இன்றிரவு விண்டோசில் நிறுவி முயன்று பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:19, 28 ஆகஸ்ட் 2008 (UTC)
டெரன்சு, விக்கி தானுலவியை (AWB) நிறுவியுள்ளேன். ஆனால் எப்படி செயல்படுத்துவது என்று தெரியவில்லை? en:Economy of Africa கட்டுரையில் இருக்கும் நாடுசார் வார்ப்புருக்களை இங்கு கவர்ந்து ஒட்டி தமிழாக்க வேண்டும். எப்படி செய்வது? -- சுந்தர் \பேச்சு 15:01, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
நன்றி டெரன்சு. இன்றிரவு மீண்டும் முயன்று பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 03:27, 1 செப்டெம்பர் 2008 (UTC)Reply

காப்புரிமை வார்ப்புரு தொகு

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:James-vasanthan.ogg பக்கத்தில் காப்புரிமை, தகவல் மூலம் குறித்த ஆதாரங்கள் இல்லையென தானியங்கி தெரிவிக்கிறது. ஆனால், அத்தகவல்கள் உள்ளன? தானியங்கிக்குப் புரியம் வகையில் எப்படி சேர்ப்பது?

பகுப்புகள் தொகு

Trengarasu, some of the categories you recently added parent categories to like பகுப்பு:கூடைப்பந்து, பகுப்பு:கியூபா, பகுப்பு:ஜோர்ஜியா are actually out-of-use categories with no contents which have been replaced -- in these cases by பகுப்பு:கூடைப்பந்தாட்டம், பகுப்பு:கூபா, பகுப்பு:ஜோர்ஜியா (நாடு). I would have deleted them at the time except I don't know how and/or don't have the privileges to do so. If you could delete them that would be great. Thanks. Werklorum 05:26, 8 செப்டெம்பர் 2008 (UTC)Reply

இந்த படிமம் ஏற்றதுதானே தொகு

வணக்கம் டெரன்சு: இந்த படிமத்தில் Creative Commens - Commerical Use.. என்று தேடியே பெற்றேன். இத ஏற்றதுதானே?

--Natkeeran 15:50, 28 செப்டெம்பர் 2008 (UTC)Reply

Return to the user page of "Trengarasu/தொகுப்பு03".