வாருங்கள், Vij!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Umapathy 00:00, 26 நவம்பர் 2006 (UTC)Reply

நல்வரவு விஜயராகவன். உங்கள் பங்களிப்பால் தமிழ் விக்கிப்பீடியா மேலும் வளம் பெறும் என்று நம்புகின்றேன். --Natkeeran 02:03, 2 டிசம்பர் 2006 (UTC)

விஜயராகவன், நீங்கள் ஆரியர் ஏன்ற கட்டுரையில் கூற விரும்புவதை சுருக்கி எழுத முடியுமா; 3-5 பந்திகள். உங்கள் பார்வையையும் கட்டுரையில் தகுந்த முறையில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --Natkeeran 02:03, 2 டிசம்பர் 2006 (UTC)

வேளாண்மை கட்டுரையில் படங்களை மாற்றி உள்ளேன். சுற்றிக் காட்டியதற்கு நன்றி, விஜய். இது போன்ற காப்புரிமை விலக்கு பெற்ற படங்களை நீங்கள் http://www.flickr.com/photo_zoom.gne?id=208648512&size=o என்ற தளத்தில் இருந்து பெற்று விக்கிப்பீடியாவில் பதிவேற்றலாம்.--Ravidreams 09:50, 7 டிசம்பர் 2006 (UTC)

விஜய், தமிழ்ப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சேர்க்கலாம். ஆனால், பிற நாட்டுப் படங்களை நீக்க வேண்டும் என்று அவசியமில்லை. தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உலகளாவிய பார்வையும் அவசியம் தானே. ?--Ravidreams 11:58, 7 டிசம்பர் 2006 (UTC).

தமிழ்நாட்டு வேளாண்மையை பற்றி பேசும்போது, தமிழ்நாட்டு படங்கள் ஒன்றாக போகும். அப்பொதுதான் 'மண்வாசனை' வீசும். அப்பொழுதுதான், மக்கள், கட்டிடங்கள், கருவிகள், வேலை/ஓய்வு பழக்கங்கள் எப்படி தமிழ்நாட்டில் இருக்கும் என படிக்கிரவர்களுக்கு சொல்லாமலேயே புரியும். ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமம். அந்த நோக்கில்தான் அப்படி எழுதினேன். ஐரொப்பிய நாட்டுபுரங்களின் கட்டுரையில் தமிழ்நாட்டு சீன்கள் செல்லா.--விஜயராகவன் 12:29, 7 டிசம்பர் 2006 (UTC).

ரவிட்ரீம்ஸ் - நீங்கள் தமிழ்நாட்டை மையமாக கொள்ளாமல், பொதுவாக வேளாண்மையை பற்றி எழுதுகிறீர்களென்றால், எந்த நாட்டு படமும் போகும்; நவீன படஙக்ளும் போகும். அது கட்டுரையின் குறியைப் பொருத்தது. நான் கட்டுரையின் குறியை தப்பாக புரிந்துகொண்டிருக்கலாம்--விஜயராகவன் 13:05, 7 டிசம்பர் 2006 (UTC).

தற்பொழுது உள்ள வேளாண்மை கட்டுரை உலக நோக்கு உடையது தான். பொதுவாக விக்கிப்பீடியா கட்டுரைகள் உலக நோக்கோடு தான் எழுதப்படுகின்றன. கட்டுரையின் ஒரு பகுதி தமிழ்ச் சூழலை விளக்கி எழுதப்படுகிறது. அந்தப் பகுதிகளில் கண்டிப்பாக தமிழ்ப்படங்கள் இடம்பெற வேண்டும். கட்டுரை தலைப்புகள் தமிழ்நாட்டைக் குறித்ததாக இருக்கும்போதும் தமிழ்ப் படங்கள் சரியாக இருக்கும். அப்புறம், நீங்க என்ன ரவின்னே அழைக்கலாம்.--Ravidreams 13:50, 7 டிசம்பர் 2006 (UTC)

விஜய், நாம் சேர்க்கும் படிமங்களில் தமிழ் மண்வாசணை இருக்க வேண்டும். அதாவது, த.வி. தமிழ் மயப்பட்டு இருக்க வேண்டும். உங்கள் கருத்து சரிதான். தற்சமயம், ஆரியர் தொடர்பாக சில குறிப்புகள் எடுத்து வருகின்றேன். நீங்கள் இட்ட கட்டுரையையும் பார்த்தேன். நீங்கள் பல விடயங்களை ஒரே கட்டுரைகளில் தர முயன்றதுதான் கோபி முரண்பட்டதுக்கு ஒரு காரணம் என்று நினைக்கின்றேன். விரைவில் அந்தக் கட்டுரையை மேம்படுத்தலாம், உங்களின் கருத்துக்களையும் உள்வாங்கி.
உங்களின் தமிழ் எழுத்தில் சற்று அதிகமான எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. நான் ஒன்றும் அவ்வளவு திறம் இல்லை. ஆனால் பிறர் சுட்டிக்காட்டி, சற்று இலக்கணமும் அவ்வப்பொழுது படித்து இப்பொழுது சற்று முன்னேற்றம். எழுத்துப் பிழைகளை சற்றுக் கவனத்தில் கொள்ளவும். நீங்கள் ஆங்கில வழிக் கல்வி போலிருக்கின்றது. ஏன் என்றால் உங்கள் ஆங்கிலம் நன்று. மேலும், உங்களின் கருத்தும் இங்கு Wikipedia:2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review வரவேற்கப்படுகின்றது. நன்றி. --Natkeeran 01:58, 8 டிசம்பர் 2006 (UTC).
நட்கீரன் - உங்கள் ஆலோசனைக்கு நன்றி. என் எழுத்துப் பிழைகள் ர ற வில் தான் அனேகமாக வரும். தற்காலத் தமிழில் - அதாவது தமிழ் பேச்சில் ர, ற வித்தியாசம் மறைந்து விட்டது என மொழி ஆய்வாளர்கள் சொல்கிறனர். அது என் எழுத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அது ஒரு புரம் இருக்க, நீங்கள் என் பிழைகளை தாராளமாக திருத்துங்கள். ஆரியர் கட்டுரைக்கு உங்கள் ஐடியாவையும் சொல்லுக. நான் பள்ளியில் தமிழ் மீடியம் தான். பல்கலைகழகம் தான் ஆங்கிலம். எழுது தமிழும் , பேச்சு தமிழும் பெரிய வித்தியாசத்தை காண்பிப்பது மொழி வளர்ச்சிக்கு உகந்ததல்ல. நடைமுறைக்கு ஒவ்வாத இலக்கணம் குழப்பத்தைதான் விளைவிக்கும். அது பெரிய விஷயம் - வேறிடைத்தில் விவாதிக்கலாம். --விஜயராகவன் 09:50, 8 டிசம்பர் 2006 (UTC)

ஒன்றை மட்டும் உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். விக்கிப்பீடியாவிற்கு இதுவரை தொடர்ந்து பல இந்தியர் பங்களித்து வருகிறார்கள். யாரும் உங்களைப் போல ரகர, றகர பிழைகள் விட்டதில்லை. ஈழத்தில் ரகரறகர வேறுபாடு தெளிவாகவே உள்ளது.

அது இருக்கட்டும். அந்த மொழி ஆய்வாளர்கள் யார்?

மரபினால் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் , யாயோடு வாயாக சொல்லிக் கொடுக்க்ப்பட்டு, நம்மிடம் உள்ளன. வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள்' என கருதும் அதே மொழி ஆய்வாளர்கள் தானா?

இன்னும் உங்களுக்கு வேதங்கள் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் வேண்டும். ஆனால் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் வித்தியாசம் கூடாது; நடைமுறையற்ற இலக்கணங்கள் அகற்றப்பட வேண்டும். இல்லையா? உங்கள் அற்புதமான கருத்துக்களுடன் நாம் விவாதிக்கவும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதுதான் பெரிய முரண்நகை.

கோபி 04:53, 9 டிசம்பர் 2006 (UTC).

கோபிக்கு பதில்:.

"இன்னும் உங்களுக்கு வேதங்கள் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் வேண்டும். ஆனால் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் வித்தியாசம் கூடாது. வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள்' என கருதும் அதே மொழி ஆய்வாளர்கள் தானா?" .

நிச்சியமாக அந்த ஆய்வாளர் பெயரை தருகிரேன். ஹரால்ட் ஷிப்மன் அல்லது ஜார்ஜ் ஹார்ட்டின் ஒரு கட்டுரையில் படித்ததாக ஞாபகம். ஆனால், நான் எவ்வளவோ வல்லுனர்கள் கட்டுரை/புத்தகப் பெயரை கொடுத்தாலும் அதை நம்ப போகிறீர்களா??. Your attitude is irrational.

கோபி இந்த இரண்டு விஷயங்களும் தனி. வேதமொழி செவ்வியல் சமஸ்கிருத காலத்திலேயே நடைமுறையில் இல்லை. வேதமொழி சடங்குகளுக்கு வெளியே யாரும் உபயோகிப்பத்தில்லை - சமஸ்கிருத விசிறிகள் கூட. ஆனால் தமிழில் அந்தஸ்து வேறு. அது பல கோடி மக்களின் வாழ்வில் நடைமொழி. ஆனால் தற்போது விஞ்ஞானம், பொருளாதாரம், மனித சம்பநதமான ஆய்வு போன்றவைக்கு உபயோகமாகவில்லை.போகிர போக்கை பார்த்தால் அப்படி ஆகாது போல தோன்றுகிறது. இந்த வித்தியாசத்தை மனதில் வைக்காமல், நான் ஏன் தமிழை வேதமொழி போல கருதவில்லை என சாட்டுகிறீர். --விஜயராகவன் 10:23, 9 டிசம்பர் 2006 (UTC).

கோபிக்கு பதில்:

உங்கள் கேள்வி "அது இருக்கட்டும். அந்த மொழி ஆய்வாளர்கள் யார்?" அதற்க்கு சரியான பதில் கிடைத்து விட்டது. அதை எழுதியவர் ஜார்ஜ் ஹார்ட் - பேச்சு (மேலும் பல விஷயங்களில்) தமிழ் வல்லுனர்.

http://www.infitt.org/tscii/archives/msg00146.html .

"Languages grow historically. As they grow and change, their phonetics change. Very few Tamils, for example, can pronounce the difference between the 2 r's (though Malayalis and Sri Lankan Tamils can). This is a historic change -- 1000 years ago, the phonemes were probably distinct in almost all dialects of Tamil." .

வேறொடு இடத்தில் சொல்கிறார்: Proto-Dravidian had a set of alveolar stops, midway between dental and retroflex. Tamil retained them in many forms -- Sri Lankan, some southern dialects, and of course modern Malayalam (which is an offshoot of medieval Tamil). Most spoken Tamil dialects -- and now even the way in which most people pronounce the formal language -- have lost them. In terms of pronunciation, I would guess that Malayalam and SL Tamil are closer to older Tamil than modern Indian Tamil. ........... One issue with SL Tamil is that it has lost the "zh" and replaced it with retroflex l. This is also true of most non-Brahmin Tamil, though not of the Brahmin dialect in India and Malayalam. If you are a Sri Lankan, then you distinguish between kaaTTu (forest), kaaRRu (wind) and kaattu (having waited). Indian Tamils do not make the latter two distinctions, though Malayalis do. G. Hart--விஜயராகவன் 22:06, 9 டிசம்பர் 2006 (UTC).

றகரத்தைப் பற்றி மற்றொரிடத்தில் எழுதுகிறார். As you may know, Malayalis pronounce "Tamil" sounds better than most Tamils, who cannot say "za" properly. Almost no Tamil in India can properly articulate "Ra." The sound has been lost in their language, though they still write it. --விஜயராகவன் 23:01, 9 டிசம்பர் 2006 (UTC)

தமிழ் வழியம்??

தொகு

விஜய், நீங்கள் தமிழ் வழியத்தில் படித்தீர்கள் என்பது சரியான ஆச்சரியமாக இருக்கிறது. நம்ப முடியவில்லை. பேச்சுத் தமிழிலும் உச்சரிப்பை சரிவர பின்பற்றுவது தான் தீர்வு. இலக்கணத்தையும் எழுத்துத் தமிழையும் மாற்றுவது அல்ல. அப்படி மாற்றினால், பெரும் குழப்பம் வரும். இரண்டு தலைமுறைகள் கழிந்து இந்த தலைமுறையில் என்ன எழுதினோம் என்பதையே அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாமல் போகி விடும். இதே காரணத்துக்காகத் தான் வட்டார நடைகளை விட்டு பொதுத் தமிழ் நடையில் எழுதுவதும். அதே வேளை, கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ் என்று பேச்சுத் தமிழ் வேறுபடுவது மொழியின் சிதைவு அல்ல. அது மொழியின் ஒரு கூறு. இது பக்கம் பக்கமாக உரையாட வேண்டிய விதயம். ஒரு குறிப்புக்காக இங்கு சொல்கிறேன். வேறு தளங்களில் விரிவாக உரையாடலாம். நீங்கள் எழுதி வரும் ஆரியர் கட்டுரையின் தலைப்பை வேதங்களில் ஆரியர் பற்றிய குறிப்புகள் என்று மாற்றி விட்டால் பாதி சர்ச்சை நீங்கி விடும். உங்கள் கட்டுரையும் வேதத்தை மட்டுமே முதன்மை ஆதாரமாக கொள்வதால் பொருத்தமான தலைப்பாக இருக்கும். தவிர, வேதங்களில் உள்ளது என்று observation மட்டும் தந்தால் இன்னும் 25% பிரச்சினை தீரும். observationஐ கொண்டு inferences எழுத முற்படும் போது தான் வரலாற்றுத் திரிப்பு என்ற முக்கியசர்ச்சை எழுகிறது.--Ravidreams 10:37, 8 டிசம்பர் 2006 (UTC)

ரவி, எழுத்து தமிழ், பேச்சு தமிழ் வேறு வேறு என்றோ முடிவாகி விட்டது. இங்கு விவாதிக்க என்ன இருக்கின்றது. புனைகதையில் வட்டாரத் தமிழ் பயன்படுத்துவது வேறு, கலைக்களஞ்சியத்தில் அப்படிப் பயன்படுத்த முடியாது. நல்ல கட்டுரைத் தமிழ் நடையில் வட்டார வேறுபாடு காண்பிப்பது கடினம். இருப்பினும் இலங்கை எழுத்தில் ஒரு சில முரண்பாடுகள் இருப்பது உண்மை. --Natkeeran 01:49, 9 டிசம்பர் 2006 (UTC)

பாராட்டு

தொகு

ஆனந்தரங்கம் குறித்த உங்கள் கட்டுரைத் தகவல் நன்று. பாராட்டுக்கள். தமிழில் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் இவர் என்ற தகவலை விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா பகுதியில் காட்சிப்படுத்த உள்ளேன். சிப்பாய் எழுச்சி குறித்து ஏற்கனவே முதல் இந்திய விடுதலைப் போர் என்று ஒரு கட்டுரை உள்ளது. அத்துடன் உங்கள் சிப்பாய் எழுச்சி கட்டுரையை சேர்க்கலாம். அப்புறம், சிப்பாய் எழுச்சி கட்டுரைத்தலைப்பின் இறுதியில் முற்றுப் புள்ளி வைக்கப்படிருக்கிறது. கட்டுரைத்தலைப்பில் முற்றுப் புள்ளி தேவை இல்லை.--Ravidreams 22:06, 9 டிசம்பர் 2006 (UTC).

ரவி , பாராட்டுக்கு நன்றி. நான் முதலில் வேலூர் என்ற பெயரில் தேடி, வேலூர் சிப்பாய் கலகம் கிடைக்க வில்லை. அதனால்தான், நான் முதலில் எழுதுவதாக நினைத்தேன். 'முற்றுப் புள்ளி' பீட்பேக் நன்றி. அந்த தவறு நான் விகியில் இன்னும் சரியாக , வேகமாக எழுதத் தெரியாமல், பயந்து, பயந்து எழுதினதின் விளைவு. சரியாக்க வேண்டுமானல் இரு கட்டுரையும் ஒன்றாக்கலம். அதில் தவறு இல்லை. --விஜயராகவன் 22:16, 9 டிசம்பர் 2006 (UTC).

இன்னொரு சங்கதி; ஆனந்தரங்கம் எழுதிய நாட்குறிப்புதான் நமக்கு கிடைத்துள்ளது - அதுவும் அதிர்ஷ்ட வசத்தால். அதற்க்கு முன்னாடி எழுதிய நாட்குறிப்பு மறைந்து விட்டது. ஆனால் பொதுமக்களுக்கு தமிழில் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் என ஆனந்தரங்கத்தை அறிமுகப் படுத்துவதில் தவரில்லை.--விஜயராகவன் 22:22, 9 டிசம்பர் 2006 (UTC).

ரவி, வேலூர் சிப்பாய் கலகத்தை 'முதல் இந்திய விடுதலைப் போர்' என அழைக்க முடியாது. ஏனென்றால், சிப்பாய் கலகக் காரர்களுக்கு ஒரு பரந்த அரசியல்/ ராணுவ குறி இல்லை. அவர்கள் மொத்த தமிழ் நாட்டின் விடுதலைக்கொ, அல்லது மொத்த இந்தியாவின் விடுதலைக்கோ கனவு கூட காணவில்லை. தங்கள் கலகத்தை மற்ற பிரதேசங்களுக்கு 'ஏற்றுமதி' செய்ய நினைக்கவே --விஜயராகவன் 22:41, 9 டிசம்பர் 2006 (UTC)

விஜய், இங்கு பயப்பட ஒன்றும் இல்லை. கருத்தளவில் தீவிரமான விமர்சனங்களை முன்வைப்போமே தவிர, தமிழ் விக்கிப்பீடியா போன்ற நட்பான குழுமம் தமிழ் இணையத்தில் எங்கு தேடினாலும் காணக்கிடைக்காது. நீங்கள் கட்டுரைகளை எழுத முனையும் முன் இங்கு ஏற்கனவே உள்ள பிற கட்டுரைகளை நிறைய படியுங்கள். அவை உங்கள் எழுத்துத் திறனை வளர்க்க உதவும். பிறகு, தயக்கமின்றி எழுதலாம். தவிர, இதன் மூலம் பலனுள்ள பல பின்னூட்டுகளையும் நீங்கள் இட்டு வருகிறீர்கள். இது தமிழ் விக்கிப்பீடியா உயர்த்த உதவும். எ-கலப்பை-யில் தமிழ்99 விசைப்பலகை முறையில் தட்டச்சுங்கள். இது பிழைகளை தவிர்த்து விரைவாக எளிதாக எழுத உதவும். வேறு எந்த தட்டச்சு முறையை நான் பரிந்துரைப்பதில்லை. இது குறித்த என் வலைப்பதிவுக்குப் பார்க்க - http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_08.html

ஆனந்தராகம் தான் முதலில் நாட்குறிப்பு எழுதினார் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், நமக்கு கிடைக்கும் முதல் நாட்குறிப்பு அவருடையது தான் என்பது தான் நம் புரிதல். சரி தானே? வேலூர் கலகம் குறித்து அந்தந்த பக்கங்களில் கருத்து தெரிவிக்கிறேன். --Ravidreams 23:10, 9 டிசம்பர் 2006 (UTC). --விஜயராகவன் 23:39, 9 டிசம்பர் 2006 (UTC)

ரவி, ஆ.ர.பி.. பற்றி உங்கள் புரிதல் சரிதான். நான் இன்னும் விகியில் கற்றுக் கோண்டு, வேகமாக எழுதி, சிறந்த முறையில் கட்டுரையை எழுத எவ்வளவோ இருக்கிறன. இப்போ எனக்கு விகியில் பரீட்சை வைத்தால், 100 க்கு 30 மார்க் தான் வாங்குவேன். பை த வே, நான் வேலூர் எழுச்சியை பற்றி பல வருடங்களுக்கு முன் கூகிளில் எழுதினேன். அப்போது, அது யார் கவனத்திலையும் இல்லை. http://groups.google.co.uk/group/soc.culture.indian/browse_thread/thread/bde6c60a0b365728/d4c673ada7d324c0?lnk=st&q=%22mutiny+in+vellore%22&rnum=2&hl=en#d4c673ada7d324c0 --விஜயராகவன் 23:39, 9 டிசம்பர் 2006 (UTC)

தமிழ்நாட்டு வயற்காட்டுப் படிமம்

தொகு

விஜய், தமிழ்நாட்டு வயற்காட்டுப் படிமம் கிடைக்காததால்தான் ஐரோப்பிய படிமத்தைப் பயன்படுத்தினேன். தற்போது மாற்றியுள்ளேன். மற்றபடி கட்டுரைகளில் பொதுவான தலைப்புக்களுக்கு பல பண்பாடுகளின் படங்களையும் தகவல்களையும் தமிழரின் பண்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து தர வேண்டும். -- Sundar \பேச்சு 09:24, 11 டிசம்பர் 2006 (UTC).

நன்றி, ஒத்துக் கொள்கிறேன்.--விஜயராகவன் 09:33, 11 டிசம்பர் 2006 (UTC)

குற்றம் மர்மம்

தொகு

குற்றம்/மர்மம் பொருந்துமா என்று தெரியவில்லை. கட்டுரையை எழுதி நீங்களே ஒரு பொருத்தமான பகுப்பு தரலாம். நன்றி. --Natkeeran 04:31, 19 டிசம்பர் 2006 (UTC)

சரி பார்க்கவும்

தொகு

உபநிடதம், வேத சாரம் போன்ற இந்து மதத்துடன் தொடர்புடைய சில கட்டுரைகளின் தகவல்கள் சரியாவென்பதைச் சரி பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --கோபி 15:54, 28 டிசம்பர் 2006 (UTC)

சொற்களை ஆளும் முறை

தொகு

விஜயராகவன், பொதுவாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். நேரடியாக அகராதியில் இருந்து புழக்கத்தில் இல்லாத தமிழா என்று உறுதிப்படுத்திக்கொள்ள இயலாத சொற்களை ஆள்வதை விடுத்து இது குறித்து ஏற்கனவே தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள் உங்களிடம் இருந்தால் அதில் இருந்து சொற்களை எடுத்தாளுங்கள். குறைந்தபட்சம், புதிய சொற்கள் அருகில் ஆங்கிலத்தில் அடைப்புக்குறி விளக்கம் தாருங்கள். --Ravidreams 17:55, 9 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் கட்டுரைகளில் சமஸ்கிரத சொற்கள், கிரந்த எழுத்துக்கள், நல்ல தமிழ் சொற்கள்

தொகு

பல இடங்களில் நீங்கள் சமஸ்கிரத சொற்களை முன்னிறுத்தவது போன்று தோன்றுகின்றது. தமிழ் கட்டுரை எழுத்து நடையில் சமஸ்கிரத சொற்கள், கிரந்த எழுத்துக்கள் தொடர்பான உங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தால் நன்று. நன்றி. --Natkeeran 17:20, 14 பெப்ரவரி 2007 (UTC).

நட்கீறன், சரி என் நிலைப்பாடு இதுதான்; நான் இலக்கிய தளங்கள், இலக்கியகர்த்தாக்கள், செய்திதாள்கள்,பொதுவாக மக்களுக்கு தெரிந்த சொற்கள் இப்படி தரமான ஆதாரத்தில்தான் கிரந்தம் என பாராமல் சொற்களை உபயோகிக்கிறேன். உதாரணம் நான் 'ஜாதி' என்று எழுதுகிறேன், பலர் அதை அப்படித்தான் சொல்கிறனர். மேலும் தமிழ் கூகிளில் 'ஜாதி'யை போட்டு பார்த்தல் 22,400 பக்கங்கள் வருகிரன [1]. அதாவது தமிழெழுதும் உலகத்தில் ஜாதி பரவலாகவே பயன்படுகிரது. இதில் ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகளும், செய்தி நிருவனங்களும் அடங்கும். அதே போலத்தான் 'சர்ச்சை'. தற்கால இலக்கியத்திலும், இலக்கிய வாதத்திலும், செய்திதாள்களிலும், சாதாரண மக்களும் 'சர்ச்சை'யை controversy/debate என்ற பொருளில் என பயபடுத்துகிரனர். இதில் தினத்தந்தி போன்ற 'பாமர மக்கள்' பத்திரிக்கை போன்றவையும் அடங்கும். அதேபோல்தான் எஜமானன் ( திறிபுகளான எஜமான், எச்மான், எசமானன், யசமான், யசமானன், யஜமான், யஜமானன் கூட) தமிழுலகத்தில் 'அடிமையின் சொந்தக்காரன்' என்ற பொருளில் பயனாகிரது. நாம் விக்கியில் முடிந்தவரை செய்தித்தாள் உரைநடையை பின்பற்றுவதில் தப்பில்லை. ஜெயகாந்தனுக்கு தெரிந்த தமிழ், இலக்கிய வாதங்களிள் நடக்கும் தமிழ், புதிய தமிழிலக்கியத் தமிழ், செய்தித்தாள் தமிழ் நமக்கு போதுமானதே. எல்லா இடத்திலேயும் கிரந்த எழுத்துக்களும் பயபடுகிரன. நீங்கள் எழுதும் கட்டுரைகளில் கிரந்த எழுத்துகளை முழுமையாக தவிற்ப்பேன் என்றால் தவறில்லை, அப்படியே செய்யுங்கள்.--விஜயராகவன் 18:38, 14 பெப்ரவரி 2007 (UTC)

சமஸ்கிருதம் என்பதை விட புழக்கத்தில் இல்லாத புதைந்து போன அகராதிகளில் மட்டுமே இருக்கக்கூடிய பிறமொழிச் சொற்களை மட்டும் புகுத்துவது போல் தெரிகிறது. (சுலவு போன்ற சொற்கள் விதிவிலக்கு). சொற்துல்லியம் என்பதற்காக வழக்கொழிந்த பிற மொழிச் சொற்களை புகுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.--Ravidreams 17:51, 14 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, எனக்கு சொல்ல வேண்டியதை தர எந்த சொற்கள் வேணா தாருங்கள், நான் நிச்சயமாக பரிசீலிக்கிறேன். எனக்கு பழையது/புதிது, "தூய தமிழ்/புற மொழிச் சொல்" என்றெல்லாம் கவலயில்லை. பொருத்தமா இருக்கணம், அகராதிப் படி போகணும், கவித்துவம்/இலக்கிய நயத்துவம் இருந்தால் மகிழ்சி. நீங்கள் கொடுக்கும் சொல் ஒரு சொல்லாக இருக்க வேண்டும், விளக்க சொற்களாக இருக்கக்கூடாது. உதாரணஙள் - Justification. மற்றொன்று discrimination மற்ற்வர்களை பாதிக்கும் வேறுபாட்டு செயல்/மனப்பான்மை என்ற அர்த்தத்தில். இது இரண்டிற்க்கும் அகராதியில் ஒரே சொல் உள்ளன. ஆனால் அது ஏனோ உஙகளூக்கு பிடிக்கவில்லை.--விஜயராகவன் 18:38, 14 பெப்ரவரி 2007 (UTC)

உங்கள் நிலைப்பாடுகளை தொகுத்துப் பார்த்தால் மொழிநடை பின்வருமாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் விழைவது போல் தெரிகிறது.

1. நிகழ்கால ஊடகத் தமிழை ஒட்டி இருக்க வேண்டும்.

2. புதுத் தமிழ்ச் சொல்லாக இருந்தாலும், சுருக்கமான சொற்கள் வேண்டும்.

3. துல்லியமான சொற்கள் அவை பிற மொழிச் சொல்லாக இருந்தாலும், பழந்தமிழ் அகராதிகளில் இருக்கும் பட்சத்தில், ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா? இதில் உங்களிடம் தனித்து உரையாடுவதாக கருத வேண்டாம். நீங்கள் சுட்டிக் காட்டுவன தமிழ் விக்கிபீடிநாவின் குறையாக தமிழ் விக்கிப்பீடியா வட்டத்துக்கு வெளியே உணரப்படுகிறது என்று அறிகிறேன். மேலே உள்ளதில் முதல் கருத்தை என்னிடம் அண்மையில் பேசிய ஒரு ஊடகவியலாளரும் தெரிவித்தார். உங்கள் கருத்துக்களை இங்கு தாருங்கள். பின்னர், இதை ஒரு விக்கிப்பீடியா கொள்கை உரையாடலாக தகுந்த பக்கத்தில் தொடர்வோம். நன்றி--Ravidreams 19:04, 14 பெப்ரவரி 2007 (UTC)

தோராயமாக நீங்கள் புரிந்து கொண்டது சரி. இன்னொன்று. நீங்கள் அடிக்கடி 'பிற மொழி' (தமிழ் அகராதியில் இருப்பவை) என்று கவலைப் படுகிறீர்கள். எது பிற மொழி என்ற ஆராய்சியில் இறங்கினால் ஆழம் தெரியாமல் காலை விட்டு, இன்னும் பதைப்பு அடைவீர்கள். அதற்கு ரொம்ப பயிற்சி வேண்டும். அதனால் 'பிறமொழி' என்ற கேள்வியை எடுக்காதீர்கள். பொதுவாக தமிழ் அகராதியில் உள்ளதெல்லாம் தமிழ் என்று ஏற்றுக் கொள்ளூங்கள். நான் சொன்ன்தெல்லையெல்லம் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக செயல்படுத்தத் தேவையில்லை. நாம் எழுதுவது படிப்பவர்களுக்கு புரிய வேண்டும், அவ்வளவுதான்.--விஜயராகவன் 22:33, 14 பெப்ரவரி 2007 (UTC)
//எது பிற மொழி என்ற ஆராய்சியில் இறங்கினால் ஆழம் தெரியாமல் காலை விட்டு, இன்னும் பதைப்பு அடைவீர்கள். அதற்கு ரொம்ப பயிற்சி வேண்டும். அதனால் 'பிறமொழி' என்ற கேள்வியை எடுக்காதீர்கள். பொதுவாக தமிழ் அகராதியில் உள்ளதெல்லாம் தமிழ் என்று ஏற்றுக் கொள்ளூங்கள். //
மன்னிக்கவும். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றை குறித்த அறிவு இல்லாவிட்டால் அது குறித்த அறிவை வளர்க்க வேண்டுமேயன்றி கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள முடியாது. கேள்விகள் தான் விடைகளை தரும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது தானே அறிவு. தவிர, நற்கீரன் குறிப்பிடுவது போல் இலக்கிய, ஊடகத் தமிழ் வேறு உரை நூல், பாட நூல் தமிழ் வேறு. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் வட்டார நடையும் அவற்றுக்கு தற்கால இலக்கியங்களும் உள்ளன. அதற்காக தமிழ்நாட்டுப் பாடநூலில் - அது கலீஜாக இருக்கும் என்று ஒரு வரி வந்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? தற்கால இலக்கியங்கள், ஊடகங்கள் ஆகியவற்றுக்கு ஆயிரம் வணிக, படைப்பூக்க சுதந்திரங்கள், கட்டாயங்கள் இருக்கலாம். ஆனால், கலைகளஞ்சியப் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு இவை தேவை இல்லை. 1940களில் ஒரு தமிழ் அகராதி வெளியாயிருப்பின் அதில் ஏராளம் மணிப்பிரவாள சொற்கள் இருந்திருக்கும். அதற்காக அவற்றை தமிழ் என ஏற்றுக் கொள்ள முடியுமா? திசைச்சொல்லாக தமிழில் சொல் வேறு பல்வேறு காரணங்களுக்காக திணிக்கப்படும் சொற்கள் வேறு. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அகராதி என்பது அந்தந்த காலகட்டத்தில் சமூகத்தில் புழங்கி வரும் சொற்களை புரிந்து கொள்வதற்கான ஒரு கையேடு. அவ்வளவுதான். அதிலும், சிறந்த அகராதிகள் சொற்களின் வேர் மொழியை சுட்டித் தான் வெளியிடுகின்றன. ஒரு சொல்லின் வேர் அறிவதே நம் மொழி வளத்தை அதிகப்படுத்தும். அகராதிச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்வது கிஞ்சித்தும் உதவாது. --Ravidreams 03:40, 15 பெப்ரவரி 2007 (UTC)

விஜயராகவன்,
  • செய்தித் தமிழ் நடைக்கும் கலைக்களஞ்சிய தமிழ் நடைக்கும் வேறுபாடுகள் உண்டு. கலைக்களஞ்சிய தமிழ் நடை ஆராய்ச்சி கட்டுரைத் தமிழ் நடைக்கும் செய்திக் கட்டுரைக்கும் இடையே இருக்க வேண்டும். அதாவது அதிக இறுக்கமாகவோ அல்லது இளக்கமாகவோ இருக்க முடியாது.
  • இலக்கியத் தமிழ் நடைக்கும் கலைக்களஞ்சியத் தமிழ் நடைக்கும் வித்தியாசம் உண்டு. இலக்கியத்தில் வட்டார மொழிகள் எடுத்தாள்வது பிரச்சினையல்ல. நாவல், சிறுகதை, கவிதை போன்றவற்றில் அவை நன்று. ஆனால் கலைக்களஞ்சிய கட்டுரைத் தமிழ் நடையில் நாம் எழுத்து தமிழை பின்வற்றுவதுதான் அனைத்து தமிழர்களும் கட்டுரைகளை எளிதாக புரிந்து கொள்ள உதவும். இங்கு இலங்கை, தமிழக குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கூட களைந்து ஒரு பொது நடை விரும்பத்தக்கது.
  • கிரந்த எழுத்துக்களைப் பொறுத்த வரையில், நாம் ஏற்றுக் கொண்ட கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதில் எந்த தயக்கமும் இருக்க தேவையில்லை. அவை: ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ x 12 = 60 எழுத்துக்கள் ஆகும். இருப்பினும் அவை பரவலாக வழக்கத்தில் இருக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் ஒலி அமைப்புக்கும் இணையாகவோ, அல்லது மாற்றாகவோ பயன்படுத்தப்படுவதில்லை என்றே அறிகின்றேன்.
  • இவை எனது தனிப்பட்ட கருத்துக்கள் என்றாலும், பல விக்கிபீடியர்களின் கருத்துக்களும் இதற்கேற்பவே அமைகின்றன என்பது எனது எண்ணம்.

நற்கீரன் --Natkeeran 19:21, 14 பெப்ரவரி 2007 (UTC)

"செய்தித் தமிழ் நடைக்கும் கலைக்களஞ்சிய தமிழ் நடைக்கும் வேறுபாடுகள் உண்டு". நட்கீரன், இது எனக்கு தெரியாதது அல்ல. செய்தி சம்பவங்கள் மேல் கவனம் செலுத்துகின்றன. விக்கி கட்டுரைகள் ஒரு தலைப்பின் கீழுள்ள கருத்தின் மேல் கவனம் செலுத்துகிறன. 'நடை' என்பதை நான் 'சொல் தேர்வுகள்' என்ற விதத்தில் உபயோகித்தேன். அதனால் தான் சொற்தேர்வுகளுக்கு செய்தி நிருவனங்களையும், இலக்கியங்களையும் இழுத்தேன். செய்தி தாள்கள் தங்கள் வாழ்விற்கு எல்லோரும் புரியும்படி எழுத வேண்டும் என்பதை மறக்காதீர்கள், செய்திதாளின் உயிரே வாசகர்கள் புரிந்து அதை பணம் கொடுத்து வாங்குவதில் உள்ளது. அதனால் செய்திதாளின் தமிழை ஏளனம் செய்யாதீர்கள் மேலும் விக்கி இணையிலிருப்பதால், செய்தித்தாளுக்கு இல்லாத பல வசதிகள் விக்கிக்கு உள்ளன. விக்கியில் நாம் சொல் சிக்கனமாக பல விஷயங்களை துல்லியமாக வைக்க வேண்டும்.--விஜயராகவன் 13:27, 15 பெப்ரவரி 2007 (UTC)

பதிலுக்கு நன்றி விஜயராகவன். செய்தித் தமிழ் நடையை நான் ஏளனம் செய்யவில்லை. தமிழ் உரை நடையில் செய்தித் தமிழ் நடை ஒரு மைல்கல். பலர் தமிழ் படிக்கவும் அது ஒரு காரணம் ஆயிற்று. பட்டிதர்களிடம் இருந்து பொது மக்களுக்கு செய்தித் தமிழ்நடை தமிழின் எழுத்து புலத்தை எடுத்து சென்றது எனலாம். ஆனாலும் 'சொல் தேர்வுகள்' செய்தி ஊடகங்களிடம் இருந்து பெறப்படவேண்டும் என்பதில் அவ்வளவு ஒப்பில்லை. செய்தி ஊடகங்கள்களின் கவன வீச்சு மட்டுப்படுத்தப்பட்டது. கலைக்களஞ்சியத்தின் கவன வீச்சு அகலமானது, தொலைநோக்கானது. ஆரம்பத்தில் செய்தி தாள்கள் Internet அல்லது இன்ரனற் என்று எழுதுவார்கள். பின்னர் அவர்கள் பின்னியவலை போன்று பயன்படுத்தி, தற்போது இணையம் என்றே பயன்படுத்துகின்றார்கள். அது செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை சரியே. ஆனால், கலைக்களஞ்சியத்தில் தகுந்த, நல்ல தமிழ்ச்சொற்களை கையாள்வது நன்று. செல்வா, இராம.கி, அகராதிகள் பல எமக்கு இந்த விடயத்தில் உதவியாக இருக்கின்றன. இதற்கு நீங்கள் ஆதரவு என்றே மேலே சுட்டியுள்ளீர்கள். சொற்களின் மூலம் பற்றி சிறு கருத்து வேறுபாடு மட்டுமே இங்கு சுட்ட முயல்கிறேன். இந்தக் கருத்தையே நீங்கள் "செய்தித்தாளுக்கு இல்லாத பல வசதிகள் விக்கிக்கு உள்ளன. விக்கியில் நாம் சொல் சிக்கனமாக பல விஷயங்களை துல்லியமாக வைக்க வேண்டும்" என்று கூறுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். பெயர்களை பொறுத்தவரை அது தனிமனிதரின் உரிமை என்பது என் கருத்து. அவர் எப்படி தன் பெயரை எழுதுகின்றாரோ அப்படி எழுதுவதே பொருத்தம். அப்படி தெரியாத சமயத்தில் பொதுவாக அறியப்பட்ட நடைமுறையை பின்பற்றி எழுதி, பின்னர் முழுப்பெயரை கட்டுரையின் ஆரம்பத்தில் தரலாம். அதுவே த.வி. மரபு. இந்த விடயத்தில் த.வி. தெளிவு இருக்கின்றது. அத்தோடு அனேகமான சந்தர்ப்பங்களில் பட்டப்பெயர்கள் பெயருடன் சேர்த்துக் கொள்வதில்லை. சில விதிவிலக்குகள் உண்டு. --Natkeeran 15:05, 15 பெப்ரவரி 2007 (UTC)

கருத்து வேண்டல்

தொகு

அண்மையில் மொழி சார் உரையாடல்கள் பெருகி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க உங்கள் அனைத்து கருத்துக்களையும் இங்கு குவிக்கவும். நன்றி. --Ravidreams 14:03, 16 பெப்ரவரி 2007 (UTC)

சமஸ்கிரத ஈடுபாடு

தொகு

விஜயராகவன், உங்களுக்கு சமஸ்கிரத ஈடுபாடு இருந்தால், அதை தமிழ் மக்களுடன் பகிர விரும்பினால் அதை த.வி.வில் பல்வேறு வழிகளில் செய்யலாம். சமஸ்கிருத தமிழியல் கட்டுரையையும் அத்துறை சார் பிற கட்டுரைகளையும் உருவாக்கி தரலாம். எ.கா தமிழ் சமஸ்கிரதம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை. சமஸ்கிரதத்துக்கும் தமிழுக்கும் இருக்கும் வரலாற்று தொடர்பை விளக்கி கட்டுரைகள் தரலாம். தமிழர் பண்பாட்டில் சமஸ்கிரதத்தின் முக்கியத்துவத்தை விளக்கி கட்டுரைகள் தரலாம்.

நாம் மொழி வெறியர்கள் அல்ல. தூய தமிழ், களங்கப் பட்ட தமிழ் என்று தீவர துருவப் பார்வைகளைத் தவிர்த்து நல்ல தமிழ் என்ற ஒரு மிதவதா அல்லது மூன்றாவது வழியை பின்பற்றுவதே சிறப்பு. பரந்த மக்களுக்கு த.வி. செல்ல வேண்டும் என்ற உங்கள் கருத்து நன்றே. அதுவே அனைவரின் நோக்கமும். ஆனால் ஒரு கலைக்களஞ்சியத்தை ஒரு பரவலர் (popular) அல்லது சந்தை ஈடுபாடுகளுக்கு மட்டும் இசைந்து ஆக்க முடியாது. எனினும் விக்கி ஒரு கட்டற்ற திறந்த செயற்பாடு, எனவே பரந்த பரவலர் ஈடுபாடுகளை சேர்த்து வளரக் கூடியதே.

தமிழ் விக்கிப்பீடியாவில் நல்ல தமிழை முன்னிறுத்தாமல் வேறு எங்கு செய்யலாம் என்று நீங்கள் சொன்னாலும் நன்று. நன்றி.

--Natkeeran 12:54, 19 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீறன், உங்கள் கோரிக்கைகளுக்கும், எண்ணங்களுக்கும் நன்றி. எனக்கு தெரிந்த வரை 'தூய மொழி' என ஒன்றும் இல்லை. நான் எந்த மொழியையும் தெய்வமாகவும் கருதவில்லை. மொழி என்பது நாம் மற்றவர்களுடன் பேசி நம் வாழ்க்கையை வளமாக்குவதுதான். எழுதுவதற்க்கு நிரைய உள்ளன. --விஜயராகவன் 17:04, 19 பெப்ரவரி 2007 (UTC)

வேண்டுகோள்

தொகு

விஜயராகவன், அருள்கூர்ந்து ஆக்கம் தரும் வகையில் கட்டுரைகள் ஆக்க உதவுங்கள். எழுத நூறாயிரக்கணக்கான தலைப்புகளும் கருத்துக்களும் உள்ளன. உங்களுக்கு முறையுடன் மறுமொழிகள் தர வேண்டும் என்பதாலேயே நானும் பிறரும், பேச்சுப் பக்கங்களில் பதில்கள் தருகின்றோம். உங்களுக்கு நானும் பிறரும் தந்த மறுமொழிகளின் மொத்த பைட் அளவைப் பார்த்திர்களானால், அதில் குறைந்தது 20-30 குறுங்கட்டுரைகளாவது எழுதியிருப்போம். கருத்தாடல்கள் மிகவும் தேவையானது. அவைகளை நான் வரவேற்கிறேன். ஆனால் முடிவின்றி எதிர்-எதிர்மொழிகள் பேசுவதால் பயன் என்ன. நான் சமஸ்கிருதத்தையும், அதன் ஒலி இனிமையையும் விரும்பிப் போற்றுபவன். அது போலவே தமிழ் மொழியையும் அதன் ஒலி இனிமையையும் போற்றுபவன். அதே போலத்தான் இந்தி, ஆங்கிலம் முதலியனவும். நல்ல எளிய தமிழில் இருந்தால் பரவலாக எல்லாத் தமிழருக்கும் பயன்படுமாறு இருக்கும். அதுமட்டுமல்லாமல், வளர்ந்து, கிளைத்து செழிப்படைவதற்கும் நல்லது. இவைகளைக் கருத்தில் கொண்டே மாற்றங்கள் செய்கிறேன். சமஸ்கிருதம், ஆங்கிலம் என்று சொற்களை மாற்ற வில்லை. எப்படிச் சொன்னால் இன்னும் சிறப்பாக அமையும், பரவலாக புரிந்து கொள்ள உதவும் என்று எண்ணியே மாற்றங்கள் செய்கிறேன். நீங்கள் அருள் கூர்ந்து தவறாக எண்ண வேண்டாம். உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகளில், தரமான கட்டுரைகள் ஆக்கித் தந்து உதவ வேண்டுகிறேன். --செல்வா 20:04, 19 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, நீங்கள் செய்யும் மாற்றங்கள் (இலக்கணத்தைத் தவிற) பல சமயம் கூர்ப்பித்த நடையாக தோன்றவில்லை. நான் படிப்பவன், எழுதுபவன் என்ற நோக்கில் சொல்கிறேன். அதே சமயம் நான் அடிக்கடி கட்டுரைகளை திருத்தங்கள் செய்ய விரும்பவில்லை. அதனால் தான் புறவய ஆதாரங்களைக் காட்டி உங்கள் மனதை மாற்றும்படி எழுதுகிறேன்; ஆனால் நீங்கள் உங்கள் வெளியூர்ச்சிதமில்லாத அபிப்பிராயத்திலேயே பிடிவாதமாகயிருக்கிறீர்கள். I can accept unwanted changes only under protest. --விஜயராகவன் 14:54, 20 பெப்ரவரி 2007 (UTC)
விஜயராகவன், என் தமிழ் நடையைப் பற்றிய தங்களுடைய கருத்துக்கு நன்றி. நான் ஏதும் சொல்லுவது முறையாகாது. மற்றவர்களோ, அல்லது காலமோ தான் பதில் சொல்லும். "கூர்ப்பித்த" என்று நீங்கள் கூறுவது ஆங்கிலத்தில் sharp, concise என்பதாக இருக்கும் என நினைக்கிறேன். நான் ஆங்கிலத்தில் சொல்வெதென்றால் lucid, understandable, sharp, concise, and beneficial என்பவைதான் என் குறிக்கோள். என் இலக்கை நான் எந்த அளவுக்கு எட்டுகிறேன் என்பதைப் பிறர்தான் சொல்ல வேண்டும். நீங்கள் "வெளியூர்ச்சிதமில்லாத அபிப்பிராயத்திலேயே பிடிவாதமாகயிருக்கிறீர்கள்" என்று கூறுவது " வெளி ஊர்ஜிதமில்லாத அபிப்பிராயத்திலேயே பிடிவாதமாகயிருக்கிறீர்கள்" என சொல்லுகிறீர்கள் என நினைக்கிறேன். அதாவது external reference and support என்பதைத்தான் வெளி ஊர்ஜிதம் என்கிறீர்கள் என நினைக்கிறேன். இது உங்களுடைய தனிக்கருத்து. நீங்கள் சுட்டும் தமிழ் லெக்ஸிக்கனை ஆயிரக்கணக்கான முறை பார்த்திருக்கிறேன். லெக்ஸிக்கனை எனக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றாகத் தெரியும், பயன்படுத்தியும் இருக்கேன் (சிக்காகோ பலகலைக் கழகம் வலையேற்றும் முன்னரே). நான் கற்ற நூல்களையோ, நான் அறிந்தவற்றையோ ஒரு சிறிதும் அறியாமல் கூறும் உங்கள் கருத்துக்களுக்கு நான் என்ன மறுமொழி கூறுவது? நான் கற்றது கைமண்ணளவு எனினும், கற்றதில் குற்றம் குறை இருப்பின் திருத்திக் கொள்ள அணியமாய் (ready) இருக்கின்றேன். ஏற்க இயலாதவற்றை தக்கக் கரணியங்களோடு முன்வைத்துள்ளேன். எது செல்லும், எது செல்லாது, எது ஆதாரம், ஆதாரத்திற்கு ஆதாரம் யாது என்றெல்லாம் சிந்தித்தல் வேண்டும். நான் என் 13-14 அகவையில் (வயதில்) வெண்பாக்களும், கட்டளைக் கலித்துறையும், விருத்தமும், ஆசிரியப்பாவும், கலிப்பாவும் எனப் பல எழுதி என் தமிழாசிரியரால் புகழப்பட்டிருக்கின்றேன். தற்புகழ்ச்சியாய்க் கூறுவதாக எண்ண வேண்டாம். சிலவற்றைக் கூறித்தான் உணர்த்த வேண்டும் எனில், நான் விரும்பாவிட்டாலும் கூறித்தானே ஆக வேண்டியுள்ளது! ஊர்ஜிதம் என்று நீங்கள் கூறுவதின் ஊர்ஜிதம் உணர வேண்டும். அபிப்பிராயம் வேறு அறிவு வேறு. பிடிவாதம் வேறு அறிவடைப்படையில் உறுதிகொள்ளுதல் வேறு. கற்றார்முன் கற்ற செலச் சொல்லுதல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நன்னோக்கும் நல்லுணர்வும் நேர்மையும் வேண்டும். --செல்வா 15:47, 20 பெப்ரவரி 2007 (UTC)

கூர்ப்பித்த என்றால் improved என்ற பொருளில் (தொல்காப்பியருடையது) உபயோகப்படுத்தினேன் அகராதிப்படி

கூர்ப்பு (p. 1075) [ kūrppu ] n kūrppu . < கூர்²-. 1. Abundance, excess; improvement; உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.)

மேலும் பார்க்க

ஊர்ச்சிதம் (p. 0498) [ ūrccitam ] n ūrccitam . < ūrjita. 1. Confirmation, ratification; ஸ்திரம். 2. Import unity; compulsion; நிர்ப்பந்தம். அவ்வளவு ஊர்ச் சிதமாய்க் கேட்கக்கூடாது.

அகராதியில் ஊர்ஜிதம் என்று இல்லை ; நீங்கள் நான் கிரந்த விரும்பி என சொல்ல முடியாது :))

நான் சொன்னது கடுஞ்சொல்லாக தோன்றினால், மன்னிக்கவும்.--விஜயராகவன் 16:59, 20 பெப்ரவரி 2007 (UTC)

விஜய், கட்டுரை ஆக்கங்களில் கவனம் செலுத்துமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். பிறர் எவ்வாறு திருத்தினாலும் வரலாற்றில் நீங்கள் எழுதியது பதிவுசெய்யப்பட்டே இருக்கும். அத்துடன் செய்யப்படும் மாற்றங்களைப் பலரும் அவதானித்துக் கொண்டே இருப்பதால் நிச்சயம் நாச வேலைகள் இடம்பெறாது. மேலும் இங்கு திருத்துவோர் நன்னோக்குடனேயே அதனைச் செய்கிறார்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. தொடர்ந்து எழுதும்போது உங்களது மொழிநடையும் எழுத்துப் பிழைகள் இன்றி நேர்த்தியாக வரும். மேலும் மிகவும் வித்தியாசமான பல கட்டுரைகளும் தமிழுக்குக் கிடைக்கும். ஆதலால் உரையாடல்களைத் தவிர்த்து கட்டுரையாக்கத்தில் குறிப்பாகப் புதிய கட்டுரை ஆக்கத்தில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 17:10, 20 பெப்ரவரி 2007 (UTC)

விஜயராகவன், தொல்காப்பியத்தின் 314 ஆவது நூற்பா, "கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்" என்பதாகும். தேவை இல்லாததை கழித்தலும் ("கழிவும்"), சரியாக இல்லாததை திருத்திச் செம்மை செய்தலும் ("கூர்ப்பும்") ஏற்கனவே உள்ளதைச் சிறந்ததாக ஆக்கும். இதுதான் நூற்பா. நாங்கள் விக்கியில் செய்வதும் இதுவே. கூர்மை செய்தல், கூர்மை தீட்டுதல், செப்பம் கூட்டுதல் கூர்ப்பு ஆகும். கூராக இல்லாமல் மழுங்கி இருப்பதைக் கூர்மை செய்தல் அனைவரும் அறியும் சொல். அறிவு இருக்கா என்பதற்கு கூர் இருக்கா எனக் கேட்பதுண்டு. கூர் என்றாலே அறிவு. கூர், கூர்ந்த அறிவு கூர்ப்பு முதலியன வேறு "கூர்ப்பித்த" என்ற செயற்கையான பிறவினைச் சொல் வேறு. தொல்காப்பியர் "கூர்ப்பித்த" என்னும் சொல்லை ஆளவில்லை. உங்கள் சொல்லாட்சி தவறானது. அகராதியைப் பார்த்து ஒருவர் பேச எழுதக் கற்றுக்கொள்ள முடியாது. அடுத்ததாக, அகராதியில் " < ūrjita." என்று கொடுக்கப்பட்டுளது, எனவே அதுபற்றி நீங்கள் சொன்னதும் சரியில்லை. மேலும் ஏராளமாக திக்குமுக்காட வைக்கும் அளவுக்கும் என்னால் சமஸ்கிருதச் சொற்களால் நிறைத்து எழுத இயலும். "கூர்ப்பித்த நடையாக தோன்றவில்லை" என்று நீங்கள் சொல்லவந்ததை கூர்க்குநல் நடையாக எனக்குப் படவில்லை எனச் சொன்னால் சொல்லாட்சி சரியாக இருக்கும் ஆனால் கூர்க்குநல் என்னும் சொல்லாட்சி இலக்கியச் செறிவு மிக்கதாக இருக்கும் - பொதுநடையாகாது. --செல்வா 18:52, 20 பெப்ரவரி 2007 (UTC)--செல்வா 21:53, 20 பெப்ரவரி 2007 (UTC)

உ + இக்கும்

தொகு

செல்வா

"கூர்ப்பித்த" என்ற செயற்கையான பிறவினைச் சொல் வேறு. தொல்காப்பியர் "கூர்ப்பித்த" என்னும் சொல்லை ஆளவில்லை. உங்கள் சொல்லாட்சி தவறானது என்கிறீர்கள்

பல சொற்புணர்ச்சிகள் உ+இக்கும் என்ற அமைப்பிலுள்ளன.

உதாரணங்கள்

விளைவு+ இத்தல் = விளைவித்தல்

தீர்ப்பு + இத்தல் = தீர்ப்பித்தல்

சார்பு + இத்தல் = சார்ப்பித்தல்

ஏன் கூர்ப்பு + இத்தல் = கூர்ப்பித்தல் இருக்கக் கூடாது. இந்த இலக்கண ஆக்கம் சரி போல தோன்றுகிரது.

பார்க்க

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மூன்றாம் பாகம், பாடல்கள் (671- 1000)

"கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு போத்துக்க மானகுறை ...... யுடையேனைக் ....."

--விஜயராகவன் 00:09, 21 பெப்ரவரி 2007 (UTC)

தீர்ப்பித்தல், சார்ப்பித்தல் போன்ற சொற்களை பொதுத் தமிழில் கேள்விப் பட்டதில்லை. எங்காவது மேற்கோள் இருக்கிறதா?--Ravidreams 09:32, 21 பெப்ரவரி 2007 (UTC)

இன்னும் சில உதாரணங்கள்

அறிவு + இத்தல் = அறிவித்தல்

தெரிவு + இத்தல் = தெரிவித்தல்

ஏற்று + இத்தல் = ஏற்றுவித்தல் (திருவாசகம் - நாய் சிவிகையேற்று வித்தல்.....)

ஊக்குவித்தல்

தோற்றுவித்தல் (தேவாரம் - தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் றுளங்காத.....) --விஜயராகவன் 10:54, 21 பெப்ரவரி 2007 (UTC)

விஜயராகவன், அருள் கூர்ந்து உங்களுக்குச் சரியாகத் தெரியாததைப் பற்றி எழுதாதீர்கள். உங்களுக்கு மறுமொழி தருவதற்கு பதிலாக இக் கலைக்களஞ்சியத்தில், பிறவினை முதலிய இலக்கணக் கருத்துக்களுக்கு குறுங்கட்டுரைகளைச் சேர்த்து பின் அதனை உங்களுக்குச் சுட்டலாம் என இருந்தேன். அதற்குள் மீண்டும் நீங்கள் ஒரு சிறிதும் அறியாமல் சொல்லாட வருகிறீர்கள். கற்றல் என்னும் பெயற்சொல் கல் என்னும் வினையடி தோன்றியது. "நன்றாகக் கல்" என்றால் நன்றாக கற்றுக் கொள். பிறர் ஒருவரைக் கற்கச் செய்வது கற்பி. கற்பி என்பது வினை வடிவம். அது பிறவினை. "இத்தல்" என்று நீங்கள் ஒரு சிறிதும் அறியாது கூறுகிறீர்கள். தமிழில் ஏறத்தாழ எல்லாச் சொற்களுக்கும் பிறவினை வடிவம் சொல்லலாம். ஏற்று + இத்தல் என்பது நீங்கள் அறியாமல் இடும் இடுகை ஏறு, ஏற்று ஏற்றுவி இவை அனைத்தும் வினை வடிவங்கள். ஏற்றுவி என்பது பிறவினை. இதன் அடியாக பிற சொற்கள் ஆளப்படும். அதன் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் ஆக்கப்படும். அறி -> அறிவி (அறிவிக்க வேண்டும், அறிவிப்பு, அறிவித்தல் முதலியன). தெரி -> தெரிவி. இதில் சொல்ல இன்னும் உள்ளன. சேர், சேர்வி, சேர்ப்பி ஆகிய வினை வடிவங்கள் போன்றவையும் உள்ளன. உங்களுடைய பெயர்ச்சொல் + இத்தல் போன்ற அறிவுக்குப் பொருந்தாத, ஒரு சிறிதும் அறியாத முன்வைப்புகளை தவிர்க்கவும். முதலில் தொல்காப்பியர் கூர்ப்பித்த என்பதைக் சொல்லவில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள். சார்ப்பித்தல் போன்ற உங்கள் பொருளற்ற உ+இத்தல் கொள்கை பினாத்தல் (அறியாது உளறுதல்) என ஒப்புக்கொள்ளுங்கள். கூகிள் தேடலில் பெறும் தொடர்களைக் கொண்டு செறிவான உள் அறிவில்லாமல் உரையாட வந்தீர்கள் எனவும் ஒப்புக்கொள்ளுங்கள். சொல் தவறு வேறு சொல்லாட்சியின் தவறு வேறு. --செல்வா 13:27, 21 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, இலக்கண விளக்கத்துக்கு மிகவும் நன்றி. சார்ப்பித்தல், தீர்ப்பித்தல் போன்ற சொற்களில் குழம்பி இந்த இல்லாத உ+இத்தல் விதியை நினைத்துப் பார்க்க மறந்து விட்டேன். விளை->விளைவி->விளைவு->விளைச்சல் என்ற சொற்தொகுதி சரி. விளைவு+இத்தல் என்று எதுவும் இல்லை :) ஹ்ம்ம் --Ravidreams 14:48, 21 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, நான் செய்தது inductive reasoning. எந்த விஞ்ஞான முறையிலும் induction பெரும்பங்கு வகிக்கிரது. அதாவது ஒரு புனைகோளை, பல பல உதாரணங்கள் நிஜமாக்குமானால், அது ஒரு உண்மையை (அதன் வறம்புகளுடன்) தாபிக்கிரது. " உள் அறிவில்லாமல் உரையாட வந்தீர்கள்" என்கிறீர்கள். நாம் அறிவு என்பது, நடப்பு உண்மைகளை பரிசோதித்து, நிரூபிக்கக்கூடிய கோள்களை ஏற்பது.

நான் கூர்ப்பித்தல் என்பது தொல்காப்பியர் பயன்படுத்தினார் என்று எழுதவில்லை. நான் எழுதாததை வைத்து சாடுகிறீர்கள். 'கூர்ப்பு' இருந்து கூர்ப்பித்த வரலாம் என சொன்னேன், அவ்வளவுதான். நடப்பு என்பதிலிருந்து நடப்பித்தல் வரவில்லையா. நீங்கள் உறுதியாக சொல்வது நடப்பி > நடப்பித்தல். உஙகள் விளக்கத்தை நான் இப்பொழுது மறுக்க இல்லை. என் காரணம் தவறானாலும், முடிவு தவறா?

அருணகிரிநாதர் "கூர்ப்பித்த சூலம்" என்பது அப்பொருளில்தானே?

நான் எழுதியது சரியில்லை என்றாலும், எனக்கு கவயில்லை; நான் என் தவறுகள் மூலமாகவும் கற்பேனே தவிற, மற்றவர்கள் இட்டவழக்கினால் அல்ல. நான் இன்னும் தவறுகள் செய்யலாம்.--விஜயராகவன் 19:05, 21 பெப்ரவரி 2007 (UTC)

"நட> நடப்பி > நடப்பித்தல்" என்று இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக உரைநடைகளில் படித்த வரை "நட > நடத்து > நடத்துதல்" என்றே பயன்படுத்தப் படுகிறது. --Sivakumar \பேச்சு 04:18, 22 பெப்ரவரி 2007 (UTC)
To effect, perform, transact, set on foot, bring to pass; நடப்பித்தல் [2]--விஜயராகவன் 08:43, 22 பெப்ரவரி 2007 (UTC)
சுட்டிக்கு நன்றி விஜயராகவன். --Sivakumar \பேச்சு 08:56, 22 பெப்ரவரி 2007 (UTC)

செல்வாவின் மறுமொழி

தொகு
  • விஜயராவன் கூறியது (மேலே பார்க்கவும்)-"கூர்ப்பித்த என்றால் improved என்ற பொருளில் (தொல்காப்பியருடையது) உபயோகப்படுத்தினேன்.அகராதிப்படி". பின்னர் அவர் கூறுவது -"நான் கூர்ப்பித்தல் என்பது தொல்காப்பியர் பயன்படுத்தினார் என்று எழுதவில்லை. நான் எழுதாததை வைத்து சாடுகிறீர்கள்."
  • நான் மூன்று வேண்டுகோள்கள் விடுத்தேன், ஒன்றுக்கும் மறுமொழி இல்லை. அவைகளை மீண்டும் இடுகிறேன் ->"முதலில் தொல்காப்பியர் கூர்ப்பித்த என்பதைக் சொல்லவில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள். சார்ப்பித்தல் போன்ற உங்கள் பொருளற்ற உ+இத்தல் கொள்கை பினாத்தல் (அறியாது உளறுதல்) என ஒப்புக்கொள்ளுங்கள். கூகிள் தேடலில் பெறும் தொடர்களைக் கொண்டு செறிவான உள் அறிவில்லாமல் உரையாட வந்தீர்கள் எனவும் ஒப்புக்கொள்ளுங்கள்."
  • மேலும் ஒரு வேண்டுகோள். நிகழ்கால வினை காட்டும் சொற்களில் "கிரது" என்று எழுதாமல் "கிறது" என்று எழுதுங்கள். ஏற்கனவே எழுதிய இடங்களில் இருப்பதை கூடிய மட்டிலும் திருத்துங்கள். எழுத்துப்பிழை வருதல் பல்லோருக்கும் நிகழ்வதுதான், ஆனால் உங்களைப்போல ஒரு பொறுப்பும் இன்றி தமிழை, இங்கு விக்கி உரையாடல்களை மதிக்காமல், இழிவு செய்யும்முகமாகவே, வேண்டுமென்றே, எழுதுவதாகத் தான் உணர்கிறேன். ஒரு பயனருக்கு நன்னோக்கம் இருப்பதாக நினைத்து விக்கியில் பழக, உரையாட வேண்டும் என்பது கொள்கை. ஆனால் வேண்டுமென்றே பொல்லாங்கும் விசமத்தனம் செய்பவர்களும் விக்கியில் (ஆங்கில விக்கி உட்பட) உண்டு என்பது பட்டறிவு. இங்குள்ள உரையாடல்களில் பெரும் மாசு படியுமாறு உங்கள் பிழைநிறைந்த உரையாடல்கள் நிகழ்வதை நான் எதிர்க்கிறேன். வருங்காலத்தில் ஒருவர் ஆய்வு செய்தால் உங்களுடைய பிழைநிறைந்த இடுகைகளினால் தவறான முடிவுகளுக்கு வர நேரிடும். எனவே பொறுப்புணர்வுடன் உரையாட, கருத்தாட, வேண்டுகிறேன்.
  • விஜயராகவன் கூறுகிறார், "நான் செய்தது inductive reasoning. எந்த விஞ்ஞான முறையிலும் induction பெரும்பங்கு வகிக்கிரது. அதாவது ஒரு புனைகோளை, பல பல உதாரணங்கள் நிஜமாக்குமானால், அது ஒரு உண்மையை (அதன் வறம்புகளுடன்) தாபிக்கிரது." தவறான விரிவாக்கங்கள், பொருந்தாத பிழையான கரணியங்களால் வருவித்துக் காட்டுதல் "inductive reasoning." ஆகாது. ஏலும் (அறிவுக் கரணியங்களினால், ஏரண முறைப்படி ஏற்கும்) மெய்யான விரிவாக்கம், படைக்கும் முறை வேறு, ஏலாத, பொய்யான, அறிவுக் கரணையங்களினால் ஏற்க இயலாத மயங்கிய, மருண் "விரிப்பு" (இதனை விரிவாக்கம் எனல் பொருந்தாது) வேறு. ஓர் எடுத்துக் காட்டு கூறுவது பயன் தரும். முயல் என்னும் வினை முயல்கிறேன், முயன்றேன், முயல்வேன் என்பன பலவாறு பயன்படும் ஒரு சொல். முயல் என்பதில் இருந்து முயற்சி என்று ஒரு பெயர்ச்சொல் எழும். இந்த பெயர்ச்சொல்லை மிகவும் தவறாக பெரும் எழுத்தாளர்கள் முதல் அறியாதவர்கள் வரை பலரும் முயற்சிக்கிறேன், முயற்சித்தேன் என தவறாக பயன்படுத்துகின்றனர். பயில் -> பயிற்சி என்பது சரி, பயிற்சித்தேன் என்பது தவறு. பிறவினை ஆட்சி பயிற்றுவித்தான் என்பன போன்றவை. பிற வடிவங்களும் உண்டு. ஆனால் பயிற்சித்தேன் என்பது தவறு. முயற்சித்தேன் என்பது தவறு. பித்தளையைப் பொன், தங்கம் என்று கூறுதலுக்கு ஒரு பெயர் உண்டு அது inductive reasoning ஆகாது.
  • கூர்ப்பித்தல் என்பது பற்றி நான் கூறும் முன் முதலில் உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். மேலே இட்ட வேண்டுகோளுக்கு இணங்கி செயல்படுங்கள். அருணகிரிப் பெருமானின் திருப்புகழ் போன்ற அற்புதங்களைத் துறை போகக் கற்றீர்களா, ஊன்றிக் கற்றதால்தான் "கூர்ப்பித்த" என்று ஆண்டீர்களா எனக் கூறுங்கள். இல்லை ஆழ்ந்து கற்காமல் கூகிள் தேடலில் இருந்து பிடித்து இட்டீர்களா என்று கூறுங்கள். மேலும் ஓரிரு இடத்தில் இருந்து "கூர்ப்பித்த" என்பதற்கு காட்டு தருவீர்களா? பித்தன், பித்தன் சூலம் என்றால் என்ன என்று அறிவீர்களா? மெய்யியலில் இழையோடும் பரிமொழி பற்றி அறிவீர்களா? --செல்வா 16:00, 22 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, உங்கள் இலக்கண ஞானத்தை மதிக்கிறேன். நான் இலக்கண பிழைகளை செய்கிறேன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நான் செய்யாதவற்றை என் மீது போடுகிறீர்கள். 'வேண்டுமென்றே பொல்லாங்கும் விசமத்தனம் ' 'இழிவு செய்யும்முக' என பலவாறு வசைபாடியுள்ளீர்கள்; முன்பு, நான் எதோ தமிழற்ற சொல்களை 'திணிப்பதாக' சொன்னீர்கள். இது ஒன்றும் சரியல்ல. நான் எல்லோரையும் மதிப்புடன் பேசி, தர உயர்வு ஏற்படுமாறு கருத்துகளை வைக்கிறேன்.த.வி. நடத்துதல் பேசிய பற்றிய பேச்செல்லாம், தர உயர்வு பற்றிதான். உதாரணமாக இன்றும் ஆலமரத்தில், தனிமனிதர் பிளாக்குகளின் துணை வேண்டாம் என்று சொல்லி, அதன் காரணங்களை சொல்லியுள்ளேன். இது பொறுப்பு இல்லை என்றால், எதுதான் அது. அதனால் உங்கள் வசைகளும், பொறுப்பு பற்றிய அறிவுரைகளும் மிகை என தோன்றுகிறது. எதிர்கால ஆய்வாளர் நான் எழுதியதைப் பார்த்து தவறான முடிவுக்கு வருவார் என்பது உங்கள் கற்பனை. எதிர்கால ஆய்வாளர் எப்படியெல்லாம் செய்யலாம் என்று நினைத்து, நாம் போக்கை மாற்றமுடியாது. I'll do my best today, you can do your worst tomorrow எனதான் கருதுகிறேன். உங்கள் தர்க்க யுக்திகள் ஆச்சரியமாக உள்ளது ; வசை பாடுவது நீங்கள்; ஆனால் "பொல்லாங்கும் ,விசமத்தனம் ' 'இழிவு செய்யும்முகம் செய்வது' மற்றவர்கள். மற்றவர்கள் சொற்களை நிறைய மாற்றுவது நீங்கள் - ஆனால் 'திணிப்பு' பழி மற்றவர்கள்மேல்.உங்கள் அறிவுரைகளை நீங்கள் கொஞ்சம் ஏற்றால் சாலச்சிறந்த்து.

ஏதோ கூகிளிலும், மற்ற இணைகளிலும் நமக்கு வேண்டிய தகவல் தேடக்கூடாது போல சொகிறீர்கள். இதில் தவறே இல்லை. பல தமிழிலக்கியம் இணையில் அகப்படுகிரது. அதனால், நமது இலக்கண அறிவை வளர்த்த இணை துணையாகும். த.வி.யே அதைச் சார்ந்ததுதானே. அருணகிரியார் பற்றிய தளத்துக்கு சென்று, 'கூர்பித்திய' என்பதின் பொருளறிந்தேன்.

"கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு போத்துக்க மானகுறை ...... யுடையேனைக் ....."

என்பதற்க்கு பொருள்

".......ஆகாயத்தில் இருந்து கூர்மை கொண்ட சூலாயுதத்தை உடைய யமன் சூலத்தால் என்னைக் குத்தி என் ஆவியைக் கொண்டு போகின்ற துக்கமான ஒரு குறைபாட்டை உடைய என்னை, .......".

இலக்கணத்தை தமிழில்க்கியம் தரும் உதாரணங்களால் ஏற்பது/மறுப்பது தவறா?

உங்கள் கேள்விகளுக்கு

"முதலில் தொல்காப்பியர் கூர்ப்பித்த என்பதைக் சொல்லவில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள். " ஒத்துக் கொள்கிறேன்

"..பொருளற்ற உ+இத்தல் கொள்கை பினாத்தல் (அறியாது உளறுதல்) என ஒப்புக்கொள்ளுங்கள்" . இதில் பினாத்தலே இல்லை. நான் எற்கனெவே சொன்னாற்ப்போல், எண் அணுகுமுறை empirical, புறவயமானது. ஒரு மேற்கோள் சரியில்லையென்றால். அதனை விட்டுவிடுவேன். பலன் கொடுக்கும் மேற்கோளை எடுப்பேன். நீங்கள் சொல்லும் இலக்கணம் சரியென்றால், அதையே ஏற்ப்பேன்.

"கூகிள் தேடலில் பெறும் தொடர்களைக் கொண்டு செறிவான உள் அறிவில்லாமல் உரையாட வந்தீர்கள் எனவும் ஒப்புக்கொள்ளுங்கள்" உங்கள் வசைபாடுதலை 'சாமர்த்தியம்' என்று தவறாக கருதுகிறீர்கள்.--விஜயராகவன் 19:34, 22 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் எழுத்துக்கூட்டல்

தொகு

இங்கு பலரும் தமிழ் மாணவர்களே. ஆனால், நீங்கள் சற்று கூடிய கவனம் எடுத்து எழுதினால் நன்று என்று எனக்கே தோன்றுகின்றது. தயவுசெய்து பலரின் வேண்டுகோளை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

அத்தோடு, கட்டுரை ஆக்கத்தில் கவனம் செலுத்தினாலும் நன்று. வரம்புக்கு மேல் இழுப்பறி செய்வது அவ்வளவு ஆரோக்கியமாக தெரியவில்லை.

நன்றி. --Natkeeran 17:01, 22 பெப்ரவரி 2007 (UTC)

தட்டச்சுப் பிழைகள் புரிந்து கொள்ளத்தக்கவை. ஆனால், தாபிக்கிது, வகிக்கிது போன்று நீங்கள் விடும் பிழைகள் பெரும் பிழைகள். இவை தட்டச்சுப் பிழை அல்ல. தமிழ் எழுதத் தெரியாததால் வரும் பிழை. இங்கு உரையாடுபவர் ஒவ்வொருவரின் தகுதியையும் நாங்கள் மேற்கோள் காட்டுபவர்களின் தகுதியையும் விமர்சிக்கும் நீங்கள் முதலில் ஒரு கலைக்களஞ்சியத்தில் எழுதத் தக்க அளவு பிழையில்லாமல் தமிழை கற்பது நன்று. நீங்கள் என்று வேண்டுமானாலும் பிழை மேல் பிழை விட்டு தமிழ் பழகலாம். ஆனால், தமிழ் விக்கிப்பீடியா அதற்கான இடம் இல்லை. கூகுள் தேடல் படம் காட்டத் தான் உதவும். தமிழ் கற்க அல்ல. அதனால், நல்ல தமிழாசிரியராகப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். நிறைய தமிழ் நூல்கள் படியுங்கள் (அகராதிகளை அல்ல). நீங்கள் மேற்கோள் காட்டும் எந்த ஒரு நூலையும் நீங்கள் முழுமையாகப் படித்திருந்தால் நிச்சயம் இது போன்ற பெரும் பிழைகள் வராது. பிணத்தை அறுத்துப் பார்த்து மருத்துவம் கற்கலாம். ஆனால், உயிருள்ளவனை அறுத்துப் பார்த்து தான் மருத்துவம் கற்பேன் என்றால் என்ன வாதம்? தமிழ் விக்கிப்பீடியாவின் மாற்றங்கள் உடனுக்குடன் வாசகர்களால் படிக்கப்படுபவை. நீங்கள் விடும் பிழைகள் தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டு மொத்த தரத்துக்கும் இழுக்காக அமையும். இது வரை எந்த ஒரு பயனரிடமும் நான் இப்படி கடும் சொல் பயன்படுத்தியதில்லை. எனவே மன்னிக்கவும். ஆனால், தமிழ் விக்கிப்பீடியா தவிர வேறெந்த ஒரு தமிழ் மன்றத்திலும் இவ்வளவு நாட்கள் யாரும் உங்களுடன் பொறுமையாக உரையாடி இருக்க மாட்டார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி.--Ravidreams 17:56, 22 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, மற்றவர்களுக்கு

"நீங்கள் விடும் பிழைகள் தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டு மொத்த தரத்துக்கும் இழுக்காக அமையும்." . இதுதான் உங்கள் கருத்தென்றால் சில காலம், நான் ஒன்றும் எழுதவில்லை. மற்றவர்கள் எழுதுவதை பார்க்கிறேன்.--விஜயராகவன் 19:41, 22 பெப்ரவரி 2007 (UTC)

பேச்சுப் பக்கங்களில் நீங்கள் விடும் பிழைகளையும் சேர்த்தே சொன்னேன்--Ravidreams 19:44, 22 பெப்ரவரி 2007 (UTC)

ஒரு வேண்டுகோள்

தொகு

விஜயராகவன், 'ஆரியர்' பக்கத்தைப் பார்த்தேன். அது ஒரு பெரிய project. தீர யோசித்துச் செய்ய வேண்டும். முயற்சிக்கிறேன். அப்பக்கத்திற்கு என் கவனத்தை ஈர்த்ததற்கு ந்ன்றி. --Profvk 15:16, 3 மே 2007 (UTC)Reply

பங்களிப்பு வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:16, 21 சூலை 2011 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை திட்டம்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vij&oldid=1066351" இலிருந்து மீள்விக்கப்பட்டது