பரக்பூர்

மேற்கு வங்காளத்திலுள்ள ஒரு கிராமம்

பரக்பூர் (Barrackpore, or Barrackpur), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடக்கே 15 கிமீ தொலைவில் பரக்பூர் நகரம் உள்ளது.

பரக்பூர்
கொல்கத்தா அருகில் உள்ள நகரம்
பரக்பூர் தொடருந்து நிலையம், வடக்கு 24 பர்கானா மாவட்டம்
பரக்பூர் தொடருந்து நிலையம், வடக்கு 24 பர்கானா மாவட்டம்
பரக்பூர் is located in மேற்கு வங்காளம்
பரக்பூர்
பரக்பூர்
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பரக்பூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°46′N 88°22′E / 22.76°N 88.37°E / 22.76; 88.37
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்வடக்கு 24 பர்கனா மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
 • நகர் மன்றத் தலைவர்உத்தம் தாஸ்[1]
பரப்பளவு
 • மொத்தம்10.61 km2 (4.10 sq mi)
ஏற்றம்
15 m (49 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,52,783
 • அடர்த்தி14,000/km2 (37,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காளி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
700120,700121,700122,700123
தொலைபேசி குறியிடு9133
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிபரக்பூர்
சட்டமன்றத் தொகுதிபரக்பூர்
இணையதளம்www.barrackpore.gov.in

பெயர் காரணம்

தொகு

பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் படைவீரர்களின் முதல் பாசறையாகவும், போர் பயிற்சி புரியும் இடமாக இருந்ததால், இவ்விடத்திற்கு பரக்பூர் எனப் பெயராயிற்று.

வரலாறு

தொகு

1772ல் பரக்பூர், இந்தியாவில் கம்பெனி ஆட்சி காலத்தில், முதலாவது ஆங்கிலேய போர்ப்படைவீரர்களின் பயிற்சி கூடமாகவும், குடியிருப்பு நகரமாகவும் இருந்தது. மேலும் பரக்பூர் நகரம், இந்தியத் தலைமை ஆளுநரின் வாழ்விடம் மற்றும் அலுவலமாக விளங்கியது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு சிப்பாய்க் கிளர்ச்சிகளில் முதன்மையான, 1824ல் சிப்பாய் பிண்டி திவாரி தலைமையில் நடைபெற்ற பரக்பூர் பரக்பூர் சிப்பாய் கிளர்ச்சி நடைபெற்றது.[2]

முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் போது, கடல் கடந்து கப்பல்களில் பர்மாவிற்கு செல்வது என்பது தங்களின் சமூக வழக்கத்திற்கு எதிரானது எனக்கூறி கப்பலில் ஏற மறுத்து கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி செய்த இந்த இந்து சிப்பாய்களை, ஆங்கிலேயப் படைவீரர்கள் பீரங்கிகளால் தாக்கிக் கொன்றனர். [3]1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது பரக்பூரில் இந்து மற்றும் இசுலாமிய சிப்பாய்கள், மங்கள் பாண்டே தலைமையில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.

மக்கள்தொகை பரம்பல்

தொகு
பரக்பூர் மக்கள்தொகை
Census Pop.
190119,307
191127,60543.0%
192122,460-18.6%
193114,413-35.8%
194121,77351.1%
195142,63995.8%
196163,77849.6%
197196,88951.9%
19811,15,51619.2%
19911,42,55723.4%
20011,44,3911.3%
20111,52,7835.8%
Sources:[4]

2011-ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பரக்பூர் நகர மக்கள்தொகை 1,52,783 ஆகும். அதில் ஆண்கள் 78,349 (51%), பெண்கள் 74,434 (49%) ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11,786 ஆக உள்ளனர். எழுத்தறிவு 1,25,144 (88.76%) ஆகவுள்ளது. [5] பரக்பூர் நகரத்தில் வங்காள மொழி பேசும் இந்துக்கள் 85.76%, இசுலாமியர்கள் 13.37% மற்றும் பிற சமயத்தவரகள் 0.86% ஆகவுள்ளனர். [6]

பொருளாதாரம்

தொகு

தொழில்கள்

தொகு

இந்தியத் தரைப்படை மற்றும் விமானப்படைவீரர்களின் பாசறைகள் பரக்பூர் நகரத்தில் உள்ளது. மேலும் வேளாண்மை, மீன் பிடி தொழில், தோட்டக்கலைத் தொழில்கள் வளர்ச்சியடைந்துள்ளது.

கொல்கத்தா பெருமாநகராட்சியின் வலாயத்தில் பரக்பூர் நகராட்சி அமைந்துள்ளது. [7][8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Official District Administration site பரணிடப்பட்டது சனவரி 15, 2007 at the வந்தவழி இயந்திரம்
  2. Jaideep Mazumder, The First Martyr, OUTLOOK, 25 Aug 2008, P.20
  3. Wolpert, Stanley (2009). A New History of India (8th ed.). New York, NY: Oxford UP. p. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-533756-3.
  4. "District Census Handbook North Twenty Four Parganas, Census of India 2011, Series 20, Part XII A" (PDF). Section II Town Directory, Pages 781-783 Statement I: Growth History, Pages 799-803. Directorate of Census Operations V, West Bengal. பார்க்கப்பட்ட நாள் 11 June 2018.
  5. "2011 Census – Primary Census Abstract Data Tables". West Bengal – District-wise. Registrar General and Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 7 June 2018.
  6. Barrackpore Population Census 2011
  7. "Kolkata Metropolitan Development Authoity, Annual Report 2010-11". 1/1 Kolkata Metropolitan Area Map. KMDA. Archived from the original on 1 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 7 June 2018.
  8. "Kolkata Metropolitan Development Authority, Annual Report 2010-11". 1 / 2 Role of KMDA. KMDA. Archived from the original on 1 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 7 June 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரக்பூர்&oldid=3582453" இலிருந்து மீள்விக்கப்பட்டது