பாபுல் மந்தபு
பாபுல் மந்தபு நீரிணை (அல்லது பாப் அல்-மந்தப்) Bab-el-Mandeb ( அரபு : باب المندب , lit. "Gate of Tears") [1] என்பது அரேபிய தீபகற்பத்தில் உள்ள, யேமனுக்கும் ஆப்பிரிக்காவின் கொம்பில் உள்ள சீபூத்தீ மற்றும் எரித்திரியா ஆகியவற்றுக்கு இடையில் உள்ள ஒரு நீரிணை ஆகும். இது செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கிறது.
பெயர்
தொகுஅரேபிய தீபகற்பத்தை ஆபிரிக்காவின் கொம்பிலிருந்து பிரித்த ஒரு நிலநடுக்கத்தால் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கையில் இருந்து, இந்த நீரிணையின் வழியில் கப்பல்களை செலுத்தலில் உள்ள ஆபத்துகளிலிருந்தோ அல்லது ஒரு அரபு செவிவழிக் கதையின் படி இந்த நீரிணை அதன் பெயரைப் பெற்றது.[1]
நிலவியல்
தொகுபாப்-எல்-மண்டேப் இந்தியப் பெருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் செங்கடல் மற்றும் சுயஸ் கால்வாய் வழியாக ஒரு இணைப்புப்பகுதியாக உள்ளது. 2006 ஆம் ஆண்டில், ஒரு நாளைக்கு 3.3 million barrels (520,000 m3) இந்த நீரிணை வழியாக சென்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் மொத்தம் ஒரு நாளைக்கு சுமார் 43 million barrels per day (6,800,000 m3/d) எண்ணெய்க் கப்பல்களால் கொண்டு செல்லப்படுகிறது.[2]
இதன் குறுக்கே உள்ள தூரம் யேமனின் இராசு மென்கெலியில் இருந்து சீபூத்தியில் உள்ள இராசு சியான் வரை சுமார் 20 மைல் (30 கி.மீ) ஆகும். பெரிம் தீவானது நீரிணையை இரண்டு தடங்களாகப் பிரிக்கிறது, அவற்றில் கிழக்கு, பாப் இசுகெண்டர் (அலெட்சாண்டரின் நீரிணை) என அழைக்கப்படுகிறது, இது 2 மைல் (3 கிமீ) அகலம் மற்றும் 16 பாகம் (30 மீ) ஆழம் கொண்டது. அதேசமயம் மேற்கு, அல்லது டாக்- எல்-மயூன், சுமார் 16 மைல் (25 கி.மீ) அகலமும் 170 ஆழம் (310 மீ) ஆழமும் கொண்டது. சீபூத்தியின் கடற்கரைக்கு அருகில் " ஏழு சகோதரர்கள் " என்று அழைக்கப்படும் சிறிய தீவுக் கூட்டம் உள்ளது. கிழக்கு தடத்தில் உள்நோக்கி ஒரு மேற்பரப்பு நீரோட்டம் உள்ளது, ஆனால் மேற்கு தடத்தில் வலுவான வெளிப்புறமாக கீழ்நீரோட்டம் உள்ளது.[1]
வரலாறு
தொகுமயோசீன் சகாப்தத்தில் பண்டைய-சுற்றுச்சூழல் மற்றும் டெக்டோனிக் நிகழ்வுகள் (புவி ஒடு நிகழ்வு) போன்றவற்றால் டானாகில் இஸ்த்மஸை உருவாக்கியது, இது ஏமன் மற்றும் எத்தியோப்பியா இடையே தொடர்பை உருவாக்கிய நிலப் பாலமாகும்.[3] கடந்த 100,000 ஆண்டுகளில், கடல் மட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் போன்றவை நீரிணை உருவாகவும், மூடவும் காரணமாக ஆயின.[4] நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கருதுகோளின் படி, பாப்-எல்-மண்டேப்பின் நீரிசந்திகள் நவீன மனிதர்களின் ஆரம்பகால இடப்பெயர்வுகளுக்கு சாட்சியாக இருக்கலாம். அப்போது பெருங்கடல்கள் மிகவும் ஆழம் குறைந்தவையாக இருந்தன. மேலும் நீரிணையானது மிகுந்த ஆழமற்றோ அல்லது வறண்டதாக இருந்தது என்று கருதப்படுகிறது. இது ஆசியாவின் தெற்கு கடற்கரையில் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளை அனுமதித்தது.
எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் தேவாஹெடோ சர்ச் பாரம்பரியத்தின்படி, செமடிக் கீஸ் மொழி பேசுபவர்கள் துவக்கத்தில் ஆப்பிரிக்காவிற்கு குடியேறியதற்கு பாப்-எல்-மண்டேப்பின் நீர்சந்திகளே உதவியாக இருந்தன. இது ஏறக்குறைய கிமு 1900 காலக்கட்டத்தில் நடந்தது. ஏறக்குறைய இதேகாலக்கட்டத்தில் எபிரேய யூதரின் சிறப்புக்குரிய மூதாதையருள் ஒருவரான யாக்கோபின் இப்பகுதியை கடந்து சென்றுள்ளார்.[5] அக்சும் பேரரசு ஆப்பிரிக்காவின் கொம்பில் ஒரு முக்கிய பிராந்திய சக்தியாக இருந்தது. இஸ்லாத்தின் எழுச்சிக்கு சற்று முன்னர் ஹிமாரிய இராச்சியத்தை கைப்பற்றுவதன் மூலம் அது தனது ஆட்சியை நீரிணை முழுவதும் நீட்டித்தது.
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தனது பிரித்தானிய இந்தியப் பேரரசின் சார்பாக 1799 இல் ஒருதலைப்பட்சமாக பெரிம் தீவைக் கைப்பற்றியது. பிரிட்டன் அரசாங்கம் 1857 ஆம் ஆண்டில் அதன் உரிமையை மீண்டும் வலியுறுத்தியதுடன், 1861 ஆம் ஆண்டில் அங்கு ஒரு கலங்கரை விளக்கத்தை அமைத்தது, இதைப் பயன்படுத்தி செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக இருந்த வர்த்தகப் பாதைகளை கட்டுப்படுத்தியது.[1]
22, பிப்ரவரி, 2008 அன்று, தாரெக் பின்லேடனுக்குச் சொந்தமான ஒரு நிறுவனமானது, யேமனை சீபூத்தீயுடன் இணைக்கும் வகையில், பிரிட்ஜ் ஆஃப் தி ஹார்ன்ஸ் என்ற பாலத்தை நீரிணையின் குறுக்கே கட்டும் திட்டத்தை வெளியிட்டது.[6] மத்திய கிழக்கு அபிவிருத்தி எல்.எல்.சி செங்கடலைக் கடந்து செல்லும் இந்தப் பாலத்தை நிர்மாணிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இது உலகின் மிக நீண்ட தொங்கு பாலமாக இருக்கும்.[7] டென்மார்க்கைச் சேர்ந்த கட்டிட நிறுவனங்களான டிஸ்ஸிங் + வீட்லிங் உடன் இணைந்த பொறியியல் நிறுவனமான சி.ஒ.டபிள்யூ க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டம் தாமதமாகிவிட்டது என்று 2010 இல் அறிவிக்கப்பட்டது, ஆனால் 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரை இந்த திட்டம் குறித்து எதுவும் கேட்கப்படவில்லை.
துணைப்-பிராந்தியம்
தொகுஅரபு கைட்டமைப்பில் பாப்-எல்-மண்டேப் பகுதி ஒரு துணைப் பகுதியாகும், இதில் சீபூத்தி, ஏமன் மற்றும் எரிட்ரியா ஆகியவை அடங்கும்.
விளக்கக் குறிப்புகள்
தொகுபார்ப் அல் மண்டாப்: [8] | ||||||
நாடு | பகுதி (கி.மீ 2 ) |
மக்கள் தொகை (2016 est. ) |
மக்கள் அடர்த்தி (ஒரு கி.மீ 2 க்கு ) |
தலைநகரம் | மொத்த உள்நாட்டு உற்பத்தி (பிபிபி) $ எம் அமெரிக்க டாலர் | மொத்த உள்நாட்டு உற்பத்தி (பிபிபி) $ அமெரிக்க டாலர் |
---|---|---|---|---|---|---|
சீபூத்தீ | 23.200 | 846.687 | 37.2 | சீபூத்தி நகரம் | $ 3,327 | $ 3,351 |
எரித்திரியா | 117.600 | 6.380.803 | 51.8 | அஸ்மாரா | $ 9,121 | $ 1,314 |
யெமன் | 527.829 | 27.392.779 | 44.7 | சனா | $ 58.202 | $ 2,249 |
மொத்தம் | 668.629 | 34.620.269 | 29.3 / கிமீ 2 | பல்வேறு | $ 70.650 | $ 1841 |
மக்கள் தொகை மையங்கள்
தொகுபாப்-எல்-மண்டேப்பின் சீபூத்திடயன் மற்றும் யேமன் பக்கங்களிலும் மிக முக்கியமான ஊர்கள் மற்றும் நகரங்கள் உள்ளன.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Bab-el-Mandeb". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (9th) 3. (1878). New York: Charles Scribner's Sons.
- ↑ World Oil Transit Chokepoints பரணிடப்பட்டது பெப்பிரவரி 18, 2015 at the வந்தவழி இயந்திரம், Energy Information Administration, US Department of Energy
- ↑ Henri J. Dumont (2009). The Nile: Origin, Environments, Limnology and Human Use. Monographiae Biologicae. Vol. 89. Springer Science & Business Media. p. 603. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781402097263.
- ↑ Climate in Earth History. National Academies. 1982. p. 124.
- ↑ Official website of EOTC பரணிடப்பட்டது சூன் 25, 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ BBC NEWS | Africa | Tarek Bin Laden's Red Sea bridge
- ↑ Tom Sawyer (May 1, 2007). "Notice-to-Proceed Launches Ambitious Red Sea Crossing". Engineering News-Record.
- ↑ "CIA World Factbook". The World Factbook. Langley, Virginia: Central Intelligence Agency.