பாவலர் மணிவேலனார்
பெ. இரத்தினவேலு என்ற இயற்பெயெர் கொண்ட "பாவலர்" மணிவேலன் (15 மார்ச் 1932-28 ஏப்ரல் 2016) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் கவிஞர் ஆவார். தமிழகத்தின் அரூரில் தமிழியக்கம் தொடங்கி நடத்தியவர். பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றவர்.
பாவலர் மணிவேலன் | |
---|---|
படிமம்:Paavalar Manivelanar.jpg 2012-க்கு முன்னதாக | |
பிறப்பு | இரத்தினவேலு 15 மார்ச் 1932 அஸ்தகிரி, பிரிக்கப்படாத சேலம் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 28 ஏப்ரல் 2016 அரூர், தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | (அகவை 84)
கல்லறை | அரூர், தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இனம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | முதுகலை தமிழ் |
பணி | ஆசிரியர், கவிஞர், திறனாய்வாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1963-2016 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நாக நாட்டு இளவரசி பீலிவளை |
பின்பற்றுவோர் | மா. இராமமூர்த்தி |
பெற்றோர் | முத்துவேடியம்மாள் (தாய்) பெரியண்ணன் (தந்தை) |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 1. குறிஞ்சி சீத்தாராமன் 2. கலைச்செல்வி 3. தில்லைக்கரசி |
விருதுகள் | பாவேந்தர் பாரதிதாசன் விருது (2000) |
தொடக்க வாழ்க்கை
தொகுதற்போதைய தருமபுரி மாவட்டம் கடத்தூருக்கு அருகிலுள்ள அஸ்தகிரி (குதிரைமலை) என்னும் சிற்றூரைச் சேர்ந்த முத்துவேடியம்மாள்-பெரியண்ணன் இணையருக்கு 15 மார்ச் 1932 அன்று பிறந்தார் மணிவேலனார்.[1] இவர் பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் இரத்தினவேலு.
கல்வியும் ஆசிரியப்பணியும்
தொகுமூன்றாம் வகுப்பு வரை அஸ்தகிரியிலும், ஐந்தாம் வகுப்பு வரை கடத்தூரிலும், பின் அரூரிலும் பயின்று பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். இதன்பின் மேட்டூரிலுள்ள இடைநிலை ஆசிரியப்பயிற்சிப் பள்ளியில் பயின்றார்.
1953-இல் தருமபுரி செட்ரப்பட்டி இடைநிலைப்பள்ளியில் ஆசிரியரானார். அக்காலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவராக அவரிடம் பயின்ற எழுத்தாளர் தகடூர்த் தமிழ்க்கதிர் ஒரு வெண்பா இயற்றி மணிவேலனாரிடம் திருத்தம் பெற்றார். தமிழ்க்கதிருக்கு விருத்தம், சிந்து போன்ற யாப்பு வகைகளைப் பயிற்றுவித்தார் மணிவேலனார்.[2]
மேலும் பயின்று இளங்கலை பொருளியல் பட்டம் பெற்றார். 1977ல் முதுகலை தமிழ் பட்டம் பெற்று முதுகலைத் தமிழாசிரியராக உயர்ந்தார்.
1990ல் ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
தமிழ்ப்பணி
தொகுசிறுவயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்த மணிவேலனார், தன் பன்னிரண்டாம் அகவையில் கும்மிப்பாட்டு என்ற கவிதையைப் புனைந்தார். 1950ல் பள்ளிப்பருவத்தில் நகைச்சுவை நடிகர் என். எஸ். கிருஷ்ணன் தலைமையில் பள்ளியில் நகைச்சுவை நாடகம் ஒன்றையும், 1956ல் புலவர் குழந்தை தலைமையில் ‘கண்ணாடி வளையல்’ என்னும் தலைப்பில் ஈழச்சிக்கல் குறித்த நாடகத்தையும், ‘பரம்பரைப்பரிசு’ என்னும் சீர்திருத்த நாடகத்தையும் நடத்தியுள்ளார்.
எழுத்துச் சீர்திருத்தம்
தொகு1978 ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழாவினையொட்டிப் பெரியார் வலியுறுத்திய எழுத்துச் சீரமைப்பு முறையை நடைமுறைப்படுத்த அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ம. கோ. இராமச்சந்திரன் தலைமையிலான அரசு ஆணை வெளியிட்டபோது லை, னை எழுத்துகளில் செய்த மாற்றம் போல ஐ, ஔ என்ற உயிர் எழுத்துகளை அய், அவ் என மாற்றி எழுத ஆணையிட்டது. இச்சமயம் மணிவேலனார், ஐ, ஔ எழுத்துகளை மாற்றுவதால் ஏற்படும் சிக்கல்களையும் இலக்கணத்தில் ஏற்படும் மாற்றம் குறித்தும் 'சிறு திருத்தம்' என்ற தலைப்பில் ஒரு வேண்டுகோளை அரசுக்கு அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில் ஆய்வு செய்த அறிஞர் குழு, ஐ, ஔ எழுத்துகளில் மாற்றம் தேவையில்லை எனப் பரிந்துரைத்தது.
தமிழில் ஆய்வேடுகள்
தொகுமதுரை காமராசர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டவுடன், தமிழ்நாட்டில் மூன்று பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளமையைச் சுட்டிக்காட்டி தமிழ் ஆய்வேடுகளை தமிழிலே எழுத ஆணையிடுமாறு அரூர் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் சார்பாக தமிழ்நாட்டு அரசிற்கும் பல்கலைக்கழகங்களுக்கும் வேண்டுகோள் அனுப்பினார். அவ்வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசு நடைமுறைப்படுத்தியது.
பிற செயல்பாடுகள்
தொகு1995ல் அரூரில் 'தமிழியக்கம்' என்ற பெயரில் ஒரு இயக்கம் தொடங்கினார். இது வணிக நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் வைத்தல், பெயர்ப்பலகைகளில் தமிழில் பெயர் வைத்தல், குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரிடுதல் போன்ற பணிகளைச் செய்தது. 1997ல் அரூரில் இலவசத் தமிழ் இலக்கியப் பயிற்சி வகுப்பு தொடங்கி யாப்பிலக்கணம், மொழியிலக்கணம், மேடைப்பேச்சு போன்றவற்றில் பொது மக்களுக்குப் பயிற்சியளித்தார்.
1997ல் அரூரில் உள்ள மஞ்சவாடி கணவாயில் (சங்ககாலத்தில் ”நன்றா” என வழங்கப்பட்டது) கலைஞர் முத்தமிழ் மன்றம் சார்பில் ‘மலைச்சாரல்’ என்ற கவியரங்கத்தை நடத்தினார்.
படைப்புகள்
தொகுஆண்டு | தலைப்பு | வகை | பதிப்பகம் |
---|---|---|---|
1963 | மழலை இன்பம் | கவிதைத் தொகுப்பு | |
1965 | மழலை இலக்கியம் | கவிதைத் தொகுப்பு | |
1977 | காதைத் திருப்பு கதை சொல்கிறேன் | கவிதைத் தொகுப்பு | |
1978 | இயற்கை அழைக்கிறது வா | கவிதைத் தொகுப்பு | |
1995(?) | சுவை நோக்கில் சுரதா | திறனாய்வு | |
1999(?) | நாக நாட்டு இளவரசி பீலிவளை | வரலாற்றுக் காப்பியம் | |
? | அவல நோக்கில் சிலம்பு | திறனாய்வு | |
? | கலித்தொகையில் உவமைகள் | திறனாய்வு | |
? | பாவேந்தர் நோக்கில் குடும்பம் | திறனாய்வு | |
? | பாவேந்தர் விழையும் பெண்ணுரிமை | திறனாய்வு | |
? | வஞ்சினம் | வரலாற்றுக் காப்பியம் | |
? | முதுமைச்சிக்கல்களும் அவற்றுக்குத் தீர்வுகளும்
(ஆறு அறிஞர்களுக்குப் பயிற்சியளித்து எழுதுவித்தது)[2] |
தொகுப்பு நூல் |
தனி வாழ்க்கை
தொகு1955-இல் முத்தியாலம்மாள் (இராசம்) என்பவரை சாதி மறுப்புத் திருமணம் செய்தார் மணிவேலனார். இவ்விணையருக்குக் குறிஞ்சி சீத்தாராமன் என்ற மகனும் கலைச்செல்வி, தில்லைக்கரசி (பல் மருத்துவர்) எனும் மகள்களும் உள்ளனர்.[3]
மறைவு
தொகு28 ஏப்ரல் 2016 அன்று காலமானார் மணிவேலனார். அவரின் இறுதிச்சடங்குகள் மறுநாள் நண்பகலில் நடைபெற்றன.[3]
புகழ்
தொகுஇவரது மழலை இன்பம் கவிதைத்தொகுப்பு, "பாவேந்தர்" பாரதிதாசனால் பாராட்டப்பட்டது.
மணிவேலனாரின் ‘இயற்கை அழைக்கிறது வா’ என்ற கவிதை நூல் 1998ல் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தமிழ் இளங்கலை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. மேலும் இவரின் ‘நாகநாட்டு இளவரசி பீலிவளை’ என்ற நூல் அப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டது.
கவிஞர் மா. இராமமூர்த்தி, இவரைப் போற்றி பாவலர் மணிவேலனார் வாழ்க்கைக் காப்பியம் (2003-06 (?)), பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ் (2009) ஆகிய செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார்.
பட்டங்கள்
தொகுஆண்டு | பட்டம் | முகமை |
---|---|---|
1964 | கவிஞர் | எழில் இதழ் |
பாவலர் | பாவாணர் பெங்களுர் மன்றம் | |
1987 | அறுசீர் அரசர் | திருச்சி முத்தமிழ் மன்றம் |
1988 | வண்டமிழ்கொண்டல் | 'உவமைக்கவிஞர்' சுரதா |
பாவலரேறு | தென்னார்க்காடு கவிஞர் பேரவை | |
1990 | கவிமாமணி | கிருஷ்ணகிரி உலகத் தமிழ்க்கவிஞர் மாநாடு |
1991 | இலக்கியத்தென்றல் | அரூர் தமிழ்ச்சங்கம் |
1997 | ஆராய்ச்சி பேரறிஞர் | கடத்தூர் முத்தமிழ் மன்றம் |
செந்தமிழ்ச் செம்மல் | சென்னை தலைநகர் தமிழ்ச்சங்கம் | |
1998 | காப்பிய வேந்தர் | மொரப்பூர் பைந்தமிழ்மன்றம் |
? | வரலாற்றுப் பாவரசர் | தருமபுரி தகடூரான் அறக்கட்டளை |
? | பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் | புதுச்சேரி அரசு மற்றும் பாவேந்தர் பாசறை |
விருதுகள்
தொகுஆண்டு | விருது | முகமை | குறிப்பு |
---|---|---|---|
1992 | சிறந்த எழுத்தாளர் | தேன்தமிழ்ப் பதிப்பகம், சேலம் | |
1994 | இலக்கிய விருது | கே.ஆர்.ஜீ.நாகப்பன் இராசம்மாள் அறக்கட்டளை | |
1995 | சிறந்த திறனாய்வு நூல் | தமிழ் வளர்ச்சித் துறை (தமிழ்நாட்டு அரசு) | சுவை நோக்கில் சுரதா நூலுக்காக |
1996 | கவியரசர் கண்ணதாசன் விருது | தஞ்சை இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே | |
1997 | சிறந்த கவிதை நூல் | தமிழ் வளர்ச்சித் துறை, (தமிழ்நாட்டு அரசு) | நாக நாட்டு இளவரசி பீலிவளை காப்பியத்துக்காக
(பரிசுத்தொகை: ₹. 10,000) |
2000 | பாவேந்தர் பாரதிதாசன் விருது | தமிழ் வளர்ச்சித் துறை, (தமிழ்நாட்டு அரசு) | (பணமுடிப்பு: ₹. 1,00,000) |
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ் வளர்ச்சித் துறை. திருவள்ளுவர் திருநாள், 1999. சென்னை: தமிழ்நாடு அரசு. p. 12.
- ↑ 2.0 2.1 "மரபும் நானும்: தகடூர்த் தமிழ்க்கதிர் அவர்களின் தமிழ்ப்பணிகள்". இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ். மே 2016. https://storage.googleapis.com/inamtamil-cdn/Articles/inamtamil-cdn-data/Issues%20full%20pdf/Issue%205.pdf. பார்த்த நாள்: 30 நவம்பர் 2022.
- ↑ 3.0 3.1 "காலமானார் பாவலர் மணிவேலன்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.