பிராங்க் டைசன்
பிராங்க் டைசன் (Frank Tyson, (6 சூன் 1930 – 27 செப்டம்பர் 2015) என்பவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 244 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1954 - 1959 ஆம் ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3][4]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பிராங்க் டைசன் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 377) | ஆகத்து 12 1954 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | மார்ச்சு 18 1959 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஏப்ரல் 26 2009 |
இவர் 1960 இல் ஆத்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பின்னர் பள்ளி ஆசிரியர், பத்திரிகையாளர், துடுப்பாட்டப் பயிற்சியாளர் மற்றும் துடுப்பாட்ட வர்ணனையாளர் போன்ற பல்வேறு பணிகளில் பணியாற்றினார். பத்திரிகைகளால் " டைபூன் டைசன் " என்று புனைபெயர் கொண்டு அழைக்கப்பெற்ற இவர், துடுப்பாட்டத்தில் சிறந்த விரைவுபந்து வீச்சாளர்களில் ஒருவராக பல வர்ணனையாளர்களால் கருதப்பட்டார் [1][2][3][4] 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 76 விக்கட்டுகளை (18.56) எடுத்தார். 75 விக்கட் இழப்புகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் டைசன் துடுப்பாட்டத்தில் ஏழாவது மிகக் குறைந்த பந்துவீச்சு சராசரியை வைத்திருந்தார். குறைந்த சராசரியில் 20 விக்கட்டுக்கும் மேற்பட்ட இழப்புகளை கைப்பறி சாதனை படைத்தார். 2007 ஆம் ஆண்டில் இவரை 1955 ஆம் ஆண்டின் விஸ்டன் துடுப்பாட்ட வீரராக அறிவித்தது , 1954-55 ஆம் ஆண்டில் இவர் ஆத்திரேலியா சுற்றுப்பயணத்தில் நடந்த போட்டித் தொடரில் 28 இழப்புகளை 20.82 எனும் சராசரியில் எடுத்து நாடு ஆசசை தக்கவைத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகித்தார் . டைசன் விக்டோரியாயா துடுப்பாட்ட அணி இரண்டு செபீல்டு சீல்டு கோப்பைகளை வென்ற அணியினைப் பயிற்றுவித்தார், பின்னர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணிக்கு பயிற்சியளித்தார் .[5] ஏபிசி மற்றும் சேனல் நைனில் 26 ஆண்டுகள் துடுப்பாட்ட வர்ணனையாளராக பணியில் இருந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுடைசனின் தாயார் வயலட் டைசன் (பிறப்பு 1892) மற்றும் இவரது தந்தை யார்கசயர் சாயமிடும் நிறுவனத்தில் பணிபுரிந்தார், ஆனால் இவரது மகன் இங்கிலாந்துத் துடுபாட்ட அணிக்குத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர் இறந்தார்.[6] சிறுவனாக இருந்தபோது, தனது மூத்த சகோதரர் டேவிட் டைசனுடன் துடுப்பாட்டம் விளையாடினார், இவர் இரண்டாம் உலகப் போரின் போது ஆத்திரேலியாவில் பணியாற்றினார். மிடில்டனில் உள்ள ராணி எலிசபெத்தின் இலக்கணப் பள்ளியில் கல்வி கற்றார், டர்காம் பல்கலைக்கழகத்தின் ஆட்ஃபீல்டு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார்
ஒரு பல்கலைக்கழக பட்டதாரி என்ற முறையில், 1950 களில் தொழில்முறை துடுப்பாட்ட வீரர்களிடையே டைசன் பரவலாக அறியப்பட்டார். இவர் ஒரு தகுதிவாய்ந்த பள்ளி ஆசிரியராக இருந்தார், மேலும் ஜெஃப்ரி சாசர், ஜார்ஜ் பெர்னார்ட் ஷா மற்றும் வர்ஜீனியா வூல்ஃப் ஆகியோரின் படைப்புகளை சுற்றுப்பயணங்களில் வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார்.[7] ஸ்லெட்ஜிங் செய்யும் மட்டையாளர்களுக்கு இவர் வேர்ட்ஸ்வொர்த்தை மேற்கோள்களை பதிலாக சுட்டிக் காட்டினார்.[8] இவர் தனது தேசிய சேவையை (போரின் போது ) ராயல் கார்ப்சு ஆஃப் சிக்னல்களில் 1952 இல் ஒரு விசைப்பலகை இயக்குனராக இருந்தார். விளையாட்டு வீரர்கள் பொதுவாக தலைமையக ஊழியர்களாகப் பணிபுரிந்தனர்.[9] இவர் தலைமையக 4 ஆவது பயிற்சி படைப்பிரிவில் பணியாற்றினார். இவர் துப்பாக்கிகளை வெறுத்தார், இவர் தனது துப்பாக்கி பயிற்சியை எடுத்தபோது, தான் எப்போதும் இலக்கை தவறவிட்டதாக கூறினார். 1952-53 ஆம் ஆண்டில் இவர் மரங்களை வெட்டுபவராகப் பணிபுரிந்தார். இதனை ஜோன் ஸ்னோ ஒரு விரைவு வீச்சாளரின் தசைகளை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த பயிற்சியாகக் கருதினார் மற்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஆல்ஃப் கோவரின் கிழக்கு மலை உட்புற பள்ளியில் பயின்றார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kilburn, p. 242.
- ↑ 2.0 2.1 http://www3.sympatico.ca/qhokim/players/tyson.htm பரணிடப்பட்டது 2011-06-05 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ 3.0 3.1 p65-66, Clive Batty, The Ashes Miscellany, Vision Sports Publishing, 2006.
- ↑ 4.0 4.1 Tom Graveney with Norman Giller, The Ten Greatest Test Teams, Sidgwick & Jackson, 1988.
- ↑ http://www.saxton.com.au/default.asp?sd8=187 பரணிடப்பட்டது 2011-11-20 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ p253, Tyson
- ↑ Williamson, Martin (April 2004). "Frank Tyson". Players & Officials. Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 April 2009.
- ↑ "Frank Tyson".
- ↑ p31, Frank Tyson, The Cricketer Who Laughed, Stanley Paul, 1982
- ↑ Tyson