பிரிடேவிட் மான்

சீனாவின் ஆற்றுப் பள்ளத்தாக்குகளைச் சேர்ந்த ஒரு பெரிய மான் இனம்

Euteleostomi

பிரிடேவிட் மான் (Père David's deer ) என்பது சீனாவின் அயன அயல் மண்டல ஆற்றுப் பள்ளத்தாக்குகளை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மான் இனமாகும். இது முக்கியமாக புல் மற்றும் நீர்வாழ் தாவரங்களை உணவாக மேய்கிறது. இது எலஃபரஸ் பேரினத்தில் தற்போதுள்ள ஒரே உறுப்பினர் ஆகும். சில வல்லுநர்கள் எலஃபரசை செர்வசின் துணைப்பேரினத்துக்குத் தரமிறக்க பரிந்துரைக்கின்றனர். மரபியல் ஒப்பீடுகளின் அடிப்படையில், பிரி டேவிட் மான், தாமின் மான்ளுடன் நெருங்கிய தொடர்புடையது. [2] [3]

பிரிடேவிட் மான்
புதைப்படிவ காலம்:3–0 Ma
Late Pliocene to Holocene
இங்கிலாந்தின் பெட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வோபர்ன் மான் பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. davidianus
இருசொற் பெயரீடு
Elaphurus davidianus
A. Milne-Edwards, 1866
பிரிடேவிட் மான்
சீன மொழி 麋鹿
Literal meaning"mí-deer"
Elaphurus davidianus

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரி டேவிட் மான்கள் அவற்றின் பூர்வீக நாடான சீனத்தில் வேட்டையாடப்பட்டு அழிவெய்தின. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரித்தானிய பிரபுவும் அரசியல்வாதியுமான எர்பிரண்ட் ரஸ்சல், பெட்ஃபோர்டின் 11வது டியூக், பெர்லின் விலங்குக்காட்சியகத்தில் இருந்து ஒரு சில பிரி டேவிட் மான்களைப் பெற்று, வொபர்ன் அபேயில் உள்ள அவரது தோட்டத்தில் ஒரு பெரிய மந்தையாக உருவாக்கி வளர்த்துவந்தார். 1980 களில், டியூக்கின் கொள்ளுப் பேரன் ராபின் ரசல், 14வது பெட்ஃபோர்டின் டியூக், சீன அரசாங்கத்திற்கு பல டசன் மான்களை நன்கொடையாக அளித்தார். 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, சீனாவில் உள்ள காடுகளில் இந்த மான்களின் எண்ணிக்கை 2825 உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 7380 மான்கள் சீனத்தின் பல்வேறு இயற்கை மையங்களில் உள்ளன. [4] இன்று உயிருடன் இருக்கும் அனைத்து பிரி டேவிட் மான்களும் ஹெர்பிரண்ட் ரஸ்சலின் வளர்ப்பு மான் மந்தையிலிருந்து வந்தவை.

தொகையியல்

தொகு

பிரி டேவிட் மான்கள் சீனப் பகுதியில் மட்டுமே இருந்தன. புதைபடிவ பதிவுகளின்படி, இந்த இனம் முதலில் பிளீஸ்டோசீன் காலத்தில் தோன்றியது, அது மஞ்சூரியா முழுவதும் காணப்பட்டது. [5] ஓலோசீன் காலத்தில் இவற்றின் இடம் மாறியது; இந்த நேரத்தில், தென் சீனாவின் சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலங்களில் மட்டுமே இவ்வினங்கள் காணப்பட்டன. வேட்டையாடுதல் மற்றும் சதுப்பு நிலங்கள் அழிப்பு காரணமாக, பிரி டேவிட் மான்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தது. 1939 வாக்கில், இறுதியில் காடுகளில் இருந்த இந்த மான்கள்க சுட்டுக் கொல்லப்பட்டன. [6]

பெயரிடுதலும், சொற்பிறப்பியலும்

தொகு

இந்த வகை மான்கள் மேற்கத்திய அறிவியலுக்கு முதன்முதலில் 1866 இல் சீனாவில் பணிபுரிந்த ஒரு பிரெஞ்சு மறைப்பணியாளரான அர்மண்ட் டேவிட் (Père David) என்பவரால் தெரிவிக்கப்பட்டது. அவர் ஒரு வளர்ந்த ஆண், ஒரு வளர்ந்த பெண் மற்றும் ஒரு ஆண் குட்டி மான்களின் சடலங்களைப் பெற்று, அவற்றை பாரிசுக்கு அனுப்பினார். அங்கு அவற்றை ஆய்ந்த பிரெஞ்சு உயிரியலாளரான அல்போன்ஸ் மில்னே-எட்வர்ட்ஸ் இந்த இனத்திற்கு "பிரிடேவிட் மான்" என்று பெயரிட்டார். [1]

இந்த இனம் சில சமயங்களில் அதன் பொருள் முறைசாரா பெயரான sibuxiang ( சீனம் 四不像; நிப்பானிய மொழி : shifuzō ), அதாவது "நான்கு ஒன்று போல் இல்லை", அதாவது "நான்கு விரும்பாதகதவைகள்" அல்லது "நான்கில் எதையும்போல இல்லை"; நான்கு என்பது பசு, மான், கழுதை, குதிரை (அல்லது) ஒட்டகம் என்று பலவிதமாக கூறப்படுகிறது, மேலும் அது குறித்து கீழ்கண்டவாறு விரிவாகக் குறிக்கப்படுகிறது:

  • "பசுவின் குளம்புகள் ஆனால் மாடு அல்ல, ஒட்டகத்தின் கழுத்து ஆனால் ஒட்டகம் அல்ல, மானின் கொம்புகள் ஆனால் மான் அல்ல, கழுதையின் வால் ஆனால் கழுதை அல்ல."
  • "பசுவின் மூக்கு ஆனால் மாடு அல்ல, மானின் கொம்புகள் ஆனால் மான் அல்ல, கழுதையின் உடல் ஆனால் கழுதை அல்ல, குதிரையின் வால் ஆனால் குதிரை அல்ல"
  • "கழுதையின் வால், குதிரையின் தலை, பசுவின் குளம்புகள், மானின் கொம்புகள்"
  • "ஒட்டகத்தின் கழுத்து, பசுவின் குளம்புகள், கழுதையின் வால், மானின் கொம்பு"
  • "மானின் கொம்பு, குதிரையின் தலை, ஒரு பசுவின் உடல்" [7]

இந்த பெயரால், அழைக்ககபட்ட இந்த கொல்லைப் படுத்தப்படாத விலங்கு, மிங் அரசமரபு காலத்தின் போது எழுதப்பட்ட சீன பாரம்பரிய புனைகதை படைப்பான ஃபெங்ஷென் பேங்கில் ( கடவுளின் முதலீடு என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) வழியாக சீன தொன்மவியலில் நுழைந்தது.

சிறப்பியல்புகள்

தொகு
 
ஜப்பானின் கோபியில் உள்ள கோபே ஓஜி உயிரியல் பூங்காவில் ஒரு ஆண் மானின் எலும்புக்கூடு

வயது வந்த பிரி டேவிட் மான் 1.9–2.2 மீட்டர்கள் (6.2–7.2 அடி) ) வரை தலை வரையான உடல் நீளத்தை எட்டுகிறது. மேலும் இதன் உயரமானது தோள் வரை சுமார் 1.2 மீட்டர்கள் (3.9 அடி) வளர்கிறது. இந்த மானின் வால் ஒப்பீட்டளவில் நீளமானது, நேராக்கி அளக்கும் போது 50-66 சென்டிமீட்டர் (20-26 அங்குலம்) அளவு இருக்கும். எடை 135 - 200 கிலோகிராம் (300 - 440 பவுண்டுகள்) இடையே உள்ளது. பெரிய கண்கள், சிறிய, கூர்மையான காதுகள, தலை நீளமாகவும் இருக்கும். [8]

இந்த மானின் உடலில் பழுப்பும், சாம்பல் நிறமும் கலந்த உரோமம் காணப்படுகிறது. கழுத்துக் கீழே பிடரி மயிர் உண்டு. நீண்ட வாலின் முனையில் கொத்தாக உரோமங்கள் இருக்கும். இதன் கொம்புகள் நீண்டவைகளாகவும் கிளைகள் கொண்டவையாகவும் உள்ளன. முன்னும் பின்னுமாக வளர்ந்திருக்கும். கொம்புகள் ஆண்டிற்கு இருமுறை விழுந்து முளைக்கும். நவம்பர் மாதத்தில் விழும் கொம்புகள் சனவரிக்குள் முழுமையாக வளர்ந்து, சில வாரங்களுக்குப் பிறகு விழுந்துவிடுகின்றன. [8]

இதன் உடல் நிறம் கோடையில் சிவப்பு நிறமாகவும், குளிர்காலத்தில் மங்கலான சாம்பல் நிறமாக மாறும். நீண்ட அலை அலையான முடிகள் ஆண்டு முழுவதும் இருக்கும், குளிர்காலத்தில் உரோமம் கம்பளிபோன்று ஆகும். வால் சுமார் 50 சென்டிமீட்டர்கள் (20 அங்) நீளமும், முடிவில் இருண்ட கொத்தான முடி உண்டு. இவற்றின் குளம்புகள் பெரியதாகவும், விரிந்தும் இருக்கும். மேலும் விலங்கு நகரும் போது சொடுக்கும் ஒலிகள் ( துருவ மான் போல) ஏற்படுகின்றன. [8]

இவை ஒரு அரை நீர்வாழ் விலங்காக உள்ளன. நீரில் தோள்களை வரை மூழ்கி நீண்டநேரம் இருக்க விரும்புகின்றன. இவை நன்றாக நீந்துகின்றன. பெரும்பாலும் மேய்ச்சல் விலங்காக இருந்த போதிலும் புற்களைவிட நீர்த்தாவரங்களை அதிகமாக உண்ண விரும்புகின்றன.

 
ஷர்கரோசா பண்ணையில் பிரி டேவிட் மான் (ஆண்) 2014.

பிறப்பும், ஆயுட்காலமும்

தொகு

இந்த மான்களின் குட்டிஇவற்றின் கர்ப்ப காலம் சுமார் ஒன்பது மாதங்கள். அதாவது தோராயமாக 280 நாட்களாகும். இந்த கார்ப காலத்திற்குப் பிறகு பொதுவாக ஒரு குட்டி போடும். அரிதாகவே இரட்டைக் குட்டிகள் பிறக்கின்றன. ரோ மான் தவிர மற்ற மான்களை விட இவற்றின் கர்ப்ப காலம் கணிசமாக நீண்டது. பிரி டேவிட் மான்களுக்கு பருவகாலத்தை ஒட்டி கருவுருதல் நடைபெறுவதாக கருதப்படுகிறது. ஏனெனில் ஐரோப்பாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்படும் மான்களில் நான்கில் மூன்று ஏப்ரல் மாதத்தில் பிறக்கின்றன. இனப்பெருக்க காலம் 160 நாட்கள் ஆகும், இனச்சேர்க்கை காலம் பொதுவாக சூன் மற்றும் சூலை மாதங்களில் இருக்கும். குட்டியின் எடை,11.3 முதல் 13.2 கிலோ வரை இருக்கும். பொதுவாக பெரும்பாலான மான் இனங்களைப் போல இதன் குட்டிகளின் உடலில் புள்ளிகள் காணப்படுகின்றன. இவை பிறந்த பிறகு மிக விரைவாக வளரும் என்று அறியப்படுகிறது. குட்டிகள் 14 மாதங்களில் பாலியல் முதிர்ச்சியை அடைகிறன. [8] பிரி டேவிட் மானின் சராசரி ஆயுட்காலம் 18 ஆண்டுகள் ஆகும்.

வேட்டையாடிகள்

தொகு

வரலாற்று ரீதியாக, பிரி டேவிட் மானை முக்கியமாக வேட்டையாடும் விலங்குகள் புலிகள் மற்றும் சிறுத்தைகள் என்று நம்பப்படுகிறது. காப்பகத்தில் வாழும் போது இந்த வேட்டையாடிகளை அவை சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், இந்த பெரிய பூனைகள் தொடர்பான படங்கள் மற்றும் தூண்டுதல்களின் வெளிப்பாடுகளை பரிசோதிக்கும் போது, காட்டு மான்களைப் போன்றே வேட்டையாடிகளுக்கு உள்ளுணர்வாக எதிர்வினையாற்றின. [9]

எண்ணிக்கை

தொகு
 
பிரி டேவிட் மான் (ஆண்), சிறப்பியல்பு கொண்ட பெரிய கண் சுரப்பிகள், கருப்பு முதுகு பட்டை மற்றும் பெரிய, அகன்ற குளம்புகள்.

கற்காலத்தில், இவை சீனாவின் பெரும்பகுதியில் பரவியிருந்தன. வடக்கில் லியாவோ ஆற்றிலிருந்து சியாங்சு மற்றும் செஜியாங் மாகாணம் மற்றும் சென்சி மற்றும் ஹுனான் மாகாணத்தில் மஞ்சள் மற்றும் யாங்சி ஆற்றுப் படுகைகள் வரையிலான குடியிருப்புகளில் இவற்றின் கொம்புகளை தொல்லியல் ஆராய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். [10] உத்தியோகபூர்வ தரவுகளின்படி, சீனாவில் இந்த இன மான்களின் மொத்த எண்ணிக்கை 8,000 ஐ தாண்டியுள்ளது. இவை சீனாவில் முதல் தர அரச பாதுகாப்பில் உள்ளன. 1985 ஆம் ஆண்டில், சீனாவின் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை மேம்பாட்டு அறக்கட்டளை (CBCGDF) 22 பிரி டேவிட்டின் மான்களை இங்கிலாந்தின் வோபர்ன் அபேயின் மார்க்வெஸ் ஆஃப் டேவிஸ்டாக்கிலிருந்து அவர்களின் மூதாதையர் மண்ணுக்குத் திரும்ப பரிசாகப் பெற்று மீளக் குடியேற்றிப்பட்டன. [11]

சீனாவில் அழித்தல்

தொகு

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இவற்றின் ஒரு மந்தை சீனப் பேரரசருக்குச் சொந்தமான வேட்டைப் பூங்காவில் மட்டுமே எஞ்சி இருந்தன. பெய்ஜிங்கிற்கு அருகிலுள்ள நான் ஹைசியில் உள்ள நான்யுவான் அரசரின் வேட்டைப் பூங்காவில் இந்த மந்தை பராமரிக்கப்பட்டது. 1895 ஆம் ஆண்டில், யோங்டிங் ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் இந்தப் பூங்காவின் சுற்றுச் சுவர்களை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்தது. இதனால் இந்த மான்களில் பெரும் பகுதி மற்ற விலங்குகளுடன் தப்பி சுற்றிலுமுள்ள சிற்றூர்களுக்குச் சென்றன. அவற்றில் சில வெள்ளச் சேதத்தால் பட்டினியால் வாடிய விவசாயிகளால் கொல்லப்பட்டு உண்ணப்பட்டன. முப்பதுக்கும் குறைவான பிரி டேவிட் மான்கள் தோட்டத்தில் எஞ்சி இருந்தன. இந்நிலையில் 1900 ஆம் ஆண்டில், குத்துச்சண்டை கிளர்ச்சியின் போது, செருமானியப் பேரரசின் துருப்புக்களால் தோட்டம் ஆக்கிரமிக்கப்பட்டது. அப்போது எஞ்சி இருந்த அனைத்து மான்களையும் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. இப்படி பிரி டேவிட் மான்கள் அதன் தாயகமான சீனாவில் அழிக்கப்பட்டன. [1] [12] ஒரு சில மான்கள் பீஜிங்கில் உள்ள பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய தூதரகங்களால் சட்டப்பூர்வமாக [13] பெறப்பட்டு கண்காட்சி மற்றும் இனப்பெருக்கத்திற்காக பல்வேறு ஐரோப்பிய உயிரியல் பூங்காக்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 1900 ஆம் ஆண்டில் சீனாவில் இந்த இனம் அழிந்த பிறகு , பெட்ஃபோர்டின் 11 வது டியூக் ஆங்கில பிரபு ஹெர்பிரண்ட் ரஸ்ஸல், இந்த மான் இனங்களைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஐரோப்பிய உயிரியல் பூங்காக்களில் இருந்து எஞ்சியிருந்த சில மான்களைப் பெற்று, பெட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வோபர்ன் அபேயில் உள்ள அவரது வீட்டில் இருந்த மான் பூங்காவுக்குக் கொண்டுவந்து அவற்றின் இனத்தைப் பெருக்கி மந்தையை உருவாக்கினார். இரண்டு உலகப் போர்களாலும் மீண்டும் அச்சுறுத்தப்பட்ட இந்த இனங்கள் பெட்ஃபோர்ட் மற்றும் அவரது மகன் ஹேஸ்டிங்ஸ், பின்னர் பெட்ஃபோர்டின் 12வது டியூக் ஆகியோரின் முயற்சியால் காப்பாற்றபட்டன. தற்போது இவை உலகெங்கிலும் உள்ள உயிரியல் பூங்காக்களில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வோபர்ன் அபே மந்தையிலிருந்து உருவானவை. [8] பெர்லின் உயிரியல் பூங்காவில் இருந்த மூன்று மான்களில் (ஒரு ஆண், இரண்டு பெண்) இருந்து தற்போது 5,000 க்கு மேல் என்ற எண்ணிக்கை அடைந்து உள்ளன.

மறு அறிமுகம்

தொகு
 
ஷிஷோ மிலு தேசிய இயற்கை காப்பகம்

20 மான்கள் (5 ஆண் 15 பெண்) கொண்ட மந்தை கொண்டு 1985 ஆம் ஆண்டு பிரி டேவிட் மான்கள் சீனாவில் மீளக் கொண்டுச் செல்லபட்டன. இதைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டில் 18 மான்கள் (அனைத்தும் பெண் மான்கள்) கொண்ட இரண்டாவது மந்தை கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டு மந்தைகளும் வோபர்ன் அபே மந்தையிலிருந்து பெறப்பட்டு, 11வது டியூக்கின் கொள்ளுப் பேரனான ராபின் ரசல், மார்க்வெஸ் ஆஃப் டேவிஸ்டாக் (இ. 2003) (எதிர்கால 14வது பெட்ஃபோர்டின் டியூக்) என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்டன. [14] 2005 ஆம் ஆண்டில் பெய்ஜிங் அதிகாரிகள் இவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதன் 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நான் ஹைசியில் 14 வது பிரபுவின் சிலையை நிறுவினர்.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Jiang, Z.; Harris, R.B. (2016). "Elaphurus davidianus". IUCN Red List of Threatened Species 2016: e.T7121A22159785. https://www.iucnredlist.org/species/7121/22159785. பார்த்த நாள்: 29 March 2020. 
  2. Pitra, C.; Fickel, J.; Meijaard, E.; Groves, C. (1 December 2004). "Evolution and phylogeny of old world deer". Molecular Phylogenetics and Evolution 33 (3): 880–895. doi:10.1016/j.ympev.2004.07.013. பப்மெட்:15522810. http://arts.anu.edu.au/grovco/pitra%20deer.pdf. பார்த்த நாள்: 18 April 2013. 
  3. Gilbert, C.; Ropiquet, A.; Hassanin, A. (2006). "Mitochondrial and nuclear phylogenies of Cervidae (Mammalia, Ruminantia): Systematics, morphology, and biogeography". Molecular Phylogenetics and Evolution 40 (1): 101–17. doi:10.1016/j.ympev.2006.02.017. பப்மெட்:16584894. https://www.researchgate.net/publication/7194962. 
  4. Cheng, Zhibin; Tian, Xiuhua; Zhong, Zhenyu; Li, Pengfei; Sun, Daming; Bai, Jiade; Meng, Yuping; Zhang, Shumiao et al. (2021). "Reintroduction, distribution, population dynamics and conservation of a species formerly extinct in the wild: A review of thirty-five years of successful Milu (Elaphurus davidianus) reintroduction in China". Global Ecology and Conservation 31: e01860. doi:10.1016/j.gecco.2021.e01860. 
  5. Hofmann, R. R. 2007.
  6. Zhou, K. 2007.
  7. "China To Return More David's Deer To the Wild". People's Daily Online. January 13, 2000. http://english.peopledaily.com.cn/200001/13/eng20000113R110.html. 
  8. 8.0 8.1 8.2 8.3 "Père David's Deer (Elaphurus davidianus)". Deer. Gland, Switzerland: World Association of Zoos and Aquariums. 2012. Archived from the original on 2016-07-02. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  9. Li, Chunwang; Yang, Xiaobo; Ding, Yuhua; Zhang, Linyuan; Fang, Hongxia; Tang, Songhua; Jiang, Zhigang; Hayward, Matt (2011). "Do Père David's Deer Lose Memories of Their Ancestral Predators?". PLOS ONE 6 (8): e23623. doi:10.1371/journal.pone.0023623. பப்மெட்:21887286. Bibcode: 2011PLoSO...623623L. 
  10. Wang, Lei 王蕾 (2007-12-17). 麋鹿与狩猎. milupark.org.cn (in சீனம்). Archived from the original on 2014-06-06.
  11. "Chinese court rules hydropower company to protect rare plant - Xinhua | English.news.cn". www.xinhuanet.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
  12. 熊猫, 喝茶; 孙, 前. "首创下午茶的英国公爵家族 同中华文明的情缘". 茶博览 2015年11期. 
  13. Nigel Sitwell, Pere David's Deer Return Home
  14. Robin Russell, Marquess of Tavistock, was the son and heir apparent of John Russell, 13th Duke of Bedford (d.2002) who had become a tax exile in Monaco leaving the Bedford estates in England to be managed by his son
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிடேவிட்_மான்&oldid=3615806" இலிருந்து மீள்விக்கப்பட்டது