பிரிஸ்பேன்

ஆஸ்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் தலைநகரம்
(பிறிஸ்பன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரிஸ்பேன் அல்லது பிறிஸ்பேன் (Brisbane, /ˈbrɪzbən/, "பிறிஸ்பன்")[4] ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் தலைநகரும், அம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி கூடிய நகரமும்,[5] ஆத்திரேலியாவின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். பிரிஸ்பேனின் பெருநகர்ப் பகுதியில் 2.3 மில்லியன் மக்கள் (சூன் 2013) வாழ்கின்றனர்.[6][7] மிதவெப்ப மண்டல காலநிலையுடையது. ஐரோப்பியரின் ஆரம்பகாலக் குடியிருப்புப் பகுதியில் பிரிஸ்பேன் ஆற்றின் கரையில் மத்திய வணிகப் பகுதி அமைந்துள்ளது.[8]

பிரிஸ்பேன்
குயின்ஸ்லாந்து

பிரிஸ்பேன் நகர மையமும் ஸ்டோரி பாலமும்
மக்கள் தொகை: 1,857,594 (2007) [1] (3வது)
அடர்த்தி: 918/கிமீ² (2,377.6/சதுர மைல்) (2006)[2]
அமைப்பு: 1824
ஆள்கூறுகள்: 27°28′04″S 153°01′40″E / 27.46778°S 153.02778°E / -27.46778; 153.02778
பரப்பளவு: 5904.8 கிமீ² (2,279.9 சது மைல்) [3]
நேர வலயம்: AEST (பகலொளி சேமிப்பு இல்லை) (UTC+10)
அமைவு:
உள்ளூராட்சிகள்:
கவுண்டி: ஸ்டான்லி
மாநில மாவட்டம்: பல (38)
நடுவண் தொகுதி:
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
25.5 °செ
78 °
15.7 °செ
60 °
1,146.4 மிமீ
45.1 அங்

நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டின் ஆளுநராக 1821 முதல் 1825 வரை இருந்த சர் தாமஸ் பிரிஸ்பேன் என்பவரின் பெயரால் பிறிஸ்பேன் ஆறு அழைக்கப்படுகிறது. இவ்வாற்றின் பெயரே அதன் கரையிலுள்ள பிறிஸ்பேன் நகரத்தின் பெயராகவும் விளங்குகிறது.[5]

தற்போதுள்ள நகர வணிக மத்தியிலிருந்து 28 கிலோமீட்டர் வடக்கேயுள்ள ரெட்கிளிஃப் என்ற இடத்தில் முதல் ஐரோப்பியக் குற்றவாளிகள் குடியேற்றம் 1824ஆம் உருவாக்கப்பட்டது. 1825ஆம் ஆண்டு வடக்கு கீ பகுதியில் புதிய குற்றவாளிகள் குடியேற்றம் உருவாக்கப்பட்டு பழைய ரெட்கிளிஃப் குடியேற்றம் மூடப்பட்டது. பிரிஸ்பேனில் சுதந்திர மக்கள் குடியேற்றம் 1842 முதல் அனுமதிக்கப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்சில் இருந்து குயின்சுலாந்து பிரிக்கப்பட்டு பிரிஸ்பேனைத் தலைநகராகக் கொண்டு தனிக் குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நேச நாடுகளின் அணியில் தென்மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் டக்ளசு மெக்கார்த்தருக்காக பிறிஸ்பேன் நகரம் பெரும் பங்காற்றியது. பிறிஸ்பேன் நகரில் 1982 பொதுநலவாய விளையாட்டுக்கள், எக்சுபோ '88 கண்காட்சி, 2001 நல்லெண்ணப் போட்டிகள், 2014 ஜி-20 உச்சிமாநாடு உட்படப் பல பன்னாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

வரலாறு

தொகு

19ம் நூற்றாண்டு

தொகு
 
பிறிஸ்பேன் விக்காம் பூங்காவிலுள்ள 'தி ஓல்ட் விண்ட்மில்'. இது பிறிஸ்பேனிலுள்ள மிக முக்கியமான மற்றும் புராதன கலாச்சார அடையாளமாகும். 1824ஆம் ஆண்டு கைதிகளால் கட்டப்பட்டது.

ஐரோப்பியர் வருகைக்கு முன்பு பிறிஸ்பேன் பகுதியில் ஜாகிரா மற்றும் டுரூபல் இனத்தைச் சார்ந்த ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வசித்து வந்தனர்.[9] தற்போதைய மத்திய வணிகப் பகுதியை அவர்கள் மியான்-ஜின் (கூர்முனை வடிவ இடம் எனப் பொருள்) என அழைத்து வந்தனர்.[10] மொரிட்டோன் குடா முதலில் மேத்தியூ பிலிண்டர்சுவினால் கண்டுபிடிக்கப்பட்டது. 1799 சூலை 17 இல் பிலிண்டர்சு வூடி முனை என இன்று அழைக்கப்படும் இடத்தில் தரையிறங்கினார். குடாவில் இருந்து பார்க்கும் போது இவ்விடத்தில் சிவப்பு நிற செங்குத்துப் பாறைகள் காணப்பட்டமையினால் அவர் "ரெட் கிளிஃப் முனை" எனப் பெயரிட்டார்.[11] 1823 இல் ஆளுனர் தோமசு பிறிஸ்பேன் குற்றவாளிகளுக்கான புதிய குடியேற்றத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கு ஆணையிட்டார்.[12]


மேற்கோள்கள்

தொகு
  1. Australian Bureau of Statistics (2008-03-31). "3218.0 3218.0 Population Estimates by Statistical Local Area, 2001 to 2007". பார்க்கப்பட்ட நாள் 2008-05-30.
  2. Australian Bureau of Statistics (2008-03-17). "Explore Your City Through the 2006 Census Social Atlas Series". பார்க்கப்பட்ட நாள் 2008-05-19.
  3. Australian Bureau of Statistics (25 அக்டோபர் 2007). "Community Profile Series : Brisbane (Statistical Division)". 2006 Census of Population and Housing. பார்க்கப்பட்ட நாள் 2008-01-21. Map
  4. Macquarie ABC Dictionary. The Macquarie Library Pty Ltd. 2003. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-876429-37-2.
  5. 5.0 5.1 "Brisbane (entry 4555)". Queensland Place Names. Queensland Government. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014. {{cite web}}: External link in |work= (help)
  6. "3218.0 – Regional Population Growth, Australia, 2012–13: Estimated Resident Population, States and Territories – Greater Capital City Statistical Areas (GCCSAs)". Australian Bureau of Statistics. 3 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. "3218.0 – Regional Population Growth, Australia, 2010–11". Abs.gov.au. பார்க்கப்பட்ட நாள் 9 April 2014.
  8. [http://www.queenslandplaces.com.au/brisbane-and-greater-brisbane Brisbane and Greater Brisbane | Queensland Places
  9. "Tom Petrie's Early Reminiscences of Early Queensland". பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2008.
  10. Our Brisbane – Our shared vision பரணிடப்பட்டது 2011-03-16 at the வந்தவழி இயந்திரம் – Brisbane City Council Page 2
  11. "Redcliffe". The Sydney Morning Herald. 8 பெப். 2004. http://www.smh.com.au/articles/2005/02/17/1108500203689.html. பார்த்த நாள்: 17 மே 2008. 
  12. "John Oxley Governor Report". பார்க்கப்பட்ட நாள் 1 பெப். 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஸ்பேன்&oldid=3369220" இலிருந்து மீள்விக்கப்பட்டது