பீகாரின் ஜமீந்தார்கள்

பீகாரின் ஜமீந்தார்கள் (Zamindars of Bihar) முகலாய ஆட்சியின் போதும் பின்னர் பிரித்தானிய ஆட்சியின் போதும் பீகாரில் தன்னாட்சி மற்றும் அரை தன்னாட்சி ஆட்சியாளர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருந்தனர். இவர்கள் 1947இல் இந்தியச் சுதந்திரம் வரை நீடித்த நிலப்பிரபுத்துவத்தை உருவாக்கினர்.[1] பீகாரில் இவர்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்கள் எவ்வளவு நிலத்தை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து இவர்களை சிறிய, நடுத்தர மற்றும் பெரிய ஜமீந்தார்களாகப் பிரிக்கலாம்.[2] பீகாருக்குள், இவர்கள் பொருளாதார மற்றும் இராணுவ சக்தியைக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஜமீந்தாரரும் தங்கள் சொந்த நிலையான இராணுவத்தையும் கொண்டிருந்தார்கள். அவை பொதுவாக தங்கள் சொந்த குலத்தவர்களால் ஆனவை.[3]

தெகாரி இராச்சியத்தின் ஜமீந்தார் மித்ரஜீத் சிங்
கயை இராச்சியத்தின் அரிபிரசாத் லால்
ஜக்தீஷ்பூர் தோட்டத்தின் ஜமீந்தார் குன்வர் சிங்

இந்த ஜமீந்தார்களில் பெரும்பாலோர் பொதுவாக இராஜபுத்திரர்கள், பூமிகார்கள், பிராமணர்கள், காயஸ்தர்கள் அல்லது முஸ்லிம்கள் போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.[4]

முற்போக்கு சாதி ஜமீந்தார்கள் பீகார் மாநிலத்தின் அரசியலில் பங்கேற்றனர். மேலும் சுதந்திரம் பெற்ற முதல் சில தசாப்தங்களில் அரசியலில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டிருந்தனர். இருப்பினும், 1970 முதல், அவர்கள் இந்த இருப்பை இழக்கத் தொடங்கினர், ஏ. என். சின்ஹா சமூக அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டி. எம். திவாகரின் கூற்றுப்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகளின் கூற்றுக்கு மத்தியில் இவர்கள் 2020 ஆம் ஆண்டில் “அமைதியான பார்வையாளர்களாக” மாற்றப்பட்டனர்.[5] 1950களில் பீகாரின் நிலச் சீர்திருத்த இயக்கம் அதிகளவு நிலம் வைத்திருந்த நில உரிமையாளர்களின் நில உடைமைகளை கலைக்க வழிவகுத்தது. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, நல்ல நிலைமையிலிருந்த பல விவசாய சமூகங்கள் ஜமீந்தார்களின் உதவியுடன் தங்கள் நிலங்களை அதிகரிக்கத் தொடங்கினர். இருப்பினும், இந்தச் சீர்திருத்தங்களின் பலன்கள் பீகாரின் சமூகத்தின் மிகக் குறைந்த அடுக்குகளான பட்டியல் சாதியினருக்குப் பரவவில்லை, சீர்திருத்தத்திற்குப் பிந்தைய காலகட்டத்தின் பல புதிய நிலப்பிரபுக்கள் பீகாரின் கோரி, குர்மி மற்றும் யாதவ சாதி போன்ற குழுக்களிடமிருந்து வெளிப்பட்டனர்.[6]

முகலாயர்களுடனான உறவுகள்

தொகு

பீகாரில் முகலாய ஆட்சி கொந்தளிப்பாகவே இருந்தது. ஏனெனில் பிராந்தியத்தின் பல ஜமீந்தார்கள் ஏகாதிபத்திய அதிகாரத்தை எதிர்க்க தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டனர்.[7]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் அரசு ஊழியரான ஜான் பீம்ஸ், முகலாயர்கள் ஆட்சி செய்த பீகாரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “மாநிலத்தையோ அல்லது அதன் அண்டை நாடுகளையோ கொள்ளையடிக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த அனைவரும் தங்களுக்கு திருப்தியைத் தரும் வரை கொள்ளையடித்தனர்”.[8] ஜமீந்தார்கள் மாநிலத்திற்கு பணம் கொடுக்க மறுத்து, அண்டை ஜமீந்தார்களைத் தாக்க படைகளைச் சேகரிப்பது இந்த காலகட்டத்தில் பீகாரில் ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது.[8]

வங்காளம் மற்றும் முர்சிதாபாத்தின் நவாப்கள் பீகாரின் பெயரளவிலான ஆளுநர்களாக ஆகும் காலம் வரை அதிகாரத்தின் மீதான இந்த அணுகுமுறை தொடர்ந்தது. பீகாரில் அதிக அளவு வருவாய் மற்றும் வரியை வழங்கும் திறன் இருந்தபோதிலும், 1748 வரை நவாப்களால் பீகார் தலைவர்களிடமிருந்து எந்தப் பணத்தையும் வசூலிக்க முடியவில்லை என்று பதிவுகள் காட்டுகின்றன. மேலும், பெறப்பட்ட தொகை கூட மிகவும் குறைவாகவே இருந்தது.[9]

ஆங்கிலேயர்களுடனான உறவுகள்

தொகு

முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தெற்கு ஆசியாவின் பெரும்பகுதியின் மீது ஆதிக்கம் செலுத்தியது.[10] காலனித்துவ சக்தியின் வருவாய் அமைப்பு “அதன் கொள்கையில் எளிமையாகவும், அதன் செயல்பாட்டில் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும்” என்று விரும்பியது. ஆனால் ஜமீந்தாரி அமைப்பு மிகவும் ஆழமாக வேரூன்றியிருந்தது. ஆரம்பகால பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட, திவானி (1765) மானியத்திலிருந்து நிரந்தர குடியேற்றம் (1793) வரை அதை மாற்ற விரும்பவில்லை.

ராஜ் தர்பங்கா, அத்வா , தெகாரி ராஜ், கயை ஆகிய இடங்களிலுள்ள உள்ள தேவ் குடும்பங்கள் மற்றும் சகாபாத் ஆகிய இடத்திர்லிருந்த தும்ராவ் குடும்பங்கள் ஆகியவை பீகாரின் முக்கிய ஜமீந்தார்களில் செழிப்பை அனுபவித்தன.[11]

ஜமீந்தாரி பகுதிகளில் சமூக நிலை

தொகு

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிரந்தர குடியேற்றச் சட்டம் பீகாரில் நில உடைமை முறைகளை கணிசமாக மாற்றவில்லை. இதனால் இராஜபுத்திரர்கள் மற்றும் பூமிகார்கள் முக்கிய ஜமீந்தார்களாக இருந்தனர். இது அவர்களின் சில அதிகாரங்களைக் குறைத்தது. ஆனால் விவசாயிகளின் வழக்கமான குடியுரிமை உரிமைகளையும் பறித்தது..[12]

பிரித்தானிய ஆட்சி, நிலம் மற்றும் வரி வசூல் தொடர்பான உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் இராஜபுத்திரர்கள் தங்கள் மேலாதிக்கத்தைத் தொடர உதவியது.[13] நிலமற்ற தொழிலாளர்களை ஆதிக்கம் செலுத்தும் சாதிகள் கட்டாய உழைப்பு, அதிக வாடகை, குறைந்த ஊதியம், சமூக கட்டுப்பாடுகள், வெளியேற்றங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு வடிவங்களை எடுத்தன.[14][15] ராஜ்புத் மற்றும் பூமிகார் நில உரிமையாளர்களால் கீழ் சாதியைச் சேர்ந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது சாகாபாத் மாவட்டத்தில் பொதுவானதாக இருந்தது.[15][16][17] திரிவேணி சங்கம் மற்றும் கிசான் சபைகள் போன்ற நடுத்தர விவசாய சாதிகளின் வளர்ந்து வரும் அமைப்புகள் சுரண்டல் பிரச்சினைகளை எடுத்துக் கொண்டன. நக்சலைட்டு அச்சுறுத்தலும் ஒரு சோதனையாக செயல்பட்டது.[15][16][18]

ஜமீந்தார்களின் அரசியல் இருப்பு ஒழிப்பும் வீழ்ச்சியும்

தொகு
 
கிதௌர் தோட்டத்திற்கு சொந்தமான லால்கோத்தி அரண்மனை

1947இல் சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, பீகாரில் ஜமீந்தாரி முறை ஒழிக்க குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரிய அளவிலான ஆதரவு இருந்தது.[19] இது தாழ்த்தப்பட்ட சாதியினரின் தலைமையில் ஒழிப்புக்கு ஆதரவாக ஒரு பெரிய அளவிலான இயக்கத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஒழிப்பு நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த பூமிகார் ஜமீந்தார்கள் நிலைமை தங்களுக்கு சாதகமாக இருக்கத் திட்டமிட்டனர்.[19] இருப்பினும், ராஜ்புத்-காயஸ்தர் ஜமீந்தார்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில், பீகார் ஜமீந்தாரிகள் ஒழிப்பு சட்டம் 1949 இல் நிறைவேற்றப்பட்டது.[19] ஜமீந்தாரி முறையை ஒழித்ததன் மூலம் சமூக நிலப்பரப்பில் ஆழமான தாக்கம் ஏற்பட்டது. நீண்ட காலமாக அதிகாரத்தையும் சலுகையையும் கொண்டிருந்த பல உயர் சாதி ஜமீந்தார்கள் தங்கள் நிலத்தையும் செல்வாக்கையும் இழந்தனர். இதற்கிடையில், வரலாற்று ரீதியாக குறிப்பிடத்தக்க உள்ளூர் செல்வாக்கைப் பயன்படுத்திய காயஸ்த ஜமீந்தார்களின் சந்ததியினர், உள்ளூர் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் புதிய அரசியல் நிலப்பரப்புக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டனர். இந்த மாற்றம் அவர்கள் தங்கள் செல்வாக்கைப் பராமரிக்கவும், தங்கள் சமூகங்களின் விதியை வடிவமைக்கவும், அடிமட்ட தலைமை மற்றும் சமூக மாற்றத்தின் புதிய சகாப்தத்தை வளர்க்கவும் அனுமதித்தது.

பிற்காலத்தில், பீகாரில் ஜமீந்தாரி ஒழிக்கப்பட்டு, யாதவர், குர்மி, கொய்ரி மற்றும் பூமிகார் போன்ற சாதிகள் மத்திய பீகாரில் வளர்ந்து வரும் முதலாளித்துவ விவசாய முறையின் முதன்மையான இயக்கங்களாக மாறியது. புதிய அரை நிலப்பிரபுத்துவ சமூக ஒழுங்கு இந்த சாதி குழுக்களுக்கு எதிர்பாராத நன்மைகளைக் கொண்டு வந்தது. இதில் கண்ணியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் பற்றிய கேள்வி முன்னுக்கு வந்தது. பசுமைப் புரட்சி இந்த சமூகங்களுக்கு மேலும் பயனளித்தது.[20] எனவே, பிற்காலத்தில், முதன்மையாக உயர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் குழுவிலிருந்து பல நிலப்பிரபுக்களும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் ஜமீந்தார்களாக உருவெடுத்தனர்.[21]

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு, பல முற்போக்கு சாதி ஜமீந்தார்கள் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினர், மேலும் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்றனர். இந்த நிலப்பிரபுத்துவ உயரடுக்குகள் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தின் முதல் சில தசாப்தங்களில் மாநிலத்தின் அரசியலில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டிருந்தன. ஆனால் அவர்கள் 1970 களில் இந்த குறிப்பிடத்தக்க நிலையை இழக்கத் தொடங்கினர். நிதிஷ் குமாரின் முதல் பதவிக்காலத்தில், அவர்கள் மாநில அரசியலில் மீண்டும் நுழைந்தனர். ஆனால் அடுத்த பதவிக்காலத்தில் அவர்கள் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டனர். 2020 ஆம் ஆண்டில் “அமைதியான பார்வையாளர்களாக” மாற்றப்பட்டனர்.[5]

குறிப்பிடத்தக்க ஜமீந்தாரி தோட்டங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Zamindar | Definition, System, & Mughal Empire | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-09.
  2. Lata Singh (2012). Popular Translations of Nationalism: Bihar, 1920-1922. Primus Books. pp. 5–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80607-13-9.
  3. Tahir Hussain Ansari (20 June 2019). Mughal Administration and the Zamindars of Bihar. Taylor & Francis. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-00-065152-2.
  4. Jha, Hetukar (1 October 1977). "Lower-Caste Peasants and Upper-Caste Zamindars in Bihar (1921-1925): An Analysis of Sanskritization and Contradiction between the Two Groups". The Indian Economic and Social History Review 14 (4): 549–559. doi:10.1177/001946467701400404. https://journals.sagepub.com/doi/abs/10.1177/001946467701400404?journalCode=iera. பார்த்த நாள்: 28 March 2019. 
  5. 5.0 5.1 "Bihar Assembly Election 2020: Royal, zamindar families remain a marginal force". Hindustan Times. 23 October 2020. Archived from the original on 10 July 2022. பார்க்கப்பட்ட நாள் 10 July 2022.
  6. Chetan Choithani (2023). Migration, Food Security and Development: Insights from Rural India. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1009276771. Archived from the original on 29 August 2023. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023. Although the end of zamindari led to a mass eviction of sharecroppers and tenant cultivators who were the actual tillers of the land, big landlords from high castes also saw their landholdings diminish. A new class of landlords belonging to the upper-middle caste groups such as Kurmi, Koeri and Yadavs- officially categorised as other backward classes in contemporary Bihar - emerged. These were mostly small and middle peasants who were able to consolidate their landholdings and position in society in the midst of zamindari reforms (Wilson, 1999; Sharma, 2005).
  7. Kumkum Chatterjee (1996). Merchants, Politics, and Society in Early Modern India: Bihar, 1733-1820. BRILL. pp. 31–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10303-1.
  8. 8.0 8.1 Gyan Prakash (30 October 2003). Bonded Histories: Genealogies of Labor Servitude in Colonial India. Cambridge University Press. pp. 88–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-52658-6.
  9. P. J. Marshall (2 November 2006). Bengal: The British Bridgehead: Eastern India 1740-1828. Cambridge University Press. pp. 58–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-02822-6.
  10. P. J. Marshall (2 November 2006). Bengal: The British Bridgehead: Eastern India 1740-1828. Cambridge University Press. pp. 95–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-02822-6.
  11. Shukla, P.K. (1996). "The Zamindars of North Bihar During the Early British Rule (1765-1793)". Proceedings of the Indian History Congress 57: 508–509. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44133355. 
  12. Vinita Damodaran (1992). Broken Promises: Popular Protest, Indian Nationalism, and the Congress Party in Bihar, 1935-1946. Oxford University Press. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-562979-8. The rape of lower-caste women by Rajput and Bhumihar landowners was common in Shahabad where , by the 1930s , anger and resentment against the frequent violation of women were openly expressed on the platform of the Tribeni Sangh
  13. Jaffrelot, Christophe (2000). "The Rise of the Other Backward Classes in the Hindi Belt". The Journal of Asian Studies 59 (1): 86–108. doi:10.2307/2658585. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9118. https://www.jstor.org/stable/2658585. "But the upper castes remained politically dominant in the Hindi belt also because of the pattern of land ownership that enabled them, especially the Rajputs, to consolidate their grasp over the countryside as zamindars, jagirdars, or taluqdars under the British and to retain some of their influence in spite of the efforts toward land reform after 1947.". 
  14. Bailey, F. G. (1960). Tribe Caste and Nation (1960). Oxford University Press. p. 258. The system works the way it does because the coercive sanctions are all in the hands of the dominant caste.
  15. 15.0 15.1 15.2 Vinita Damodaran (1992). Broken Promises: Popular Protest, Indian Nationalism, and the Congress Party in Bihar, 1935-1946. Oxford University Press. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-562979-8. The rape of lower-caste women by Rajput and Bhumihar landowners was common in Shahabad where , by the 1930s , anger and resentment against the frequent violation of women were openly expressed on the platform of the Tribeni SanghVinita Damodaran (1992). Broken Promises: Popular Protest, Indian Nationalism, and the Congress Party in Bihar, 1935-1946. Oxford University Press. p. 75. ISBN 978-0-19-562979-8. The rape of lower-caste women by Rajput and Bhumihar landowners was common in Shahabad where , by the 1930s , anger and resentment against the frequent violation of women were openly expressed on the platform of the Tribeni Sangh
  16. 16.0 16.1 Kaushal Kishore Sharma; Prabhakar Prasad Singh; Ranjan Kumar (1994). Peasant Struggles in Bihar, 1831-1992: Spontaneity to Organisation. Centre for Peasant Studies. p. 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185078885. According to them, before the emergence of Naxalism on the scene and consequent resistance on the part of these hapless fellows, "rape of lower caste women by Rajput and Bhumihar landlords used to cause so much anguish among the lower cates, who, owing to their hapless situation, could not dare oppose them. In their own words, "within the social constraints , the suppressed sexual hunger of the predominant castes often found unrestricted outlet among the poor, lower caste of Bhojpur-notably Chamars and Mushars.
  17. Fernando Franco (2002). Pain and Awakening: The Dynamics of Dalit Identity in Bihar, Gujarat and Uttar Pradesh. Indian Social Institute. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187218463. Even as late as the 1970s , the rape of lower caste women by Rajputs and Bhumihars had almost become a tradition , " an accepted social evil , a fate which many bore unquestioningly " , in parts of central Bihar
  18. Kelkar, Govind (1989). "Women and Land Rights Movements". Case Studies on Strengthening Co-ordination Between Non-governmental Organizations and Government Agencies in Promoting Social Development. United Nations (Economic and Social Commission for Asia and the Pacific). Sec. "Kisan Sabha and Kisan Samiti: Peasant Movemnts and Women (India)", pp.  72–73.
  19. 19.0 19.1 19.2 Mitra Subrata K; Bhattacharyya Harihar (27 February 2018). Politics And Governance In Indian States: Bihar, West Bengal And Tripura. World Scientific Publishing Company. pp. 155–158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-320-824-7.
  20. Kumar, Ashwani (2008). Community Warriors: State, Peasants and Caste Armies in Bihar. Anthem Press. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84331-709-8.
  21. The National Geographical Journal of India (in ஆங்கிலம்). National Geographical Society of India. 1975.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீகாரின்_ஜமீந்தார்கள்&oldid=4165574" இலிருந்து மீள்விக்கப்பட்டது