பெக்ரோர்
பெக்ரோர் (Behror), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 7 மார்ச் 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டத்தில்[3][4] உள்ள நகரம் ஆகும்.
பெக்ரோர் | |
---|---|
நகரம் | |
இராஜஸ்தான் மாநிலத்தில் பெக்ரோர் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°53′25″N 76°17′10″E / 27.89028°N 76.28611°E | |
நாடு | India இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் |
அரசு | |
• வகை | உள்ளாட்சி |
• நிர்வாகம் | பெக்ரோர் நகராட்சி |
ஏற்றம் | 312 m (1,024 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 29,531 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 301701 |
இடக் குறியீடு | (+91)-1494 |
வாகனப் பதிவு | RJ32 |
அருகமைந்த தொடருந்து நிலையம் | நர்னௌல் (20 கிமீ தொலைவில்) |
அருகமைந்த பன்னாட்டு வானூர்தி நிலையம் | தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் (115 கிமீ தொலைவில்) |
அருகமைந்த வானூர்தி நிலையம் | நர்னௌல் (25 கிமீ தொலைவில்) |
இந்நகரம் அருகே கோட்பூத்லி நகரம் உள்ளது. இது ஜெய்ப்பூர் நகரத்திற்கு வடக்கே 169.8 கிலோ மீட்டர் தொலைவிலும், தில்லிக்கு தென்மேற்கே 136.8 கிமீ தொலைவிலும் உள்ளது.
போக்குவரத்து
தொகுசாலைகள்
தொகுதில்லி-ஜெய்ப்பூர்-மும்பை-சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது. மேலும் தில்லி-ஜெய்ப்பூர்-மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 79 இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது.
இந்நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் நர்னௌல் தொடருந்து நிலையம் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 20 வார்டுகளும்; 5484 வீடுகளும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 29,531 ஆகும். அதில் 15,570 ஆண்கள் மற்றும் 13,961 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 897 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.07 %ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 15.12 % மற்றும் 3.18 % ஆக உள்ளனர்.இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 98.19%, இசுலாமியர் 1.12% மற்றும் பிறர் 0.60% ஆக உள்ளனர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
- ↑ "Alwar Ki Bhogolik evam Ithehasik Prishthbhoomi". Sodhganga Adhyaya 1: 9. 11 July 2020. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/14193/6/06_chapter%201.pdf.
- ↑ "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
- ↑ "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms.
- ↑ Behror Town Population Census 2011