பெர்னார்ட் கிலுக் தும்போக்
பெர்னார்ட் கிலுக் தும்போக் (ஆங்கிலம்; Bernard Giluk Dompok; மலாய்: Tan Sri Datuk Seri Panglima Bernard Giluk Dompok) (பிறப்பு: 7 அக்டோபர் 1949) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். இவரின் பதவிகள்:
- மே 1998 முதல் மார்ச் 1999 வரை, மலேசியா, சபா மாநிலத்தின் 11-ஆவது முதலமைச்சர்;
- 15 திசம்பர் 1999 – 9 ஏப்ரல் 2009 வரை மலேசியப் பிரதமர் துறை அமைச்சர்;
- 10 ஏப்ரல் 2009 – 15 மே 2013 வரை மலேசிய தோட்டத் தொழில் அமைச்சர்;
- (1986 - 1995); (2008 - 2013) ஆண்டுகளில் பெனாம்பாங் மக்களவைத் தொகுதி உறுப்பினர்;
- (1999 - 2004) ஆண்டுகளில் ரானாவ் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
- (1994 - 2004) ஆண்டுகளில் கடாசான் மூருட் அமைப்பு (UPKO) தலைவர்[1][2]
பெர்னார்ட் கிலுக் தும்போக் Bernard Giluk Dompok | |
---|---|
மலேசிய தோட்டத் தொழில் அமைச்சர் | |
பதவியில் 10 ஏப்ரல் 2009 – 15 மே 2013 | |
பிரதமர் | நஜீப் ரசாக் |
தொகுதி | பெனாம்பாங் |
பிரதமர் துறை அமைச்சர் | |
பதவியில் 15 திசம்பர் 1999 – 9 ஏப்ரல் 2009 | |
பிரதமர் | மகாதீர் முகமது அப்துல்லா அகமது படாவி |
பெனாம்பாங் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 8 மார்ச் 2008 – 5 மே 2013 | |
பெரும்பான்மை | 3,409 (1986) 9,078 (1990) |
இரானாவ் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 2 ஆகஸ்டு 1986 – 24 ஏப்ரல் 1995 | |
பெரும்பான்மை | 5,423 (1999) 1,387 (2004) |
11-ஆவது சபா முதலமைச்சர் | |
பதவியில் 29 நவம்பர் 1999 – 8 மார்ச் 2004 | |
பதவியில் 28 மே 1998 – 14 மார்ச் 1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Bernard Giluk Dompok 7 அக்டோபர் 1949 பெனாம்பாங், பிரித்தானிய வடக்கு போர்னியோ (தற்போது சபா), மலேசியா |
அரசியல் கட்சி | ஐக்கிய சபா கட்சி (PBS) சபா மக்களாட்சி கட்சி (PDS) கடாசான் மூருட் அமைப்பு (UPKO) |
துணைவர்(கள்) | வாலரி பிஞ்சிவான்; டயானா அலிப் |
பிள்ளைகள் | 5 |
முன்னாள் கல்லூரி | கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
இணையத்தளம் | bernard-dompok |
பொது
தொகுபெர்னார்ட் கிலுக் தும்போக், சபாவின் பெனாம்பாங்கில் பிறந்தார். அவர் தன் தொடக்கக் கல்வியை பெனாம்பாங் செயின்ட் மைக்கேல் பள்ளி; மற்றும் கோத்தா கினபாலு தஞ்சோங் அரு லா சாலே மேல்நிலைப் பள்ளி; ஆகிய பள்ளிகளில் பெற்றார். பின்னர் அவர் 1978-இல், ஐக்கிய இராச்சியத்தின் வெசுட்காம் தொழில்நுட்ப நிறுவனத்தில் (இப்போது கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்), இளங்கலை பட்டம் பெற்றார்.[3]
அவர் 1978-இல், சபா மாநில நிலங்கள் மற்றும் நில அளவைத் துறையில் மதிப்பீட்டாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் பொதுத் துறையை விட்டு வெளியேறி 1980 முதல் 1985 வரை சுமார் ஐந்து ஆண்டுகள் தனியார் மதிப்பீட்டாளராகப் பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
தொகுஆரம்பத்தில் ஐக்கிய சபா கட்சியின் (PBS) உறுப்பினராக இருந்த பெர்னார்ட் கிலுக் தும்போக், சபா மாநில சட்டமன்றத் தொகுதியான மோயோக் சட்டமன்றத் தொகுதி; மற்றும் பெனாம்பாங் மக்களவைத் தொகுதி ஆகிய இரண்டிலும்; 1986 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1986 மாநிலத் தேர்தலில் ஐக்கிய சபா கட்சி பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பெர்னார்ட் கிலுக் தும்போக், சபா மாநிலத்தின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]
1994-இல், சபா மக்களாட்சி கட்சி (PDS) என முன்பு அறியப்பட்ட கடாசான் மூருட் அமைப்பின் (UPKO} தலைவரானார். அதன் பின்னர், பெர்னார்ட் கிலுக் தும்போக் மற்றும் பலர் ஐக்கிய சபா கட்சியில் (PBS) இருந்து பிரிந்து பாரிசான் நேசனல் (BN) கூட்டணியில் சேர்ந்தனர். பாரிசான் நேசனல் கூட்டணிக்கு மாறிய பிறகு, 1995-ஆம் ஆண்டு மலேசியப் தேர்தலில் அவர் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.[4]
சபா முதலமைச்சர் பதவி
தொகுபெர்னார்ட் கிலுக் தும்போக், தன் மக்களவை உறுப்பினர் பதவியை இழந்த போதிலும், மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில பாரிசான் நேசனல் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். 1998 முதல் 1999 வரை சுழற்சி அடிப்படையில், சபா முதலமைச்சர் பதவியை ஏற்கும் முன், சபா மாநில அரசாங்கத்தின் பல அமைச்சுகளில் பணியாற்றினார்.
1999-இல் அவர் கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதியில், ஐக்கிய சபா கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 2004-இல் மலேசிய அமைச்சரவையில் பிரதமர் துறை அமைச்சராக இணைந்து 2008-இல், மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சின் அமைச்சரானார்.
2013 மலேசியப் பொதுத் தேர்தலில், மக்கள் நீதிக் கட்சியின் (PKR) டேரல் லீக்கிங் (Darell Leiking) என்பவரிடம் தன் கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதியை இழந்தபோது, அவரின் நாடாளுமன்ற வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.[5]
பொதுத்தேர்தல் முடிவுகள்
தொகுஆண்டு | அரசு | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | ||
---|---|---|---|---|---|---|---|---|
1986 | பெர்னார்ட் கிலுக் தும்போக் (PBS) | 6,659 | 52.32% | மார்செல் லீக்கிங் (சுயேச்சை) | 3,250 | 25.53% | ||
1990 | பெர்னார்ட் கிலுக் தும்போக் (PBS) | 12,654 | 77.97% | மார்செல் லீக்கிங் (DAP) | 3,576 | 22.03% | ||
1995 | பிரான்சிஸ் நோட்டியன் (PBS) | 14,652 | 53.02% | பெர்னார்ட் கிலுக் தும்போக் (SDP) | 12,982 | 46.98% | ||
2008 | பெர்னார்ட் கிலுக் தும்போக் (UPKO) | 13,400 | 52.4% | எட்வின் போசி(PKR) | 10,337 | 40.5% | ||
2013 | பெர்னார்ட் கிலுக் தும்போக் (UPKO) | 12,382 | 33.9% | டோரல் லீக்கிங் (PKR) | 22,598 | 61.8% |
விருதுகள்
தொகுமலேசிய விருதுகள்
தொகு- மலேசியா :
- - Order of the Defender of the Realm (PPN) (1976)
- - Order of Loyalty to the Crown of Malaysia (PSM) – Tan Sri (1997)[7]
- சபா :
- - Order of Kinabalu (PGDK) – Datuk (1987)
- - Order of Kinabalu (SPDK) – Datuk Seri Panglima (1995)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Muguntan Vanar (27 October 2015). "Dompok selected as Malaysia's envoy to the Vatican". The Star. பார்க்கப்பட்ட நாள் 27 October 2015.
- ↑ Muguntan Vanar (17 March 2016). "Bernard Dompok receives appointment letter as ambassador to Vatican". The Star. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016.
- ↑ Muguntan Vanar (24 December 2015). "Ex-La Salle Tanjung Aru principal passes away". The Star. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016.
- ↑ 4.0 4.1 "Dompok confirms resigning as Upko president on March 21". The Sun. 5 March 2014. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.
- ↑ Sandra Sokial (6 March 2014). "Dompok retires, passes baton to Tangau". The Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.
- ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
- ↑ "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat".