பெனாம்பாங் மக்களவைத் தொகுதி

பெனாம்பாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Penampang; ஆங்கிலம்: Penampang Federal Constituency; சீனம்: 联邦选区的横截面) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டம்; பெனாம்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P174) ஆகும்.[5]

பெனாம்பாங் (P174)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Penampang (P174)
Federal Constituency in Sabah
பெனாம்பாங் மக்களவைத் தொகுதி
(P174 Penampang)
மாவட்டம்கோத்தா கினபாலு மாவட்டம்;
பெனாம்பாங் மாவட்டம்
மேற்கு கரை பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை77,214 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபெனாம்பாங் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள் பெனாம்பாங்
பரப்பளவு492 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1966
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்இவோன் பெனடிக்
(Ewon Benedick)
மக்கள் தொகை178,499 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பெனாம்பாங் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டில் இருந்து பெனாம்பாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

பெனாம்பாங் மாவட்டம்

தொகு

பெனாம்பாங் மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் பெனாம்பாங் நகரம். சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் பெனாம்பாங் மாவட்டமும் ஒன்றாகும்.

1978-இல் பெனாம்பாங் மாவட்ட மன்றம் உருவாவதற்கு முன்பு, ஜெசல்டன் கிராமப்புற மாவட்ட மன்றம் (Jesselton Rural District Council) என அறியப்பட்டது. அந்த ஜெசல்டன் கிராமப்புற மாவட்ட மன்றம்; அப்போதைய பெனாம்பாங் துணை மாவட்டத்தில் இருந்த புத்தாத்தான், லோக் காவி, டெலிபோக் நகரம், கம்போங் லிக்காசு, தாமான் போ சாங், தாமான் இசுடீபன் வரையிலான பகுதிகளை உள்ளடக்கி இருந்தது.

பாரம்பரிய வேளாண் நடவடிக்கை

தொகு

வரலாற்று அடிப்படையில், பெனாம்பாங்கின் முதன்மைப் பொருளாதார நடவடிக்கை நெல் வேளாண்மை மற்றும் பிற வேளாண் செயல்பாடுகள் ஆகும். அண்மைய ஆண்டுகளில், பொருளாதார உயர்வு காணப்படுகிறது. இந்த மாவட்டம் கோத்தா கினபாலுவிற்கு அருகில் இருப்பதால், பொருளாதாரத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் விரைவான வளர்ச்சியைக் காண்கிறது.

இருப்பினும், பாரம்பரிய வேளாண் நடவடிக்கைகளில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. பாரம்பரியமாக ஈர நெல் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் நிலங்களை விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்ட போதிலும், வணிக மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக அதிகளவில் அந்த நிலங்கள் மறைமுகமாக விற்கப் படுகின்றன. [7]

பெனாம்பாங் மக்களவைத் தொகுதி

தொகு




 

பெனாம்பாங் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]

  சீனர் (34.2%)
  இதர இனத்தவர் (2.7%)





 

பெனாம்பாங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.85%)
  பெண் (49.15%)
 

பெனாம்பாங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.88%)
  21-29 (22.07%)
  30-39 (23.85%)
  40-49 (18.88%)
  50-59 (13.27%)
  60-69 (9.21%)
  70-79 (3.97%)
  80-89 (1.33%)
  + 90 (0.55%)
பெனாம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பெனாம்பாங் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
1969-1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9]
3-ஆவது மக்களவை P110 1971-1973 ஜேம்சு இசுடீபன் திபோக்
(James Stephen Tibok)
அசுனோ
1973-1974 பாரிசான் நேசனல்
(அசுனோ)
4-ஆவது மக்களவை P122 1974-1978
5-ஆவது மக்களவை 1978-1982 கிளாரன்ஸ் எலோங் மன்சுல்
(Clarence Elong Mansul)
பாரிசான் நேசனல்
(சபா மக்கள் ஐக்கிய முன்னணி) (BERJAYA)
6-ஆவது மக்களவை 1982-1986
7-ஆவது மக்களவை P143 1986-1990 பர்னர்ட் கிலுக் டொம்போக்
(Bernard Giluk Dompok)
பாரிசான் நேசனல்
(ஐக்கிய சபா கட்சி) (PBS)
8-ஆவது மக்களவை 1990-1995 காகாசான் ராக்யாட்
(ஐக்கிய சபா கட்சி)
9-ஆவது மக்களவை P152 1995-1999 பால் நோயின்தியன்
(Paul Nointien)
10-ஆவது மக்களவை 1999-2004 பிலிப் பெனடிக் லசிம்பாங்
(Philip Benedict Lasimbang)
பாரிசான் நேசனல்
(உப்கோ)
11-ஆவது மக்களவை P174 2004-2008 டொனால்டு பீட்டர் மொசுந்தின்
(Donald Peter Mojuntin)
12-ஆவது மக்களவை 2008-2013 பர்னர்ட் கிலுக் டொம்போக்
(Bernard Giluk Dompok)
13-ஆவது மக்களவை 2013-2016 இக்னேசியஸ் டாரல் லெய்கிங்
(Ignatius Darell Leiking)
பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
2016-2018 வாரிசான்
14-ஆவது மக்களவை 2018-2022
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் இவோன் பெனடிக்
(Ewon Benedick)
பாக்காத்தான் அரப்பான்
(உப்கோ)

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
இவோன் பெனடிக்
(Ewon Benedick)
பாக்காத்தான் அரப்பான் (PH)29,06657.3057.30  
இக்னேசியஸ் டாரல் லெய்கிங்
(Ignatius Darell Leiking)
சபா பாரம்பரிய கட்சி (Heritage)14,65628.8946.43
கென்னி சுவா தெக் கோ
(Kenny Chua Teck Ho)
சபா மக்கள் கூட்டணி (GRS)6,71913.2413.24  
ரிச்சர்ட் ஜிம்மி
(Richard Jimmy)
சுயேச்சை (Independent)2890.570.57  
மொத்தம்50,730100.00
செல்லுபடியான வாக்குகள்50,73098.89
செல்லாத/வெற்று வாக்குகள்5711.11
மொத்த வாக்குகள்51,301100.00
பதிவான வாக்குகள்77,21465.7016.47
Majority14,41028.4126.04
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [10]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 ஆகஸ்ட் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Preserve the remaining padi fields: NGO". http://www.dailyexpress.com.my/news.cfm?NewsID=105292. 
  8. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  9. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
  10. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு