தூதரகங்களின் பட்டியல், மலேசியா
மலேசியாவின் தூதரகங்களின் பட்டியல் (ஆங்கிலம்: List of Diplomatic Missions of Malaysia) என்பது உலகளாவிய நிலையில் மலேசியாவின் வெளிநாட்டுத் தூதரகங்களைக் குறிப்பிடும் ஒரு பட்டியல் ஆகும். 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி 63 நாடுகளில், மலேசியா தன் தூதரகங்களையும்; 39 நாடுகளில் தன் தூதரக அலுவலகங்களையும் கொண்டு உள்ளது.[1]
மலேசிய வெளியுறவு அமைச்சின் செயல்பாடுகள், 1956-ஆம் ஆண்டில், மலேசியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்பே தொடங்கி விட்டன. தொடக்கத்தில் இந்த அமைச்சு வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs) என அழைக்கப்பட்டது. மலேசிய வெளியுறவு அமைச்சு பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்தை முன்மாதிரியாகக் கொண்டது.[2]
வரலாறு
தொகு1955-ஆம் ஆண்டு, மலாயாவின் முதல் கூட்டரசு தேர்தல் நடந்து முடிந்ததும், துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman Putra Al-Haj) அவர்களின் அலுவலகத்திலேயே மலேசிய வெளியுறவு அமைச்சு அமைக்கப்பட்டது. அப்போது அந்த அமைச்சு, மலாயா கூட்டரசின் மலேசிய வெளி உறவுகள் அமைச்சு (Ministry of External Affairs) என்று அழைக்கப்பட்டது.[3]
மலேசிய வெளியுறவு அமைச்சு அமைக்கப்பட்டதும், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு 11 பேர் முதன்முறையாக தூதர்வழிப் பயிற்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், இவர்களில் சிலர் உலக நாடுகளுக்கு மலாயாவின் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.
புத்ராஜெயாவிற்கு இடமாற்றம்
தொகுஅதன் பின்னர், 1966-ஆம் ஆண்டு, மலாயாவின் வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs) என்பது மலேசிய வெளியுறவு அமைச்சு (Ministry of Foreign Affairs) என்று பெயர் மாற்றம் கண்டது. கோலாலம்பூர், புக்கிட் பெட்டாலிங் எனும் இடத்திற்கு இடப்பெயர்வும் செய்யப்பட்டது.
அப்போது இருந்து, மலேசிய வெளியுறவு அமைச்சு, இன்று வரையில் விசுமா புத்ரா என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையில், 2001 செப்டம்பர் 17-ஆம் தேதி, புத்ராஜெயாவிற்கு நிரந்தரமாக இடம் மாறியது.
மலேசியாவின் முதல் தூதரகங்கள் லண்டன், வாஷிங்டன், கான்பெரா, நியூயார்க், புதுடில்லி, ஜகார்த்தா, பாங்காக் ஆகிய நகரங்களில்தான் அமைக்கப்பட்டன. 1963-ஆம் ஆண்டில் 14 நாடுகளில் தூதரகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. 1966-இல், அதுவே 21 நாடுகளாகின. இப்போது, 112 நாடுகளில் மலேசியாவின் தூதரகங்களும் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
மலேசியாவின் தூதரகங்களின் பட்டியல்
தொகு- ஆஸ்திரியா
- பெல்ஜியம்
- பொசுனியா எர்செகோவினா
- சரஜீவோ (தூதரகம்)
- குரோவாசியா
- சாகிரேப் (தூதரகம்)
- செக் குடியரசு
- பிராக் (தூதரகம்)
- பின்லாந்து
- ஹெல்சின்கி (தூதரகம்)
- பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
- செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- பிராங்க்ஃபுர்ட் (துணைத் தூதரகம்)
- அங்கேரி
- புடாபெஸ்ட் (தூதரகம்)
- அயர்லாந்து
- டப்ளின் (தூதரகம்)
- இத்தாலி
- ரோம் (தூதரகம்)
- நெதர்லாந்து
- டென் ஹாக் (தூதரகம்)
- போலந்து
- வார்சா (தூதரகம்)
- உருமேனியா
- புக்காரெஸ்ட் (தூதரகம்)
- உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- செர்பியா
- பெல்கிறேட் (தூதரகம்)
- எசுப்பானியா
- மத்ரித் (தூதரகம்)
- சுவீடன்
- ஸ்டாக்ஹோம் (தூதரகம்)
- சுவிட்சர்லாந்து
- பேர்ண் (தூதரகம்)
- உக்ரைன்
- கீவ் (தூதரகம்)
- ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (உயர்பேராளர் ஆணையம்)
வட அமெரிக்கா
தொகு- கனடா
- கியூபா
- ஹவானா (தூதரகம்)
- மெக்சிக்கோ
- மெக்சிகோ நகரம் (தூதரகம்)
- ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
- லாஸ் ஏஞ்சலஸ் (துணைத் தூதரகம்)
- நியூயார்க் (துணைத் தூதரகம்)
தென் அமெரிக்கா
தொகு- அர்கெந்தீனா
- பியூனஸ் அயர்ஸ் (தூதரகம்)
- பிரேசில்
- பிரசிலியா (தூதரகம்)
- சிலி
- சான்ட்டியாகோ (தூதரகம்)
- பெரு
- லிமா (தூதரகம்)
- வெனிசுவேலா
- கராகஸ் (தூதரகம்)
ஆசியா
தொகு- வங்காளதேசம்
- தாக்கா (உயர்பேராளர் ஆணையம்)
- புரூணை
- பண்டர் செரி பெகவன் (உயர்பேராளர் ஆணையம்)
- கம்போடியா
- புனோம் பென் (தூதரகம்)
- சீனா
- இந்தியா
- புது தில்லி (உயர்பேராளர் ஆணையம்)
- சென்னை (துணைத் தூதரகம்)
- மும்பை (துணைத் தூதரகம்)
- இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
- மேடான் (துணைத் தூதரகம்)
- பொந்தியானாக் (துணைத் தூதரகம்)
- பெக்கான்பாரு (துணைத் தூதரகம்)
- சப்பான்
- தோக்கியோ (தூதரகம்)
- கசக்கஸ்தான்
- அல்மாத்தி (தூதரகம்)
- வட கொரியா
- பியொங்யாங் (தூதரகம்)
- தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
- லாவோஸ்
- வியஞ்சான் (தூதரகம்)
- மியான்மர்
- யங்கோன் (தூதரகம்)
- நேபாளம்
- காட்மாண்டூ (தூதரகம்)
- பாக்கித்தான்
- இசுலாமாபாத் (உயர்பேராளர் ஆணையம்)
- கராச்சி (துணைத் தூதரகம்)
- பிலிப்பீன்சு
- மணிலா (தூதரகம்)
- டவாவோ நகரம் (துணைத் தூதரகம்)
- சிங்கப்பூர்
- சிங்கப்பூர் (உயர்பேராளர் ஆணையம்)
- இலங்கை
- கொழும்பு (உயர்பேராளர் ஆணையம்)
- தாய்வான்
- தாய்பெய் (வணிக மண்டலம்)
- தாய்லாந்து
- கிழக்குத் திமோர்
- திலி (தூதரகம்)
- உஸ்பெகிஸ்தான்
- தாஷ்கன்ட் (தூதரகம்)
- வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
- ஹோ சி மின் நகரம் (துணைத் தூதரகம்)
மத்திய கிழக்கு
தொகுஆப்பிரிக்கா
தொகு- அல்ஜீரியா
- அல்ஜியர்ஸ் (தூதரகம்)
- எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
- கானா
- அக்ரா (உயர்பேராளர் ஆணையம்)
- கினியா
- கொனாக்ரி (தூதரகம்)
- கென்யா
- நைரோபி (உயர்பேராளர் ஆணையம்)
- லிபியா
- திரிப்பொலி (தூதரகம்)
- மொரோக்கோ
- ரெபாட் (தூதரகம்)
- நமீபியா
- வின்தோக் (உயர்பேராளர் ஆணையம்)
- நைஜீரியா
- அபுஜா (உயர்பேராளர் ஆணையம்)
- செனிகல்
- டக்கார் (தூதரகம்)
- தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (உயர்பேராளர் ஆணையம்)
- சூடான்
- கார்ட்டூம் (தூதரகம்)
- சிம்பாப்வே
- அராரே (தூதரகம்)
ஓசியானியா
தொகு- ஆத்திரேலியா
- பிஜி
- சுவா (உயர்பேராளர் ஆணையம்)
- நியூசிலாந்து
- வெலிங்டன் (உயர்பேராளர் ஆணையம்)
- பப்புவா நியூ கினி
- மொரெசுபி துறை (உயர்பேராளர் ஆணையம்)
பன்முக அமைப்புகள்
தொகு- பிரசெல்சு (Permanent Mission to the ஐரோப்பிய ஒன்றியம்)
- ஜெனீவா (Permanent Mission to the ஐநா)
- நியூயோர்க் நகரம் (Permanent Mission to the ஐநா)
சான்றுகள்
தொகு- ↑ "There are about 71 Foreign Embassies and 55 Consulates placed in the territory of Malaysia. Malaysia itself has 63 Embassies and 39 Consulates spread all over the world". Embassy WorldWide. பார்க்கப்பட்ட நாள் 8 March 2023.
- ↑ "Brief History of Wisma Putra". Ministry of Foreign Affairs, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 20 September 2008.
- ↑ The Ministry of Foreign Affairs began in the office of Tunku Abdul Rahman Putra after the 1955 Federal elections.
- ↑ "Embassy of Malaysia, Vienna". Ministry of Foreign Affairs of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.
- ↑ "Permanent Missions to the United Nations (Vienna)".
- ↑ "Embassy of Malaysia, Brussels". Ministry of Foreign Affairs of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.