சிய்யான்
|
சிய்யான் ( Xi'an; [ɕí.án]; சீனம்: 西安), பொதுவாக "சியான்" (Sian),[1][2] என்பது வடமேற்கு சீனாவின் சாங்சி மாகாணத்தின் தலைநகராகும்.[3] சீனாவின் பண்டைய நகர்களில் ஒன்றான இது, மிங் அரசமரபுக்கு முன் "சாங்கான்" என அறியப்பட்டது.[1] சிய்யான் சீனாவின் நான்கு பெரும் பண்டைய தலைநகரங்களில் பழையதும், சவு, சின், ஆன், சுயி, தாங் உட்பட்ட.[4] சீன வரலாற்றில் மிக முக்கிய அரசமரபுகள் சிலவற்றின் கீழ் இருந்ததும் ஆகும்.[4] இது சின் ஷி ஹுவாங்கின் சுடுமட்சிலைப் படைக்கு வீடும் பட்டுப் பாதையின் ஆரம்பப் புள்ளியுமாகும்.[1]
1990 கள் முதல், ஆய்வும் விருத்தியும், தேசிய பாதுகாப்பு, சீன விண்வெளித் திட்டம் ஆகியவற்றுக்கான வசதிகளுடன் முக்கிய கலாச்சார, வர்த்தக, கல்வி என்வற்றின் உள்ளக சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் பகுதியாக சிய்யான் நகரம் மீளவும் வெளிப்பட்டது. இது தற்போது 9 மாவட்டங்கள், 4 பெரும் பிரிவுகளின் நிருவகிப்பை துணை மாகாணம் என்ற நிலையுடன் கொண்டிருக்கிறது.[5] 2010 கணக்கெடுப்பின்படி, சிய்யானின் நகர சனத்தொகை 5,566,711 ஆக அதன் 10 மாவட்டங்களின் 7 மாவட்டங்களில் கொண்டிருக்கிறது.[6] அதேவேளை உள்ளூர் மாநகரத்தின் மொத்த சனத்தொகை 8,467,837 ஆகவுள்ளது.[7][8] இது வடமேற்கு சீனாவில் மிகவும் பிரபலம்மிக்க நகரும் மேற்கு சீனாவின் நகரங்களில் உள்ள பிரபலமிக்க நகரங்கள் மூன்றில் ஒன்றாகவும் உள்ளது.[9] "பொருளியளாளர் அறிவுப் பிரிவு" சூலை 2012 அறிக்கையின்படி, சீனாவில் வளரும் பெரும் மாநகர்கள் 13 இல் ஒன்றாக இது பெயரிடப்பட்டுள்ளது.[10]
பெயர் வரலாறு
தொகுசிய்யான் என்பதிலுள்ள இரு சீன எழுத்துக்கள் ("西安") "மேற்குச் சமாதானம்" என்ற அர்த்தமுள்ளன. சவு அரசமரபு காலத்தில், இப்பகுதி "பெங்காவோ" எனப்பட்டது. பெங் ஏரியின் மேற்குக்கரை பெங் எனவும், ஏரியின் கிழக்குக் கரை காவோ எனவும் அழைக்கப்பட்டன.[11] இது ஆன் அரசமரபு (கி.மு. 206 கி.பி 220) காலத்தில் "நிலையான சமாதானம்" என அர்த்தமுள்ள செங்கான் பெயர் மாற்றப்பட்டது. இது சிலநேரங்களில் மேற்கு தலைநகர் அல்லது சிஜிங் என குறிப்பிடப்பட்டது. சுயி அரசமரபு காலத்தில் (கி.பி 581) இதன் பெயர் "டக்சிங்" எனவும், மீண்டும் செங்கான் என்ற பெயர் 618 இல் தாங் அரசமரபு காலத்தில் மாற்றப்பட்டது. யுவான் அரசமரபு (1270–1368) காலத்தில், இந்நகர் "பெங்குவான்" என்ற பெயரைப் பெற்றது.
இறுதியில், மிங் அரசமரபு காலத்தில் சிய்யான் என்ற பெயரை 1369 இல் பெற்றது. அப்பெயர் 1928 வரை இருந்தது. பின்பு சிஜிங் அல்லது "மேற்கு தலைநகர்" என்ற பெயரை 1930 இல் பெற்றது. மீண்டும் ஒரு முறை 1943 இல், மிங் அரசமரபு காலப் பெயரான சிய்யான் என்பதைப் பெற்றது.
சிய்யான் தற்போது மற்ற சீன நகரங்களுக்கு உள்ளவாறு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு குறியீட்டுச் சுருக்கம் இல்லாது உள்ளது.
வரலாறு
தொகுசிய்யான் உயர்வானதும் கலாச்சார குறிப்பிடத்த வரலாற்றையும் கொண்டுள்ளது. 1963 இல் லாந்தியன் பகுதியில், சிய்யானின் தென்கிழக்கிலிருந்து 50 km (31 mi) தொலைவில், 500,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட லாந்தியன் மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. 6,500 வருடங்கள் பழமையான புதிய கற்காலக் கிராமம் 1953 இல் நகரத்தின் கிழக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முதல் 5600–6700 வருடங்களுக் முந்திய சில சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட புதிய கற்கால குடியிருப்புக்களின் எச்சங்கள் காணப்பட்டன.[12][13][14][15] 1957 இல் கட்டப்பட்ட சிய்யான் தொல்பொருள் காட்சிச்சாலையின் இப்பகுதி இருப்பிடமாகத் திகழ்வதுடன், தொல்பொருட்களைப் பாதுகாத்து வருகிறது.[16]
உசாத்துணையும் குறிப்புக்களும்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Xi'an". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2008-09-03.
- ↑ It is also called "Sianfu" by many Western authors of the early 20th century. For example, the Catholic Archdiocese of Xian used to be called the Vicariate Apostolic of Sianfu. Adolf S. Waley, The Re-making of China, New York: E.P. Dutton and Company, 1914.
- ↑ "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ 4.0 4.1 "Xi'an". என்கார்ட்டா கலைக்களஞ்சியம். 1993–2008. 3 September 2008. Archived from the original on 28 பிப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "中央机构编制委员会印发《关于副省级市若干问题的意见》的通知. 中编发[1995]5号". 豆丁网. 1995-02-19. Archived from the original on 2014-05-29. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Xi'an's urbanized area will be extended from 6 districts to 7 districts" (in Chinese). 华商网. 1 December 2010. Archived from the original on 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ [http://news.163.com/11/0525/04/74SDV9PL00014AED.html "西安市2010年���六次全国人口普查主要数据公报"]. 西安日报. 2011-05-25. http://news.163.com/11/0525/04/74SDV9PL00014AED.html. பார்த்த நாள்: 2014-02-12.
- ↑ "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census (No. 1)". National Bureau of Statistics of China. 28 April 2011. Archived from the original on 8 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் February 12, 2014, 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "最新中国城市人口数量排名(根据2010年第六次人口普查)". www.elivecity.cn. 2012. Archived from the original on 2015-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Supersized cities: China’s 13 megalopolises
- ↑ Zhongguo Gujin Diming Dacidian 中国古今地名大词典, 2005. (Shanghai: Shanghai Cishu Chubanshe), 1540.
- ↑ Yang, Xiaoping (2010). "Climate Change and Desertification with Special Reference to the Cases in China". Changing Climates, Earth Systems and Society. பக். 177. doi:10.1007/978-90-481-8716-4_8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-481-8715-7. https://archive.org/details/changingclimates0000unse.
- ↑ Stark, Miriam T (2008-04-15). "East Asian plant domestication". Archaeology of Asia. pp. 77–95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-5303-4.
- ↑ Fuller, Dorian Q; Qin, Ling; Harvey, Emma (2008). "A Critical Assessment of Early Agriculture in East Asia, with emphasis on Lower Yangzte Rice Domestication". Pragdhara: 17–52. http://www.homepages.ucl.ac.uk/~tcrndfu/articles/china%20overview%20pre.pdf.
- ↑ Meng, Y; Zhang, HQ; Pan, F; He, ZD; Shao, JL; Ding, Y (2011). "Prevalence of dental caries and tooth wear in a Neolithic population (6700-5600 years BP) from northern China". Archives of oral biology 56 (11): 1424–35. doi:10.1016/j.archoralbio.2011.04.003. பப்மெட்:21592462.
- ↑ "Banpo Museum in Xi'an". chinamuseums.com. Archived from the original on 31 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 29 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
- Heng Chye Kiang. (1999). Cities of Aristocrats and Bureaucrats: The Development of Medieval Chinese Cityscapes. Singapore: Singapore University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9971-69-223-6.
- Woo, J. K. (1964). "A newly discovered mandible of the Sinanthropus type – Sinanthropus lantianensis". Scientia Sinica 13: 801–811. பப்மெட்:14170540.
வெளி இணைப்புகள்
தொகு- Xi'an Government official website பரணிடப்பட்டது 2019-04-07 at the வந்தவழி இயந்திரம்
- Xi'an National Hi-tech Development Zone பரணிடப்பட்டது 2016-01-22 at the வந்தவழி இயந்திரம்
- Xian in history பரணிடப்பட்டது 2014-10-10 at the வந்தவழி இயந்திரம்