பெலிசு (பூனை)

Teleostomi

பெலிசு (Felis) என்பது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பூனை சிற்றினங்களின் பேரினமாகும். இது ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளையும், ஐரோப்பா மற்றும் ஆசியா முதல் இந்தோசீனா வரையிலான 60° நிலநேர்க்கோட்டிற்கு தெற்கு பகுதியிலும் காணப்படுகிறது. இந்தப் பேரினத்தில் வீட்டுப் பூனைகளும் அடங்கும். இந்தப் பேரினத்தின் மிகச் சிறிய சிற்றினம் கருப்பு பாத பூனையாகும். இது 38 முதல் 42 செ.மீ. உடல் நீளமுடையது. உடல் நீளம் 62 முதல் 76 செ. மீ. வரை கொண்ட காட்டுப் பூனை மிகப்பெரிய சிற்றினமாகும்.[1]

பெலிசு
புதைப்படிவ காலம்:பியாசென்சியன் – ஹோலோசீன்3.4–0 Ma
ஆறு காட்டு பெலிசு சிற்றினங்கள்; மேல்-இடதுபுறம், கடிகார திசையில்: ஐரோப்பிய காட்டுபூனை (பெ. சில்வெசுட்ரிசு), காட்டுப்பூனை (பெ. சாசு), ஆப்பிரிக்க காட்டுப்பூனை (பெ. லைபிகா), கருப்பு-பாத பூனை (பெ. நிக்ரிப்சு), மணல் பூனை (பெ. மார்கரிட்டா), சீன மலை பூனை (பெ. பைட்டி)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பூனைக் குடும்பம்
துணைக்குடும்பம்:
பெலினே
பேரினம்:
{{{1}}}

மாதிரி இனம்
பெலிசு கேட்டசு
லின்னேயஸ், 1758
சிற்றினங்கள்

உரையினை காண்க

பெலிசு இயரிடப்பரவல்

பெலினே பேரினங்களான, ஓட்டோகோலோபசு மற்றும் பிரியோனிலரசு ஆகியவை சுமார் 6.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெலிடேயின் யூரேசியா முன்னோடியிலிருந்து வேறுபட்டதாகவும், பெலிசு சிற்றினங்கள் 3.04 முதல் 0.99 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததாகவும் மரபணு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.[2][3]

சொற்பிறப்பியல்

தொகு

பெலிசு என்ற பொதுவான பெயர் பண்டைய இலத்தீன் சொல்லான பிலிசு என்பதிலிருந்து பிறந்தது. இதன் பொருள் "பூனை" என்பதாகும்.[4]

வகைப்பாட்டியல்

தொகு

கார்ல் லின்னேயஸ் 1758 வரை அறியப்பட்ட அனைத்து பூனைகளையும் பெலிசு எனும் பேரினத்தில் உள்ளடக்கினார்.[5] பின்னர் வகைப்பாட்டியல் வல்லுநர்கள் பூனைக் குடும்பத்தை வெவ்வேறு பேரினங்களாகப் பிரித்தனர். 1917ஆம் ஆண்டில், இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் ரெஜினால்ட் இன்னசு போகாக், பின்வரும் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளவற்றை மட்டுமே உள்ளடக்கியதாக பெலிசு பேரினத்தைத் திருத்தினார்.[1] தன்நிறப்புரி, எக்சு டி. என். ஏ., ஒய். டி. என். ஏ. மற்றும் இழைமணிகளின் டி. ஆக்சி-ரைபோநியூக்லியிக் அமில மரபணுப் பிரிவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட பேரினங்களின் மதிப்பிடப்பட்ட மரபணு வேறுபாடு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (Mya) வேறுபட்டதைக் குறிக்கப்படுகின்றன.[2]

சிற்றினங்கள் படம் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கச் செம் பட்டியல் நிலை மற்றும் பர்வல்
வீட்டுப் பூனை (பெ. கேடசு) லின்னேயஸ், 1758[5]   அச்சுறு நிலையை அண்மித்த இனம்
உலகம் முழுவதும் மனிதர்கள் அல்லது காட்டு விலங்குகளுடன் இணைந்து காணப்படும்[6]
ஐரோப்பிய காட்டுப்பூனை (பெ. சில்வெசுட்ரிசு) சிரெபர், 1777[7]1.62 to 0.59 மிஆமு   தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[8]

 

காட்டுப்பூனை (பெ. சாசு) சிரெபர், 1777[9]4.88 to 2.41 மிஆமு   தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[10]

 

ஆப்பிரிக்க காட்டுப்பூனை (பெ. லைபிகா) பார்சுடர், 1780[11]

1.86 to 0.72 மிஆமு

  தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[12]

 

கருப்பு-கால் பூனை (பெ. நிக்ரிப்சு) புர்செல், 1824[13]

4.44 to 2.16 மிஆமு

  அழிவாய்ப்பு இனம்[14]

 

மணல் பூனை (பெ. மார்கரிதா) லோச்சே, 1858[15]3.67 to 1.72 மிஆமு   தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[16]

 

சீன மலைப் பூனை (பெ. பையிடி) மில்னே-எட்வர்ட்சு, 1892 [17]1.86 to 0.72 மிஆமு   அழிவாய்ப்பு இனம்[18]

 

ஓட்டோகோலோபசு பேரினத்தின் ஒரே உறுப்பினராக பல்லாசின் பூனையை போக்காக் ஏற்றுக்கொண்டார்.[1] மற்ற விலங்கியலாளர்கள் இதை பெலிசு சிற்றினமாகக் கருதுகின்றனர்.[19]

பல வகைப்பாட்டியலாளர்கள் சீன மலைப் பூனையை பெ. சில்வெசுட்ரிசின் துணையினமாகக் கருதுகின்றனர்.[20]

தொகுதிப் பிறப்பு வரலாறு

தொகு

வாழும் பெலிசு சிற்றினங்களின் தொகுதிப் பிறப்பு உறவுகள் பின்வரும் கிளை வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன:[2]

பெலிடே 
 பெலினே
 பெலிசு

வீட்டுப்பூனை (பெ. கேடசு)

ஐரோப்பியக் காட்டுப் பூனை (பெ. சில்வெசுட்ரிசு)

ஆப்பிரிக்கக் காட்டுப்பூனை (பெ. லைபிகா)

சீன மலைப்பூனை (பெ. பையிடி)

மணல் பூனை (பெ. மார்காரிதா)

கருப்பு பாத பூனை (பெ. நைகிரிபிசு)

காட்டுப்பூனை (பே. சாசு)

பிற பெலினே (மரபு வழித்தோன்றல்கள்)

பேந்தெரினே

புதைபடிவ பெலிசு சிற்றினங்கள்

தொகு

புதைபடிவ பெலிசு சிற்றினம்:

  • பெலிசு லுனென்சிசு (மார்டெல்லி, 1906) [21]

சிறப்பியல்புகள்

தொகு

பெலிசு இனங்கள் உயரமான மற்றும் அகலமான மண்டை ஓடுகள், குறுகிய தாடைகள் மற்றும் குறுகிய காதுகள் குறுகிய மயிர் கற்றைகள், காதுகளின் பின்புறத்தில் வெள்ளை புள்ளிகள் இல்லாமல் உள்ளன. இவற்றின் கண் பாவை ஒரு செங்குத்து பிளவாகச் சுருங்கியுள்ளது.[1] 1904ஆம் ஆண்டில் பெ. தேமான் என சாடுனின்[22] விவரித்த திரான்சுகாக்காசியாவிலிருந்து வந்த ஒரு கருப்பு பூனை காட்டுப் பூனை.[23] அநேகமாகக் காட்டுப்பூனை மற்றும் வீட்டுப் பூனையின் கலப்பினமாக இது இருக்கலாம். கெல்லாசு பூனை என்பது இசுக்காட்லாந்தில் காணப்படும் வீட்டுப் பூனைக்கும் ஐரோப்பியக் காட்டுப்பூனைக்கும் இடையிலான கலப்பினமாகும்.[24]

கோர்சிகன் காட்டுப்பூனை முதல் பத்தாயிரம் ஆண்டின் தொடக்கத்திற்கு முன்னர் கோர்சிகாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.[25][26] ஒரு டஜன் பூனைகளில் மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆய்வு, இவை மத்திய கிழக்கில் தோன்றிய ஆப்பிரிக்கக் காட்டுப்பூனையுடன் நெருங்கிய தொடர்புடையன என்பதைக் காட்டுகிறது.[27]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Pocock, R. I. (1951). Catalogue of the genus Felis. London: British Museum (Natural History).
  2. 2.0 2.1 2.2 Johnson, W. E.; Eizirik, E.; Pecon-Slattery, J.; Murphy, W. J.; Antunes, A.; Teeling, E.; O'Brien, S. J. (2006). "The Late Miocene Radiation of Modern Felidae: A Genetic Assessment". Science 311 (5757): 73–77. doi:10.1126/science.1122277. பப்மெட்:16400146. Bibcode: 2006Sci...311...73J. https://zenodo.org/record/1230866. 
  3. Pecon-Slattery, J.; O'Brien, S. J. (1998). "Patterns of Y and X chromosome DNA sequence divergence during the Felidae radiation". Genetics 148 (3): 1245–1255. doi:10.1093/genetics/148.3.1245. பப்மெட்:9539439. பப்மெட் சென்ட்ரல்:1460026. http://www.genetics.org/cgi/content/full/148/3/1245. 
  4. Valpy, F. E. J. (1828). "Felis". An Etymological Dictionary of the Latin Language. London: A. J. Valpy.
  5. 5.0 5.1 Linnaeus, C. (1758). "Felis". Systema naturae per regna tria naturae: secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis (in லத்தின்). Vol. 1 (Tenth reformed ed.). Holmiae: Laurentii Salvii. pp. 42–44.
  6. Clutton-Brock, J. (1999) [1987]. "Cats". A Natural History of Domesticated Mammals (Second ed.). Cambridge, England: Cambridge University Press. pp. 133–140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-63495-3. இணையக் கணினி நூலக மைய எண் 39786571.
  7. Schreber, J. C. D. (1778). "Die wilde Kaze" [The wild Cat]. Die Säugthiere in Abbildungen nach der Natur mit Beschreibungen (Dritter Theil). Erlangen: Expedition des Schreber'schen Säugthier- und des Esper'schen Schmetterlingswerkes. pp. 397–402.
  8. Yamaguchi, N.; Kitchener, A.; Driscoll, C.; Nussberger, B. (2015). "Felis silvestris". IUCN Red List of Threatened Species 2015: e.T60354712A50652361. https://www.iucnredlist.org/species/60354712/50652361. பார்த்த நாள்: 29 October 2018. 
  9. Schreber, J. C. D. (1778). "Der Kirmyschak". Die Säugethiere in Abbildungen nach der Natur, mit Beschreibungen. Erlangen: Wolfgang Walther. pp. 414–416.
  10. Gray, T. N. E.; Timmins, R. J.; Jathana, D.; Duckworth, J. W.; Baral, H.; Mukherjee, S. (2016). "Felis chaus". IUCN Red List of Threatened Species 2016: e.T8540A50651463. https://www.iucnredlist.org/species/8540/50651463. 
  11. Forster, G. R. (1780). "LIII. Der Karakal". Herrn von Büffons Naturgeschichte der vierfüssigen Thiere. Mit Vermehrungen, aus dem Französischen übersetzt. Sechster Band [Mr. von Büffon‘s Natural History of Quadrupeds. With additions, translated from French. Volume 6]. Berlin: Joachim Pauli. pp. 299–319.
  12. Ghoddousi, A.; Belbachir, F.; Durant, S.M.; Herbst, M.; Rosen, T. (2022). "Felis lybica". IUCN Red List of Threatened Species 2022: e.T131299383A154907281. https://www.iucnredlist.org/species/131299383/154907281. 
  13. Burchell, W. J. (1824). "Felis nigripes". Travels in the Interior of Southern Africa, Vol. II. London: Longman, Hurst, Rees, Orme, Brown, and Green. p. 592.
  14. Sliwa, A.; Wilson, B.; Küsters, M.; Tordiffe, A. (2016). "Felis nigripes". IUCN Red List of Threatened Species 2016: e.T8542A50652196. https://www.iucnredlist.org/species/8542/50652196. 
  15. Loche, V. (1858). "Description d'une nouvelle espèce de Chat par M. le capitaine Loche". Revue et Magasin de Zoologie Pure et Appliquée. 2 X: 49–50. https://archive.org/stream/revueetmagasinde10soci#page/49/mode/1up. 
  16. Sliwa, A.; Ghadirian, T.; Appel, A.; Banfield, L.; Sher Shah, M.; Wacher, T. (2016). "Felis margarita". IUCN Red List of Threatened Species 2016: e.T8541A50651884. https://www.iucnredlist.org/species/8541/50651884. பார்த்த நாள்: 29 October 2018. 
  17. Milne-Edwards, A. (1892). "Observations sur les mammifères du Thibet". Revue Générale des Sciences Pures et Appliquées III: 670–671. https://archive.org/stream/bulletinbiologiq03univ#page/670/mode/2up. 
  18. Riordan, P.; Sanderson, J.; Bao, W.; Abdukadir, A.; Shi, K. (2015). "Felis bieti". IUCN Red List of Threatened Species 2015: e.T8539A50651398. https://www.iucnredlist.org/species/8539/50651398. பார்த்த நாள்: 29 October 2018. 
  19. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). p. 538. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. {{cite book}}: |editor= has generic name (help); External link in |title= (help)CS1 maint: multiple names: editors list (link)
  20. Driscoll, C. A.; Menotti-Raymond, M.; Roca, A. L.; Hupe, K.; Johnson, W. E.; Geffen, E.; Harley, E. H.; Delibes, M. et al. (2007). "The Near Eastern Origin of Cat Domestication". Science 317 (5837): 519–523. doi:10.1126/science.1139518. பப்மெட்:17600185. பப்மெட் சென்ட்ரல்:5612713. Bibcode: 2007Sci...317..519D. http://www.mobot.org/plantscience/resbot/repr/add/domesticcat_driscoll2007.pdf. 
  21. Martelli, A. (1906). "Su due Mustelidi e un Felide del Pliocene Toscano". Bollettino della Società Geologica Italiana 25: 595–612. https://archive.org/details/bollettinodellas2519soci/page/606. 
  22. Satunin, C. (1904). "The Black Wild Cat of Transcaucasia". Proceedings of the Zoological Society of London II: 162–163. doi:10.1111/j.1469-7998.1904.tb08325.x. https://archive.org/details/proceedingsofzoo19042zool/page/162. 
  23. Bukhnikashvili, A.; Yevlampiev, I. (eds.). Catalogue of the Specimens of Caucasian Large Mammalian Fauna in the Collection (PDF). Tbilisi: National Museum of Georgia.
  24. Kitchener, C.; Easterbee, N. (1992). "The taxonomic status of black wild felids in Scotland". Journal of Zoology 227 (2): 342−346. doi:10.1111/j.1469-7998.1992.tb04832.x. 
  25. Vigne, J.-D. (1992). "Zooarchaeology and the biogeographical history of the mammals of Corsica and Sardinia since the last ice age". Mammal Review 22 (2): 87–96. doi:10.1111/j.1365-2907.1992.tb00124.x. 
  26. Kitchener, A. C.; Breitenmoser-Würsten, C.; Eizirik, E.; Gentry, A.; Werdelin, L.; Wilting, A.; Yamaguchi, N.; Abramov, A. V. et al. (2017). "A revised taxonomy of the Felidae: The final report of the Cat Classification Task Force of the IUCN Cat Specialist Group". Cat News Special Issue 11: 17−20. https://repository.si.edu/bitstream/handle/10088/32616/A_revised_Felidae_Taxonomy_CatNews.pdf?sequence=1&isAllowed=y. 
  27. Saplakoglu, Y. (2019). "Meet the Cat-Fox, an Oddball Feline Roaming Around a French Island". Live Science. பார்க்கப்பட்ட நாள் 2019-06-25.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலிசு_(பூனை)&oldid=3621477" இலிருந்து மீள்விக்கப்பட்டது