பேச்சு:கடலை மிட்டாய்
கடலை மிட்டாய் பொதுவாக கச்சான் கடலையில் தானே தயாரிப்பார்கள். அதையும் கட்டுரையில் குறிப்பிடலாம்.--Kanags \பேச்சு 09:58, 11 மே 2008 (UTC)
- கச்சான் கடலை என்றால் என்ன? நிலக்கடலையும் அதுவும் ஒன்றா? தகவல் தந்தீர்களானால் கட்டுரையில் சேர்த்துவிடலாம், கனகு. -- சுந்தர் \பேச்சு 15:44, 11 மே 2008 (UTC)
அது நிலக்கடலை தான். இலங்கையில் கச்சான் என்று பேச்சு வழக்கில் சொல்கிறார்கள். அப்படியே எழுதி விட்டேன்.--Kanags \பேச்சு 09:46, 12 மே 2008 (UTC)
- நிலக்கடலைக்கான கட்டுரையில் கச்சான் கடலை என்றும் அழைக்கப்படுவதைத் தவறாமல் குறிப்பிடுவோம். -- சுந்தர் \பேச்சு 12:52, 12 மே 2008 (UTC)
தமிழர் இனிப்புகள், உணவுகள்
தொகுமுறுக்கு, அதிரசம், பனியாரம், புட்டு, பால் கொழுக்கட்டை, கொழுக்கட்டை, பால்கோவா, பர்பி, பூந்தி, பஜ்ஜி, வடை, (மசாலா வடை, கடலை வடை, உளுந்த வடை, மெது வடை) , போண்டா, மைசூர் பாகு, இலட்டு, அடை, தோசை, ஆப்பம், இட்டிலி, ரொட்டி, பஞ்சு மிட்டாய், சவ்வு மிட்டாய், லாலி பாப், சப்பாத்தி, பூரி, ஆம்லெட், புரோட்டா, கற்கண்டு, பஞ்சாமிர்தம், சோளப் பொறி, பொறி கடலை, பொறி உருண்டை, கேசரி, பாயாசம்
- ரவி, நாவில் சப்புக்கொட்ட வச்சிட்டீங்களே! -- சுந்தர் \பேச்சு 15:44, 11 மே 2008 (UTC)
கடலை உருண்டையின் வேறு வடிவுதான் கடலை மிட்டாய். கடலை உருண்டையில் தேங்காய்ப்பூ போடுவது கிடையாது. உருண்டைகளில் பயித்தம் பருப்பு உருண்டை, ரவை உருண்டை முதலியன சேர்க்கலாம். வெல்லச்சீடை (இனிப்புச்சீடை), காரச்சீடை, சூய்யம், பாலப்பலம் (இனிப்பு, காரம்) (இது சீடை போல் உள்ள ஒன்று), (இனிப்பு) உக்காரை, பதர்பேணி, இனிப்பு சோமாசு, இனிப்பு சந்தகை (இதனை இனிப்புச் சேவை என்றும் கூறுவர். இனிப்பு இடியாப்பம் போன்றது. மெல்லிய நூடில் போன்றது). தேன்குழல், முள்ளுமுறுக்கு, ஓலைப்பக்கோடா (ரிப்பன் பக்கோடா என்றும் கூறுவர்), மனோகலம், அசோகா, பாதாம் அல்வா, கோதுமை அல்வா முதலான அல்வாக்கள் (அல்வா= இனிப்புக் களி)..இப்போதைக்கு நினைவுக்கு வருபவை இவை...இவை தவிர உணவு வகைகளில் கம்பஞ்சோறும், சைவ உணவு அல்லாத உணவுவகைகளில் நூற்றுக்கணக்கான மீன்/இறைச்சி வகைகளும் உள்ளன--செல்வா 16:07, 11 மே 2008 (UTC)
- கடலை உருண்டை என்ற தலைப்பிற்கு வேண்டுமானால் நகர்த்தி விடலாம். அடுத்தமுறை கடலை உருண்டைகளை வாங்கி நிழற்படம் எடுக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 12:52, 12 மே 2008 (UTC)
புகைப்படங்கள்
தொகுஎள் உருண்டை, கடலை உருண்டை போன்றவற்றிக்காக புகைப்படம் இங்குள்ளது. விக்கியில் இணைப்பிற்கு சட்ட திட்டங்கள் வழி செய்தால் உபயோகம் செய்து கொள்ளவும்.
சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:39, 4 ஏப்ரல் 2012 (UTC)
கடலை மிட்டாய்க்கு வேறு பெயர்கள்
தொகுகட்டுரையை எழுதியமைக்கு மிக்க பாராட்டுகள். கடலை மிட்டாய் என கிராமங்களில் கூறுவார்கள். சென்னையில் இதற்கு பேர் கடலை பர்பி. புதுவை, காரைக்கால் பகுதியில் மலாட்டை கேக் என்று கூறுவார்கள். இதையும் இணைத்தல் நலம் என நினைக்கிறேன்.
அது போக குச்சி மிட்டாய், குருவி ரொட்டி, சவ்வு மிட்டாய், இலந்தை வடை, இலந்தை தூள், கலாக்காய், நெல்லிக்காய் போன்றவற்றையும் இணைக்கலாம்.
- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:16, 4 ஏப்ரல் 2012 (UTC)