பேச்சு:பல்லவர்
பிழை
தொகு"தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 400 வருடங்கள் ஆட்சி புரிந்தனர்." என்னும் கூற்றில் 600-700 ஆண்டுள் வேறுபாடு வரக்கூடும். 400 ஆண்டுகள் என்பது சரியில்லை. --செல்வா 17:28, 18 பெப்ரவரி 2007 (UTC)
"முதலாம்" குழப்பம்!
தொகுஒரு குலத்தின் அரசர்களின் பெயர்கள் தலைமுறைத் தலைமுறையாய் வழங்கப்படுவது மரபு, இவ்வாறு ஒரேப்பெயரைக் கொண்ட இருவரசர்களை வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு "முதலாம்" "இரண்டாம்" "மூண்றாம்" என அவ்வரசர்களின் பெயர்களுக்கு முன்சேர்பது நாமறிந்ததே!
இந்த முன்னினைப்புகள் எந்த வகையிலும் அவ்வரசனின் இயற்பெயரின் ஒரு பகுதியல்லவென்பதையும், "முதலாம்" என்ற முன்னினைப்பை பயன்படுத்தாவிடிலும் அஃது அப்பெயரில் முதலாவதாய் அறியப்பட்ட அரசனையே குறிக்குமென்பதையும் வலியுறத்த விரும்புகின்றேன்.
காரணம், நரசிம்மவர்மன், மகேந்திரவர்மன் ஆகியப் பெயர்கள் சிலவிடங்களில் இவ்வாறும் மற்றும் சிலவிடங்களில் முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் மகேந்திரவர்மன் என்றும் உள்ளன, இதனால் பக்க இணைப்புகள் சரிவர இணையப்பெற தவறிவிடுகின்றன!
மேலும், பெயர்கள் பலவகைகளில் பகுக்கபடுவதாலும் இத்தகைய குழப்பம் விளைகின்றது. உதாரனமாய், நரசிம்மவர்மன்னின் பெயரை கீழ்கண்ட வழிகளில் எப்படி வேண்டுமானாலும் வழங்கலாம்,
- நரசிம்மன்
- முதலாம் நரசிம்மன்
- நரசிம்மவர்மன்
- முதலாம் நரசிம்மவர்மன்
- நரசிம்ம பல்லவன்
- முதலாம் நரசிம்ம பல்லவன்
- நரசிம்மவர்மப் பல்லவன்
- முதலாம் நரசிம்மவர்மப் பல்லவன்
ஆக இவ்வாறு அரசரகளின் பெயர்களை வழங்க சீராக ஓரே முறையை பின்பற்றவும் ஏனைய முறைகளில் வழங்கப்படும் ஓர் அரசனின் பெயர்களை அதற்கான சரியானப் பக்கத்திற்கு மீள்வழிப்படுத்தவும் வேண்டும்.
பதிப்புரிமை மீறல்
தொகுஇது http://www.tamilvu.org/library/nationalized/pdf/53-RASAMANICKAM/PALLAVARVARALARU.pdf இங்கிருந்து தலைப்புகள் கூட மாறாமல் காப்பி அடிக்கப்பட்டுளது. பட்டியல் கட்டுரையாகவோ இல்லை சிறிய மூலங்கள் உடைய கட்டுரையாய் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பல்லவர் பற்றி எழுத நிறைய மூலங்கள் இருந்தும் கூட இங்கு அப்படியே பிரதி எடுக்கப்பட்டுளது. அதனால் இதை நீக்குவதே சிறந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:23, 27 சூன் 2012 (UTC)
- தென்காசி சுப்பிரமணியன், தாங்கள் குறிப்பிடும் இணைய முகவரி கட்டுரையின் உசாத்துணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நூல், இணையதளங்கள் போன்றவற்றிலிருந்து அப்படியே பிரதி செய்யப்படும் கட்டுரைகள் ஆதாரம், உசாத்துணை என்கிற தலைப்பின் கீழ் நூலாக இருந்தால், நூலின் பெயர், ஆசிரியர் பெயர், வெளியீட்டகத்தின் பெயருடன் குறிப்பிடுவதும், இணையதளமாக இருந்தால், குறிப்பிட்ட பக்கத்திற்கான இணையதள முகவரி குறிப்பிடுவதும் விக்கிப்பீடியாவால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே இக்கட்டுரையை நீக்க முடியாது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:15, 28 சூன் 2012 (UTC)
- தென்காசியார் கூறுவது போல இது பதிப்புரிமை மீறலே. வரிக்கு வரி அப்படியே நகலாக்காமல் உள்ளடக்கத்தை உள்வாங்கி (கட்டுரை வாசகம் முன்னிலையில் உள்ளது) விக்கிக்கேற்ற நடையில் தந்திருக்க வேண்டும். கருத்துக்களுக்குத் தான் உசாத்துணையே தவிர ஆக்கத்தை அப்படியே தருவதற்கல்ல. இருப்பினும் இத்தகைய முகனையான கட்டுரைகளை விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு பக்கத்தில் உரையாடி முடிவு காண்பதே பொருத்தமானது. எனது கருத்து: கட்டுரையை சீராக்கி பன்முகப்படுத்தி மேம்படுத்துதலை பரிந்துரைக்கிறேன்.--மணியன் (பேச்சு) 03:40, 28 சூன் 2012 (UTC)+1ஆனால் பதிப்புரிமை மீறல்களை உடனே நீக்குவதுதான் வழக்கம்--சண்முகம்ப7 (பேச்சு) 10:01, 28 சூன் 2012 (UTC)
- தேனியாரே அந்த வலைதள உள்ளடக்கம் creative commons பதிப்புரிமையோ அல்லது வேறு ஏதாவது கட்டற்ற பதிப்புரிமையோ கொண்டிருந்தால் மட்டுமே தாங்கள் கூறியவாறு செய்ய இயலும்.--சண்முகம்ப7 (பேச்சு) 10:01, 28 சூன் 2012 (UTC)
- இன்னொரு கருத்து, அந்த pdf tamilvuவில் உள்ள நாட்டுடைமையாக்கப்பட்ட நூல் தானே அப்படியானால் அது பொது உரிமையில் அல்லவா இருக்கும் (துல்லியமாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் கூறவும்). அப்படி பொது உரிமை எனில் உபயோகப்படுத்தலாம் தானே--சண்முகம்ப7 (பேச்சு) 10:57, 28 சூன் 2012 (UTC)
இதை அழிக்கச் சொன்னதன் காரணம் இதை எளிதாக கூட்டு முயற்சிக்கட்டுரையாக அறிவித்து முதற்பக்க கட்டுரை ஆக்க இயலும். இந்த விக்கியாக்கம் வார்ப்புரு இக்கட்டுரையில் பல வருடங்களாக உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:31, 28 சூன் 2012 (UTC)
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் பொதுவுரிமை அல்ல. நாட்டுடைமை நூல்கள் என்றால் அரசாங்கம் அந்நூல் எழுதியவர் மற்றும் பதிப்புரிமை உள்ளவருக்கு ஒரு தொகை (25 லட்சம் என நினைக்கிறேன்) கொடுத்து நாட்டுடைமை ஆக்கி விடுவர். அதன் பிறகு எவர் வேண்டுமானாலும் அதை எத்தனை மதிப்புக்கு வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம். அதாவது 1000 ரூபாய் மதிப்புள புத்தகத்தை 10 ரூபாய்க்கு பாக்கெட் நூலாக கூட வெளியிடலாம்.
இங்கு என்ன பிரச்சினை என்றால் இஅது நீண்ட நாள்களாக விக்கியாக்கம் செய்யப்படாமல் உள்ளது. மூலங்கள் அதிகமுள்ள கட்டுரையும் கூட. இதில் பல்லவர் கட்டிடக் கலை நாணயங்கள் பற்றி எதையும் குறிக்கவில்லை. அப்புத்தகத்திலுள்ள பல்லவர்கள் பற்றிய அறிமுகப் பக்கங்கள் அப்படியே எழுதப்பட்டுளது. அளித்துவிட்டு புதிதாக கூட்டு முயற்சியுடன் எழுதினால் கட்டுரை அழகாக வரும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:06, 28 சூன் 2012 (UTC)
- பல்லவர் வரலாற்றுக் கட்டுரையை நீக்கிவிட்டுப் புதிய கட்டுரையாக கூட்டு முயற்சியில் எழுதலாம் என்கிற கருத்தை நான் நிராகரிக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளில் கட்டுரைக்கான வரலாற்றைக் காட்டவும் பக்கத்தையும் சற்று பார்க்க வேண்டும். இக்கட்டுரையை இ. மயூரநாதன் பெப்ரவரி 11, 2005 ல் தொடங்கியிருக்கிறார். அதன் பிறகு பல்வேறு பயனர்களால் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. இப்படி தொகுக்கப்பட்ட நிலையில் சனவரி 9, 2009 ல் ஜெகதீசன் என்கிற பயனர் தாங்கள் குறிப்பிடும் கட்டுரையை அப்படியே சேர்த்து விட்டிருக்கிறார். இதை அப்போதைய நிலையில் எந்தப் பயனராவது நீக்கி முன்னிலையாக்கி இருக்க வேண்டும். அப்படி செய்யப்படவில்லை. அதன் பிறகும் இக்கட்டுரையில் பல்வேறு தொகுப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கட்டுரையை முழுமையாக நீக்கம் செய்வது என்பது சரியான முடிவல்ல. தாங்கள் குறிப்பிடும் பகுதி பதிப்புரிமை மீறல் என்று கருதினால் அது சேர்க்கப்பட்டதற்கு முன்பிருந்த பகுதி அவசியம் காக்கப்பட வேண்டும். இடையில் செய்யப்பட்ட தவறுகளுக்காக கட்டுரையை அப்படியே நீக்கம் செய்ய வேண்டும் என்பது எனக்கு சரியான நடைமுறையாகத் தெரியவில்லை. எனவே பதிப்புரிமை மீறல் என்று கருதப்படும், ஜெகதீசன் என்ற பயனரால் சேர்க்கப்பட்ட தொகுப்புக்கு முந்தைய தொகுப்பான VolkovBot எனும் தானியங்கியால் நவம்பர் 10, 2008 செய்யப்பட்ட தொகுப்புக்கு மீளமைக்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:08, 28 சூன் 2012 (UTC) விருப்பம்--சண்முகம்ப7 (பேச்சு) 12:22, 28 சூன் 2012 (UTC)
நீங்கள் கூறுகிறபடி பார்த்தால் ஜகதீசனுக்கு பின்னுள்ள தொகுப்புகளும் காக்கப்பட வேண்டுமல்லவா. அதனால் ஜகதீசன் செய்த பகுப்புகளை மட்டும் இல்லாது செயது விடுங்கள். பேச்சு:போதி தருமன் பக்கத்தில் அவ்வாறு செய்யப்பட்டுளது. அதை போல் செய்தால் ஜகதீசனுக்கு முன் பின் செய்த தொகுப்புகள் காக்கப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:10, 28 சூன் 2012 (UTC)
பல்லவர்கள் ஈரானியர்களா?
தொகுபல்லவர்கள் ஈரானியர்கள் எனும் ஒரு கருத்தும் காணக்கிடைக்கிறது. பார்க்க: [1]
- பஹலவர்=பார்த்தியர்=இரானியர்=பாரசீகர். ஏற்கனவே அக்கருத்து உள்ளது. மேலே உங்கள் ஒப்பமிடவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:51, 20 அக்டோபர் 2012 (UTC)