பொன்முண்டம்
பொன்முண்டம் (Ponmundam) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊராகும். இப்பகுதி வழியாக மலப்புறம் - திரூர் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இது இடைக்காலத்தில் தனுர் (வெட்டத்துநாடு) இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
பொன்முண்டம் | |
---|---|
கணக்கெடுப்பு ஊர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 23,173 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676 106 |
தொலைபேசி குறியீடு | 0494 |
வாகனப் பதிவு | KL- |
அருகில் உள்ள நகரம் | திரூர் கோட்டக்கல் |
காலநிலை | மிதமான (கோப்பென்) |
இணையதளம் | [http://www.ponmundam.com [[www |
வரலாறு
தொகு"பொன்முண்டம்" என்ற பெயரானது இந்த சிற்றூருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து மாம்புராம் தங்கல் என்னும் இசுலாமிய அறிஞரால் சூட்டப்பட்டது ஆகும். நெடுவாஞ்சேரி குடும்பத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்ணை அவர் மணந்தார். அவரது கல்லறையில் "சேரூர் படை"யின் தலைமை தளபதி திரு. சைதலவி நெடுவாஞ்சேரியின் சகோதரியான 'ஆயிஷா மலபாரியா பொன்முண்டம்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் "பொன்முண்டம்" என்று பொருள்படும் 'செல்வங்களின் நிலமாக' மாறும் என்று தங்கல் முன்னறிவிக்கும் வரை இந்தக் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருந்ததாக செவிவழிக் கதைகள் கூறுகின்றன.
பொன்முண்டம் மஹல்லு ஜும்ஆ மஸ்ஜித் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. பொன்முண்டத்தின் பெரும்பாலான பூர்வீகவாசிகள் தற்போது, வளைகுடா பிராந்தியங்களில் பணிபுரிகின்றனர். முக்கியமாக அல் ஐன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பிற பகுதிகளில் வேலை செய்கிறார்கள். .99.99% பேர் வளைகுடா பகுதிகளில் குறைந்த சம்பளம் பெறுவதால் குடும்பத்தைப் பிரிந்து வாழ்க்கையை நடத்துகிறார்கள். இப்பகுதியைப் முக்கிய விவசாயப் பொருட்கள் தேங்காய், பாக்கு, வெற்றிலை போன்றவை ஆகும். பாக்கு, வெற்றிலை போன்றவை தொடருந்து மற்றும் சாலை வழியாக முறையே தலக்கடத்தூர் மற்றும் பான் பஜார் (தூர்) போன்ற அருகிலுள்ள உள்ளூர் சந்தைகள் மூலம் வட இந்தியா மற்றும் பாக்கித்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் நெல் வயல்கள் நிறைய இருந்தன. பின்னர் அவை வீட்டு மனைகளாக மற்றப்பட்டன. தற்போது விவசாயம் ஒரு தோல்வியுற்ற தொழிலாக உள்ளது.
விளையாட்டுக் கழகங்கள்
தொகுஇப்பகுதியின் விளையாட்டு வரலாற்றில் முக்கியப் பங்காற்றிய யூத்விங் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் பொன்முண்டம், பரம்மல் பிஆர்சி, ஓஎஸ்பி ஆகிய மூன்று பிரபலமான கால்பந்து சங்கங்கள் இந்தப் பகுதியைப் பெருமைப்படுத்துகின்றன. இந்த கிராமம் சுமாரான கல்விப் பின்னணியைக் கொண்டுள்ளது. பூர்வீக மக்கள் பெரும்பாலும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு வரை கற்கின்றனர். ஆனால் பெண் கல்வி இன்னும் பழமையான நிலையிலேயே உள்ளது. பொன்முண்டத்திற்கு அருகிலுள்ள குளங்கராவிலிருந்து காசா குளங்கரா ஒரு முக்கியமான விளையாட்டுக் கழகமாகும். குளங்கரா அதன் பாரம்பரிய பண்பாடு, வரலாறு, விளையாட்டு மற்றும் அதன் விவசாயத்தைக் காண ஒரு அற்புதமான இடமாகும். குளங்கரா அதன் பெயருக்கு ஏறப்ப அங்கே உள்ள குளங்களுக்காக பிரபலமானது.
அரசியல்
தொகுஅரசியல் ரீதியாக, இந்த கிராமம் தற்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்து இடது மற்றும் வலது கட்சிகளை ஆதரிக்கிறது. சில சமயங்களில் இது சில சமய வழிபாட்டு சார்புகளையும் காட்டுகிறது. எப்படியிருந்தாலும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இது முக்கியமாக இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கை ஆதரிக்கிறது.
மக்கள்தொகையியல்
தொகு2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, பொன்னமுண்டத்தின் மொத்த மக்கள் தொகை 23173 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 10967 என்றும், பெண்களின் எண்ணிக்கை 12206 என்றும் உள்ளது.
போக்குவரத்து
தொகுபொன்முண்டம் கிராமம் திரூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 திரூர் வழியாக செல்கிறது. அச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோவைக்கு செல்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் திரூரில் உள்ளது.