மகாலிங்கபுரம்

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

மகாலிங்கபுரம் (Mahalingapuram) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் நுங்கம்பாக்கம் பகுதியில்,[1][2][3][4] 13°03′26.3″N 80°14′03.1″E / 13.057306°N 80.234194°E / 13.057306; 80.234194 (அதாவது, 13.057300°N, 80.234200° E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், சூளைமேடு, சேத்துப்பட்டு, அமைந்தக்கரை மற்றும் தியாகராய நகர் ஆகியவை மகாலிங்கபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். வி. வி. சர்வதேச நீச்சல் பயிற்சிப் பள்ளி என்ற தனியார் நிறுவனம், நீச்சல் பயிற்சி பெற விரும்புபவர்கள் மற்றும் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் ஆகியவர்களுக்காக, மகாலிங்கபுரத்திலிருந்து பயனளிக்கிறது.[5]

மகாலிங்கபுரம்
Mahalingapuram
மகாலிங்கபுரம்
மகாலிங்கபுரம் Mahalingapuram is located in சென்னை
மகாலிங்கபுரம் Mahalingapuram
மகாலிங்கபுரம்
Mahalingapuram
மகாலிங்கபுரம் (சென்னை)
மகாலிங்கபுரம் Mahalingapuram is located in தமிழ் நாடு
மகாலிங்கபுரம் Mahalingapuram
மகாலிங்கபுரம்
Mahalingapuram
மகாலிங்கபுரம்
Mahalingapuram (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 13°03′26.3″N 80°14′03.1″E / 13.057306°N 80.234194°E / 13.057306; 80.234194
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்
34 m (112 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
600034
தொலைபேசி குறியீடு+9144xxxxxxxx
அருகிலுள்ள பகுதிகள்நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், சூளைமேடு, சேத்துப்பட்டு, அமைந்தக்கரை, தியாகராய நகர்
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்தயாநிதி மாறன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்மருத்துவர் எழிலன் நாகநாதன்
இணையதளம்https://chennaicorporation.gov.in

போக்குவரத்து

தொகு

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், மகாலிங்கபுரம் வழியாக அனேக பேருந்து சேவைகளை வழங்கி வருகிறது. வடக்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் மேம்பாலம் ஆகியவை இப்பகுதியில் அமைந்துள்ளன. புறநகர் இரயில் நிலையங்களான நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம் மற்றும் கோடம்பாக்கம் தொடருந்து நிலையம் ஆகியவை முறையே மகாலிங்கபுரத்திலிருந்து 1.3 கி.மீ. தூரத்திலும் மற்றும் 2.4 கி.மீ. தூரத்திலும் அமையப் பெற்று சேவைகள் புரிகின்றன. இங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.

கல்வி

தொகு

கல்லூரி

தொகு

பல்துறை கல்லூரியான லயோலா கல்லூரி, மகாலிங்கபுரம் அருகிலேயே நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அமைந்துள்ளது. சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன் லயோலா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. அனுமதி மறுக்கப்பட்ட பின் தற்போது வரை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் சிரமம் கொண்டு, மறுபடியும் அனுமதி பெற முயற்சிக்கின்றனர்.[6]

ஆன்மீகம்

தொகு

ஐயப்ப பக்தர்கள் பலன்பெறும் வகையிலும், பொதுமக்கள் நலனுக்காகவும் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் இங்கு அமைந்து, காலை 5 மணி முதல் 10:30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காகத் திறந்து வைக்கப்படுகிறது.

அரசியல்

தொகு

மகாலிங்கபுரம் பகுதியானது, ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் மருத்துவர் எழிலன் நாகநாதன். மேலும் இப்பகுதி, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தயாநிதி மாறன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. India Parliament Lok Sabha Estimates Committee (1997). Report - Estimates Committee (in ஆங்கிலம்). Lok Sabha Secretariat.
  2. Madras (India) (1971). Administration Report of the Corporation of Madras (in ஆங்கிலம்). Thompson & Company.
  3. India Parliament Public Accounts Committee (1997). Report - Public Accounts Committee (in ஆங்கிலம்). Lok Sabha Secretariat.
  4. SIA Statistics (in ஆங்கிலம்). Secretariat for Industrial Assistance, Department of Industrial Policy and Promotion, Ministry of Commerce and Industry, Government of India. 2000.
  5. "Keep cool at these pools". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-01-01.
  6. "'Give us back the green walking space'". The Hindu (in Indian English). 2015-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாலிங்கபுரம்&oldid=3631702" இலிருந்து மீள்விக்கப்பட்டது