அரச மலேசிய வான்படை

(மலேசிய வான்படை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரச மலேசிய வான்படை அல்லது மலேசிய வான்படை ஆங்கிலம்: Royal Malaysian Air Force (RMAF); மலாய்: Tentera Udara Diraja Malaysia (TUDM;) என்பது மலேசிய பாதுகாப்பு படைகளில் உள்ள மூன்று படைப்பிரிவுகளில் ஒரு பிரிவாகும். மலேசிய நாட்டின் முக்கிய பாதுகாப்பு படைகளில் ஒன்றாகத் திகழும் இந்தப் படை, வான்சார்ந்த கண்காணிப்பு மற்றும் வான்சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது.[3]

அரச மலேசிய வான்படை
Royal Malaysian Air Force
Tentera Udara Diraja Malaysia
تنترا اودارا دراج مليسيا
அரச மலேசிய வான்படையின் சின்னம்
உருவாக்கம்2 சூன் 1958; 66 ஆண்டுகள் முன்னர் (1958-06-02); (1936-இல் மலாயா துணை வான் படையாக நிறுவப்பட்டது)
நாடு மலேசியா
வகைவான்படை
பொறுப்புவான் போர்
அளவு
  • 15,000 அதிகாரிகள்[1][2]
  • 125 போர் ஊர்திகள்
பகுதி மலேசிய பாதுகாப்பு படைகள்
குறிக்கோள்(கள்)எப்போதும் வானத்தில்
(Sentiasa di Angkasa Raya) ("Always in the Sky")
நிறம்
  •        வானம் நீலம்
  •        கருநீலம்
  •        மஞ்சள்
ஆண்டு விழாக்கள்சூன் 2-ஆம் தேதி
சண்டைகள்
இணையதளம்airforce.mil.my
தளபதிகள்
தற்போதைய
தளபதி
பகாங் சுல்தான் அப்துல்லா
படைத்துறைச் சின்னங்கள்
பதக்கம்
வானூர்தி அடையாளம்
சின்னம்
வானூர்திகள்
சண்டைசுக்கோய் Su-30MKM, F/A-18 Hornet, BAE Hawk 200
உலங்கு வானூர்திசிக்கோர்சுகி UH-60 Black Hawk, Eurocopter EC 725, அகஸ்தா வெஸ்ட்லேண்ட் AW139
சுற்றுக்காவல்காசா/IPTN CN-235, Beechcraft Super King Air
பயிற்சிBAE Systems Hawk, பிளாதுஸ் PC-7 Turbo Trainer, Beechcraft Super King Air
போக்குவரத்துஏர்பஸ் A400M Atlas, C-130, CASA/IPTN CN-235, Boeing Business Jet
டேங்கர்லோக் கீட் மார்டின் KC-130

2 ஜூன் 1958-இல், மலாயா விடுதலைக்குப் பின்னர், அரச மலாயா கூட்டரசு வான்படை ஆங்கிலம்: Royal Federation of Malaya Air Force; மலாய்: Tentera Udara Diraja Persekutuan Tanah Melayu) எனும் பெயரில் ஒரு வான்படை மலாயாவில் தோற்றுவிக்கப்பட்டது.

அரச மலேசிய வான்படையானது, ஐக்கிய அமெரிக்கா, ரசியா, ஐரோப்பா நாடுகளில் தயாரிக்கப்பட்ட நவீன வானூர்திகளின் கலவையில் இயங்குகிறது.

பொது

தொகு

நாட்டின் வான் எல்லைகளைப் பாதுகாப்பது மற்றும் நாட்டின் பிற ஆயுதப் படைகளுடன் இணைந்து, போர் மற்றும் அமைதி காலங்களில் மலேசியாவின் எல்லைகளைப் பாதுகாத்து வருகிறது. அதே வேளையில், மலேசிய மக்கள்; மற்றும் மலேசியக் வான்சார் நலன்களுக்கு எதிரான எந்தவோர் அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பு நடந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவது இந்தப் படையின் முதன்மை இலக்கமாகும்.[4]

அரச மலேசிய வான்படை மலேசிய தற்காப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. மலேசிய இராணுவத்தில், மலேசிய கடற்படையும்; மலேசிய வான்படையும் , ‘அரச’ என்ற பட்டத்துடன் செயல்படுகின்றன. அந்த வகையில், மலேசிய வான்படை அதிகாரப்பூர்வமாக அரச மலேசிய வான்படை என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு

தொகு

மலாயா துணை வான்படை தான் (Malayan Auxiliary Air Force) அரச வான்படையின் (Royal Air Force) (RAF) முதல் வான்படை ஆகும். இது 1934-இல் உருவாக்கப்பட்டது. பின்னர் அது நீரிணைக் குடியேற்றங்களின் தன்னார்வ வான்படை (Straits Settlements Volunteer Air Force) (SSVAF) என மாற்றப்பட்டது.

1940-இல் மலாயா தன்னார்வ வான்படை (Malayan Volunteers Air Force) (MVAF) உருவாக்கப்பட்டது. பின்னர் 1942-இல் சப்பானியர்கள் மலாயாவைத் தாக்கத் தொடங்கியபோது தன்னார்வ வான்படை கலைக்கப்பட்டது. பின்னர் 1950-இல், அதே மலாயா தன்னார்வ வான்படை மீண்டும் நிறுவப்பட்டது. மலாயா அவசரகால நிலையின் போது இந்தப் படை; குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்புகளை வழங்கியது.[3]

மலாயா தன்னார்வ வான்படை

தொகு
 
மலேசிய விமானிகளும்; போர் விமானங்களும்

2 ஜூன் 1958-இல், மலாயா தன்னார்வ வான்படை என்பது அரச கூட்டரசு மலாயா வான்படை (Royal Federation of Malaya Air Force) (RFMAF) எனும் பெயர் மாற்றம் கண்டது. இந்த சூன் 2-ஆம் தேதி, ஆண்டுதோறும், அரச மலேசிய வான்படை தினமாக கொண்டாடப்படுகிறது.

மலாயா அவசரகால நிலையின் போது நாட்டின் பாதுகாப்பிற்கு, மலேசிய வான்படை ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் மலேசிய நாடாளுமன்றத்தால் அந்தப் படைக்கு அரச பட்டம் வழங்கப்பட்டது.[3]

1962 அக்டோபர் 25-ஆம் தேதி, மலாயா அவசரகால நிலை முடிவுக்கு வந்த பிறகு, சிம்பாங் வானூர்தி நிலையம் (Simpang Airport) என அழைக்கப்பட்ட சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம், மலாயா தன்னார்வ வான்படைக்கு வழங்கப்பட்டது. இந்த வானூர்தி நிலையத்தை பழைய வானூர்தி நிலையம் (Old Airport) என்றும்; சுங்கை பீசி வானூர்தி தளம் (Sungai Besi Air Base) என்றும் அழைப்பது உண்டு. மலேசியாவில் கட்டப்பட்ட மிகப் பழைமையான வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். [5][6]

1963 செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியா எனும் கூட்டமைப்பு உருவானதும், அரச கூட்டரசு மலாயா வான்படையின் பெயர் அரச மலேசிய வான்படை என மாற்றப்பட்டது.

தரவரிசை அமைப்பு

தொகு

உயர் அதிகாரிகள்

தொகு

1970-ஆம் ஆண்டில் இருந்து, அரச மலேசிய வான்படை, பழைய தரவரிசை முறையைப் பயன்படுத்தி வருகிறது.

உயர் அதிகாரிகள் பயிற்சி
பதவி தளபதி ஜெனரல் துணை ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் கர்னல் துணை கர்னல் மேஜர் கேப்டன் லெப்டிணன்ட் லெப்டிணன்ட் மூடா பயிற்சி அதிகாரி
மலாய் பெயர் Marsyal Tentera Udara Jeneral TUDM Leftenan Jeneral TUDM Mejar Jeneral TUDM Brigedier Jeneral TUDM Kolonel TUDM Leftenan Kolonel TUDM Mejar TUDM Kapten TUDM Leftenan TUDM Leftenan Muda TUDM Pegawai Kadet
தோள் பட்டை                       தோள்
பட்டை
இல்லை

அதிகாரிகள்

தொகு
            No insignia No insignia
Pegawai waran udara I Pegawai waran udara II Flait sarjan Sarjan udara Koperal udara Laskar udara kanan Laskar udara I Laskar udara II Perajurit muda
வாரண்ட் அதிகாரி I வாரண்ட் அதிகாரி II வான் சார்ஜெண்ட் சார்ஜெண்ட் உடாரா கார்ப்பரல் உடாரா லாசுகார் உடாரா I லாசுகார் உடாரா II லாசுகார் உடாரா II பயிற்சி அதிகாரி

படை அமைப்பு

தொகு
படை படையணி வானூர்தி வான்தளம்
1-ஆவது படை படையணி 2 Global Express, Boeing BBJ (737-700) சுபாங் வான்தளம்
படையணி 3 AgustaWestland AW139 பட்டர்வொர்த் வான்தளம்
படையணி 8 Airbus A400M சுபாங் வான்தளம்
படையணி 10 Eurocopter EC-725 குவாந்தான் வான்தளம்
படையணி 11 UAS லபுவான் வான்தளம்
படையணி 12 Su-30MKM Flanker கோங் கெடாக் வான்தளம்
படையணி 15 BAE Hawk 108/208 பட்டர்வொர்த் வான்தளம்
படையணி 16 Beechcraft 200T சுபாங் வான்தளம்
படையணி 17 பட்டர்வொர்த் வான்தளம்
படையணி 18 Boeing F/A-18D Hornet பட்டர்வொர்த் வான்தளம்
படையணி 20 Lockheed C-130H Hercules, KC-130T சுபாங் வான்தளம்
படையணி 21 CN235-220M, CN235-220M VIP சுபாங் வான்தளம்
2-ஆவது படை படையணி 1 CN-235-220M கூச்சிங் வான்தளம்
படையணி 5 Eurocopter EC-725 லபுவான் வான்தளம்
படையணி 6 BAE Hawk 108/Hawk 208 லபுவான் வான்தளம்
படையணி 14 Lockheed C-130H Hercules லபுவான் வான்தளம்
பயிற்சி பிரிவு படையணி 1 FTC PC-7 Mk II அலோர் ஸ்டார் வான்தளம்
படையணி 2 FTC EC-120B அலோர் ஸ்டார் வான்தளம்
படையணி 3 FTC குவாந்தான் வான்தளம்
 
மலேசிய வான்படை தளங்களின் வரைபடம்

வான்படை தளங்கள்

தொகு
 
மலேசிய வான்படையின் பலவகையான போர் ஊர்திகள்
 
மலேசிய வான்படையின் சுக்கோய் ரசிய போர் ஊர்திகள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. International Institute for Strategic Studies (15 February 2023). The Military Balance 2023. London: Taylor & Francis. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1000910704.
  2. "Malaysian Armed Forces". Global Security. Archived from the original on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச்சு 2016.
  3. 3.0 3.1 3.2 "Air Force Ordinance was passed by Parliament on Monday, 2 June 1958 and when it was established it was known as the "Royal Federal Air Force"". Royal Federal Air Force. பார்க்கப்பட்ட நாள் 23 April 2024.
  4. "Deepening bilateral relation is of common interest for Royal Malaysian Air Force. Cooperation on defense and trade are the most possible steps forward, according to own national interests". thediplomat.com. பார்க்கப்பட்ட நாள் 23 April 2024.
  5. "Royal Selangor Flying Club: Location". Archived from the original on 2008-02-27. பார்க்கப்பட்ட நாள் 2024-04-23.
  6. AIP Malaysia: WMKF - RMAF Kuala Lumpur/Simpang at Department of Civil Aviation Malaysia

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_மலேசிய_வான்படை&oldid=4108107" இலிருந்து மீள்விக்கப்பட்டது