மிரா அல்பாசா

ஸ்ரீ அரவிந்தோவின் ஆன்மீக ஒத்துழைப்பாளர்.
(மிர்ரா அல்பாஸா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மிரா அல்பாசா (Mirra Alfassa) (பெப்ரவரி 21, 1878 நவம்பர் 17 1973) என்பவர் ஒரு ஆன்மிகவாதி ஆவார். இவரை நேசிப்பவர்களால் அன்னை (மதர்) எனவும் அழைக்கப்படுகிறார். இவர் சிறீ அரவிந்தருடன் இணைந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டார். அரவிந்தர் இவரை அம்மா என்ற பெயரிலேயே அழைத்தார். இவர் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தினை புதுச்சேரியில் நிறுவினார். மேலும் ஆரோவில் எனும் நகரத்தினைத் தோற்றுவித்தார். இதன் மூலம் ஒருங்கிணைந்த யோகாவினைப் பற்றி எழுத்தாளர்கள் மற்றும் குருக்கள் போன்றவர்கள் தெரிந்துகொள்வதற்கான உத்வேகத்தினையும், ஆர்வத்தினையும் இவர் ஏற்படுத்தினார்..

மிரா அல்பாசா
மிரா அல்பாசா
சுய தரவுகள்
பிறப்பு
மிரா அல்பாசா

21 பிப்ரவரி 1878
பாரிஸ், பிரான்ஸ்
இறப்பு17 நவம்பர் 1973(1973-11-17) (அகவை 95)
நினைவிடம்பாண்டிச்சேரி, இந்தியா
சமயம்இந்து சமயம்
தேசியம்பிரெஞ்சு, இந்தியர்
குறிப்பிடத்தக்க ஆக்கம்Prayers And Meditations, Words of Long Ago, On Thoughts and Aphorisms, Words of the Mother
புனைப்பெயர்அன்னை
Signature
InstituteSri Aurobindo Ashram
Auroville
பதவிகள்
மாணவர்கள்
  • சத்பிரேம், நோலினி காந்தா குப்தா, நிரோத்பரன், அமல் கிரண், பவித்ரா
அன்னை - மிரா அல்பாசா (1878-1973)

இவர் 1878 ஆம் ஆண்டில் பாரிசு மாநகரில் பிறந்தார். இவர் அறிய இயலா இயக்கம் பற்றி மேக்சு தியானிடம் கற்பதற்காக அல்சீரியா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். இவரின் பெற்றோர்கள் துருக்கி, எகிப்து நாட்டினர். இவர் சிறீ அரவிந்தரை மார்ச் 20, 1914ல் புதுச்சேரியில் ஆர்யா என்னும் பத்திரிகையில் பணி புரியவும், தொகுப்புப் பணி செய்யவும் சந்தித்தார். பின் முதலாம் உலகப்போர் காரணமாக புதுச்சேரியை விட்டு ஜப்பான் நாட்டிற்குச் சென்று சில ஆண்டுகள் வாழ்ந்தார். யப்பானில்ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூரை சந்தித்தார். 1920ல் அவர் மீண்டும் புதுச்சேரிக்கு வந்து வசித்தார். அதன் பின் நாடு திரும்பிய இவர் உலகில் உள்ள பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இறுதியில் அரவிந்தர் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுடன் தங்கினார் இந்தியாவில் உள்ள புதுச்சேரியில். இவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அங்கே இருந்த குடியிருப்பானது சில ஆண்டுகளில் ஆசிரமம் ஆனது. அங்கு அரவிந்தருடன் ஒருங்கிணைந்த யோகாவினைப் பற்றி மக்களுக்குப் போதனை செய்தனர். அரவிந்தரின் இறப்பிற்குப் பின் ஆசிரமத்தில் பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கினார். மேலும் சோதனை அடிப்படையில் ஆரோவில் எனும் தன்னாட்சி நகரத்தினைத் தோற்றுவித்தார். இந்த நகரத்தின் முக்கிய நோக்கம் இங்கு உள்ள மக்கள் தேசியம், மொழி, சமயம்,சாதி ஆகிய எந்த வேறுபாடுகளும் இன்றி இருப்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இவர் நவம்பர் 17, 1973 இல் புதுச்சேரியில் இறந்தார்.

அல்பாசாவின் கடந்த முப்பது ஆண்டுகால வாக்கையினை பதின்மூன்று தொகுதிகளாக தொகுத்து தெ அஜண்டா எனும் நூலை இவரைப் பின்பற்றுபவரான சாட்பிரேம் என்பவர் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

குழந்தைப் பருவம்

தொகு
 
1885 இல் அல்பாசா

மிரா அல்பாசா 1878 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவரின் தந்தை மோயிஸ் மாரிஸ் அல்பாசா. இவர் ஒரு துருக்கி யூதர் ஆவார். இவரின் தாய் எகிப்து யூதர் ஆவார். இவர் பிளான்சே ரச்சேல் மிரா அல்பாசா என அழைக்கப்பட்டார். இவருக்கு மேட்டொ மேத்தியூ முரிஸ் அல்பாசார் எனும் மூத்த சகோதரர் உள்ளார். இவர் பிறந்ததற்கு முந்தைய ஆண்டு இவரின் குடும்பம் பிரான்சுக்கு இடம் பெயர்ந்தனர். மிரா இசுலாமும் என்ற தனது பாட்டியுடன் அன்பாக இருந்தார். இவர் தான் எகிப்தை விட்டு வெளிநாடு சென்ற முதல் பெண்மனியாவார்.[1] [2]

தனது எழாவது வயதிலேயே வாசிக்கத் துவங்கினார். ஆனாலும் இவரின் ஒன்பதாவது வயதில் தான் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். இவர் கலை, டென்னிசு, பாடல் பாடுவது போன்ற பலவற்றில் ஆர்வம் செலுத்தினார். ஆனால் இவரது தாயார் இவர் எந்த ஒரு விடயங்களிலும் இவர் முழுமையாக கவனம் செலுத்துவதில்லை எனக் கவலையடைந்தார். [3] தனது பதினான்காம் வயதில் ஒரு நல்ல வாசகராக ஆனார். தனது தந்தை சேகரித்து வைத்திருந்த அனைத்து நூல்களையும் படித்ததன் மூலம் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவரானார்.[4] இவருடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவரான விரேகம் என்பவர் , அல்பாசா தனது இளம்வயதில் அறிய இயலா இயக்கத்தில் அனுபவம் வாய்ந்தவராக இருந்தார் என்றும் ஆனால் இவரின் கல்வி தொடர்பாக அவர் போதுமானதாக அறிந்திருக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.[5]

கலை வாழ்க்கை

தொகு

தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு 1893ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் உள்ள ஜுலியன் அகாதமி கலைப்பள்ளில் சேர்ந்தார்.[6][7] இவரது பாட்டி, ஹென்றி மோரிசெத் என்பவரை இவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இவர் ஜுலியன் அகாதமியின் முன்னாள் மாணவர் ஆவார். ஹென்றியும், மிரா அல்பாசாவும் அக்டோபர் 13 1897 இல் திருமணம் செய்தனர்.இருவரும் இணைந்தே தங்களின் கலைப்பயணத்தை மேற்கொண்டனர். 19ஆம் நூற்றாண்டு உணர்வுப்பதிவுவாதம் யுகத்தில் இவர்கள் கலைஞர்களாக சுமார் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தனர். ஆகஸ்டு 23 ,1988 இல் இவர்களுக்கு ஆண்ரு எனும் குழந்தை பிறந்தது. அல்பாசாவின் படைப்புகள் 1903, 1904, 1905 ஆகிய ஆண்டுகளில் காட்சிப்படுத்தப்பட்டன. பகவத் கீதையின் பிரெஞ்சு மொழிப் பதிப்பை வாசிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. [8]

மேற்கோள்கள்

தொகு
  1. Mother's Chronicles Bk I; Mother on Herself – Chronology p.83.
  2. Vrekhem (2004), ப. 4-7
  3. Vrekhem (2004), ப. 8
  4. Vrekhem (2004), ப. 10
  5. Bulletin of the Aurobindo Center of Education, 1976 p.14, Mother on Herself pp.17–18.
  6. "The Mother". sriaurobindoashram.org. 2013. Archived from the original on 9 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 March 2013.
  7. Mirra Alfassa, paintings and drawings, P. 157-158
  8. Vrekhem (2004), ப. 29

புற இணைப்புகள்

தொகு

அல்பாசா எழுதிய நூல்கள் பரணிடப்பட்டது 2015-03-03 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரா_அல்பாசா&oldid=4181565" இலிருந்து மீள்விக்கப்பட்டது